தொகுப்பு

Archive for the ‘தகவல் பெட்டி 01’ Category

தகவல் பெட்டி 01


விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் ‘தியரி ஆஃப் ரிலேட்டிவிட்டி’ மிகவும் பிரபலம். யூதரான அவர் பிறந்த நாடு ஜெர்மனியாக இருந்தாலும் யூதர்களின் எதிரியான ஹிட்லருக்குப் பயந்து நாட்டை விட்டு வெளியேறினார். அவரது ஆராய்ச்சிகள் அனைத்துமே அமெரிக்காவில் நடந்தன.

எகிப்தில் வெள்ளைத்தங்கம் என்று அழைக்கப்படுவது பருத்தி.

புத்தரின் தந்தை பெயர் சுத்தோதனர்.

இங்கிலாந்து நாட்டை ஆண்டவர்களில் ஜேன் கிரே (Jane grey) மட்டும்தான் மிக குறுகிய காலம் இருந்தவர். அவர் ராணியாக இருந்தது வெறும் ஒன்பது நாட்களுக்கு மட்டுமே.

ரோல்ட் அமுன்ட்ஸென் (Roald Amundsen) என்பவர்தான் தென்துருவத்தை முதன்முதலில் அடைந்தவர்.

உலக வாணிப நிறுவனத்தின் (WTO) தலைமையகம் அமைந்திருப்பது ஜெனிவாவில்.

ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இந்தியாவின் முதல் வைசிராயாக இருந்தவர் கானிங் பிரபு (Lord canning).

ஒரு அணுகுண்டு தயாரிக்க ஆகும் செலவு தெரியுமா? ஒரு கோடி ரூபாய். ஆனால், அவற்றால் ஏற்படும் இழப்புகள் அதைவிட வெகு அதிகம்.

இந்திய சுதந்திரத்துக்கு புரட்சி பாதையில் போராடியவர் சுபாஷ் சந்திர போஸ் என்பது உங்களுக்குத் தெரியும். அதற்காக அவர் தொடங்கியதுதான் இந்தியன் நேஷனல் ஆர்மி. சுருக்கமாக மி.ழி.கி.

ஸ்பெயின் நாட்டின் பிரபலமான நடனம் ஃப்ளமிங்கோ (Flamingo).

உலகின் மிக உயரமான பறவையான நெருப்புகோழியின் மற்றொரு பெயர் என்ன தெரியுமா? ஒட்டகப் பறவை.

சைடாலஜி (cytology) என்பது செல்களை ஆராயும் விஞ்ஞானப் படிப்பின் பெயராகும்.

முதன்முதலில் கிரகங்களின் சுழற்சியை ஆராய்ந்து கண்டறிந்தவர் கெப்ளர் (Kepler). பாலைவனத்தில் செல்லும்போது மிகக் குறைந்த ஒலியைக்கூட நம்மால் கேட்கமுடியும்.

விசில் அடிப்பது போன்ற ஒலியை உருவாக்கும் ஒரே உயிரினம் டால்பின்.

அகராதியை முதலில் தயாரித்தவர் சாமுவேல் ஜான்சன் (Samuel Johnson).

வகுப்பறையில் உங்கள் ஆசிரியரின் கையில் அதிக நேரம் இருக்கும் சாக்பீஸின் வேதிப் பெயர் கால்ஷியம் கார்பனேட் (Calcium carbonate)

இந்தியாவின் தலைநகரான டெல்லியின் பழைய பெயர்- இந்திரப்பிரஸ்தம்.

இறக்கைகளே இல்லாத பறவை ஆஸ்திரேலியாவில் உள்ள கிவி.

யானைகளின் தந்தங்களைப் பார்த்திருப்பீர்கள். அதே போல் தந்தங்கள் உள்ள மற்றொரு உயிரினம் கடலில் வாழும் வால்ரஸ் மட்டுமே.  சீனாவின் புனித விலங்காக கருதப்படுவது- பன்றி.

தேன்கூட்டை கலைத்தால் தேனீக்கள் கொட்டும் என்பது உங்களுக்குத் தெரியும். ஆனால், அவற்றால் ஒரு முறை மட்டுமே கொட்ட முடியும். ஏனெனில், அவை கொட்ட பயன்படுத்தும் கொடுக்குகள் கொட்டியதும் எதிரியின் உடலிலேயே தங்கிவிடும்.

உலகில் இதுவரை அமைக்கப்பட்ட சாம்ராஜ்யங்களில் மிகப்பெரியது மற்றும் மிகவும் பலம்பொருந்தியது செங்கிஸ்கானுடையது. கிழக்கில் சீன கடலில் ஆரம்பித்து மேற்கே கருங்கடல் வரை விரிந்திருந்தது அந்த சாம்ராஜ்யம்.

1918\ல் பரவிய ஃப்ளு காய்ச்சல் மிக கொடூரமானது. இதில் ஆறு கண்டங்களிலும் உலக மக்களில் கிட்டத்தட்ட பாதிப் பேர் பாதிக்கப்பட்டனர்.  பிரபல கிரிக்கெட் ஆட்டகாரான கபில்தேவின் சுயசரிதையின் பெயர் By Gods-decree. இதன் பொருள்  ‘கடவுளின் தீர்ப்புப்படி’.

‘நம்பர் தியரி’யின் தந்தை என்று அழைக்கப்படுவர் பியரி-டி-பெர்மட் (pierre-de-Fermet) ஆனால், இவர் ஒரு வழக்கறிஞர். கணிதம் இவரது பொழுதுபோக்கு மட்டுமே!

உலகில் அதிகமாக திரைப்படங்கள் தயாரிக்கும் நாடு இந்தியா.

********************************************************************

நன்றி:- சு.வி

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++