தேன் குடித்த நரியைப் போல என்று சொல்லுவார்கள். அர்த்தம் என்ன?.
சரி. புண்களைக் குணப்படுத்த எவ்வளவு தேன் இடவேண்டும். மெல்லிய படையாக இட்டால் போதும் என இரு மருத்துவ அறிக்கைகள் கூறின. ஆயினும் ஏனைய பல மருத்துவ அறிக்கைகள தாராளமாகத் தேன் இடுவது பற்றியும் இன்னும் சில புண்களின்மேல் தேனை ஊற்றியதாகவும் கூறின.
நன்றி :- Dr.எம்.கே.முருகானந்தன்.
நன்றி :- ஹாய் நலமா?

தேன், தேனீ பற்றி திருமறை குர்ஆனில்
அல்லாஹ்வின் அற்புதப் படைப்புகள்- தேனீ
அருள்மறைக் குர் ஆனில் அல்லாஹ், தேனீக்களைச் சிந்திக்கும் மக்களுக்கு அத்தாட்சி எனக் குறிப்பிடுகிறான். அத்தோடு நாம் அதனை அல்லாஹ்வின் அத்தாட்சியாகக் கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிடுகிறான். அருள்மறை குர் ஆனின் 16-வது அத்தியாயத்தில் தேனீக்களைப் பற்றி அல்லாஹ் குறிப்பிடுகின்றான். தேனீக்கள் நமக்காகத் தேனை உருவாக்கின்றன என்பதும், அந்தத் தேனை உருவாக்குவது எப்படி என்றும் வல்ல அல்லாஹ் தேனீக்களுக்குக் கற்றுக் கொடுத்திருக்கின்றான் என்றும், மேற்படி வசனத்தில் வல்ல அல்லாஹ் குறிப்பிடுகின்றான்.
உம் இறைவன் தேனீக்கு, அதன் உள்ளுணர்வை அளித்தான். நீ மலைகளிலும், மரங்களிலும், உயர்ந்த கட்டடங்களிலும் கூடுகளை அமைத்துக் கொள்(என்றும்) பின்,நீ எல்லாவிதமான கனிகளின் மலர்களிலிருந்தும் உணவருந்தி, உன் இறைவன் (காட்டிக்)தரும் எளிதான வழிகளில்(உன் கூட்டுக்குள்) ஒடுங்கிச்செல் (என்றும் உள்ளுணர்ச்சி உண்டாக்கினான்) அதன் வயிற்றிலிருந்து பலவித நிறங்களையுடைய ஒரு பானம் (தேன்) வெளியாகிறது, அதில் மனிதர்களுக்கு(ப்பிணீ தீர்க்க வல்ல்) சிகிச்சை உண்டு. நிச்சியமாக, இதிலும் சிந்தித்துணரும் மக்களுக்கு ஓர் அத்தாட்சி இருக்கிறது.(திருக்குர் ஆன்-16:68,69)
……………………….
மனிதகுலத்துக்கு அல்லாஹ் வழங்கியுள்ள அற்புத நோய் நிவாரணி தேன் என்பதில் இருகருத்து இருக்க முடியாது. அண்ணலார் (ஸல்) அவர்கள் தனது மருத்துவ வழிகாட்டுதலில் (திப்பநபவி) அதிகமான இடங்களில் தேனைப்பற்றி குறிப்பிட்டுள்ளார்கள். மருத்துவத்துறைகள் ஒப்பற்ற இடத்தை பிடித்துள்ள இந்த தேனை உருவாக்கும் தேனியைப் பற்றியும் ஆய்வாளர்கள் ஆய்ந்து வந்துள்ளார்கள். அவர்களில் “வான் பிரிஸ்க்” என்ற ஆய்வாளர். தேனீ பற்றி குறிப்பிடும் போது மலரி லிருந்து தேனீ அதன் சாற்றை உறிஞ்சி அதனை உற்பத்தி செய்கிறது. இவ்வாறு தேனீ சாறு கிடைக்கக்கூடிய மலர்களை கண்டால் உடனே அது திரும்பிச் சென்று மற்ற தேனீக்களுக்கும் குறிப்பிட்ட மலர்களை யும் அது இருக்கும் பகுதிகளையும் தெளிவான முறையில் விபரிப் பதாக குறிப்பிடுகிறார். இவ்வாறு அறிவிப்புச் செய்யும் தேனீயும் தேனை சேகரிக்க செல்லும் தேனீக்களும் அனைத்தும் பெண் தேனீக்கள் தான் என்றும் தன் ஆய்வில் குறிப்பிடுகிறார். இந்த விஷயங்களை அல்லாஹு தஆலா தனது குர்ஆனில் தெளிவான முறையில் குறிப் பிடுகிறான்.
