தொகுப்பு

Archive for the ‘சிறார்கள்’ Category

சம்மர் ஹாலிடேஸ், சன் ஸ்ட்ரோக் – நல்லெண்ணெய், ஒயிட் டிரெஸ், மாங்காய் தண்ணீர்


குழந்தைகளுக்கு சம்மர் ஹாலிடேஸ் தொடங்கிவிட்டது. கூடவே, 100 டிகிரி வெயிலும் கொளுத்தி எடுக்கிறது. போன தலைமுறைபோல இன்றைய குழந்தைகள் நாள் முழுக்க வெயிலோடு விளையாடுவதில்லை என்றாலும், வெயிலுக்கும் அவர்களுக்குமான பந்தம் விடுபட்டு விடவில்லை. இந்தச் சமயத்தில், அதீத வெப்பத்தால் சன் ஸ்ட்ரோக் போன்ற பிரச்னைகள் வராமல் இருக்க, பாதுகாப்பு வழிமுறைகள் சொல்கிறார், இயற்கை மருத்துவர் தீபா. 

சன் ஸ்ட்ரோக்

* லைட் கலருக்கு மாறுங்க!

வெயில் காலத்துக்கு காட்டன் ஆடை, மழைக் காலத்துக்கு உல்லன் என்று சீசனுக்கு ஏற்ப அணிவதுபோல, அணியும் ஆடையின் நிறங்களிலும் மாற்றம் வேண்டும். வெயில் காலத்தில் வெள்ளை, சந்தனம், பேபி பிங்க், பேபி ப்ளு போன்ற நிறங்களில் குழந்தைகளுக்கு ஆடையை அணிவியுங்கள். இந்த நிறங்கள் வெயிலை உடலுக்குக் கடத்தாது. கறுப்பு மற்றும் சிவப்பு நிற ஆடைகளை கோடைக் காலம் முடியும் வரை பீரோ லாக்கரில் பூட்டி வையுங்கள்.

தீபா* எண்ணெய்க் குளியல் கட்டாயம்!

வெயில் காலத்தில் உச்சந்தலை சூடேறுவதுதான் சன் ஸ்ட்ரோக் வருவதற்குக் காரணம். இதைத் தடுக்க, வாரத்துக்கு இரண்டு முறை நல்லெண்ணெய் வைத்து தலைக்குக் குளிக்க வேண்டும். வெயில் காலத்தில் வீட்டுக்குள்ளேயே இருந்தாலும் உச்சந்தலை சூடேறும். அதனால், தினமும் தலைக்கு எண்ணெய் வைப்பது அவசியம்.

* தாது உப்புகளும் வெளியேறும்!

வெயிலில் வியர்த்து வழியும்போது, உடம்புக்கு அத்தியாவசியமான தாது உப்புகளும் வெளியேறிவிடும். இதுபோன்ற சமயத்தில் பிள்ளைகள் சோர்ந்து போவார்கள். சிலருக்கு மயக்கம் வரை செல்லும். இந்தப் பிரச்னையைத் தடுக்க, பானைத் தண்ணீரில் ஒரு சிட்டிகை கல் உப்பு, வெல்லம், எலுமிச்சம் பழம் பிழிந்து பானகம் செய்யுங்கள். தினமும் 3 முதல் 4 தடவை வரை குடிக்கக் கொடுங்கள். தினம் ஒரு இளநீர் குடிப்பது பிள்ளைகளின் உடலைக் குளிர்ச்சியாக வைத்திருக்கும்; உடம்பில் தாது உப்புகள் குறையாமல் பாதுகாக்கும்.

* கூல்டிரிங்க்ஸ் வேண்டாம்!

வெயில் காலத்தில், கேஸ் நிரம்பிய கூல்டிரிங்ஸை குழந்தைகள் குடிப்பதை முற்றிலும் தவிர்க்கச் செய்யுங்கள். இவை சாப்பிட்ட உணவை மேல் நோக்கி எதுக்களிக்கச் செய்யும்.

எண்ணெய்க்குளியல்

* தண்ணீர் டப்பில் நிற்கலாம்!

விளையாடிவிட்டுச் சோர்வாக வரும் பிள்ளைகளின் உடலை உடனடியாக ஈரத்துணியால் துடையுங்கள். அல்லது, சின்ன டப்பில் தண்ணீர்விட்டு அதற்குள் பாதங்கள் நனைய நிற்க வையுங்கள். உடம்பின் சூடு மெல்ல மெல்லத் தணிந்துவிடும். 

* மாங்காய்த் தண்ணீரும் புளித்தண்ணீரும்…

வெல்லமும் மாங்காய்த் துண்டுகளும் ஊறப்போட்ட தண்ணீர், அல்லது வெல்லம் போட்ட புளித்தண்ணீரைத் தினமும் ஒரு கப் குடித்து வந்தால், சன் ஸ்ட்ரோக் ஏற்படாமல் தடுக்கலாம். அதனால்தான், இயற்கையே இந்த சீசனில் மாங்காயையும் புளியையும் விளைவிக்கிறது.

பானகம்

* சூடு கிளப்பும் உணவுகளைத் தவிருங்கள்!

வெயில் காலத்தில், உடலின் சூட்டை அதிகப்படுத்தும் சிக்கன், ஃபாஸ்ட் ஃபுட் வகைகள், மசாலா ஐட்டங்களை முற்றிலும் தவிர்க்கவும். எப்போதாவது சாப்பிட்டாலும், அன்றைக்கு மோர் குடிப்பதை கட்டாயமாக்கிக் கொள்ளுங்கள். தவிர, கோடை கொடைகளான வெள்ளரிக்காய், தர்பூசணி, கிர்ணிப்பழம், முலாம் பழம், நுங்கு, பதநீர், கரும்புச்சாறு போன்றவற்றில் ஏதேனும் ஒன்றைத் தினமும் பிள்ளைகளுக்குக் கொடுங்கள். நீங்களும் சாப்பிடுங்கள்.

* சந்தன பேக்… டிரை பண்ணலாம்!

