தொகுப்பு
காக்க காக்க… இளமை காக்க!
தங்களுடைய உண்மையான வயதைக் காட்டிலும் குறைவான வயது உடையவர்களாகத் தோற்றம் அளிக்க வேண்டும் என்பதே எல்லோருடைய விருப்பமும்! ஆனால், நடைமுறையில் பலரும் தங்கள் உண்மையான வயதைக்காட்டிலும் கூடுதலான வயதுடைய தோற்றத்தில் இருப்பதை மறுக்கவோ மறைக்கவோ முடியாது. இளமையான தோற்றத்தோடு இருப்பது கடினமா என்ன? இளமையைத் தக்க வைத்துக்கொள்ள முடியுமா? வழிகள் என்ன? சித்த மருத்துவர் வேலாயுதம், அழகியல் நிபுணர் கீதா அசோக் மற்றும் யோகா பயிற்சியாளர் அகிலா ஆகியோர் அளித்த ‘யூத்ஃபுல்’ டிப்ஸ்களின் தொகுப்பு இங்கே…
உணவும் இளமையும்!
காலம் முழுவதும் இளமையோடு இருப்பது என்பது நடைமுறையில் சாத்தியம் இல்லை என்றாலும், இளமைத் தோற்றத்தை நீட்டித்துக்கொள்ள சில வழிகள் இருக்கின்றன. உண்ணும் உணவுக்கும் இளமையான தோற்றத்துக்கும் மிக நெருங்கியத் தொடர்பு உண்டு. ஆரோக்கியமான உணவு உங்கள் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்தைக் கொடுப்பதுடன், உடல் எடையைக் குறைக்கவும் வழிவகுக்கும். இதனால் இதய நோய்கள், சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பு குறையும். கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்புச் சத்து மிகுந்த உணவின் அளவைக் குறைத்துக்கொள்ளுங்கள். அதிக அளவில் காய்கறி, கீரைகள், பழங்களை எடுத்துக்கொள்ளுங்கள். சர்க்கரை, உப்பின் அளவைக் குறைத்துக்கொள்ளுங்கள். சமச்சீரான உணவுப் பழக்கம் தோற்றத்தில் இளமையைப் பெருமளவு தக்கவைக்கும்.
தவிர்க்க வேண்டியவை!
காபி, டீ ஆகிய பானங்களைக் குறையுங்கள். கோலா போன்ற குளிர்பானங்கள், மதுவைத் தவிர்த்துவிடுங்கள். புகை, மதுப் பழக்கத்தினால் சருமம் மிக விரைவில் முதுமைத் தன்மை அடைந்துவிடும். இதற்குப் பதில், ஆன்டிஆக்சிடென்ட்ஸ் அதிகம் உள்ள உணவைத் தினமும் எடுத்துக் கொள்ளலாம். கிரீன் டீயில் அதிக அளவில் ஆன்டிஆக்சிடென்ட் உள்ளது. இதைத் தினமும் சர்க்கரை, பால் சேர்க்காமல் குடிக்க வேண்டும். வைட்டமின் சி அதிகம் உள்ள உணவுப் பொருட்களைத் தினமும் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். கொய்யா, ஸ்ட்ராபெரி, அவகோடா (பட்டர் ப்ரூட்) இதில் ஏதேனும் ஒன்றைத் தினமும் சாப்பிடலாம்.
உடற்பயிற்சி!
ஒரு நாளைக்குக் குறைந்தது 30 முதல் 45 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்ய வேண்டும். உடற்பயிற்சி செய்ய முடியாதவர்கள், தோட்டப் பராமரிப்பு, வீட்டு வேலைகள், மாடிப் படிகளில் ஏறி இறங்குவது, நடப்பது போன்றவற்றை மேற்கொள்ளலாம். இவையும் கூட நல்ல உடற்பயிற்சியே. ஆரோக்கியத்துக்காக உடற்பயிற்சியே கதி என்று இருப்பதும் கூடாது. உடல் எடையை எப்போதும் கட்டுக்குள் வைத்திருங்கள். நீச்சல், ஓட்டம், சைக்கிளிங், ஏரோபிக்ஸ் போன்ற எலும்பு – மூட்டுகளுக்குப் பயிற்சி அளிக்கக்கூடிய உடற்பயிற்சிகளைச் செய்யுங்கள்.
கண்களைச் சுற்றிக் கருவளையம் அது தருவதோ முதுமைத் தோற்றம்!
கண்களைச் சுற்றி உள்ள தோலில் இருக்கும் ஹீமோகுளோபி¬னைச் சில என்ஸைம்கள் சிதைக்கும்போது, சிவப்பு நிறம் போய்க் கருவளையங்கள் உருவாகின்றன. நிறையத் தண்ணீர் குடியுங்கள். குறைந்தது 8 மணி நேரம் தூங்குங்கள். உரிய மருத்துவரின் பரிந்துரையின்பேரில் குறிப்பிட்ட ஜெல்களைத் தடவுங்கள். 60% வரை கருவளையங்கள் காணாமல் போகும். இந்த ஜெல்கள் தோலில் உள்ள எலாஸ்டின் மற்றும் கோலாஜென் ஆகிய வேதிப்பொருட்களின் உருவாக்கத்தை அதிகரித்துக் கருவளையங்கள் தோன்றுவதைத் தடுக்கும். இளமைத் தோற்றத்தையும் கொடுக்கும்.
தோலில் சுருக்கமா? வருத்தம் வேண்டாம்!
வயது அதிகரிக்கும்போது நம் உடலில் உள்ள ஆன்டிஆக்சிடென்ட் குறைய ஆரம்பிக்கும். அதனால், நம் உடலில் இருக்கும் கோலாஜென் மற்றும் எலாஸ்டின் ஆகிய இரண்டும் தளர ஆரம்பிக்கும். தோலில் இதனால் சுருக்கம் ஏற்படும். தினசரி இரண்டரை லிட்டர் தண்ணீர் குடியுங்கள். தோலுக்கு நீர்ச்சத்தை அளித்து சுருக்கம் இல்லாமல் இது பார்த்துக்கொள்ளும். தேவையற்ற பொருட்களை உடலில் இருந்து கழுவி விரட்டும் ஆற்றல் தண்ணீருக்கு உண்டு. (சிறுநீரகப் பிரச்னை உள்ளவர்கள், டாக்டரின் ஆலோசனைப் பெற்று தண்ணீர் அருந்த வேண்டும்.) வைட்டமின் சி, இ, ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட், கெரட்டினாய்ட்ஸ் உள்ள பழங்களைச் சாப்பிடுவது தோல் இளமையாக இருக்க உதவும்.
நேரடி வெயில் தோலைச் சுருக்கும்!
நேரடியான சூரிய ஒளியில் நீண்ட நேரம் இருந்தால் தோலில் நீர் வற்றும். சுருக்கங்கள் தோன்றும். வெளியே செல்லும்போது முழுக்கைச் சட்டை, தொப்பி அணிந்து செல்லுங்கள். நண்பகலில் வெளியே சுற்றுவதைத் தவிருங்கள். அப்படியே வெளியே செல்லவேண்டி இருந்தால், அரை மணி நேரத்துக்கு முன்பு சன்ஸ்க்ரீன் க்ரீம் போட்டுக்கொள்ளுங்கள். இந்த க்ரீம்களின் எஸ்.பி.எஃப். அளவு 30-க்கு மேல் இருக்க வேண்டும். 4 மணி நேரத்துக்கு ஒருமுறை தொடர்ந்து இந்த க்ரீம் போட்டுக்கொண்டால் சூரியக் கதிர்வீச்சின் பாதிப்பில் இருந்து சருமத்தைப் பாதுகாக்கலாம்.
தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே!
இரவில் நெடுநேரம் விழிக்க வேண்டாம். குறைந்தது 8 மணி நேரம், குறுக்கீடு இல்லாத நிம்மதியான தூக்கம் மறுநாள் முழுக்க உங்களைப் புத்துணர்ச்சியில் ஆழ்த்துவதைக் கண்கூடாக உணரலாம். முகமும் பளிச்சென்று இருக்கும்.
வசீகரிக்கும் இளமை!
சிறிது சர்க்கரையை ஆலிவ் எண்ணெயில் குழைத்துத் தோலில் பூசுங்கள். இது சருமத்தில் இருக்கும் இறந்த செல்களை அப்புறப்படுத்தும். சருமம் வழவழப்பாகும். தோல் பளபளப்பாக இருக்க நல்ல ரத்த ஓட்டம் தேவை. அதற்கு அதிகமான ஆக்சிஜன் வேண்டும். அதிக அளவு ஆக்சிஜனைச் சீரான உடற்பயிற்சி தரும். உடலில் உள்ள நச்சுக்களும் வெளியேறும். சிரிக்கும்போது முகத்தில் கூடுதல் ரத்தம் பாய்கிறது. பல தசைகள் வேலை செய்கின்றன. உற்சாகம் சூழ்கிறது. விளைவு, இளமை அதிக காலம் உங்கள் உடலில் குத்தகை கொள்ளும்!
தியானம் பழகு!
அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள். மனதின் அமைதி முகத்தில் எதிரொலிக்கும். மனதுக்கு மட்டும் அல்ல, தியானம் செய்வதும் உடலுக்குப் பொலிவூட்டும். இரவு படுக்கச் செல்லும் முன் ஐந்து நிமிடங்கள் கண்களை மூடி மனதை ஒருமுகப்படுத்திவிட்டுத் தூங்கச் செல்லுங்கள்.
இளமையாக எண்ணுங்கள்!
