தொகுப்பு

Archive for the ‘மின்னலில் இருந்து மின்சாரம்’ Category

மின்னலில் இருந்து மின்சாரம்!

ஒக்ரோபர் 18, 2010 1 மறுமொழி

ளவற்ற மின்சக்தியின் வெளிப்பாடுதான் மின்னல் என்று படிப்பவர்களுக்கு, அந்த மின்சாரத்தை ஈர்த்துப் பயன்படுத்த முடியுமா என்ற யோசனை பிறந்திருக்கக்கூடும். ஆச்சரியப்படாதீர்கள், எதிர்காலத்தில் அது சாத்தியமாகும் வாய்ப்பிருக்கிறது!

எதிர் எதிர் மின்னூட்டம் பெற்ற மேகங்கள் மோதிக்கொள்ளும்போதுதான் மின்னல் பிறக்கிறது. சூரிய சக்தித் தகடுகள் எப்படி சூரியசக்தியை ஈர்த்து மின்சாரமாக மாற்றுகின்றனவோ, அதைப் போல மின்னல் உருவாவதற்கு முன்பே வானில் உள்ள மின்சாரத்தை ஈர்த்து, பயன்படுத்தத்தக்க வகையில் அளிக்கும் உபகரணத்தை உருவாக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டிருக்கிறார்கள்.


“வளிமண்டலத்தில் மின்னலை உருவாக்கும் மின்சாரத்தை ஈர்த்து, அதை ஓர் எரிசக்தி ஆதாரமாக்குவதற்கான வழியில் நாங்கள் முன்னேறிக் கொண்டிருக்கிறோம்” என்கிறார், ஆய்வாளர் பெர்னாண்டோ கேல்ம்பெக்.

வளிமண்டலத்தில் எப்படி மின்சாரம் உற்பத்தி யாகி, வெளிவிடப்படுகிறது என்ற பல்லாண்டு காலப் புதிர்களுக்கு இந்த ஆய்வு பதில் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

“நாம் மின்னலுக்கான மின்சக்தியைப் பெற்றுப் பயன்படுத்துவது மட்டுமல்ல, வளிமண்டலத்தில் எப்படி மின்சக்தி உருவாகிப் பரவுகிறது என்று புரிந்து கொண்டால் இன்னொரு முக்கியமான நன்மையும் இருக்கிறது. மின்னலால் ஏற்படும் உயிர்ச்சேதத்தையும், பொருட்சேதத்தையும் கூடத் தடுத்து விடலாம்” என்கிறார், கேல்ம்பெக். உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் மின்னல் தாக்கி ஆயிரக்கணக்கானவர்கள் இறக்கின்றனர், காயமடைகின்றனர், பல கோடி ரூபாய் மதிப்புக்கு சொத்துகள் சேதம் அடைகின்றன என்பதையும் அவர் சுட்டிக் காட்டுகிறார்.

இயற்கையாக உருவாகும் மின்சக்தியைப் பயன்படுத்திக் கொள்வது என்ற முயற்சியில் பல நூற்றாண்டுகளாகவே விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் அவர்களால் இன்று வரை அதில் வெற்றி பெற முடியவில்லை. இருந்தபோதும் எதிர்காலத்தில் மின்(னல்) சக்தியால் வீடுகள் ஒளிர்ந்தால் வியப்பதற்கில்லை!

 

நன்றி:-தினத்தந்தி