 

டச் ஸ்கிரீன் மொபைல் Touch Screen Mobile -பானுமதி அருணாசலம்
நமக்கு ஒரு கெட்ட பழக்கம்… நிறைய பேர்கள் ஒரு பொருளை வாங்க ஆரம்பித்தால் உடனே ஓடிப்போய் நாமும் அதை வாங்கிவிடுவோம்… சமீபகாலமாக அப்படி ஒரு பொருளை எல்லோரும் கண்ணை மூடிக்கொண்டு வாங்குகிறார்கள் என்றால் அது டச் ஸ்கிரீன் மொபைல் போன்தான்! பட்டனை அழுத்தாமல் தொட்டால் போதும் என்ற அளவுக்கு மட்டுமே தெரிந்துகொண்டு இந்த போனை வாங்கும் கூட்டம்தான் அதிகம். உங்களுக்கும் டச் மொபைல் வாங்கும் எண்ணம் இருந்தால் இதை முதலில் படித்துவிட்டு அதன்பிறகு செயலில் இறங்குங்கள்…

வசதிகள்

டச் ஸ்கிரீன் மொபைல் போனை முதன் முதலில் அறிமுகப்படுத்தியது ஹெச்.டி.சி. நிறுவனம்தான்.  சாதாரண மொபைல் போனை விட டச் ஸ்கிரீன் போன் விலை கொஞ்சம் அதிகமாகவே இருக்கிறது. காரணம் இதில் இருக்கும் டச் பேட். பிராண்டட் டச் போன்கள் என்று போனால் குறைந்தபட்சம் 4,000 ரூபாயாவது தேவைப்படும். அதற்கு குறைந்து வேண்டுமென்றால் சீன, லோக்கல் தயாரிப்புகளைத்தான் நாட வேண்டியதிருக்கும். கேமராவைப் பொறுத்த வரை மற்றவகை போன்களில் இருக்கும் அதே கிளாரிட்டிதான் இருக்கும். ஆனால் இதில் எல்.சி.டி. ஸ்கிரீன் இருப்பதால் படங்கள் பளிச்சென இருக்கும். டச்சில் இருக்கும் கலர்களும்  பளிச்சென இருக்கும். எழுத்துக்கள் படிப்பதற்கு சுலபமாக இருக்கும். தேவையெனில் குவாட்டரி கீபோர்டு ஆப்ஷனையும் பயன்படுத்திக் கொள்ளலாம். டாக்குமென்ட்டுகள், பி.டி.எஃப். ஃபைல்கள், எக்செல், வை-பைஃவ் வசதி, 3ஜி, வேகமான இன்டர்நெட் வசதி இருக்கிறது. மேலும் வேறு சாஃப்ட்வேர்கள் தேவையெனில் அவற்றையும் டவுன்லோட் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம். ஸ்கிரீன் பெரிதாக இருப்பதினால் வெப் பிரவுஸிங் செய்வதற்கும், போட்டோக்கள், திரைப்படங்கள் பார்ப்பதற்கும் வசதியாக இருக்கும்.
பிரச்னைகள்

போனை லாக் செய்யா விட்டால் கைபட்டு தெரியாமல் யாருக்காவது அழைப்பு போய் விடும்.ஸ்கிரீன் சிறியதாக இருக்கும் பட்சத்தில் நீங்கள் நினைக்கும் ஆப்ஷனுக்குச் செல்லாமல், தவறுதலாக வேறு ஆப்ஷனுக்குப் போய்விடும் வாய்ப்பிருக்கிறது. ஸ்கிராச் கார்டு, பவுச் போன்றவை இல்லாமல் டச் போனைப் பயன்படுத்துவது பாதுகாப்பானது அல்ல. காதில் வைத்து பேசும்போது வியர்வை பட்டாலோ, மழைக் காலத்தில் சிறிது தண்ணீர் பட்டால் கூட டச் வீணாகி உச் கொட்டவேண்டிய தாகிவிடும். கீழே போட்டுவிட்டால் அவ்வளவுதான்! சில பேர் தங்களின் கோபத்தை போனில் காட்டுவார்கள். அவர்களுக்கு டச் போன் நிச்சயமாக ஒத்துவராது. பெரிய ஸ்கிரீன் என்பதால் பேட்டரியின் லைஃப் குறைவாக இருக்கும். டச், டிஸ்ப்ளே போய்விட்டாலே மொத்த டச் பேடையும் மாற்ற வேண்டியது வரும். கேரன்டி பீரியட் முடிந்துவிட்டால் இதற்கு ஆயிரக்கணக்கில் செலவாகும். எனவே எதையும் பாதுகாப்பாகக் கையாள்பவர்களுக்கு மட்டுமே ஏற்ற போன் இது.

பார்க்க ஸ்டைலாக இருக்கிறது என்பதற்காக டச் போனை வாங்காமல் அதிலிருக்கும் பிரச்னைகளையும் அறிந்து உங்கள் பயன்பாட்டைப் பொறுத்து, யோசித்து வாங்கவும்.

நன்றி:-பானுமதி அருணாசலம்

நன்றி:- நா.வி

பேனா பிறந்த விதம்


நம் மனதில் தோன்றும் எண்ணங்கள், கருத்துகள் ஆகியவற்றைப் பதிவு செய்யும் பதிவுக் கருவி, பேனா. அது தோன்றிய விதம் தெரியுமா? இன்று நாம், பயன்படுத்துவதற்கு எளிதான பேனாக்களை உபயோகப்படுத்துகிறோம். ஆனால் ஆரம்பத்தில் அவ்வாறு இல்லை. பேனாவுக்குப் பல நூற்றாண்டு வரலாறு உண்டு என்பது ஆச்சரியமான விஷயம்.

`லத்தீன்’ மொழியில் `பென்னா‘ என்றால் `பறவையின் இறகு’ என்று பொருள். `பென்னா’ என்பதே ஆங்கிலத்தில் `பென்’ என்றும், தமிழில் `பேனா’ என்றும் மாறியது.