இளமையாக இருப்பதாகவே எப்போதும் எண்ணிக்கொள்ளுங்கள். தெளிவான சிந்தனை, ஆரோக்கியமான செயல்பாடுகள் போன்றவை உங்கள் ஆயுளை நீடிப்பது மட்டும் அல்ல… உடல் பொலிவையும் கூட்டும்.
இதயம் காப்போம்!
நீண்ட நேரம் கம்ப்யூட்டர், டி.வி. முன்பு அமர்ந்து இருக்காதீர்கள். டி.வி. பார்க்கும்போதோ அல்லது கம்ப்யூட்டரில் வேலை பார்க்கும்போதோ சுவாரஸ்யத்தில் அதிகக் கொழுப்பு உள்ள நொறுக்குத் தீனிகளைப் பலர் சாப்பிடுவது உண்டு. ஆனால், அந்தக் கொழுப்பை எரிக்கும் அளவுக்குத் துடிப்பான உடல் உழைப்பு ஏதும் இல்லாத சூழலில் இதயம் பலவீனப்படும். எனவே, அதிக நேரம் தொலைக்காட்சிப் பெட்டி முன்பு அமர்ந்திருப்பதைத் தவிர்ப்பதே முதுமையைத் தள்ளிப்போடுவதற்கான வழி.
முடி கொட்டாமல் இருந்தால் முதுமைத் தோற்றம் தள்ளிப்போகும்!
தினந்தோறும் தலையில் எண்ணெய் தேய்க்கும்போது மஸாஜ் செய்துகொள்ளுங்கள். ரத்த ஓட்டம் சீராக இருந்தால் முடியின் வேர்க்கால்களும் உறுதியாக இருக்கும். முடி அதிகம் கொட்டாது. வழுக்கை நெருங்காது. வசீகர இளமை எப்போதும் இருக்கும். தரமான ஷாம்பூகள், சோப்புகள் முடி கொட்டுவதைத் தவிர்க்கும்.
உடல் எந்த அளவுக்கு இளமையாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறோமோ, அதே அளவுக்கு நம்முடைய மூளையும் இருக்க வேண்டும் என்பது அவசியம். உடலை ‘சிக்’கென வைத்துக்கொள்ள உடற்பயிற்சி செய்வதுபோல, மனதுக்கும் மூளைக்கும் கூடப் பயிற்சிகள் உள்ளன. சுடோகு, குறுக்கெழுத்துப் புதிர்ப் போட்டிகள் போன்றவற்றில் மனதைச் செலுத்தலாம். நினைவாற்றலை அதிகரிக்க உதவும் இந்தப் பயிற்சிகளைத் தொடர்ந்துசெய்துகொண்டே இருக்க வேண்டும். ஏதாவது ஒரு புதிய விஷயத்தைக் கற்றுக்கொண்டே இருங்கள். நேர்மறையான சிந்தனையுடன் இருங்கள்.
ஆண் அல்லது பெண் இருவருக்கும் வயதாவதற்கான முதல் அறிகுறி தாடை மற்றும் கழுத்தில் தெரியும். தடித்த தலையணை பயன்படுத்துவோர்க்கு விரைவில் கழுத்தில் தொய்வு ஏற்பட்டுவிடும். தலையணையைத் தவிர்ப்பது அல்லது மெல்லிய தலையணையைப் பயன்படுத்துவதன்மூலம் இத்தகைய தொய்வுப் பிரச்னையை 10 வருடமாவது தள்ளிப்போடலாம்.
காலையில் பல் விளக்கும்போது கடைசிவாய் தண்ணீரை வெளியே கொப்பளித்துவிடாமல், கன்னம் நன்றாக உப்பும்படியாக வைத்து சிறிது நேரம் அந்த நிலையிலே இருக்கவும். அதன் பின் துப்பினால் உடலில் உள்ள நச்சுத்தன்மை (டாக்சின்) வெளியேறிவிடும். உடல் சூடு தணியும். கன்னம் தொய்வு அடையாமல் இருக்க இந்தப் பயிற்சி உதவும்.
உடலுக்கு மட்டும்தான் வயது, மனதுக்குக் கிடையாது. எனவே, வாழ்க்கையை இனிமையாகக் கொண்டாடுங்கள்.
– லதானந்த், உமா ஷக்தி
படம்: எஸ்.நாகராஜ்
நன்றி:- டாக்டர் விகடன்.
- அம்மாவாகும் பெண்களுக்கு.. அன்பான வழிகாட்டி! – Dr.ஞானசெளந்தரி Dr.ஸ்ரீகலா பிரசாத
- காய்கறிகளும் அவற்றின் மருத்துவ குணங்களும்
- கூந்தலின் ஜீவன்
- தலைக்கு ஷாம்பு போடுகிறீர்களா? (கூந்தல் பராமரிப்பு)
- புருஷன் வீட்டில் வாழப்போற பொண்ணே
- பொடுகுத் தொல்லை போயே போச்சு!
- மஞ்சள் மஞ்சக் கெழங்கே
- மருதாணி அழகில் ஒரு ஆபத்து!
- விட்டுக்கொடு வெற்றி பெறு!
- வில்லங்கத்தை விலைக்கு வாங்கும் விபரீத பொழுதுபோக்கு
மாத்திரை, #மருந்துகள் உட்கொள்ளும்போது தவிர்க்கவேண்டிய உணவுகள்! – ஜி.லட்சுமணன் #HealthTips
ஆன்டிபயாடிக் மாத்திரைகள் – பால் பொருள்கள்
பாக்டீரியா தொற்றுக்காக உட்கொள்ளும் பென்சிலின் (Penicillin) டெட்ராசைக்லின் (Tetracycline), சிப்ரோஃப்ளாக்ஸின் (Ciprofloxacin) போன்ற ஆன்டிபயாடிக் மருந்துகளுடன், பால் மற்றும் பால் பொருள்களைச் சாப்பிடக் கூடாது. இவை மருந்து செயல்படும் தன்மையை குறைத்துவிடக்கூடியவை.
வலி நிவாரணி மருந்துகள் – குளிர்ப்பானங்கள்
தலைவலி, தசைபிடிப்பு, தசை வீக்கத்துக்காக உட்கொள்ளும் இபுப்ரோஃபென் (Ibuprofen) மருந்தை உட்கொள்ளும்போது, கண்டிப்பாக சர்க்கரை சேர்க்கப்பட்ட குளிர்ப்பானங்களைத் தவிர்க்க வேண்டும். இவற்றில் கார்பன் டை ஆக்ஸைடு மற்றும் அமிலங்கள் சேர்க்கப்பட்டுள்ளதால், மருந்தை உடல் உறிஞ்சுக்கொள்ளும் தன்மையைப் பாதிக்கும். மேலும், நச்சுச்தன்மை அதிகம் இருப்பதால், சிறுநீரகத்தையும் பாதிக்கக்கூடும்.
நுரையீரல் பாதிப்பு தொடர்பான மருந்துகள் – காஃபின் பானங்கள்
ஆஸ்துமா, மூச்சுக்குழாய் அழற்சி (Broncities) மற்றும் நுரையீரல் பிரச்னைக்கு தியோபைலின் (Theophylline), அல்புட்ரால் (Albuterol) போன்ற மருந்துகளை உட்கொள்ளும்போது, குளிர்ப்பானங்களை குடிக்கக் கூடாது. இவற்றில் உள்ள ‘காஃபின்’ நச்சுத்தன்மையை ஏற்படுத்தக்கூடியது.
சிறுநீரகக் கோளாறு மருந்துகள் – வாழை, கீரை, தக்காளி, சோயா
சிறுநீரகக் கோளாறுகளுக்காக உட்கொள்ளும் கேட்டோப்ரில் (Captopril), எனாலாப்ரில் (Enalapril), ராமிப்ரில் (Ramipril) போன்ற மாத்திரைகளுடன் வாழைப்பழம், சோயா, தக்காளி, கீரைகளைச் சாப்பிடக்கூடாது. இவற்றில் பொட்டாசியம் அதிகம் என்பதால், ரத்தத்தில் பொட்டாசியம் அதிகரித்து பாதிப்பை ஏற்படுத்திவிடும். மருத்துவர் ஆலோசனையுடன் மருந்துகளை உட்கொள்வது நல்லது.
இதயநோய் தொடர்பான மருந்துகள் – மதுப்பழக்கம்
ஐசோசோபைடு டினிட்ரேட் ( Isosorbide dinitrate), நைட்ரோகிளிசரின் (Nitroglycerine) போன்ற மாத்திரைகளை, கார்டியாக் அரெஸ்ட், இதயத் துடிப்பில் பாதிப்பு போன்ற இதயநோய் பிரச்னைகளுக்காக கொடுக்கப்படுபவை. ‘ஆன்டி ஆர்த்திமிக் மருந்து’ என்னும் இந்த வகை மருந்துகளை மது அருந்திய பிறகு உட்கொண்டால், குறைந்த ரத்த அழுத்த நிலையை உருவாகும். இந்த நிலை ஆபத்தான சூழ்நிலைகளை உருவாக்கலாம். இந்த மாத்திரைகள் மட்டுமல்ல எந்த மாத்திரையை உட்கொண்டாலும் மது அருந்துவதை அவசியம் தவிர்க்க வேண்டும். நார்ச்சத்து உணவுகளையும் சாப்பிட்டிருந்தாலும், மருந்தின் செயல்படும் தன்மையைக் குறைக்கும். எனவே, நார்ச்சத்துள்ள உணவுகளை சாப்பிடுவதற்கு இரண்டு மணி நேரத்துக்கு முன்னதாகவோ அல்லது பின்னரோ சாப்பிடலாம்.
