தொகுப்பு

Archive for the ‘நீரிழிவு நோய்(DIABETES)’ Category

நீரிழிவு நோய்(DIABETES) அறிந்துகொள்வோம் – சாதிக் அலி குளச்சல்


நம் உடலில் உள்ள திசுக்களில் தேவையான சக்தியை, இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் கொடுக்கிறது. இருப்பினும் குளுக்கோஸை திசுக்களில் செலுத்த இன்சுலின் என்ற ஹார்மோன் தேவைப்படுகிறது. வயிற்றின் பின் பகுதியில் கணையம் (pancreass) என்னும் சுரப்பி உள்ளது. இங்கு இருந்து தான் இன்சுலின் உற்பத்தியாகிறது. இன்சுலின் அளவு குறையும் போது, உடலில் உள்ள திசுகளுக்கு தேவையான குளுக்கோஸை இரத்தத்தில் இருந்து பெறமுடிவதில்ல. இதனால் இரத்த ஓட்டத்தில் சக்கரையின் அளவு அதிகமாகிறது.இது தான் சர்க்கரை நோய், நீரிழிவு நோய், Diabetes என்றெல்லாம் அழைக்கப்படுகிறது

இரத்த ஓட்டத்தில் சேரும் அதிகப்படியான சக்கரை இதயம், சிறுநீரகங்கள், கண்கள், மற்றும் நரம்பு மண்டலம் மற்றும் இரத்த நாளங்களை பாதிக்கிறது. சரியான முறையில் மருத்துவர் ஆலோசனைகளைக் கடைப் பிடிக்காமல் இருந்தால் மோசமன விளைவுகளுக்கு ஆளாகிவிடுவோம். சில சமயங்களில் மரணத்திலும் முடியலாம். இரத்த சக்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர்கள், மேலே குறிப்பிட்டுள்ள உபாதைகளினால் பாதிக்காமல் தங்களை காத்துக் கொள்ள முடியும்.

நீரிழிவின் வகைகள்

 • டைப் 1 டயாபிடிஸ் (Type 1 diabetes)
 • டைப் 2 டாயாபிடிஸ் (Type 2 diabetes)
 • ஜெஸ்டேஷனல் டயாபிடிக்ஸ் (Gesgational diabetes)

டைப் I நீரழிவு நோய்

இவ்வகை ஜூவனைல் டயாபிடிஸ் (Juvenial) அல்லது இன்சுலின்-டிபன்டன்ட் டயாபிடிஸ் (இன்சுலின் சார்ந்த நோய் என்றும் அழைப்பர்). நீரழிவு நோய் என்று முடிவு செய்யப்பட்டவர்களில் 5 முதல் 10 சதவிகிதம் இவ்வகை நீரழிவு வகையைச் சார்ந்தவர்கள். எதிர்ப்பு சக்தி வலு இழுக்கும் போது, இத்தொற்றுக் கிருமிகள் கணையத்தின் (pancreas) இன்சுலின் உற்பத்தி செய்யும் செல்களை அழித்துவிடுகிறது. நாம் உண்ணும் உணவில் இருந்து கிடைக்கப் பெற்ற கொழுப்பு மற்றும் சக்கரையை இன்சுலின் இல்லாததால் நம் உடல் அதனை பயன் படுத்த முடியாமல் போகிறது. இவ்வகை நீரழிவு நோய் உள்ளவர்கள் இன்சுலின் எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்கள். அவர்களால் இனசுலின் உற்பத்தி செய்ய முடியாது. இது சிறுவர்களுக்கும், இளைஞர்களுக்கும் எந்த வயதிலும் ஏற்படும். உடல்நிலை பாதிக்கப்படும் போது இது திடீர் என்று வருகிறது. இதை சரி செய்ய முடியாது. இருப்பினும் மருத்துவத்தின் முன்னேற்றத்தால் சுய கவனம் செலுத்தி இதில் இருந்து தங்களை காப்பாற்றிக் கொண்டு சிக்கல்களைத் தவிர்த்து, ஆரோக்கியமான வாழ்கையை வாழலாம்.

டைப் I நீரழிவு நோய்யின் குணாதிசியங்கள்

 • பொதுவாக குழந்தைகளுக்கு ஏற்படுகிறது
 • அடிக்கடி தண்ணீர் தாகம் ஏற்படும், சிறுநீர் கழித்தல், எடை குறைதல் போன்ற பிரச்சனைகள் உண்டாகும்.
 • இது பொதுவாக பரம்பரை நோய் அல்ல
 • இந்நோய் பரம்பரையில் இருப்பின் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
 • சக்கரையின் அளவை குறைக்க இன்சுலின் தேவைப்படுகிறது.
 • உண்ணும் உணவு, உடற்பயிற்சி, இன்சிலின் அளவு ஆகியவற்றில் சிறிது மாற்றம் இருப்பின் இரத்ததில் உள்ள சக்கரையின் அளவு குறிப்பிடும் வகையில் மாறுபடும்.