ஐந்தாம் நூற்றாண்டில் `இறகுப் பேனா’ வழக்கத்துக்கு வந்தது. அது 18-ம் நூற்றாண்டு வரை பயன்பாட்டில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

1780-ல் சாமுவேல் ஹாரிசன் என்பவர் உருக்கினால் ஆன பேனாவைத் தயாரித்தார். 1809-ல் ஜோசப் பிராமா என்பவர், பறவையின் இறகை, தற்போதுள்ள வடிவில் வெட்டி `நிப்’பை உருவாக்கும் கருவியைத் தயாரித்தார்.

ஜான் ஹாக்கின்ஸ் என்பவர் மாட்டுக்கொம்பு, ஆமை ஓடு ஆகியவற்றைக் கொண்டு `நிப்’ செய்தார். `நிப்’பின் முனையில் `இரிடியம்’ வைக்கும் பழக்கம் 1882-ல் வந்தது. அதே ஆண்டு ஜான் மிட்சல் என்பவர் எந்திரத்தினால் செய்யப்பட்ட உருக்கு `நிப்’பை கண்டுபிடித்தார்.

1859-ல் முதல்முறையாக `ஊற்றுப் பேனா’ (`பவுண்டன் பென்’) காப்புரிமை பதிவு செய்யப்பட்டது. 1883-ம் ஆண்டில் அமெரிக்க நாட்டைச் சேர்ந்த வாட்டர்மேன் என்பவர் அனைவரும் பயன்படுத்தத்தக்க ஊற்றுப் பேனாவைத் தயாரித்தார்.

நன்றி:-தினத்தந்தி


மின்னலில் இருந்து மின்சாரம்!

ஒக்ரோபர் 18, 2010 1 மறுமொழி

ளவற்ற மின்சக்தியின் வெளிப்பாடுதான் மின்னல் என்று படிப்பவர்களுக்கு, அந்த மின்சாரத்தை ஈர்த்துப் பயன்படுத்த முடியுமா என்ற யோசனை பிறந்திருக்கக்கூடும். ஆச்சரியப்படாதீர்கள், எதிர்காலத்தில் அது சாத்தியமாகும் வாய்ப்பிருக்கிறது!

எதிர் எதிர் மின்னூட்டம் பெற்ற மேகங்கள் மோதிக்கொள்ளும்போதுதான் மின்னல் பிறக்கிறது. சூரிய சக்தித் தகடுகள் எப்படி சூரியசக்தியை ஈர்த்து மின்சாரமாக மாற்றுகின்றனவோ, அதைப் போல மின்னல் உருவாவதற்கு முன்பே வானில் உள்ள மின்சாரத்தை ஈர்த்து, பயன்படுத்தத்தக்க வகையில் அளிக்கும் உபகரணத்தை உருவாக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டிருக்கிறார்கள்.


“வளிமண்டலத்தில் மின்னலை உருவாக்கும் மின்சாரத்தை ஈர்த்து, அதை ஓர் எரிசக்தி ஆதாரமாக்குவதற்கான வழியில் நாங்கள் முன்னேறிக் கொண்டிருக்கிறோம்” என்கிறார், ஆய்வாளர் பெர்னாண்டோ கேல்ம்பெக்.

வளிமண்டலத்தில் எப்படி மின்சாரம் உற்பத்தி யாகி, வெளிவிடப்படுகிறது என்ற பல்லாண்டு காலப் புதிர்களுக்கு இந்த ஆய்வு பதில் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

“நாம் மின்னலுக்கான மின்சக்தியைப் பெற்றுப் பயன்படுத்துவது மட்டுமல்ல, வளிமண்டலத்தில் எப்படி மின்சக்தி உருவாகிப் பரவுகிறது என்று புரிந்து கொண்டால் இன்னொரு முக்கியமான நன்மையும் இருக்கிறது. மின்னலால் ஏற்படும் உயிர்ச்சேதத்தையும், பொருட்சேதத்தையும் கூடத் தடுத்து விடலாம்” என்கிறார், கேல்ம்பெக். உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் மின்னல் தாக்கி ஆயிரக்கணக்கானவர்கள் இறக்கின்றனர், காயமடைகின்றனர், பல கோடி ரூபாய் மதிப்புக்கு சொத்துகள் சேதம் அடைகின்றன என்பதையும் அவர் சுட்டிக் காட்டுகிறார்.

இயற்கையாக உருவாகும் மின்சக்தியைப் பயன்படுத்திக் கொள்வது என்ற முயற்சியில் பல நூற்றாண்டுகளாகவே விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் அவர்களால் இன்று வரை அதில் வெற்றி பெற முடியவில்லை. இருந்தபோதும் எதிர்காலத்தில் மின்(னல்) சக்தியால் வீடுகள் ஒளிர்ந்தால் வியப்பதற்கில்லை!

 

நன்றி:-தினத்தந்தி

 

பூமியைத் தாக்கப் போகும் சூரியசக்திப் புயல்?


ஓர் அதிசக்தி வாய்ந்த `சூரிய சக்திப் புயல்’ 2012-ம் ஆண்டுவாக்கில் பூமியைத் தாக்கக் கூடும் என்று எச்சரிக்கை மணி அடிக்கிறார்கள், விண்ணியல் ஆய்
வாளர்கள்.

பூமியில் சாதாரணமாக வாண வேடிக்கை நிகழ்த்திக் காட்டும் `எரிகல் மழை’யைப் போல பல மடங்கு பலமானதாக அந்த சூரியசக்திப் புயல் இருக்கும் என்கிறார்கள் விஞ்ஞானிகள். அதாவது, அப்புயலின் சக்தி, 10 கோடி ஹைட்ரஜன் குண்டுகளின் சக்திக்கு இணையானதாக இருக்குமாம்.

சமீபத்தில் அமெரிக்காவில் ஒரு பெரிய `எரிகல் மழை’ பொழிந்தது. அது, சூரியசக்திப் புயலின் முன்னோட்டம்தான் என்று புளியைக் கரைக்கிறார்கள் `நாசா’ விஞ்ஞானிகள். வீசப் போகும் சூரிய சக்திப் புயல் பூமியின் ஒட்டுமொத்த மின் தொடர்பையே துடைத்தெறிந்தால் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்கிறார்கள்.

