தொகுப்பு

Archive for the ‘தினமும் இருமுறை பல் துலக்கினால்’ Category

தினமும் இருமுறை பல் துலக்கினால் இதய நோய் வராது


Brush your teeth twice daily to avoid heart diseaseதினமும் இரண்டு-முறை பல் துலக்குபவர்களுக்கு இதயநோய் வரும் வாய்ப்புக் குறைவு என லண்டனில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று கூறுகிறது. லண்டனில் இருந்து வெளி வரும் மருத்துவ இதழ் ஒன்று இந்த ஆய்வை மேற்கொண்டது. இந்த ஆய்வை பேராசிரியர் ரிச்சர்டு வாட் என்பவர் தலைமையேற்று நடத்தினார். 11 ஆயிரம் பேரிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.இந்த ஆய்வில் வாய் சுத்தத்திற்கும் இதய ஆரோக்கியத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக வாட் கூறினார். தினமும் இரு முறை பல் துலக்குபவர்களுக்கு இதய நோய் வரும் வாய்ப்பு 70 சதவீதம் குறைவு எனவும் ஆய்வில் தெரிய வந்துள்ளது. வாயில் புண் ஏற்பட்டால் பாக்டீரியா தொற்று ஏற்பட்டு அதனால் இதயம் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாக இங்கிலாந்தைச் சேர்ந்த பிரபல இதய நோய் பராமரிப்பு செவிலியர் ஜூடி ஓ சுலிவான் தெரிவித்தார்.தினமும் காலையிலும் இரவிலும் பல் துலக்குவதால் வாய்ப்புண்ணால் ஏற்படும் பாக்டீரியா தொற்று தடுக்கப்பட்டு இதயம் காக்கப்படும் எனவும் அவர் கூறினார். இதுபற்றி வாட் கூறுகையில் தங்களது ஆய்வு முடிவுகளை இதய நோய் வல்லுனர்கள் ஏற்றுக் கொண்டிருப்பதாகவும் இது பற்றி மேலும் பல ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார்.