டைப் II நீரழிவு நோய்

இதை இன்சுலின் சார்பற்ற நீரழிவு நோய் எனப்படும். பொதுவாக 40 வயதைக் கடந்தவர்களுக்கு எற்படும் பாதிப்பு. இவர்களுக்கு இன்சுலின் சுரக்கும், ஆனால் தேவையான அளவு சுரக்காது அல்லது அதன் செயலாற்றும் தன்மை குறையும். நீரழிவு நோய்யால் பாதிக்கப்பட்டவர்களில் 90-95 சதவிகிதம் இவ்வகையைச் சார்ந்தவர்கள். தற்சமய ஆய்வின் படி, இளைஞர்களும் பாதிக்கப்படுகிறார்கள். தற்போதைய வாழ்கை முறையும், உடல் உழைப்பைச் சாரா வேலைகளை செய்வதும் ஒரு காரணம்.
இது படிப்படியாக முற்றி தீராத நோய்யாக மாறும் (progressive) ஒரு நோயாகும். குறிப்பிடதக்க மோசமான சிக்கல்களை உண்டாக்கும். குறிப்பாக இருதய நோய், சிறுநீரக நோய், மற்றும் கண் தெடர்பான, கை, கால் நரம்பு, இரத்தக் குழாய் பாதிப்புகள் ஏற்படலாம் மற்றும் அறுவை சிகிச்சை மூலம் கால் விரல்களை நீக்கும் நிலையும் ஏற்படலாம். இதற்கு நிரந்தர தீர்வு இல்லை என்றாலும், சிலர் ஆரம்பகட்டத்திலேயே நன்கு கவனம் செலுத்தி, தங்கள் உடலின் எடையைக் குறைத்து (பட்டினி இருந்து எடையைக் குறைப்பது முறையல்ல சரியான உணவின் மூலம் சீராக எடைக்குறைப்பு), உணவில் அதிக கவனம் செலுத்தி சக்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வதால் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்கிறார்கள். பலருக்கு சில மருந்துகளும், மற்றும் பலருக்கு இன்சுலினும் தங்களின் உடல் சிக்கலில் இருந்து காத்துக் கொள்ள தேவைப்படுகிறது.
டைப் II நீரழிவு நோயின் குணாதிசியங்கள்

 • பொதுவாக பெரியவர்களும், சில இளைஞர்களும் இதனால் பதிக்கப்படுகிறார்கள்
 • அடிக்கடி தண்ணீர் தாகம் ஏற்படும்
 • பொதுவாக இது பரம்பரை நோய்
 • பெரும்பாலும் இதனால் பாதிக்கப்படுபவர்கள் உடல் எடை அதிகமாகவும், உடல் பருமனாகவும் இருப்பார்கள்.

இரத்தத்தின் சக்கரை அளவை, உணவு கட்டுப்பாடு, உடல் பயிற்சி, மருந்து மற்றும் இன்சுலின் மூலம் கட்டுப்பாட்டில் வைக்கலாம்.

ஜெஸ்டேஷனல் நீரழிவு நோய்

கருவுற்ற தாய்மார்களில் 3-5 சதவிகிதம் இவ்வகை நீரழிவு நோய்யால் பாதிக்கப்படுகிறார்கள். பிரசவத்திற்குப் பிறகு பெரும்பாலும் இது தானாக சரியாகிவிடும். இன்சிலின் உற்பத்தியாகும் அளவு சற்றுக் குறைவதால் இப்பிரச்சனை ஏற்படுகிறது. இதை உணவு கட்டுப்பாட்டால் சரி செய்யலாம். பலருக்கு இன்சுலின் தேவைப்படும். குழந்தை பாதிக்கப்படும் என்பதால், மருந்துக்களை இவர்களுக்கு கொடுக்கமாட்டார்கள். பிறக்கும் குழந்தைகள் பொதுவாக மற்ற குழந்தைகளை விட சற்று பெரியதாக இருக்கும். பிறக்கும் குழந்தைக்கு இரத்தத்தில் சக்கரையின் அளவு சற்று குறைவாக இருக்கலாம். இவர்களில் 40 சதவிகிதம் பேருக்கு அவர்கள் முதுமை அடையும் போது டைப் II நீரழிவு நோயால் பாதிக்கப்படுகிறார்கள். ஆகவே இவர்கள் பிரசவத்திற்கு பிறகு வருடம் ஒரு முறை டாக்டரிடம் பரிசோதனை செய்து கொள்வது நல்லது.