இந்த சூரியசக்திப் புயல் தொடர்பாக 2006-ம் ஆண்டு முதலே கவனமாகக் கண்காணித்து வருகிறது `நாசா’. இதேபோல விண்ணிலிருந்து 1859, 1921-ம் ஆண்டுகளில் பாய்ந்த சூரியசக்திப் புயலால் உலகில் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டிருக்கின்றன. தந்தித் தொடர்பு வயர்கள் பெருமளவில் சேதம் அடைந்தன. 2012-ம் ஆண்டு சூரிய சக்திப் புயல் அவற்றை விடப் பலமானதாக இருக்கக் கூடும் என்கிறார்கள்.

“பொது விண்ணியல் நிபுணர்கள் மத்தியில் நிலவும் கருத்து, 2012 அல்லது 2013-ம் ஆண்டின் ஆரம்பத்தில் வீசும் சூரியசக்திப் புயல், 100 ஆண்டுகளிலேயே மிக மோசமானதாக இருக்கக்கூடும்” என்று விண்ணியல் பேராசிரியரும், கட்டுரையாசிரியருமான டேவ் ரெனேக்கே கூறுகிறார்.

இன்றைய `டிஜிட்டல்’ உலகத்தில் சூரியசக்திப் புயல் ஏற்படுத்தப்போகும் உண்மையான தாக்கம் என்னவென்று ஒருவருக்கும் தெரியவில்லை. எனவே சூரியசக்திப் புயல் வருமுன் காப்பது அல்லது அதைத் தடுப்பது குறித்து விஞ்ஞானிகள் மண்டையை உடைத்துக்கொள்ள ஆரம்பித்திருக்கிறார்கள்.

நன்றி:-தினத்தந்தி

சூடு பிடிக்கும் சூரிய சக்தி


எத்தனை புதிய மின்திட்டங்கள் வந்தாலும் இந்தியாவில் மின்தட்டுப்பாடு என்பது இன்னும் அதிகமாகவே இருக்கிறது. மழை குறைந்ததால் நீர்மின்சார உற்பத்திக்கு வழியில்லை. அணு மின்நிலையத்தின் மூலம் மின்சாரம் தயார் செய்ய நிறைய செலவாகும். தவிர, ஆபத்தும் உண்டு. நிலக்கரியைப் பயன்படுத்துவதால் பூமி சூடாகிறது என்கிறார்கள். இப்படி மின் உற்பத்தி செய்யும் வழிகளில் பல்வேறு பிரச்னைகள் இருக்க, சுற்றுச்சூழலுக்கு எந்த வகையிலும் பாதிப்பு ஏற்படுத்தாத ஒரு வழிமுறையாக இருக்கிறது சூரியசக்தி மூலம் மின் உற்பத்தி செய்வது.

சூரியசக்தி மூலம் மின்சாரம் தயாரிக்கும் திட்டங்கள் இந்தியாவில் இப்போதுதான் மெதுவாகச் சூடுபிடிக்க ஆரம்பித்திருக்கிறது.. வெப்ப மண்டல நாடான இந்தியாவில் ஆண்டுக்கு 250-300 நாட்கள் சுமார் 3,000 மணி நேரம் சூரியஒளி கிடைக்கிறது. இதனைக் கொண்டு 5,000 டிரில்லியன் கிலோவாட் ஹவர் சூரியசக்தி ஆண்டு முழுவதும் தடையின்றி கிடைக்கும். இதனைக் கொண்டு மிகப் பெரிய அளவில் நம்மால் மின்சாரம் தயாரிக்க முடியும். வெறும் 250 நாட்கள் மட்டுமே சூரியஒளியைப் பெறும் ஜெர்மனி சுமார் 9,000 மெகாவாட் மின்சக்தியை உற்பத்தி செய்கிறது. ஆனால் ஆண்டுக்கு 300 நாட்கள் வரை சூரியஒளி பெறும் நாமோ, வெறும் 12 மெகாவாட்டுக்கும் குறைவாகவே உற்பத்தி செய்கிறோம்!

இந்தியாவில் தற்போது இருக்கும் மின்பற்றாக் குறையைவிட 2020-ல் இரு மடங்கு அதிகமாக இருக்கும் என ஆய்வுகள் சொல்கின்றன. இதற்கொரு தீர்வாக சூரிய சக்தியிலிருந்து மின்சாரத்தை தயாரிப்பது குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தி வருகிறது மத்திய அரசு.

உலகளவில் இந்தியா மற்றும் சீனாவில்தான் சூரிய சக்திக்கான சந்தை அடுத்த ஐந்து ஆண்டுகளில் அபரிமிதமாக இருக்கும் என ‘யூரோப்பியன் போட்டோவால்டெக் இண்டஸ்ட்ரி’ என்ற அமைப்பு தெரிவித்துள்ளது. அதிக அளவிலான சந்தை வாய்ப்பு மற்றும் கவர்ச்சி கரமான திட்டங்களை உருவாக்குவதிலும் இந்தியா முன்னிலை வகிக்கும் என அந்த அமைப்பு கூறியுள்ளது. சூரியசக்திக்கான உலகளாவிய சந்தை 2010-ல் 15.5 ஜிகாவாட்-லிருந்து 2014-ல் இரண்டு மடங்காக (30 ஜிகாவாட்) அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால் இதன் சந்தை மதிப்பு இனி மிகப் பிரகாச மாக இருக்குமென கூறப்படுகிறது.

