தொகுப்பு
இணைந்து வாழ்வதே சிறந்தது! மு.அ. அபுல் அமீன்
கருணை காட்டவில்லை. கடுமையாய் வெறுத்தாள். அவர்களிடையே கசப்பு முற்றி இசைவான வாழ்விற்கு வாய்ப்பில்லை என்றானது. ஜமீலா, நபிகள் பெருமானார் அவர்களிடம் அவரின் நிலையை எடுத்துரைத்தார். பெருமானார் அவர்கள் தாபித்தை அழைத்து விசாரித்தார்கள். தாபித் தன் உயிரினும் மேலாய் தனது மனைவி ஜமீலாவை உவப்பதாய் உளமார நேசிப்பதாய் உறுதியாகக் கூறினார். ஜமீலாவோ தாபித் கூறுவது முற்றிலும் உண்மை என்றாலும் என்னால் அவரை நேசிக்க முடியவில்லை. நேசமில்லாமல் பொய் வேஷமிட்டு வாழ விரும்பவில்லை என்றார்.
நன்றி:- தினமணி 22 Feb 2013 வெள்ளிமணி
நன்றி:- மு.அ. அபுல் அமீன் நாகூர். அஞ்சலக அதிகாரி(ஓய்வு), செல்பேசி:-00919943469691
துணைதலைவர்:- மத்தியஅரசு ஓய்வூதியர் சங்கம் நாகப்பட்டினம், ஜாமியா மஸ்ஜித் செய்யது பள்ளி நாகூர்.
பொருளர்:- நாகூர் தமிழ் சங்கம் நாகூர்.
அயலாரிடம் அன்பு! – மு.அ. அபுல்அமீன் நாகூர்
“”பெண்களே! அண்டை வீட்டாருக்குக் கொடுப்பதை அற்பமாகக் கருத வேண்டாம். அது ஆட்டின் குளம்பாயினும் சரியே”
இமாம் அபூஹனீபா அவர்கள் இரவே கொட்டும் நீரைப் பாத்திரத்தில் பிடித்து அப்புறப்படுத்துவதை வழக்கமாக செய்தார். ஒரு நாளிரவு இதனைக் கண்ட யூதர் “”ஒரு வேலையாளை வைத்து கழிவு நீரை அகற்றாமல், வேலையாள் கூலியை மிச்சப்படுத்தி இவ்வேலையை நீங்களே செய்கிறீர்களா?” என்று கேலி செய்தார். இமாம் அவர்கள் எங்கிருந்து நீர் கொட்டுகிறது என்பதைக் கவனிக்குமாறு யூதரிடம் வேண்டினார்கள். அவரின் வீட்டிலிருந்து கழிவு நீர் கொட்டுவதையறிந்த யூதர் மனம் வருந்தி திருந்தி இமாம் பொருந்தும் மாணவராய் அவரின் மதரசாவில் சேர்ந்தார்.
وَاعْبُدُوا اللَّـهَ وَلَا تُشْرِكُوا بِهِ شَيْئًا ۖ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا وَبِذِي الْقُرْبَىٰ وَالْيَتَامَىٰ وَالْمَسَاكِينِ وَالْجَارِ ذِي الْقُرْبَىٰ وَالْجَارِ الْجُنُبِ وَالصَّاحِبِ بِالْجَنبِ وَابْنِ السَّبِيلِ وَمَا مَلَكَتْ أَيْمَانُكُمْ ۗ إِنَّ اللَّـهَ لَا يُحِبُّ مَن كَانَ مُخْتَالًا فَخُورًا
“”அண்டை வீட்டிலுள்ள உறவினர்களுக்கும் அந்நிய அண்மை வீட்டாருக்கும் அன்பும் நன்றியும் செய்யுங்கள்” என்ற திருக்குர்ஆனின் 4-36வது வசனப்படி நாமும் அண்டை அயலாரிடம் அன்பு பாராட்டி சுமுக உறவைப் பேணிக் காப்போம். ஒருவருக்கொருவர் ஒத்துழைத்து உத்தம நபிகள் வாழ்ந்து காட்டிய சத்திய நெறியில் வாழ்ந்து மறுமையிலும் சுவனத்தல் சுக வாழ்வு வாழ்வோம்.
நன்றி:- தினமணி 04 Oct 2012 வெள்ளிமணி
நன்றி:- மு.அ. அபுல் அமீன் நாகூர். அஞ்சலக அதிகாரி(ஓய்வு), செல்பேசி:-00919943469691
துணைதலைவர்:- மத்தியஅரசு ஓய்வூதியர் சங்கம் நாகப்பட்டினம், ஜாமியா மஸ்ஜித் செய்யது பள்ளி நாகூர்.
பொருளர்:- நாகூர் தமிழ் சங்கம் நாகூர்.
அண்மைய பின்னூட்டங்கள்