உணவு: உணவு என்பது மாவுச்சத்து, புரதசத்து மற்றும் கொழுப்பு சத்தாகும். மாவுச்சத்து நாம் உண்ணும் அரிசி, கோதுமை ஆகியவற்றில் கிடைக்கிறது. கோதுமையில் நார்பொருள் (fibre content) இருப்பதால், சக்கரை இரத்தத்தில் ஒரே சீராக சேருகிறது. காய்கறி, பழங்களை சேர்த்துக்கொள்ளும் போது நார்பொருள் உள்ளவற்றை தேர்ந்தெடுப்பது நல்லது. பூமிக்கு கீழே விளைவதை தவிர்க்கவேண்டும் (உருளைக் கிழங்கு, கேரட், பீட்ரூட்). பழங்களில் சப்போட்டா, பழாப்பழம், சீத்தா போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.

உடற்பயிற்சி: உடற்பயிற்சி என்பது தினம் 30-45 நிமிட சுறுசுறுப்பாக நடப்பது. முடிந்தவர்களுக்கு 30 நிமிட ஓட்டம் (சீரான ஓட்டம்). இருதய நோய் உள்ளவர்கள் கண்டிப்பாக மருத்துவரின் ஆலோசனைப்படி உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

சிகிச்சை: இதற்கு நிரந்தர தீர்வு இல்லை என்பதை உணர வேண்டும். சரியான மருத்துவரிடம் முறையான சிகிச்சைப் பெற வேண்டும். மருத்துவர் ஆலோசனைப் படி இரத்த பரிசோதனைகளை குறிப்பிட்ட இடைவெளிக்கு ஒரு முறை செய்தல், மருந்துக்களை உட்கொள்தல் வேண்டும் . கண் மருத்துவரிடம் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை கண் பரிசோதனை செய்ய வேண்டும். சரியான உணவை தினம் தோறும் உட்கொள்வது, உடற்பயிற்சி செய்தல், உடலில் அதிகப்படியான எடையை குறைத்தல் போன்றவற்றை “சுய கட்டுப்பாடுடன்” கடைப்பிடித்தால் நீரழிவு நோய் இருந்தாலும் சராசரியான, திருப்திகரமான வாழ்க்கையை நடத்தலாம்.
——————————————————————————————————–

சர்க்கரை வியாதிக்கு எளியவைத்தியம் தெரியுமா?

தினமும் ஒரு முறை அல்லது இரு முறை வெந்தயத்தூள் சாப்பிட வேண்டும்.
சளித் தொல்லை உடையவர்கள் வெந்தயம் சாப்பிடுவதை குறைத்துக்  கொள்ளலாம். காய வைத்த வெந்தயத்தை பொடியாக்கி கொள்ளுங்கள். காய்ச்சி ஆறிய தண்ணீரில் பொடியை போட்டு கலக்கி, தினமும் குடித்துவந்தால் சர்க்கரை வியாதிக்கு டாடா காட்டி விடலாம். வெந்தயத்தை நன்கு பொடியாக்கி வைத்துக்கொள்ள வேண்டும். இந்த பொடியை3 தேக்கரண்டி அளவு எடுத்து அரை டம்ளர் வெது வெதுப்பான நீரில் கலந்து களிபோல் ஆக்கி காலை, இரவு வெறும் வயிற்றில் உண்டு வர மூன்று வாரத்தில் நீரீழிவு நோய்கட்டுப்படும். இதனுடன் தொடர்ந்து நீரிழிவு நோய்க்கான மாத்திரைகளை மூன்று வாரம் சாப்பிட்டு வந்து பின் மாத்திரை களை நிறுத்திவிட்டு வந்தயப் பொடியை உட்கொண்டும்,  நீரிழிவு நோய்க்கான யோகாசனங்களையும் செய்து வர நீரிழிவு நோய் கட்டுப்படு்ம்.
வெந்தயத்தில் அதிக அளவு நார்ச்சத்து காணப்படுவதாகவும், இதைசாப்பிடுவதால் பசி மந்தப்படுவதாகவும் நிரூபித்து உள்ளார்கள்.பசியை மந்தப்படுத்தி உணவை கட்டுப்படுத்துவதால் நீரிழிவு நோயையும் கட்டுப் படுத்தும்.
இன்சுலினுக்கு இணையான பாகற்காய் பாகற்காயில், இன்சுலின்போன்ற ஒரு பொருள்சுரந்து, மனிதனின்சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதாக பிரிட்டனில் கண்டு பிடித்துள்ளனர். தினசரி காலையில் வெறும் வயிற்றில் நாலைந்து பாகற்காய் பிழிந்துசாறு எடுத்து சாப்பிட்டுவர, இன்சுலினைகுறைத்துக் கொள்ளலாம்.
வாரம் 1 நாள் சமைத்துண்ண நீரிழிவைத் தடுக்கலாம். வாரம் 2 நாள் – 3 நாள்பாகற்காய் சாறு, சூப் சாப்பிட்டு வர,நீரிழிவைக் கட்டுக்குள்வைத்திருக்கலாம்.