அரசின் சலுகைகள்

சூரியசக்தி மூலம் மின்சாரம் தயாரிக்க அரசு பல்வேறு சலுகைகள் அளித்து வருவதால் கடந்த இரண்டு ஆண்டுகளில் தயாரிப்புச் செலவு 40% குறைந்துள்ளது. சூரியசக்தி மூலம் மின்சாரம் தயாரிக்க 5 சதவிகிதத் துக்கும் குறைவான வட்டிக்கு கடன் வழங்க அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்தியன் ரினீவபிள் எனர்ஜி டெவலப்மென்ட் ஏஜென்சி (indian renewable development agency) வங்கிகளுக்கும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்களுக்கும் குறைந்த வட்டிக்கு நிதியுதவி அளிக் கிறது. மானியங்களுடன் கூடிய கடனையும் வழங்க உள்ளது. லட்சத்தீவு, அந்தமான் நிக்கோபர் தீவுகள், லடாக் மற்றும் எல்லைப் பகுதிகளில் சூரியசக்தியை அதிகளவில் பயன்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. சூரியசக்தி மூலம் மின் உற்பத்தி செய்யத் தேவையான சாதனங்களை இறக்குமதி செய்ய சுங்கவரி மற்றும் கலால் வரியிலிருந்து விலக்கு அளிக்கிறது.

‘ஜவஹர்லால் நேரு நேஷனல் சோலார் மிஷன்’ திட்டத்தின் மூலம் 2013-ல் 1,100 மெகாவாட், 2022-ல் 20,000 மெகாவாட் மின்சாரத்தையும் சூரியசக்தி மூலம் உற்பத்தி செய்ய நிர்ணயித்துள்ளது. இதனால் மிகப் பெரிய தொழில் வாய்ப்பு இந்தத் துறையில் உள்ளது. மின் உற்பத்தி தவிர, மின்சாரத்தைக் கொண்டு செல்வதற்கான கருவிகளைத் தயாரிப்பது, நிர்வகிப்பது, நிறுவுவது, இதர சேவைகள் என பல வகையில் பிஸினஸ் வாய்ப்புகள் இதில் குவிந்துள்ளது.

சூரியசக்தி மின்நிலையம் ஆரம்பிக்க அரசின் பங்களிப்பு எந்த வகையில் இருக்கும் என்பதை அறிய ‘தமிழ்நாடு எனர்ஜி டெவலப்மென்ட் ஏஜென்ஸி’யின் காற்றாலை மற்றும் சூரிய சக்தியின் துணைப் பொது மேலாளர் டியூக் கிறிஸ்டோபர் டேனியலைச் சந்தித்தோம்.

”ராஜஸ்தான், குஜராத் மாநிலங்களுக்கு அடுத்த படியாக தமிழ்நாட்டில்தான் சூரியசக்தி அதிகமாகக் கிடைக்கிறது. இதனால் இங்கு சூரியசக்தி மூலம் மின்சாரம் தயாரிக்கும் திட்டங்கள் அதிக எண்ணிக்கையில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. போட்டோவோல்டிக் மற்றும் சோலார் தெர்மல் பிளான்ட் ஆகிய இரண்டு வகையில் சூரியசக்தி மூலம் மின்சாரம் தயாரிக்கலாம். இதில் போட்டோவோல்டிக் முறையில் தயாரிக்க சூரிய அனல்மின் உற்பத்தி முறையைவிட சற்று அதிகம் செலவாகும். இந்த முறையில் ஒரு மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய 17 கோடி ரூபாய் வரை செலவாகும். உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை மின்சார வாரியம் வாங்கிக் கொள்ளும். அதற்கான ஒப்பந்தத்தை மின்சார வாரியத்துடன் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். ஒரு யூனிட் மின்சாரத்தை 18.45 ரூபாய்க்கு வாங்க தமிழ்நாடு மின்சார ஒழுங்கு ஆணையம் வலியுறுத்துகிறது.

கிரிஸ்டலின், மோனோ கிரிஸ்டலின் டெக்னாலஜி, தின் டெக்னாலஜி என பல திட்டங்கள் இருக்கின்றன. இதில் கிரிஸ்டலின் மற்றும் மோனோ டெக் னாலஜியில் இந்திய முதலீட்டாளர்கள் மட்டுமே முதலீடு செய்ய முடியும். தின் டெக்னாலஜியில் வெளிநாட்டவர்களும் முதலீடு செய்யலாம். தெர்மல் பவர் பிளான்ட் மூலம் உற்பத்தியாகும் மின்சா ரத்தை மின்சார வாரியம் குறைந்த விலைக்கே வாங்குகிறது. ஆனால் சூரியசக்தி மூலம் உற்பத்தியாகும் மின்சாரத்திற்கு அதிக விலை கொடுத்து வாங்குகிறது. இதற்குக் காரணம் சூரியசக்தி மூலம் மின்சாரம் தயாரிக்க நிறைய செலவாவதே.

ஒரு மெகாவாட் சோலார் பிளான்ட் நிறுவுவதற்கு ஐந்து ஹெக்டேர் நிலம் தேவை. இந்த மின்நிலையத்தை தமிழ்நாடு எனர்ஜி டெவலப்மென்ட் ஏஜென்ஸியில் முன்பதிவு செய்துகொள்ள வேண்டும். அதன்பிறகு இந்தியன் ரினீவபிள் டெவலப்மென்ட் ஏஜென்ஸியில் பதிவு செய்து ஒப்புதல் பெறவேண்டும். எனவே முதலீட்டைத் திரட்டுவதுதான் கடினம். கஷ்டப்பட்டுத் தொழிலைத் தொடங்கிவிட்டால் 7-8 வருடங்களில் போட்ட பணத்தை எடுத்துவிடலாம்.

வீட்டுக்குத் தேவையான மின்சாரத்தையும் சிறிய அளவிலான கருவிகள் மூலம் உற்பத்தி செய்யலாம். இது பற்றி சோலார் தயாரிப்புகளை இந்தியாவில் 25 வருடங்களுக்கும் மேலாக தயாரித்துவரும் நிறுவனமான சோல்கார் நிறுவனத்தின் பொது மேலாளர் ஜெகதீஷ் பாபுவிடம் பேசினோம்.