கொழுப்பைக் குறைக்கும் மருந்து – திராட்சைப்பழம்
கொழுப்பைக் குறைப்பதற்கு உட்கொள்ளும் ஆட்ரோவாஸ்டேட்டின்,(Atorvastatin) ஃப்ளூவாஸ்டட்டின் (Fluvastatin) லோவஸ்டட்டின் (Lovastatin), சிம்வஸ்ட்டட்டின் (Simvastatin), ரோசுவஸ்டட்டின் (Rosuvastatin), ப்ராவஸ்டாட்டின் (Pravastatin) போன்ற மருந்துகளை உட்கொள்ளும்போது, அவற்றுடன் திராட்சைப்பழ ஜூஸ் சாப்பிடக் கூடாது; சிட்ரஸ் பழங்களைத் தவிர்ப்பது நல்லது. இந்த மருந்துகளை உட்கொள்ளும்போதும் மருத்துவர் ஆலோசனை அவசியம்.
தைராய்டு ஹார்மோன் சுரக்கும் மருந்துகள் – சோயா, நார்ச்சத்துகள்
தைராய்டு பிரச்னைகளுக்காக உட்கொள்ளும் லிவோதைராக்ஸின் (Levothyroxine) போன்ற உணவுகளுடன் சோயா மற்றும் நார்ச்சத்துள்ள உணவுகளைச் சாப்பிட்டால், உடல் மருந்தை உறிஞ்சிக்கொள்ளும் தன்மையை பாதிக்கும்.
மனஅழுத்த மருந்துகள் – பாலாடைக்கட்டி, மீன், இறைச்சி, கொத்தமல்லி
`மோனோஅமைன் ஆக்சிடேஸ் தடுப்பான்கள்’ (Monoamine oxidase inhibitor) என்றழைக்கப்படும் டிரானில்சைப்ரோமின் (Tranylcypromine), பினில்ஸைன் (Phenelzine), நிலாமைடு (Nialamide) போன்ற மருந்துகளுடன் கொத்தமல்லி, பாலாடைக்கட்டி, மீன், இறைச்சி போன்றவற்றை உண்ணக் கூடாது.
ரத்தம் தொடர்பான நோய்கள் – பூண்டு, இஞ்சி, மசாலா
ரத்தம் உறைதல் போன்ற ரத்தம் தொடர்பான நோய்களுக்கு வார்ஃபாரின் (Warfarin) மருந்துகளை உட்கொள்ளும்போது, பூண்டு, இஞ்சி மற்றும் சில மசாலாப் பொருள்கள் (சிவப்பு மிளகு, பட்டை, மஞ்சள்) சேர்க்கப்பட்ட உணவுகளை உண்ணக் கூடாது.
அதேபோல வைட்டமின் கே சத்துள்ள கீரை, முட்டைக்கோஸ் மற்றும் புரோக்கோலி போன்ற உணவுகளை உட்கொள்ளக் கூடாது. இவை மருந்தின் வீரியத்தை குறைத்துவிடும்.
பொதுவாக நோய்க்காக மருந்து, மாத்திரைகள் உட்கொள்ளும்போது, சாப்பிடக் கூடாதவை…
* பழச்சாறு, சோடா கலந்த பானம், காஃபின் கலந்த குளிர்பானத்துடன் மாத்திரை சாப்பிடுவதைத் தவிர்த்து, தண்ணீரைப் பயன்படுத்த வேண்டும்.
* மருந்து, மாத்திரை உட்கொள்ளும்போது, மது அல்லது புகை பிடித்தல் கூடவே கூடாது.
* மருந்தை, உணவு சாப்பிடும் முன்னர் சாப்பிட வேண்டுமா அல்லது உணவுக்கு பிறகு சாப்பிட வேண்டுமா என்பது குறித்த மருத்துவர்களின் அறிவுரைகளைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்.
நன்றி:- விகடன். & பொதுநல மருத்துவர் எம்.அருணாச்சலம்
- பருமனைக் குறைக்க வெயிட்டான ஐடியா!
- பாராதைராய்டு (Parathyroid) – Dr.கே.ராஜா வெங்கடேஷ்
- புற்றுநோயை விரட்டும் பீட்ரூட் ஜூஸ்
- மஞ்சள் மிளகுப் பாலின் பலனும் மகத்துவமும்
- மது உள்ளே.. மதி வெளியே..
- மருந்தும் மறக்கக்கூடாதவைகளும்
- மறந்துபோன மருத்துவ உணவுகள்
- மழலையில் மலரும் மொட்டுகள்
- மூட்டு வலி
- மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள்
- ரத்த அழுத்தமா கூல் கூலா தண்ணி குடிங்க
- ரத்தசோகைக்கு முடிவு கட்டும் பூசணி பாயசம்
- வாய்ப் புண்
- வாழ வைக்கும் வைட்டமின்கள்
- வெந்நீர் மகத்துவம்(மருத்துவம்)
எலுமிச்சை
எலுமிச்சைத் தோல் மாடுகளுக்கான சத்துள்ள தீவனமாகவும் உபயோகிக்கப்படுகிறது.
எலுமிச்சையைக் கொண்டு பல அழகு சாதனைங்களைத் தயாரிக்கலாம்.
எல்லா வகையிலும் ஏற்றமிகு பானம்:
எலுமிச்சம் பழ ரசத்தைத் தண்ணீர், வெந்நீர், தேன் போன்ற ஏதாவது ஒரு பொருளுடன் சேர்த்து உண்ணலாம்.
இது மட்டுமின்றி நரம்புகளுக்குப் புத்துணர்ச்சியையும் தெம்பையும் அளிக்கிறது.
அதிக எடையை குறைக்கவும் , கொழுப்பு கூடாமல் தடுக்கும் சில உணவுகள்
உணவு அரசியல்! – நியாண்டர் செல்வன்
BMI அளவை எப்படிக் கணக்கிடுவது?
பி.எம்.ஐ. = உடல் எடை / உயரம் (மீ.) * உயரம் (மீ.)
உங்கள் எடை 72 கிலோ. உயரம் 1.72 மீ. (172 செ.மீ)
ஸ்டாடின் உட்கொள்பவர்களில் 10,000 பேரில்…
* 23 பேருக்கு சிறுநீரகம் பழுதடையும்.
* 40 பேருக்குச் சரிசெய்யவே முடியாத அளவு ஈரல் பழுதடையும்.
* பெண்களுக்கு அதிக அளவில் சர்க்கரை வியாதி வர காரணமாக ஸ்டாடின் அமையும்.
* வயதான பெண்கள் ஸ்டாடின் உட்கொண்டால் சர்க்கரை வியாதி வருவதற்கான சாத்தியக்கூறு 9% அதிகம்.
* பார்கின்சன் வியாதி வரும் வாய்ப்பும் ஸ்டாடினால் உண்டு.
-
- ஓஹோ வாழ்க்கை!
- ATM-ஏ டிஎம் தெரிந்ததும் தெரியாததும்
- அதிக டிவிடெண்ட் தரும் பங்குகள்
- அமெரிக்காவை அசத்தும் ஆச்சரியத் தமிழர்!
- அள்ளிக் கொடுக்கும் அல்டிமேட் பங்குகள்
- அழகில் வருதே அசத்தல் வருவாய்
- ஆல் இன் ஒன் கிரெடிட் கார்டு!
- இ-வேஸ்ட் லாபம்
- இந்தியாவுக்கும் வருமா இஸ்லாமிய வங்கி?
- இஷ்டத்துக்கு செலவழிக்கிறார்கள் இளைஞர்கள்! – ஊதாரித்தனம்.. இலக்கணம்!
- இஸ்லாமிய பங்கு வர்த்தகம்
- உங்கள் குழந்தைகளின் எதிர்காலம்… சேமிக்க சிறந்த வழிகள்!
- உங்கள் குழந்தையும் இனி சேமிப்புத் திலகம்
- எக்ஸ்ட்ரா வருமானத்தை எப்ப்டி சேமிக்கலாம்?
- எஸ்டேட் பிளானிங்
- ஏலத்தின் வகைகள்
- கடல் கடக்கும் கறுப்புப் பணம்
- கிரெடிட் கார்டு பணம் பறிபோகாமல் இருக்க
- கிரெடிட் கார்டு மறக்கவே கூடாத 20 விஷயங்கள்
- சிந்தனை மேடை-01
- டாப் 10 ஊழல் (இந்தியா)
- தங்க நகைச் சீட்டு
- துணையுடன் இணைந்து திட்டமிடுங்கள்
- அதிநவீன ரத்த சோதனை
- ஆபத்து ஆபத்து கூல் வாட்டர் ஆபத்து
- உடல் எடையைக் குறைக்க
- உணவில் ஆபத்தான இரசாயனங்கள்
- எடையைக் குறைக்கப் போராட்டமா
- எந்தெந்த மருந்து எமனாகும்
- ஒவ்வாமை (அலர்ஜி)
- கணினியும் கண்ணும்
- கர்ப்பிணிகள் செல்போனில் பேசினால்
- குறட்டைக்கான காரணங்களும் சிகிச்சை முறைகளும்
- குழந்தைகளுக்காக
- கொலஸ்ட்ரால் [கொழுப்புசத்து]
- கொளுத்தும் கோடையை ‘கூல் டவுன்’ செய்ய
- கோடை பானங்கள்
- சர்க்கரை நோய் ஒரு பார்வை
டாக்டரிடம் கேளுங்கள் 20 [பழங்கள் உணவுக்கு முன்பா? பின்பா? கால் மரத்துப்போகுதல், வாயுப் பிரச்னை ]

செல்வராணி, நியூட்ரிஷியன், மதுரை.