ரத்தத்தில் அதிகப்படியாக உள்ள சர்க்கரையினை க்ளைகோஜன் என்னும் சேமிப்புப் பொருளாக மாற்றுவதற்கு உதவி புரிகின்றது.ரத்தத்தில் அதிகப்படியாக உள்ள சர்க்கரையினை ஆற்றலாகச் செலவிடும்திறனை அதிகரிக்கின்றது
சாப்பிட வேண்டிய காய்கறிகள் : கத்தரீக்காய், அவரைக்காய், வெண்டைக்காய், கொத்த வரங்காய், வெண் பூசணி, வெள்ளை முள்ளங்கி, முருங்கைக்காய், புடலங்காய், பலாக்காய், பாகற்காய், வெங்காயம், காலிபி;ளவர், முட்டை கோஸ், வாழைத்தண்டு, வாழைப்பூ, சிவப்பு முள்ளங்கி, சுரைக்காய்போன்றவை.

முருங்கைக் கீரையை நாள் தவறாமல் கொண்டு வந்து நெய்விட்டு வதக்கிபொரியல் செய்து பகல் உணவில் சாப்பிட்டுவர சர்க்கரை நோயாளிக்கு உடம்பில் சர்க்கரை நோய் நீங்கி சுகம் பெறலாம். 1 மண்டலம் முதல் 2, 3 மண்டலம்நோய்க்குத் தக்கபடி சாப்பிட்டு வருவது சிறப்பு.
சாப்பிடக்கூடாத காய்கறிகள் : வாழைக்காய், உருளைக்கிழங்கு, காரட், பீட்ரூட், கருணைக்கிழங்கு, சேப்பங்கிழங்கு, சர்க்கரைப் பூசணி, கிழங்கு வகைகள், பீன்ஸ்..ஃசர்க்கரை நோயாளிகள்,பச்சைக்காய்கறிகளையே முழுவதும் உண்டால், மிகுந்துள்ள சர்க்கரையின் அளவு கட்டுப்படும.

சாப்பிட வேண்டிய பழங்கள் :ஆப்பிள், வாழை,ஆரஞ்சு, பேரீக்காய், பப்பாளி, வெள்ளரீப்பழம், கொய்யாப்பழம்.

சாப்பிடக்கூடாத பழங்கள் : பேரீச்சம் பழம், பலாப்பழம், உலர்ந்த பழ வகைகள், பெரீய வாழைப்பழம், டின்னில் அடைக்கப்பட்ட பழ வகைகள், பெரீய ஆப்பிள், பெரீய மாம்பழம், பெரீய கொய்யாப்பழம், சப்போட்டா.

அருந்த வேண்டிய பானங்கள் : சர்க்கரையில்லாத காபி, டீ,பால், சர்க்கரை சேர்க்காத எலுமிச்சைஜூஸ், தக்காளி சூப், சோடா. .

சாப்பிடக்கூடாத பானங்கள் : சர்பத் வகைகள், சர்க்கரை வகைகள், இளநீர், தேன், மதுவகைகள், ஆப்பிள் ஜூஸ், ஐஸ்கிரீம், பாதாம், கற்கண்டு, வெல்லம், பாயாசம், முந்திரி, கடலை,கேக் முதலியவை.

இன்சுலின் வழக்கத்துக்கு மாறாக நிறம் மாறி இருந்தால் பயன்படுத்தவேண்டாம்.

வெங்காயத்தின் முக்கியமான பயன் இன்சுலினைத் தூண்டுவது. இதனால் சர்க்கரை வியாதிக்காரர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம். பச்சையாக வெங்காயத்தை சாப்பிடவேண்டும். அதாவது வெங்காயத்தை சிறு துண்டுகளாக நறுக்கி 100 கிராம் அளவுக்கு எடுத்து தயிரீல் பச்சடியாகதயார் செய்து சாப்பிட வேண்டும். அல்லது கேழ்வரகு,  கோதுமை போன்ற கஞ்சிகளில் கலந்தும் சாப்பிடலாம்.

நன்றி:- சாதிக் அலி  குளச்சல்

நன்றி:- தமிழ்குருவி

******************************