நிறுவனங்கள் மட்டுமே தற்போது சூரியசக்தியைப் பயன்படுத்துகின்றன. வீட்டில் பயன்படுத்தும் சோலார் சாதனங்களைப் பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு இல்லை. மின்சாரம் இன்னும் கிடைக்காத கிராமங்கள் இந்தியாவில் உள்ளன. அங்கெல்லாம் சோலார் சாதனங்களைப் பயன்படுத்தி பலன் பெறலாம்.

கடந்த 25 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு தற்போது சோலார் சக்திக்கான சந்தை அதிகரித்துள்ளது. மக்களிடையே சோலார் சாதனங்களின் விலை அதிகமாக இருக்கும் என்று எண்ணம் இருக்கிறது. ஆனால் அரசு மானிய விலையில் தருவதால் இதன் விலை குறைந்துள்ளது. மேலும் எங்களைப் போன்ற நிறுவனங்கள் இன்னும் பல சலுகைகளைக் கொடுத்து மக்களிடையே இந்த சாதனங்களைக் கொண்டு செல்ல முயற்சிக்கிறோம். ஃபேன், விளக்கு, தெரு விளக்கு, வாட்டர் ஹீட்டர் என பல சாதனங்களை சூரிய சக்தியைப் பயன்படுத்தி உபயோகிக்கலாம். சோலார் சாதனங்களை வாங்கு வதற்கான முதலீடு மட்டும்தான் செலவு பிடிக்கிற விஷயமாகும். ஒருமுறை முதலீடு செய்துவிட்டால் மாதம்தோறும் கரன்ட் பில் செலவு மிச்சம். மக்கள் இதன் பயன்பாட்டை உணர்ந்து சோலார் சாதனங்களை உபயோகிக்க முன்வர வேண்டும்” என்றார்.

மத்திய அரசைப் போலவே தமிழக அரசும் சோலார் சக்தியின் பயன்பாட்டை மக்களிடையே கொண்டு செல்ல நடவடிக்கை எடுத்தால் இருளில் தவிக்கும் தமிழகம் நிச்சயம் பிரகாசிக்கும்.

– பானுமதி அருணாசலம், படங்கள்: வீ.நாகமணி.

நன்றி:- நா.வி

சுருட்டக்கூடிய டி.வி.! – விங்ஞான புதுமைகள்


டி.வி.யை பாயைப் போல சுருட்ட முடியுமா என்று கேட்டால், `இதென்ன அபத்தமான கேள்வி?’ என்பீர்கள். ஆனால் அப்படி சுருட்டி வைக்கக்கூடிய டி.வி. சந்தைக்கு வரும் காலம் வெகு தொலைவில் இல்லை என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

பின்லாந்து நாட்டின் `மில்லேனியம் டெக்னாலஜி பிரைஸ்’, புதிய கண்டுபிடிப்புக்கான `நோபல் பரிசாக’க் கருதப்படுகிறது. அந்த விழாவுக்கு அழைக்கப்பட்டுச் சென்றார் இங்கிலாந்து கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ரிச்சர்ட் பிரண்ட். அங்குதான் அவர், சுருட்டக்கூடிய தொலைக்காட்சி பற்றிய விவரத்தைத் தெரிவித்தார். தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் ஆராய்ச்சியின் மூலம், அம்மாதிரியான தொலைக்காட்சி விரைவில் சாத்தியம் ஆகும் என்கிறார் இவர்.

“பிளாஸ்டிக் மின்னணுப் பொருட்கள் தற்போது முக்கியமான ஆய்வு விஷயங்களாக அமைந்திருக்கின்றன. வருங்காலத்தில் இத்துறை குறிப்பிடத்தக்க வளர்ச்சி பெறுவதற்கு நல்ல வாய்ப்பு இருக்கிறது. நவீன `எம்பி3 பிளேயர்களிலும்’, நவீன செல்போன்களிலும் ஏற்கனவே ஒளி உமிழும் `ஆர்கானிக் டையோடுகள்’ பயன்படுத்தப்படுகின்றன. அவற்றைக் கொண்டு, சுவரில் ஒட்டக்கூடிய டி.வி.யை தயாரிக்கலாம். குறைந்த மின்சக்தியைப் பயன்படுத்தும் விளக்குகளையும் உருவாக்கலாம்” என்கிறார் ரிச்சர்ட்.

இந்த சுருட்டக்கூடிய தொலைக்காட்சி, மிக மெல்லியதாக இருப்பது, குறைந்த மின்சக்தியைப் பயன்படுத்துவதோடு அல்லாமல், அவற்றின் படக் காட்சிகள் பிரகாசமாகவும், துல்லியமாகவும் இருக்கும் என்றும் ரிச்சர்ட் தெரிவிக்கிறார்.

ஆபரேஷன் சிலந்தி


மிக வேகமாக வளர்ந்து வரும் தொழில்நுட்பம் நானோ. எதையும் மிகச்சிறிய அளவில் பயன்படுத்தி மிகப்பெரிய பயனைப் பெறுவது இந்த தொழில்நுட்பத்தின் சிறப்பாகும். பல்வேறு துறைகளில் நானோ தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டாலும், மருத்துவ உலகில் அதன் பங்களிப்பு அதிகமாக இருக்கிறது.

சவாலான ஆபரேஷன்களில் பயன்படும் புதுமையான நானோ ரோபோ தற்போது வடிவமைக்கப்பட்டு உள்ளது. சிலந்தி வடிவில் இந்த ரோபோ உள்ளது. மனிதனின் தலைமுடி தடிமனைவிட ஒரு லட்சம் மடங்கு சிறியது இந்த ரோபோ சிலந்தி.

கொலம்பியா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் சிலந்தி ரோபோவை உருவாக்கி உள்ளனர். இவ்வளவு சிறியதாக இருப்பதால் இதனை எளிதாக உடலுக்குள் செலுத்தி மருத்துவ சிகிச்சைக்கு பயன்படுத்த முடியும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

உடலின் ஒவ்வொரு செல்லிலும் இரட்டைச் சுருள் ஏணி வடிவம் கொண்ட ஆர்.என்.ஏ. மூலக்கூறுகள் இருக்கிறது. நோய் ஏற்படும்போது ஆர்.என்.ஏ.க்களில் பாதிப்பு ஏற்படும். இந்த நானோ ரோபோவானது, ஆர்.என்.ஏ.வின் ஏணிச்சுருளில் இணைக்கப்பட்டு அனுப்பும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. எனவே இதற்கு டி.என்.ஏ. ஸ்பைடர் என்ற சிறப்புப் பெயரும் உண்டு.

