தொகுப்பு

Archive for the ‘நீரிழிவு நோய்க்கு தடுப்பூசி’ Category

நீரிழிவு நோய்க்கு தடுப்பூசி


உலக அளவில் மக்களை அதிகம் பயமுறுத்தும் நோய்களில் ஒன்று நீரிழிவு. டைப் 1 மற்றும் டைப் 2 என இரு வகை நீரிழிவு நோய்கள் உள்ளன. இதில் டைப் 1 நீரிழிவு நோய்க்கு தடுப்பூசி ஒன்றை உருவாக்கி உள்ளனர் மருத்துவ விஞ்ஞானிகள். இதற்கு அவர்கள் `நானோ’ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இருக்கிறார்கள்.

`நானோ’ என்பது `மிகச்சிறிய’ என்று பொருளாகும். மிகச்சிறிய அளவிலான மருந்துப்புரதங்களை பயன்படுத்தி சிகிச்சை அளிப்பதன் மூலம் டைப் 1 நீரிழிவு நோயை குணப்படுத்த முடியும் என்பது விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பு.

மனித உடலில் சில நோய்கள் தாக்கும்போது அதை குணப்படுத்த தானாகவே நோய்எதிர்ப்பு சக்தி செயல்படும். இதற்கு ஏற்ப நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்த சிவப்பு அணுக்கள் மற்றும் செல்கள் செயல்பட்டு நோய்க் கிருமிகள் அல்லது நோய் பாதித்துள்ள செல்களை தாக்கி அழிக்கும். இதை தானியங்கி நோய் எதிர்ப்பு சக்தி (ஆங்கிலத்தில்- ஆட்டோ இம்யூன்) என்பார்கள்.

டைப் 1 நீரிழிவு நோய் விஷயத்திலும் இந்த தானியங்கி நோய் எதிர்ப்பு சக்தியை இந்த புதிய நானோ தடுப்பூசி அதிகரிக்கிறது. மேலும் நோய் பாதிப்பை ஏற்படுத்தும் செல்கள் உருவாகாமல் இவை தடுக்கின்றன. இந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் உடலுக்குள் நடக்கும்போது வேறு எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை என்பது இந்த தடுப்பூசியின் சிறப்பு.

நீரிழிவை ஏற்படுத்தும் செல்களை விட ஆயிரத்தில் ஒரு பங்கு சிறியதாக இந்த நானோ மருந்துகள் உள்ளன. இருப்பினும் அதிக சக்தி மிக்கதாக இவை செயல்பட்டு நீரிழிவு பாதிப்பை கட்டுப்படுத்தி படிப்படியாக குணப்படுத்துகிறது.

டைப் 1 நீரிழிவு பாதித்த எலிகளுக்கு இந்த நானோ தடுப்பூசிகளை பயன்படுத்தி சிகிச்சை அளித்து குணப்படுத்தி உள்ளனர். இதே முறையை பயன்படுத்தி மனிதர்களுக்கும் நீரிழிவு நோயை குணப்படுத்த முடியும் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

நன்றி:-தினத்தந்தி

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@