அப்போதுதான் அதில் உள்ள சத்துகள் சிதையாமல் அப்படியே நம் உடலுக்குக் கிடைக்கும். ஒரு சின்ன உதாரணம்… பழங்களில் உள்ள நார்ச் சத்து. பழங்களை அரைத்து, வடிகட்டி சாறை மட்டும் குடிக்கும்போது, பெரும்பான்மை நார்ச் சத்தை அது இழந்திருக்கும். நார்ச் சத்து இருந்தால், மலச் சிக்கலை அது களைந்துவிடும். மலச் சிக்கல் அகன்றால், செரிமானக் கோளாறு ஏற்படாது. இப்படி ஒவ்வொரு சத்தின் பயன்களையும் பட்டியல் இட்டுக்கொண்டே போகலாம். தவிர, பழங்களைச் சாறாக்கி, பால், சர்க்கரை சேர்த்துக் குடிக்கும் போது, அதில் சேர்க்கப்படும் சர்க்கரையும் பாலும், பழச்சாறின் இயல்பையே குலைத்துவிடும். செரிமானக் கோளாறையும் உருவாக்கக்கூடும்.
எஸ். முருகசாரதி, முதுநிலை எலும்பு சிகிச்சை நிபுணர், வேலூர்.
பக்தவச்சலம், வயிறு மற்றும் குடல் நோய் நிபுணர், திருநெல்வேலி.
இந்த வாயு எப்படி உருவாகிறது? நாம் உணவு உட்கொண்டதும் அதனை நொதிக்கச் செய்து செரிமானத்தை ஏற்படுத்த வசதியாக நமது பெருங்குடலில் கோடிக்கணக்கான
நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் இருக்கின்றன. நம்மோடு வாழ்நாள் முழுவதும் இணைந்து செயல் ஆற்றக்கூடிய இந்த பாக்டீரியாக்கள்தான் உணவு செரிமானத்துக்கு உதவுகின்றன. இந்தச் செரிமான வேலைகளின்போது வாயு உருவாகிறது. இந்தத் தன்மை பலருக்கும் ஏற்றுக்கொள்கிறது. ஆனால், சிலருக்கு ஏற்றுக்கொள்வது இல்லை. இதுதான் நீங்கள் குறிப்பிடும் ‘வாயுத் தொல்லை’.
பொதுவாக, வாயுத் தொல்லையால் அவதிப்படுபவர்கள் பால், கோதுமை உணவுகளைத் தவிர்ப்பது அல்லது குறைத்துக்கொள்வது நல்லது. ஆடை நீக்கப்பட்ட தயிரைச் சேர்த்துக்கொள்ளலாம். பீன்ஸ், பட்டாணி, பட்டர் பீன்ஸ், பயறு, கிழங்கு வகைகளைக் குறைத்துக்கொள்ளலாம். நார்ச் சத்து மிக்க உணவுகளை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்வது, மாதத்துக்கு ஒரு முறையேனும் மலமிளக்கியை எடுத்துக்கொண்டு வயிற்றைச் சுத்தப்படுத்திக்கொள்வது போன்றவை உதவும். அதிகமான சிக்கலை ஏற்படுத்தினால் பெருங்குடல் பாக்டீரியாக்களைப் பரிசோதனைசெய்து, அதன் தீவிரத்தைக் கட்டுப்படுத்தி வாயுத் தொல்லையைச் சரிசெய்யவும் மருத்துவ வசதி இருக்கிறது.”
- பருமனைக் குறைக்க வெயிட்டான ஐடியா!
- பாராதைராய்டு (Parathyroid) – Dr.கே.ராஜா வெங்கடேஷ்
- புற்றுநோயை விரட்டும் பீட்ரூட் ஜூஸ்
- மஞ்சள் மிளகுப் பாலின் பலனும் மகத்துவமும்
- மது உள்ளே.. மதி வெளியே..
- மருந்தும் மறக்கக்கூடாதவைகளும்
- மறந்துபோன மருத்துவ உணவுகள்
- மழலையில் மலரும் மொட்டுகள்
- மூட்டு வலி
- மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள்
- ரத்த அழுத்தமா கூல் கூலா தண்ணி குடிங்க
- ரத்தசோகைக்கு முடிவு கட்டும் பூசணி பாயசம்
- வாய்ப் புண்
- வாழ வைக்கும் வைட்டமின்கள்
- வெந்நீர் மகத்துவம்(மருத்துவம்)
சர்க்கரை (நீரிழிவு) நோயும் உணவு முறையும்
விட்டமின்கள்: நம் உடம்பில் உள்ள செல்கள் மற்றும் திசுக்களுக்கு தேவையான எனர்ஜியை வழங்குகின்றன. மேலும் நாம் உண்கின்ற உணவு சரியாக பயன்படவும் உதவுகின்றன. உதாரணமாக விட்டமின் அ, ஆ காம்ளக்ஸ் விட்டமின் மற்றும் விட்டமின் ஈ ஆகியவற்றைச் சொல்லலாம்.
தாதுக்கள்: தாதுக்கள் எலும்பு மற்றும் பல் வளர்ச்சி, தசை இயக்கம், நரம்பு செயல்பாடு ஆகியவற்றிற்கு உதவுகின்றன. நம் உடம்பிற்கு பயன்படும் தாதுக்களுக்கு உதாரணமாக கால்சியம், பொட்டாசியம், மக்னீஷியம் மற்றும் குரோமியம் ஆகியவற்றைச் சொல்லலாம்.
ஆரோக்கியமான மற்றும் ஆரோக்கியமற்ற ஊட்டச் சத்துக்கள்
மேற்கூறியவற்றை வைத்துப் பார்க்கும் பொழுது ஆரோக்கியமான உணவு வகைகள் மேற்சொன்ன ஊட்டச்சத்துக்களை எல்லாம் நமக்கு வழங்கக் கூடியதாக இருக்கும். ஆரோக்கியமற்ற உணவு வகைகள் இந்த ஊட்டச் சத்துக்களை தராதவைகளாக இருக்கும்.
ஆரோக்கியமான மற்றும் ஆரோக்கியமற்ற மாவுச்சத்துக்கள்
பிரகாசமான நிறம் கொண்ட காய்கறிகள் மற்றும் பழவகைகள் மேற்கண்ட ஏழு ஊட்டச் சத்துக்கள் கொண்டு இருப்பதால் இவையும் ஆரோக்கியமான மாவுச்சத்துகள் என்று பெயர் பெறுகின்றன. பார்லி மற்றும் ஓட்ஸ் தானிய வகைகளும், விட்டமின் கள், தாதுக்கள், நார்ச்சத்து, எண்ணெய் மற்றும் என்சைம்கள் ஆகியவற்றை கொண்டிருப்பதால் இவையும் ஆரோக்கியம் உள்ள மாவுச் சத்துகளாக கருதப் படுகின்றன. செயற்கையாக பதப்படுத்தப்பட்டு விற்பனை செய்யப்படும் உணவு பண்டங்கள் விட்டமின்கள், தாதுக்கள், என்ஸைம்கள் ஆகியவை இல்லாதிருப்பதால் ஆரோக்கியமற்ற மாவுச் சத்துக்களாக கருதப்படுகின்றன. மேலும் இந்த பதப்படுத்தப் பட்ட உணவுப் பண்டங்கள் நம்முடைய ரத்த ஓட்டத்தில் குளுக்கோஸ் அளவை வேகமாக ஏற்றுவதால், ஆரோக்கியமான உணவு என்ற தகுதியை இழக்கின்றன. இப்படித் தகுதி இழக்கும் உணவு பண்டங்களில் பாட்டில் செய்யப்பட்ட பழச்சாறுகள், உருளைக்கிழங்கு வறுவல்கள், வெள்ளை சாதம், வெள்ளை ரொட்டி, மற்றும் தக்காளி கெட்சப் ஆகியவை அடங்கும். இவையெல்லாம் நம் உடம்பிற்கு ஊட்டம் தருவதில்லை, பாதுகாப்பதில்லை, சுத்தப்படுத்துவதும் இல்லை.
ஆரோக்கியமான மற்றும் ஆரோக்கியமற்ற புரதச் சத்துக்கள்
கொட்டைகள், விதைகள், பீன்ஸ் வகைகள், மீன் மற்றும் இயற்கை முறையில் வளர்க்கப்படும் கோழிகள் இடும் முட்டைகள், சோயாபீன்ஸிலிருந்து தயாரிக்கப்படும் பொருட்கள் இவை எல்லாம் நமக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் பெரும் பாலானவற்றை கொண்டு இருப்பதால் ஆரோக்கியமான புரதச் சத்துக்களாகக் கருதப்படுகின்றன. மேலும் ஹைட்ரஜன் கலந்த கொழுப்புச் சத்து இவைகளில் அதிகமாகக் காணப்படுவதில்லை என்பதும் ஒரு நல்ல விஷயமாகும். மேலை நாடுகளில் சோளம் சாப்பிட்டு வளரும் கால்நடைகளுக்கு நிறைய வளர்ச்சி ஹார்மோன்கள் மற்றும் அன்டிபயாடிக் மருந்துகள் கொடுக்கப்படுவதால் இக்கால்நடைகளிலிருந்து பெறப்படும் இறைச்சி ஆரோக்கியமற்ற புரதமாக கருதப்படுகின்றது. இந்தக் கால்நடைகளிலிருந்து பெறப்படும் இறைச்சி புற்று நோயைத் தூண்டும். கொழுப்புச் சத்தை அதிகரிக்கும் மற்றும் இரத்தக் குழாய்களில் அடைப்பை ஏற்படுத்தும். ஆனால் புல் தின்று வளரும் கால்நடைகளுக்கு வளர்ச்சி ஹார்மோன்கள் மற்றும் ஆன்டிபயாடிக் மருந்துகள் கொடுக்கப்படுவதில்லை என்பதால் அவைகளினுடைய இறைச்சி ஆரோக்கியமான புரதமாகக் கருதப்படு கின்றது.