நோயால் பிளவுபடும் டி.என்.ஏ. ஏணிச்சுருளில் இணைப்பு ஏற்படுத்தும் வேலையை இந்த ரோபோ செய்யும். ஆனால் இந்த ரோபோவால் ஏணிச்சுருளை துண்டு செய்ய முடியாது. அதே நேரத்தில் நோய்த் தொற்று செல்களை அழிக்க இதைப் பயன்படுத்த முடியும்.

சிலந்தி ரோபோவின் வேகம் மிகக் குறைவாகவே இருக்கிறது. இதன் வேகத்தை அதிகப்படுத்தவும், வேறுசில உத்தரவுகளை ஏற்று செயல்படும் வகையிலும் ரோபோவை தயாரிக்க விஞ்ஞானிகள் முயற்சி செய்து வருகிறார்கள்.

இந்த ரோபோவை நுண்ணிய கணினி பாகங்களை பொருத்துவதற்கும் பயன்படுத்தலாம் என்பது கூடுதல் தகவல்!

நன்றி:-தினத்தந்தி

தகவல் பெட்டி-05


உலகின் மிகப் பழமையான ஆயுள் காப்பீடுக் கழகம் இங்கிலாந்தில் உள்ளது. அதன் பெயர் Equitable Life Assurance Company.

உலகின் மிகச் சிறிய ரயில் நிலையத்தைக் கொண்ட நாடு வாடிகன்.

ஜப்பானின் ஹிரோஷிமா நகரத்தில் போடப்பட்ட முதல் அணுகுண்டு 4082 கிலோ எடை கொண்டது.

உலகில் மிக அதிகமான ஊழியர்களைப் பணி அமர்த்தியுள்ள வங்கி ‘ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா’.

பைசா நகர சாய்ந்த கோபுரத்தில் உள்ள படிகளின் எண்ணிக்கை 294.

உலகில் மிக அதிகமாக விளை நிலங்களில் பயிரிடப்படுவது கோதுமைப் பயிர்.

முகமது அலி ஜின்னாவுக்கும், அடல் பிஹாரி வாஜ்பாய்க்கும் ஒரு ஒற்றுமை உண்டு. இருவரும் கிறிஸ்துமஸ் தினத்தில் பிறந்தவர்கள்.

ரூபாய் நோட்டுகளில் மகாத்மா காந்தியின் படம் அச்சிடப்படுவது உங்களுக்குத் தெரியும். 1997 வரை அவரது பெயர் ரூபாய் நோட்டுகளில் M.K.Gandhi (Mohandas Karamchand Gandhi-யின் சுருக்கம்) என்றுதான் குறிப்பிடப்பட்டிருந்தது. அதன் பிறகுதான் மகாத்மா காந்தி என்று மாற்றினார்கள்.

‘ஆஸ்திரேலியாவின் தந்தை’ என்று அழைக்கப்படுபவர் சர். எட்மண்ட் பார்டன் (Sir Edmund Barton).

இருட்டைப் பார்த்து பயப்படும் நோய்க்குப் பெயர் நாக்டிஃபோபியா (Noctiphobia).

எட்டி மெர்க்ஸ் (Eddy Merkx) என்பவர் பெல்ஜியம் நாட்டு சைக்கிள் வீரர். இவர் தன் வாழ்நாளில் 445 சைக்கிள் போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளார். ‘டூர் டி பிரான்ஸ்’ (Tour de France) என்ற பிரான்ஸ் நாடு முழுவதும் சைக்கிளில் சுற்றி வரும் போட்டியில் நான்கு முறை வென்றுள்ளார்.

அமேசான் நதியின் கிளை நதி ஒன்றும் பிரேஸிலின் பாகே நாட்டில் இருந்து வரும் நதியும், படகோனியாவில் ஓடும் நதி ஒன்றுமாகச் சேர்ந்து ஓடும் நதிதான் ‘நீக்ரோ நதி’

முதன் முதலில் ‘பல்சர்’களை (Pulsars) கண்டுபிடித்தவர் பிரிட்டனைச் சேர்ந்த விண்வெளி ஆராய்ச்சியாளர் ஜோஸேலின் பெல் பர்னெல் (Jocelyn Bell Burnell) பல்சர்கள் என்றால் என்ன தெரியுமா? இறந்து போன நட்சத்திரங்களில் மீதம். இவை ரேடியோ சிக்னல்களை அனுப்பும்.

ஒரு புலி தனது மொத்த எடையில் ஐந்தில் ஒரு பகுதி எடை உணவை ஒரே முறையில் உண்ணும். இதற்கு சமமாக ஒரு சராசரி மனிதன் உண்ண வேண்டுமானால் அவன் ஒருமுறைக்கு பதினைந்து கிலோ எடை உணவை உண்ண வேண்டும்.

சர். ராபர்ட் வால்போல் (Sir Robert Walpole) இங்கிலாந்தின் முதல் பிரதமர். ஆனால், அவரே அந்த பதவியில் தானிருப்பதை சொல்லிக்கொள்வதில்லை. முதலாம் ஜார்ஜ் மன்னரின் அரசவையில் ‘கஜானாவின் முதலதிகாரியாக’ மட்டுமே தன்னைக் குறிப்பிட்டுக்கொள்வார்!

ஒவ்வொரு வருடமும் பால்வழி மண்டலத்தில் பத்து நட்சத்திரங்கள் பிறக்கின்றன. பத்து நட்சத்திரங்கள் இறக்கின்றன.

