தொகுப்பு

Archive for the ‘புறாக்கள் – விஞ்ஞான உண்மைகள்’ Category

புறாக்கள் விஞ்ஞான உண்மைகள்

ஏப்ரல் 20, 2010 1 மறுமொழி

மற்ற எல்லாப் பறவைகளையும் மிருகங்களையும்விட புறா ரொம்பவே ஸ்பெஷல், ‘சமாதானப் பறவை’ அடையாளம் வேறெதற்கும் கிடையாது!

சராசரியாக புறாக்கள் 8-9 அங்குலம் உயரம் வரை வளரும்.

‘பெற்றோர்’ புறாக்கள் தங்கள் குஞ்சுகளுக்காக உணவு கொண்டு வந்து ஊட்டும். அப்படி ஊட்டும் போது, தன் உடலில் சுரக்கும் ‘ஜீரணமாக்கும் என்ஸை’மை உணவோடு கலந்து கலவையாக ஊட்டும். இதை ‘புறாப் பால்’ என்பார்கள்.

பிறந்த ஆறிலிருந்து எட்டு வாரங்கள் ஆனவுடன், புறாக் குஞ்சுகள் கூட்டைவிட்டுப் பறந்துவிடும்!

ஆண் புறா, தன் பெண் புறாவை அழைக்க தலையை ஆட்டி ஆட்டி குர்குர் என ஒலியை எழுப்பும். இதை வைத்து ஆண் புறா எது என்பதை அடையாளம் காண முடியும்.

புறாக்கள் பெரும்பாலும் உயரமான இடங்களில் வாழ்வதையே விரும்பும். பூங்காக்கள், கட்டடங்கள் இவற்றில் வாழ்ந்தால்கூட, அங்கேயும் உயரமான இடம் தேடித்தான் கூடு கட்டும்.

கிட்டத்தட்ட கி.மு.4500|ம் ஆண்டிலிருந்தே வீட்டுப் பறவையாக புறா வளர்க்கப்பட்டு வருகிறது. மனிதனால் பிடித்து வளர்க்கப்பட்ட முதல் பறவையும் இதுதான்.

முதலில் இறைச்சிக்காகத்தான் புறாக்கள் வளர்க்கப்பட்டன. பின்னர், கடிதங்களைக் கொண்டு சேர்க்கும் தூதராகப் பயன்படுத்தப்பட்டன.

புறாக்களில் பல வகைகளும் இனங்களும் இருக்கின்றன.

புறாக்கள் வெள்ளை, சாம்பல், கறுப்பு, பழுப்பு போன்ற நிறங்களிலும் இவையெல்லாம் சேர்ந்தும்கூட இருக்கும்.

புறாக்களின் எச்சத்தில் அமிலத்தன்மை உண்டு.

புறாவின் எடை சராசரியாக 300-350 கிராம் இருக்கும்.

விதை மற்றும் தானியங்கள்தான் இவற்றின் முக்கிய உணவு. பிரெட், பாப்கார்ன், வேர்க்கடலை போன்றவையும் பிடித்தமானவை.

புறாக்கள் கூடு கட்டிய இடத்திலிருந்து ஒரு மைல் தூரம் வரை எல்லையாக வகுத்துக்கொள்ளும். அதே நேரம், உணவு தேடி பத்து மைல் தாண்டிக்கூடப் பறந்து செல்லும்.

புறாக்களின் வேகம் சராசரியாக ஒரு மணி நேரத்துக்கு 25|35 மைல்கள்.

புறாக்கள் பெரும்பாலும் பொந்துகளிலும் கல் இடுக்குளிலும்தான் கூடு கட்டி வாழும். ஒரே இடத்தில் நூறு ஜதை புறாக்கள் வரை கூடு கட்டி வாழும்.

பெரும்பாலும் புறாக்கள் ஒரு இணையுடன் வாழும். அதே நேரம் இணை இறந்துவிட்டால், இன்னொரு துணையைத் தேடத் தயங்காது.

ஆண் புறா கூடு கட்டுவதற்கான இடத்தைத் தேர்வு செய்தபின், இரண்டு புறாக்களும் கூடு கட்டத் தொடங்கும்.

கூடு கட்டுவதற்கு உயரமான, குறுகலான இடத்தைத் தேர்வு செய்து இலை, தழைகள், புற்களைக் கொண்டு கூட்டைக் கட்டி முடிக்கும்.

சாதாரணமாக, புறாக்கள் இரண்டு முட்டைகள் இடும்.

முட்டைகளை ஆண், பெண் இரண்டுமே மாற்றி மாற்றி அடை காக்கும். மற்ற பறவைகள் கூட்டை நெருங்கவும் விடாது.

18|20 நாட்களில் முட்டைகள் பொரிந்து, குஞ்சுகள் வெளிவரும்.

********************************************************************

நன்றி:- சு.வி

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++