ஆரோக்கியமான மற்றும் ஆரோக்கியமற்ற கொழுப்புச் சத்துக்கள்
ஆலிவ் எண்ணெயிலுள்ள தனி கலப்பில்லாத கொழுப்புச் சத்து நம்முடைய ரத்தக் குழாய்கள் மற்றும் உடம்பிலுள்ள மூட்டுக்கள் ஆகியவற்றிற்கு நல்லதொரு உராய்வில்லாத இயக்கத்தை கொடுப்பதால் ஆரோக்கியமான கொழுப்புச் சத்தாகக் கருதப்படுகின்றது. மீன் எண்ணை மற்றும் வால்நட் கொட்டைகள் ஆகியவற்றில் காணப்படுகின்ற சில கூட்டுக் கலப்பில்லாத கொழுப்புச் சத்துக்கள் நம் உடம்பிற்கு மிகவும் தேவையான ஒமேகா 3 என்றழைக்கப்படும் அவசியமான கொழுப்பு அமிலத்தை கொண்டிருக்கின்றன. இவை நம்முடைய ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு, ரத்த அழுத்தம் மற்றும் ரத்தத்தின் அடர்த்தி ஆகியவற்றை கட்டுப்படுத்துவதால் நல்ல கொழுப்புச் சத்தாகக் கருதப்படுகின்றன.
பயனற்ற உணவு வகைகள்: பயனற்ற உணவு வகைகள் என்பவை நம் உடம்பை வியாதிக்கு உள்ளாக்கி நம்முடைய ஆயுளை குறைக்கக் கூடியவை. செயற்கையாக மிகவும் பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள் எல்லாம் இந்தப் பிரிவின் கீழ் அடங்கும். உடம்பிற்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் பெரும்பாலும் இவற்றில் இருக்காது. மேலும் இந்த பயனற்ற உணவுப் பண்டங்கள் புற்றுநோய், சர்க்கரை நோய், இதயக் கோளாறுகள் ஆகியவற்றை உண்டு பண்ணக் கூடியவை.
பயனுள்ள உணவுப் பண்டங்கள்: இந்தப் பண்டங்கள் நம்முடைய உடம்பை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகின்றன. அதே சமயத்தில் நோய் எதிர்ப்பு சக்தியைத் தருகின்றன. இவ்வுணவுப் பண்டங்கள் பெரும்பாலும் மிதமாக சமைக்கப்படுகின்றன என்பதால் நம்முடம்பிற்குத் தேவையான பெரும்பாலான ஊட்டச் சத்துக்கள் வீணாகாமல் காப்பாற்றப்படுகின்றன. இந்த உணவுப் பண்டங்கள் சர்க்கரை நோய் மற்றும் இதயக் கோளாறுகளிலிருந்து மீட்கக் கூடியவை.
ஐந்து பயனற்ற உணவுகள்:
ஐந்து பிரதான உணவுப் பண்டங்களை நாம் பயனற்ற உணவுகள் எனலாம். இவைகளை நாம் அளவுக்கு அதிகமாகச் சாப்பிடும் பொழுது இவை நம் உடம்பை பலஹீனப்படுத்தி புற்று நோய், சர்க்கரை நோய் மற்றும் இதயக் கோளாறுகளுக்கு ஆளாக்கிவிடுகின்றன. இந்த ஐந்து பிரதான உணவுப் பண்டங்கள் வெள்ளை சர்க்கரை, பதப்படுத்தப்பட்ட மாவு, மாற்றம் செய்யப்பட்ட கொழுப்பு, ஹைட்ரஜன் சேர்க்கப்பட்ட கொழுப்பு மற்றும் நம் உடல் நலத்தைப் பாதிக்கும் கெமிக்கல்ஸ் ஆகும்.
ஐந்து பயனுள்ள உணவுப் பண்டங்கள்:
நம் உடம்பிற்கு ஏற்ற கெமிக்கல் பாலன்ஸை உண்டுபண்ணி நம் உடம்பை நன்றாகப் பராமரித்து நோய் நொடியிலிருந்து காப்பாற்றும் சக்தி படைத்த உணவுப் பண்டங்கள் 5 உள்ளன. அவையாவன. காய்கறிகள் மற்றும் பழவகைகள், வடிகட்டப்பட்ட தண்ணீர், மெலிந்த புரதச் சத்து, தனிப்பட்ட கலப்பில்லாத ஒமேகா 3 கொழுப்புச் சத்து மற்றும் முழு தானிய வகைகள்.
பம்பளிமாஸ் பழம் ரத்த ஓட்டத்தை அதிகரித்து ரத்தத்திலுள்ள கொலஸ்ட்ரால் அளவையும் குறைக்கின்றது. பம்பளிமாஸ் விதைகள் மலச்சிக்கல், வாயு தொந்திரவு ஆகியவற்றைத் தடுக்கின்றன. இந்த நார்ச்சத்து மிகுந்த மேற்கண்ட காய்கறிகள் குளுக்கோஸின் அளவைக் கட்டுப்படுத்துவதால் அடிக்கடி சாப்பிட வேண்டும் என்று வருகின்ற ஆர்வத்தையும் குறைக்கின்றது. இருந்தாலும் வாழைப்பழம், பைன் ஆப்பிள், வாட்டர் மெலன் போன்ற பழங்களில் நிறைய சர்க்கரை சத்து இருப்பதால் இவற்றைத் தவிர்ப்பது நல்லது.
2. வடிகட்டிய தண்ணீர்: முனிசிபல் குழாய்களிலிருந்து கிடைக்கும் தண்ணீர் சுத்தமான தண்ணீர் என்று சொல்ல முடியாது. அதில் குளோரின், மற்றும் தேவையில்லாத தாதுக்கள் கலந்திருக்க வாய்ப்புண்டு. ஆகவே முனிசிபல் குழாய்களில் வரும் தண்ணீரை வடிகட்டுவதற்காக வீட்டில் அக்வா கார்டு என்ற வடிகட்டும் மெஷினை வைத்துக் கொள்வது நல்லது. பழம் மற்றும் காய்கறிகளில் இருக்கின்ற நீர் குழாய்களில் வரும் நீரைவிடத் தூய்மையானது. காய்கறிகளில் இருந்து பிழிந்து எடுக்கப்படும் சாறை அப்படியே சாப்பிட்டால், அது நம் உடம்பிற்கு மிகவும் நல்லது. குடிநீரில் குளோரின் அதிகமாக இருந்தால் அதுவே சிறுநீரை சேகரிக்கும் பிளேடரில் புற்றுநோய் வருதற்கு காரணமாக அமையும். அக்வாகார்டின் மூலம் குளோரினை அகற்றி விட்டு அக்குடி நீரை உபயோகப்படுத்தினால், அக்குடி நீர் நம்மை பாதிக்காது.
3. மெலிந்த புரதச்சத்து: இந்தப் பிரிவின் கீழ் சால்மன், சார்டின், டூனா, மேக்கரல், டிலாப்பியா ஆகிய மீன் வகைகளும், கொட்டைகள், விதைகள், பீன்ஸ் வகைகள், தோல் எடுக்கப்பட்ட கோழிக்கறி, தோல் எடுக்கப்பட்ட வான் கோழிக்கறி, ஆட்டுப் பால், கொழுப்புச்சத்து குறைந்த தயிர், இயற்கை முறையில் வளர்க்கப்பட்ட கோழிகள் இட்ட முட்டைகள் ஆகியவை இவற்றில் அடங்கும். கடல்வாழ் உயிரினங்களான இறால், நண்டு போன்றவைகளும் இதில் அடங்கும்.
உடல் நலத்தாக்கம்: மேற்கண்ட உணவு வகைகள் நம்முடம்பிற்குத் தேவையான அமினோ ஆசிடுகளை வழங்குகின்றன. அதே சமயத்தில் பால் பண்ணைகளில் கிடைக்கும் தீவனங்களை உண்டு வளரும் கால்நடைகளின் மாமிசத்தை சாப்பிடுவதால் நமக்குக் கிடைக்கக்கூடிய அதிகபட்ச ஹைட்ரஜன் கலந்த கொழுப்புச் சத்துக்களையும் தவிர்க்கின்றன. மேலும் இந்த உணவு வகைகள் நம் ஈரலில் சேர்த்து வைக்கப்பட்டிருக்கும் க்ளோககான் என்ற சர்க்கரை பொருளை திறம்பட உபயோகிப்பதற்கு நம் உடம்பிற்கு உதவுகின்றன. திறம்பட உபயோகிப்பதால் இன்சுலின் சுரப்பதும் குறைகின்றது. இன்சுலின் சுரப்பு குறைவதால், கொழுப்புச்சத்து மற்றும் கொலஸ்ட்ரால் சத்து நம் உடம்பில் கூடுவதும் குறைகின்றது. புளிப்படைந்த தயிர் சாப்பிடுவதால் நம் சிறுகுடலில் உள்ள ஜீரணத்திற்கு உதவுகின்ற நுண்ணுயிர்கள் வளர்கின்றன. இயற்கை முறையில் வளர்க்கப்பட்ட கோழிகளின் முட்டைகளை உண்ணும் பொழுது, அவைகளின் மூலம் நம்முடம்பிற்கு ஃபாலிக் ஆசிட், கோலின் மற்றும் ஒமேகா 3, கொழுப்பு அமிலங்கள் ஆகியவை கிடைக்கின்றன. இவை மூன்றும் நம்முடைய இதயம் மற்றும் இரத்த ஓட்ட அமைப்புகளுக்கு உதவுகின்றன.