(68)உம் இறைவன் தேனீக்கு அதன் உள்ளுணர்வை அளித்தான். “நீ மலைகளிலும், மரங்களிலும், உயர்ந்த கட்டடங்களிலும் கூடுகளை அமைத்துக்கொள் (என்றும்), (69) “பின், நீ எல்லாவிதமான கனி(களின் மலர்களிலிருந்தும் உணவருந்தி உன் இறைவன் (காட்டித் தரும்) எளிதான வழிகளில் (உன் கூட்டுக்குள்) ஒடுங்கிச் செல்” (என்றும் உள்ளுணர்ச்சி உண்டாக்கினான்). அதன் வயிற்றிலிருந்து பலவித நிறங்களையுடைய ஒரு பானம் (தேன்) வெளியாகிறது அதில் மனிதர்களுக்கு (பிணி தீர்க்க வல்ல) சிகிச்சை உண்டு நிச்சயமாக இதிலும் சிந்தித்துணரும் மக்களுக்கு ஓர் அத்தாட்சி இருக்கிறது. அல்குர்ஆன் (16:68)
இந்த ஆயத்தில் அல்லாஹ் தேனீயைப் பற்றி குறிப்பிடும் பொழுது ”நீ சாப்பிடு” நீ நுழைந்து கொள்” என்ற அர்த்தத்தை பொதிந்துள்ள “குலீ” “ஃபஸ்லுகீ” என்ற வாசகத்தை கூறி யுள்ளான். இந்த வாசகம் பெண்பாலிடம் உபயோகப்படுத்தும் வார்த்தை களாகும். இதன்மூலம் அல்லாஹுதஆலா தேனைத் தேடிச் சென்று மலர்களின் சாறுகளை சேகரிக்கும் தேனீக்கள் பெண் தேனீக்கள் தான் என்ற விஷயத்தையும் தெரியப்படுத்துகிறான். தற்கால ஆய்வில் அறியப்படுகிற விஷயத்தை சுமார் 1400 வருடங்களுக்கு முன்பே அல்குர்ஆன் பதிவு செய்து வைத்திருப்பது ஆச்சரியத்திலும் ஆச்சரியம் அல்லவா !
மனிதர்களே! உங்கள் மீது அல்லாஹ் வழங்கியுள்ள பாக்கியங்களைச் சிந்தித்துப் பாருங்கள்; வானத்திலும், பூமியிலுமிருந்து உங்களுக்கு உணவளிப்பவன், அல்லாஹ்வை அன்றி (வேறு) படைப்பாளன் இருக்கின்றானா? அவனையன்றி வேறு நாயன் இல்லை அவ்வாறிருக்க, (இவ்வுண்மையை விட்டும்) நீங்கள் எவ்வாறு திருப்பப்படுகிறீர்கள் ? (அல்குர்ஆன் (35:3)

25.271139
55.307485
Like this:
Like ஏற்றப்படுகின்றது...
பிரிவுகள்:தேன், தேன் - தேனீ, மருத்துவம்
குறிச்சொற்கள்:அல்லாஹ்வின் அற்புதப் படைப்புகள், இயற்கை மருத்துவம், குளுக்கோனிக், சிகிச்சை, திருக்குர் ஆன், திருக்குர் ஆன் 16:68, தேனினால் சுத்தமும் செய்யலாம், தேனின் சிறப்பு அம்சங்கள், தேனீ, தேனீக்கள், தேன், தேன் எவ்வாறு குணமாக்குகிறது, நோய் நிவாரணி, பக்கவிளைவுகள், பெண், பெண் தேனீக்கள், மருத்துவம், மருந்து, விஞ்ஞான பூர்வ தகவல்கள், Gluconic acid, honey
அண்மைய பின்னூட்டங்கள்