தொகுப்பு

Archive for the ‘தகவல் பெட்டி 02’ Category

தகவல் பெட்டி-02


 • யூதர்களின் புனித நூலாகக் கருதப்படுவது ‘தோரா’ எனப்படும் நூல்.
 • சுனில் காவஸ்கரைத் தெரியாத சுட்டிகளே கிடையாது. அவர் எழுதிய புத்தகத்தின் பெயர் தெரியுமா? டைம் டு கால் இட் எ டே (Time to call it a day).
 • ஐஸ்கட்டி சாப்பிடும்போது லேசாக கண்வலி வருவதை உணர்ந்திருக்கிறீர்களா?! பல் நரம்புக்கும் கண் நரம்புக்கும் தொடர்பு இருப்பதால்தான் இந்த வலி.
 • ஒரு குயர் காகிதம் என்பது இருபத்துநான்கு தாள்கள் அடங்கியது. உலகிலேயே அதிக அளவு காகிதம் உற்பத்தி செய்யும் நாடு கனடா.
 • நோபல் பரிசு பெற்ற முதல் இந்தியர் ரவீந்திரநாத் தாகூர்.
 • திரவங்களின் அடர்த்தியைக் கண்டுபிடிக்கும் கருவியின் பெயர் ஹைட்ரோமீட்டர்.
 • பைபிளை முதன்முதலில் தமிழில் மொழி பெயர்த்தவர் சீகன் பால்க் ஐயர்
 • மரபியலின் தந்தை என்று அழைக்கப்படுபவர் கிரிகர் மெண்டல் (Gregor Mendel) தாவரவியல்
  துறையில் இவரது ‘மரபியல் வாய்ப்பாடு’ மிகவும் பிரபலம்.
 • செம்புடன் தகரத்தைக் கலக்கும்போது வெண்கலம் உருவாகிறது.
 • விலாங்கு மீனால் மின் அதிர்ச்சியை ஏற்படுத்த முடியும்.
 • மிளகு விளைச்சலுக்குப் பழங்காலத்திலிருந்தே புகழ்பெற்ற இடம் கேரளா. பண்டைய காலத்தில் ரோமானியர்களுடன் வணிகத் தொடர்பு வைத்திருந்தபோது பண்டமாற்று முறையில் தங்கத்தைக் கொடுத்து மிளகு வாங்கிச் சென்றுள்ளனர்.
 • செடி | கொடிகள், சூரிய ஒளியைப் பெறுவதற்காகத்தான் மேல் நோக்கி வளர்கின்றன. அவை உணவு தயாரிக்க ஒளி தேவையல்லவா!
 • செவ்வந்தியர்கள் என அழைக்கப்படுபவர்கள் அமெரிக்காவின் ஆதி மனிதர்கள். கொலம்பஸ் அமெரிக்காவை ‘இந்தியா’ என்று நினைத்ததால் அவர்களை ‘செவ்விந்தியர்’ என்று அழைத்தார்.
 • நிறங்களால் நம் மனதில் மாற்றங்களை உண்டுபண்ண முடியும். சிவப்பு, கோபத்தை உருவாக்கும். பளபளப்பான மஞ்சள் சோம்பலை உண்டு பண்ணும். ஆரஞ்சு நிறத்தால் மகிழ்ச்சியும் மன அமைதியும் கிடைக்கும். முேட்டையில் வெள்ளைக் கரு, மஞ்சள் கரு இரண்டும் இருப்பது உங்களுக்குத் தெரியும். அதில் வெள்ளைக் கரு ஐம்பத்தெட்டு சதவிகிதமும், மஞ்சள் கரு நாற்பத்திரண்டு சதவிகிதமும் இருக்கும்.
 • தோட்டக்கலையின் இன்னொரு பெயர் ‘ஆதாம் தொழில்’. ஆதி மனிதனான ஆதாம் இறைவனின் தோட்டமான ஈடனைப் பராமரித்து வந்ததால் இந்தப் பெயர்!
 • காமராஜரின் அரசியல் குருவாக கருதப்படுபவர் சத்தியமூர்த்தி.
 • பூஞ்சைகள் பற்றி ஆராயும் தாவரவியல் பிரிவின் பெயர் மைக்காலஜி.
 • கடல் ஆழத்தைக் கண்டுபிடிக்க உதவும் சாதனம் – சோனார்.
 • ‘சி.டி.ஸ்கேன்’ என்பதன் விரிவாக்கம் கம்ப்யூட்டரைஸ்டு டோமோக்ராஃபி ஸ்கேன் (Computerised Tomography Scan)
 • ‘கோல்ஃப்’ விளையாட்டு தோன்றியநாடு ஸ்காட்லாந்து.
 • ********************************************************************

  நன்றி:- சு.வி

  $$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$