4. ஹைட்ரஜன் கலப்பில்லாத கொழுப்புச் சத்துக்கள்: இப்பிரிவின் கீழ் தனித்த ஹைட்ரஜன் சேராத கொழுப்புச்சத்து, ஒமேகா 3 கூட்டு ஹைட்ரஜன் சேராத கொழுப்புச்சத்து, மற்றும் ஒமேகா 6 கூட்டு ஹைட்ரஜன் சேராத கொழுப்புச்சத்து ஆகியவை அடங்கும். தனித்த ஹைட்ரஜன் கலப்பில்லாத கொழுப்புச் சத்து ஆலிவ் எண்ணெயிலும், முந்திரி கொட்டைகளிலும், மணிலா கொட்டைகளிலும், ஆல்மண்ட் கொட்டைகளிலும் நிறைய இருக்கின்றது. மேலும் இந்தக் கொழுப்புச் சத்து ஆலிவ் எண்ணெயில் 75 % அளவிற்கு இருக்கின்றது. மேலும் ஹைட்ரஜன் சேராத இந்த தனித்த கொழுப்புச்சத்தை உண்ணும் பொழுது, ஹைட்ரஜன் சேர்ந்த கொழுப்புச் சத்துக்கள், மாற்றம் செய்யப்பட்ட கொழுப்புச் சத்துக்கள் ஆகியவற்றினால் விளைகின்ற உடல் நல பாதிப்புகள் இருப்பதில்லை. ஆகவே நாம் ஆலிவ் எண்ணெயை சமையலுக்கு சிறந்த எண்ணெயாக எடுத்துக் கொள்ளலாம்.
உடல் நலத்தாக்கம்: தனித்த ஹைட்ரஜன் கலப்பில்லாத கொழுப்புச் சத்துக்களும் அத்தியாவசிமான கொழுப்பு அமிலங்களும் நம்முடைய இதயம் மற்றும் ரத்த ஓட்ட ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமாகின்றன. உடம்பு இவற்றை தானே தயார் செய்து கொள்ள முடியாதபட்சத்தில் தாவர பொருட்கள் மற்றும் காய்கறிப் பொருட்களிலிருந்து இவற்றை நம் உடம்பு சேகரிக்கின்றது. இவை நம்முடைய இதயம் மற்றும் மூளையின் செயல்பாடு மற்றும் தசை வளர்ச்சி மற்றும் எலும்பு வளர்ச்சிக்கெல்லாம் உதவுகின்றன. அத்தியாவசியமான கொழுப்பு அமிலங்கள் பிராணிகளிடமிருந்து கிடைக்கும் கொழுப்புச் சத்தை போல் நம் ரத்தக் குழாய்களில் அடைப்பை ஏற்படுத்துவது இல்லை.
5. முழுதானியங்கள்: இப்பிரிவின் கீழ் பார்லி, ஓட்ஸ் மற்றும் பதப்படுத்தப்படாத முழு அரிசி ஆகியவை அடங்கும். இவைகளிலிருந்து நமக்கு பி காம்பளக்ஸ் விட்டமின்கள், விட்டமின் உ, குரோமியம், மக்னீஷியம் போன்ற தாதுக்களும், செல்லுலோஸ் என்ற கரையாத நார்ச்சத்தும் கிடைக்கின்றன.
கரைகின்ற நார்ச்சத்து சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு நல்லது ஏனென்றால் நம் உடம்பில் நிகழும் செறிமானத்தை அது நிதானப்படுத்துகின்றது. செறிமானம் நிதானப்படுவதால் சர்க்கரை நம் ரத்த ஓட்டத்தில் கலப்பதும் சீராக இருக்கின்றது. நம்முடைய சிறு குடலில் சேருகின்ற கெமிக்கல்களை இந்த நார்ச்சத்துக்கள் உறிஞ்சிக் கொள்வதால் இந்த கெமிக்கல்களிலிருந்து கொலஸ்ட்ரால் தயாரிக்கப்படுவது குறைகின்றது. கரைகின்ற நார்ச்சத்து வயிறு நிரம்பிவிட்ட உணர்வைக் கொடுப்பதால் நம்முடைய பசியும் அந்த அளவிற்கு குறைவதற்கு வாய்ப்புள்ளது. ஓட்ஸ், தவிடு மற்றும் சைலியம் தவிடு கரையும் நார்ச்சத்திற்கு சிறந்த மூலப்பொருட்கள் ஆகும். கரையாத நார்ச்சத்து சிறுகுடலில் உள்ள உணவுப் பிண்டத்திற்கு பருமன் சேர்க்கின்றது. அப்படிப் பருமன் சேர்ப்பதால் மலச்சிக்கல் உள்ளவர்களுக்கு எளிதாக மலம் கழிக்க முடிகின்றது. முழுத்தானியங்கள், ஆப்பிள் தோல், மற்றும் அரிசித் தவிடு ஆகியவை கரையாத நார்ச்சத்திற்கு சிறந்த மூலப் பொருட்கள் ஆகும்.
சர்க்கரை, உப்பு, சாக்லேட் மற்றும் காபிக்கான மாற்றுப் பொருட்கள்:
சர்க்கரை நோய் உள்ளவர்கள், சர்க்கரை,உப்பு, சாக்லேட் ஆகியவற்றிற்கான மாற்றுப் பொருட்கள் என்ன உட்கொள்வது என்பது பற்றி சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
சர்க்கரை:
இருபதாம் நூற்றாண்டின் பாதியிலேயே சர்க்கரையின் உபயோகம் ஏராளமாக அதிகரித்து விட்து. இருபதாம் நூற்றாண்டின் துவக்க காலத்தில் அமெரிக்காவில் ஒரு தனி நபர் 5 பவுண்டு சர்க்கரைதான் ஓராண்டிற்கு உபயோகித்து வந்தார். ஆனால் 20ஆம் நூற்றாண்டின் பாதியில் இத்தனி நபர் சர்க்கரை உபயோகம் 130 பவுண்டாக அதிகரித்து விட்டது. இது 26 மடங்கு உபயோகம் அதிகரிப்பதைக் காட்டுகின்றது. பால் மற்றும் பழங்களில் இயற்கையாகவே சர்க்கரை உள்ளது. ஆனால் உணவு தயாரிப்பாளர்கள் செயற்கையாக தாங்கள் தயாரிக்கும் எல்லா உணவுகளிலும் சர்க்கரையை சேர்க்கின்றார்கள். கார்ன் சிரப், குளுக்கோஸ், புருக்டோஸ், லாக்டோஸ், மால்டோஸ், சுக்ரோஸ் ஆகியவை எல்லாம் சர்க்கரையின் பல்வேறு வடிவங்களாகும்.
சாக்லேட்:
சாக்லேட்டில் கஃபின் என்ற கெமிக்கல் இருக்கின்றது. அதன் காரணமாக சாக்லேட் சாப்பிடும் பொழுது நமக்கு ஓர் உற்சாகம் கிடைக்கின்றது. இது நாளடைவில் நமக்கு ஒரு விடமுடியாத பழக்கமாக மாறலாம். வெள்ளை சாக்லேட் மற்றும் பால் சாக்லேட்டுகள் சுகர் மற்றும் கொழுப்புச் சத்து அதிகம் கொண்டவை. ஆனால் கறுப்பு நிறச் சாக்லேட் ஆன்டி ஆக்ஸைடண்ட் திறன் கொண்டது. ஆகவே நாம் பால் சாப்பிடுவதற்குப் பதிலாக கறுப்பு சாக்லேட் சாப்பிடுவது நல்லது.
காபி:
காபி தற்போது மிகவும் பிரபலமான பானமாக இருக்கின்றது. இருந்தாலும் இரண்டு அல்லது மூன்று கப்பிற்கு மேல் நாம் காபி குடிக்கும் பொழுது நம்முடைய இன்சுலின் அளவு அதிகமாகி அதன்மூலம் நம் உடம்பில் பாதிப்பு வருவதற்கு வாய்ப்பு உள்ளது. ரெகுலராக நாம் குடிக்கின்ற காபியைவிட சிக்கோரி, வேர்கனன், பொடியாக்கி அதிலிருந்து தயாரிக்கப்படும் சிக்கோரி காபி மிகவும் நல்லது. சிக்கோரி காபியில் கஃபின் குறைவாக உள்ளது. அதே சமயத்தில் நம் ஈரலையும் பலப்படுத்தக் கூடியது. சோயா பீனிலிருந்து தயாரிக்கப்படும் சோயா காபியும் கஃபின் இல்லாமல் இருக்கின்றது. இயற்கையான முறையில் வளர்க்கப்படும் காபிச் செடிகளிலிருந்து தயாரிக்கப்படும் காபியை நாம் ரேஷி என்றழைக்கப்படும் காளானுடன் சாக்லேட் கலந்து சாப்பிட்டால் அது நம்முடம்பிற்கு மிகவும் நல்லது. மேலும் பச்சை நிற டீயில் கஃபின் குறைவாக உள்ளது என்பதால் ரெகுலர் காபியைவிட பச்சை நிற டீ நல்லது.
