தொகுப்பு

Archive for the ‘பார்வை அற்றவர்களுக்கு இன்டர்நெட்’ Category

பார்வை அற்றவர்களுக்கு இன்டர்நெட்


பார்வையற்றவர்களின் உலகம் சவால் நிறைந்தது. அவர்கள் ஒவ்வொரு தேவைக்கும் மற்றவர்களை சார்ந்திருக்க வேண்டி இருக்கும். இன்று உலகமே இன்டர்நெட் எனப்படும் இணையவலையில் கட்டுண்டு உள்ளது.

பார்வையற்றவர்கள் இதுவரை இன்டர்நெட்டை பயன்படுத்துவதென்றால் ஒரு நேரத்தில் ஒரு வரியை மட்டுமே படிக்கும்படி மட்டுமே வலைத்தள வசதி இருந்தது. அதாவது கம்ப்யூட்டர் திரையில் தோன்றும் எழுத்துக்களை ஒலி வடிவில் மாற்றி வாசிக்கும் மென்பொருளின் உதவி அவர்களுக்கு கிடைத்தது. இதன் மூலம் ஒவ்வொரு வரியாக வரிசையாக மேலிருந்து கீழ் என்ற அடிப்படையில் தகவல்களை கேட்க முடிந்தது.

தற்போது பார்வையற்றவர்களும் சாதாரணமாக இன்டர்நெட்டை பயன்படுத்த நவீன வசதி உருவாக்கப்பட்டுள்ளது. இதற்காக நவீன தொழில்நுட்பத்தில் (ஹைட்ராலிக் மற்றும் லேட்சிங் மெக்கானிசம்) பாலிமர் திரை தயாரிக்கப்பட்டுள்ளது. இது இன்டர்நெட் தகவல்கள் மற்றும் படங்களை பார்வையற்றவர்கள் தொட்டுப்பார்த்து புரிந்து கொள்ளும் வகையில் பிரெய்லி புள்ளிகளாக மாற்றிக் கொடுக்கும். இதனால் அவர்களும் சாதாரணமானவர்கள்போல அனைத்து தகவல்களையும் படித்து தெரிந்து கொள்ளலாம்.

அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாகாண பல்கலைக்கழக ஆய்வாளர் நெய்ல் டி ஸ்பிங்கா இந்த நவீன தொழில்நுட்பத்தை உருவாக்கி உள்ளார்.

நன்றி:-தினத்தந்தி

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@