உணவு தயாரிப்பு:
நம் உடம்பிற்குத் தேவையான உணவுப் பொருட்களை நாம் சாப்பிடும் பொழுதும் நாம் சரியான முறையில் அதை சமைக்காவிட்டால் அதில் உள்ள ஊட்டச் சத்துக்கள் எல்லாம் வீணாகிப் போகின்றன. உதாரணமாக ஆப்பிளை நாம் பச்சையாக சாப்பிடும் பொழுது அதில் உள்ள விட்டமின்கள், தாதுக்கள் மற்றும் நார்ச்சத்தெல்லாம் நமக்கு வீணாகாமல் அப்படியே கிடைக்கின்றன. ஆனால் அதை நம் பழச்சாறாக மாற்றும் பொழுது, அதிலுள்ள நார்ச்சத்தையெல்லாம் நாம் இழக்க நேரிடுகின்றது. தவறான சமையலின் காரணமாக மற்ற உணவு வகைகளும் இம்மாதிரியே விட்டமின்களையும், என்சைம்களையும், தாதுப் பொருட்களையும் இழக்க நேரிடலாம். ஆகவே இம்மாதிரி இழப்புகள் நேராமல் இருக்கும் பொருட்டு நம் சமையல் சம்மந்தமான சில முக்கிய விதிமுறைகளை பார்ப்பது நல்லது.
பச்சைக் காய்கறிச் சாறுகள் ஆன்டிஆக்சிடண்ட் மற்றும் ஆன்டிபயோடிக் போன்ற மருத்துவச் சக்தி வாய்ந்த ஊட்டச் சத்துக்கள் கொண்டுள்ளன. கேரட், செலரி, லெட்டூஸ் ஆகியவற்றில் உள்ள ஊட்டச்சத்துகள் சர்க்கரை நோயாளிகளுக்கு உதவக்கூடியவை. ப்ராக்கோலியில் உள்ள குரோமியம் இன்சுலின் அளவைக் கட்டுப்படுத்த உதவுகின்றது. பூண்டு, வெங்காயம் மற்றும் தக்காளியிலிருந்து பெறப்படும் பழச்சாறுகள் ஆன்டிபயோடிக் தன்மைக் கொண்டவை. வெள்ளரிக்காய் மற்றும் முட்டைக் கோஸிலிருந்து எடுக்கப்படும் சாறு ரத்த அழுத்தம் மற்றும் அசிடிடியை குறைக்கும் தன்மை கொண்டவை.
உணவின் தரம்:
இயற்கை உணவு மற்றும் செயற்கை உணவு: பூச்சி மருந்து அடிக்காமலும், கெமிக்கல் உரங்களை பயன்படுத்தாமலும் வளர்க்கப்படும் தாவரங்களிலிருந்து பெறப்படும் உணவு இயற்கை உணவாகக் கருதப்படும். பூச்சி மருந்து மற்றும் கெமிக்கல் உரங்களுடைய உதவியுடன் வளர்க்கப்படும் தாவரங்களிலிருந்து கிடைக்கும் உணவைவிட, இயற்கையாக தயாரிக்கப்படும் உணவில்தான் அதிக விட்டமின்களும், தாதுக்களும் உள்ளன என்று நிரூபணமாகி உள்ளது. இயற்கை உணவை வாங்குவது செலவு கண்ணோட்டத்தில் பார்க்கும் பொழுது ஒத்துவராது என்றால் செயற்கையாக வளர்க்கப்பட்ட பழம், காய்கறிகளை வாங்குபவர்கள் அவற்றை நன்றாகத் தண்ணீரில் கழுவிவிடுவது நல்லதாகும்.
உணவுப்பண்டங்களைப் பற்றிய தவறான கருத்துக்கள்:
கொழுப்புச் சத்து உடம்பில் அதிகம் சேருவது கெடுதல் என்பது ஒரு பக்கம் உண்மை என்றாலும் அதற்காகக் கொழுப்புச்சத்தை உணவிலிருந்து முற்றிலும் அகற்றுவதும் தவறாகும். தகுந்த அளவில் கொழுப்புச்சத்தை நாம் உட்கொள்வது உடம்பிற்கு நல்லது. நல்ல கொழுப்புச்சத்தை நாம் மீன்வகைகள், தாவர எண்ணெய் கள் மற்றும் தானியங்கள் கொட்டைகளிலிருந்து பெற்றுக் கொள்ளலாம்.
ஆரோக்கியமானவை என்று வர்ணிக்கப்படும் உணவுகள்:
தற்பொழுது மார்க்கெட்டில் நிறைய உணவுப் பண்டங்கள் ஆரோக்கிய மானவை என்று விளம்பரப்படுத்தப்படுகின்றன. இப்படிச் சொல்லப்படுகின்ற பல உணவு வகைகள் உண்மையில் உடம்பிற்கு நல்லவையில்லை. விளம்பரதாரர்கள் நம்மை அப்படி நம்ப வைக்கிறார்கள். கீழ்கண்ட உணவுப் பண்டங்கள் இந்த வகையைச் சேர்ந்தவை.
8. சர்க்கரை நோயாளிகளுக்கான உணவு: இந்த உணவுப் பண்டங்களில் சர்க்கரை குறைவாக இருக்கலாம். ஆனால் அதே சமயத்தில் நம் உடம்பைப் பாதிக்கக்கூடிய கார்ன்ஸிரப், ஹைட்ரஜன் கலந்த எண்ணெய் மற்றும் சோடியம் ஆகியவை கலந்திருக்கும். உண்மையில் சொல்லப்போனால் சர்க்கரை நோயாளிகளுக்கென்று தனிப்பட்ட உணவுப் பண்டங்கள் கிடையாது. உணவுப்பண்டங்களை விற்கின்ற கம்பெனிகள் மக்களை கவருவதற்காக இப்படி போலியான விளம்பரங்களை செய்கின்றன.
9. மாவுச்சத்து, கொழுப்புச்சத்து, கொலஸ்ட்ரால் குறைந்த பண்டங்கள்:இவை எல்லாமே மிகவும் அதிகமாக பதப்படுத்தப்பட்ட உணவுப் பண்டங்களாக இருப்பதால் ஊட்டச்சத்து குறைவாகவும், நம் ஆரோக்கியத்தை பாதிக்கக் கூடிய கெமிக்கல் அதிகம் கொண்டதாகவும் இருக்கும். குறைந்த மாவுச்சத்து என்றால் கலோரியும் குறைந்து விட்டதாக அர்த்தமில்லை. கொழுப்புச்சத்து குறைந்த பண்டங்கள் அதே சமயத்தில் சர்க்கரை அதிகமாகக் கொண்டிருப்பதால் இந்த சர்க்கரை நம்முடைய உடம்பில் கொழுப்பாக மாற்றப்படுவதால் இதுவும் நல்லதில்லை என்றாகிறது. இவற்றை உட்கொள்ளும் பொழுது இவை கூடுதலாக இன்சுலின் சுரப்பதற்குக் காரணமாகின்றன.
14. விட்டமின் மாத்திரைகள்: இந்த மாத்திரைகளில் விட்டமின் அளவு குறைவாகவும், பிறசத்துகள் அதிகமாகவுமிருக்கும். ஆகவே, இவற்றின் மூலம் நமக்குக் கிடைக்கும் விட்டமின் ஊட்டச்சத்து குறைவாகத்தானிருக்கும். ஆகவே இவற்றிற்குப் பதிலாக இயற்கையாக நமக்கு விட்டமின் தரக்கூடிய உணவு பண்டங்களைச் சாப்பிடுவது நல்லது.
15. தயிர்: இயற்கையான தயிரை சாப்பிடுவது நல்லது.
ஊட்டத்திற்காகச் சாப்பிடும் கூடுதல் பண்டங்கள்
இவற்றை சாப்பிடுகின்றவர்களுடைய அடிப்படை உணவு ஊட்டம் மிக்கதாகவும் அவர் நன்றாக உடற்பயிற்சி செய்பவராகவும், இருந்தால்தான் இந்தக் கூடுதல் தின்பண்டங்கள் உதவியாக இருக்கும். அடிப்படை ஊட்டம் போதுமானதாக இல்லாத பொழுது இந்தக் கூடுதல் தின்பண்டங்களால் பயனில்லை.
உணவு விருப்பம்
சர்க்கரை நோயாளிகள் முக்கியமாக கவனிக்க வேண்டிய ஒரு விஷயம் என்ன வென்றால் நிறைய கெமிக்கல்ஸ் நிறைந்த மிகவும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பண்டங்களை சாப்பிடுவதால் நமக்குத் தேவையில்லாமல் பசி எடுக்கிறது. இந்த கூடுதல் பசியை அவர்கள் தவிர்க்க வேண்டும். இந்தக் கூடுதல் பசி எப்படி உண்டாகிறது என்று பார்ப்போம். ஹார்மோன்களுடைய நார்மல் பேலன்ஸ் கெட்டுப் போவதால் இந்த கூடுதல் பசி வருகிறது. உதாரணமாக ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறையும் பொழுது நோயாளிக்கு பசி எடுக்கிறது. இந்தப் பசியை தவிர்ப்பதற்காக அவர் கூடுதலாக சர்க்கரை சாப்பிடுகிறார். இதன் காரணமாக தற்காலிகமாக அவருடைய ரத்தத்தில் சக்தி அதிகரிக்கிறது. ஆனால் சிறிது நேரத்தில் சர்க்கரையின் அளவு குறையும் பொழுது மீண்டும் எனர்ஜி லெவல் குறைகிறது. அவர் மீண்டும் சர்க்கரை சாப்பிட்டால் மீண்டும் இம்மாதிரியேதான் நிகழும். அப்பட்சத்தில் இதற்கு முடிவு இல்லாமல் போகிறது. ஆகவே இதைத் தவிர்க்க வேண்டுமென்றால் நோயாளி நார்ச்சத்து மற்றும் ஆன்டி ஆக்ஸிடண்ட் மற்றும் ஒமேகா3 அத்தியாவசியமான கொழுப்பு அமிலங்கள் மிகுந்த உணவுப் பண்டங்களைச் சாப்பிடுவது நல்லது.
- அதிநவீன ரத்த சோதனை
- ஆபத்து ஆபத்து கூல் வாட்டர் ஆபத்து
- உடல் எடையைக் குறைக்க
- உணவில் ஆபத்தான இரசாயனங்கள்
- எடையைக் குறைக்கப் போராட்டமா
- எந்தெந்த மருந்து எமனாகும்
- ஒவ்வாமை (அலர்ஜி)
- கணினியும் கண்ணும்
- கர்ப்பிணிகள் செல்போனில் பேசினால்
- குறட்டைக்கான காரணங்களும் சிகிச்சை முறைகளும்
- குழந்தைகளுக்காக
- கொலஸ்ட்ரால் [கொழுப்புசத்து]
- கொளுத்தும் கோடையை ‘கூல் டவுன்’ செய்ய
- கோடை பானங்கள்
- சர்க்கரை நோய் ஒரு பார்வை
- சாதிக் அலி
- டாக்டரிடம் கேளுங்கள்
- தலைமுடி பிரச்சனையும் மருத்துவமும்
- தினமும் இருமுறை பல் துலக்கினால்
- தெரெஸா.ஆர்.கே
- நடை பயிற்சி (Walking)
- நாட்டு வைத்தியம்
- கணுக்கால் வலியிலிருந்து விடுதலைப் பெற
- கீரையும் வெந்தயமும்
- குழந்தைகளின் வளர்ச்சிக்கு கொய்யா
- சர்க்கரை நோயும் உணவு முறையும்
- நீரழிவு சர்க்கரை(Sugar) நோய்க்கு ஒரு எளிய மருந்து
- பசலைக்கீரை மகத்துவம் (மருத்துவம்)
- மங்குஸ்தான் பழம்
- மலட்டுத் தன்மையை விரட்டும் மர வைத்தியம்
- வெங்காயத்தின் 50 மருத்துவ குணங்கள்
- வெந்தயத்தின் மருத்துவ குணங்கள்
- பாராதைராய்டு (Parathyroid) – Dr.கே.ராஜா வெங்கடேஷ்
- புற்றுநோயை விரட்டும் பீட்ரூட் ஜூஸ்
- மஞ்சள் மிளகுப் பாலின் பலனும் மகத்துவமும்
- மருந்தும் மறக்கக்கூடாதவைகளும்
- மூட்டு வலி
- மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள்
- ரத்த அழுத்தமா கூல் கூலா தண்ணி குடிங்க
- ரத்தசோகைக்கு முடிவு கட்டும் பூசணி பாயசம்
- வாழ வைக்கும் வைட்டமின்கள்
- வெந்நீர் மகத்துவம்(மருத்துவம்)
- வைட்டமின் என்றால் என்ன?
- Dr.அம்புஜவல்லி
- Dr.எம்.கே.முருகானந்தன்
- Dr.நந்தினி
- Dr.ஷேக் அலாவுதீன்
- Dr.M.மகேஸ்வரி MBBS
- Dr.S.முரளி MDS
- H.R. Akbar Ali
உண்ணுங்கள் பருகுங்கள் எனினும் வீண் விரயம் செய்யாதீர்கள்
A LESSON FOR EVERY CITIZEN OF THE WORLD
பணம் உன்னுடையது, ஆனால் உணவு பொதுச்சொத்து!
இத்தா (கணவன் மரணம், விவாகரத்து) – மௌலவி S.H.M. இஸ்மாயில்
இது குறித்து அல்குர்ஆனில் பின்வருமாறு கூறப்படுகின்றது;
“கர்ப்பிணிகளின் (இத்தாக்)காலம் அவர்கள் தமது குழந்தைகளைப் பெற்றுப் பிரசவிக்கும் வரையிலாகும்..” (65:3)
இவர் அப்படிக் கூறியதன் பின், நடந்ததை ஸபீஆ(ரலி) அவர்கள் கூறும் போது;
(புகாரி 5318, 5319, முஸ்லிம் 1485, திர்மிதி, நஸஈ, அஹ்மத்)
எனவே, கர்ப்பிணிப் பெண் குழந்தை பெற்றதும் அவளது இத்தாக்காலம் முடிந்து விடும்.
(2) கர்ப்பிணி அல்லாத கணவன் மரணித்த பெண்களின் இத்தா:
இந்த இத்தாக் குறித்துக் குர்ஆன் பேசும் போது;
இத்தாவுக்கான தனியான சட்டங்கள்:
பின்வரும் வசனம் இது குறித்துத் தெளிவாகப் பேசுகின்றது;
எனவே, மரணத்திற்காக “இத்தா” இருக்கும் பெண்கள் அலங்காரங்களைத் தவிர்க்க வேண்டும்.
இந்த “இத்தா” குறித்து அதிக மூடநம்பிக்கைகள் மக்கள் மத்தியில் இருந்து வந்தன.
– வயது போன பெண்கள் 40 நாட்கள் “இத்தா” இருந்தால் போதும்.
– அவர்கள் இருட்டறையில் இருக்க வேண்டும்.
– ஆண்பிள்ளைகள்-சிறுவர் எவரையும் அப்பெண் பார்க்கவோ, எவருடனும் பேசவோ கூடாது.
இது குறித்து ஜாபிர்(ரலி) அவர்கள் கூறும் போது;
இது குறித்து அல்குர்ஆன் பின்வருமாறு கூறுகின்றது;
ஆ. தலாக் விடப்பட்ட மாதத்தீட்டு ஏற்படக்கூடிய பெண்களின் இத்தா:
இது குறித்துப் பின்வருமாறு கூறுகின்றது;
இ. மாதத்தீட்டு நின்ற அல்லது ஏற்படாத பெண்கள்:
இந்த நிலையில் இருக்கும் பெண்கள் பிறைக் கணக்கில் 3 மாதங்கள் “இத்தா” இருக்க வேண்டும்.
இது குறித்துப் பின்வரும் வசனம் பேசுகின்றது;
“இத்தா” இருக்கும் பெண்கள் தமது கருவில் சிசு இருந்தால் அதை மறைக்கலாகாது..
இது குறித்துப் பின்வரும் வசனம் விரிவாகப் பேசுகின்றது;

جَزَاكَ اللَّهُ خَيْرًا
நன்றி:- மௌலவி S.H.M. இஸ்மாயில்
நன்றி:- http://www.ottrumai.net/
- அண்ணல் நபி (ஸல்)
- அல் குர்ஆன்
- அல்லாஹ்வின் திருநாமங்கள்
- அவன் இல்லை என்று சொல்லுவதில்லை
- அஹ்லுல் பைத்
- இல் அறம்
- இஸ்லாம் இலகுவான மார்க்கம்
- ஈத் முபாரக்
- உம்ரா
- உறவின் இலக்கணம் – உறவெனும் பாலத்தை பலப்படுத்துவோம்
- எது முக்கியம்?
- கடமையான குளிப்பு
- கற்பொழுக்கம் ஆண்களுக்கும் அவசியம்
- குழந்தைகள்
- சோம்பல் இஸ்லாத்தின் பார்வையில்
- ஜனாஸா (மய்யித்)
- ஜும்ஆ
- துஆ
- அன்றாடம் ஓத வேண்டிய துஆக்கள்
- அல்குர்ஆனில் இடம்பெற்ற துஆக்கள்
- ஆயத்துல் குர்ஸி
- இரவில் விழிப்பு வந்தால் ஓத வேண்டியது
- இறந்தவருக்காகச் செய்யும் துஆ
- கடன் நிறைவேற காரியம் சிரமமானால் ஓதவேண்டிய துஆக்கள்
- கடமையான தொழுகைக்குப்பின்
- கப்ருகளை ஜியாரத் செய்யும்போது( நபி வழி)
- கவலையின் போது ஓதும் துஆ
- ஜனாஸா தொழுகையில் ஓதும் துஆ
- தலைசிறந்த பாவமன்னிப்பு (சையிதுல் இஸ்திஃபார்)
- தூங்குவதற்கு முன் ஓத வேன்டியவை
- நோயாளியை விசாரிக்கச் செல்லும் போது
- மணமக்களை வாழ்த்தும் போது ஓத வேண்டியது
- வீட்டிருந்து வெளியே செல்லும் போது
- தொலைபேசியும் இஸ்லாமிய பெண்களும்
- தொழுகை
- இஸ்திகாரா தொழுகை – வெற்றியின் இரகசியம்
- உளூ செய்யும் முறை
- குழந்தைகளை தொழுகையில் ஆர்வமூட்ட
- சுன்னத் தொழுகைகள் உபரியான வணக்கங்கள்
- ஜமாஅத் தொழுகை
- ஜமாஅத் தொழுகையை அலட்சியம் செய்வோரின் நிலை
- தயம்மும்-நோயாளி உளூ செய்வது
- தொழுகை கடமையும் சிறப்பும்
- தொழுகையும் உடல்ஆரோக்கியமும்
- தொழுகையை விடுவது மிகப்பெரிய பாவமாகும்
- நன்னடத்தையை வலியுறுத்தும் இஸ்லாம்
- நல்லறங்கள்
- நோன்பு
- பர்தா
- பார்வை
- பிழை பொருத்தருள் யாஅல்லாஹ்
- பெற்றோர்
- முன்மாதிரி முஸ்லிம்
- யா ரசூலுல்லாஹ் என அழைக்கலாமா?
- வலிமார்கள்
- வாழ்வின் முன்னேற்றத்திற்கு
- விதியின் அமைப்பு
- ஷிர்க் என்றால் என்ன?
- ஸலாம் கூறுவதன் சிறப்பு
- ஸுன்னத் வல் ஜமாஅத்
- ஹஜ்