தென் அமெரிக்காவில் காணப்படும் ‘ஸ்லோத்’ (Sloth) எனப்படும் உயிரினம் தனது பெரும்பாலான வாழ்வை தலைகீழாகத்தான் வாழும். உணவு தேடும்போதுகூட கிளைகளில் தலைகீழாகத் தொங்கிக்கொண்டே உணவு தேடும்.

அமெரிக்காவில் தற்போது அதிவேக விமானம் ஒன்று தயாரிப்பில் உள்ளது. இதன் வேகம் மணிக்கு 8,047 கிலோ மீட்டர். ஒலியின் வேகத்தைவிட ஏழு மடங்கு அதிகம். இது பறக்கும்போதே காற்றில் இருந்து ஆக்ஸிஜனைப் பிரித்தெடுத்து எரிபொருளாகப் பயன்படுத்திக்கொள்ளும்.

நீரில் வாழும் Giant Squid எனும் உயிரினத்தின் கண்கள் நாற்பது சென்டிமீட்டர் இருக்கும். ஆழ்கடலில் வாழும் இவை ஒன்பது மீட்டர் நீளம் வளரக்கூடியவை.

மிக அதிக மொழிகள் உள்ள நாடு பாப்புவா நியூ கினியா (Papua New Guinea). இதன் அரசு மொழி ஆங்கிலம். மற்ற மொழிகள் 715-க்கும் மேல் இருக்கும்.

தங்கக் கழுகால் 3.2 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள முயலையும் எளிதில் பார்க்கமுடியும். பெரிக்ரின் பருந்து (peregeine falcon) பறவையால் 8 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள புறாவையும் பார்க்க முடியும்.

2015\ம் வருடம் செவ்வாய் கிரகத்துக்கு ஆறு பேர் கொண்ட குழுவை அனுப்ப முடிவு செய்துள்ளது ரஷ்யா. இதற்கு மொத்தம் 20 பில்லியன் டாலர் செலவாகும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

நன்றி:- சு.வி

தவளை, தேரை அறிவியல் உண்மைகள்


வளை, நீரிலும் நிலத்திலும் வாழும் உயிரினம். தங்களுடைய ஆரம்ப கால வாழ்க்கை முழுதும் நீரில் வாழும். வளர்ந்த பிறகு உடம்பை ஈரமாக்கிக் கொள்ள நீரில் இருக்கும்.

தவளைகளுக்கு பெரிய தலைகள், நீண்ட கால்கள். வால் கிடையாது.

தவளைகள் நன்கு நீந்தக்கூடியவை. நிலத்தில், நடப்பதைவிட குதித்துக் குதித்துச் செல்லும்.

ஈரப்பதம் உள்ள எல்லா இடத்திலும் தவளைகள் இருக்கும். இவற்றால் கடல் போன்ற உப்பு நீரில் வாழமுடியாது.

உலகில் மிகப்பெரிய தவளையின் பெயர் கோலியாத். இது மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ளது. இதன் எடை மூன்று கிலோ. நீளம் 80 சென்டி மீட்டர்.

உலகின் மிகச்சிறிய தவளை பிரேஸிலில் உள்ளது. இதன் நீளம் 8.5 மில்லிமீட்டர் மட்டும்தான்.

தவளைகளின் இயல்பே குதிப்பதுதான். தவளைகளில் அதிக உயரம் குதிப்பவை தென்ஆப்பிரிக்காவின் ஊசி மூக்குத் தவளைகள். வெறும் ஆறு சென்டிமீட்டர் நீளம் இருக்கும் இந்தத் தவளைகள் அநாயாசமாக 5.35 மீட்டர் உயரத்தை ஒரே தாவலில் குதிக்கும்.

தவளைகளும் தேரைகளும் சேர்ந்து 2600-க்கும் மேற்பட்ட வகைகள் உண்டு.

தென் அமெரிக்காவின் விஷத்தவளைகளிடம் மிகுந்த விஷம் இருக்கும். இதன் விஷத்தை அம்புகளில் தடவி மிருங்களையும் எதிரிகளையும் கொல்ல உபயோகிப்பார்கள் அந்தப்பகுதி மக்கள். இவற்றின் பிரகாசமான நிறமே கொல்லவரும் மிருகங்களிடமிருந்து காப்பாற்றும்.

வட அமெரிக்காவின் சிறுத்தைத் தவளை, பெரும்பாலான தவளைகள் போல் இரவில்தான் சுறுசுறுப்பாக இருக்கும். எதிரி மிருகங்கள் துரத்தினால் ஒவ்வொரு குதிப்புக்கும் இடவலமாக மாறி மாறிச் சென்று மிருங்களைக் குழப்பும்.

பெரிய தவளைகள் எல்லாம் சின்னச் சின்ன மிருகங்களைக் கொன்று தின்னும். சில தவளைகள் தங்கள் நீளமான நாக்கை நீட்டிப் பூச்சிகளைப் பிடிக்கும். மற்றவை குதித்துப் பூச்சிகளைப் பிடிக்கும்.

இனவிருத்தி காலத்தில் ஆண் தவளைகளும், பெண் தவளைகளும் தகுதியான குளம், குட்டைகளுக்குப் போகும்.

பெண் தவளைகள் ஏகப்பட்ட முட்டைகள் போடும். இவை உடைந்து குட்டித் தவளைகள் வரும். குட்டித் தவளைகள் தங்களைத் தாங்களே பாத்துக்கொள்ள வேண்டும். சிறு தாவரங்களை உண்ண ஆரம்பித்து சில நாட்களில் சின்ன சின்ன நீர்வாழ் மிருகங்களை உண்ண ஆரம்பிக்கும்.

தவளைகள் சுவாசிக்க நுரையீரலை மட்டுமல்லாமல் தோலையும் பயன்படுத்தும். இதற்காக தோலில் சின்ன ஓட்டைகள் இருக்கும்.

ஆப்பிரிக்கா காட்டில் வாழும் புல்ஃப்ராக் வகைத் தவளைகள் கூர்மையான பற்களுடன் இருக்கும். குட்டிகளுக்கு யார் மூலமாவது ஆபத்து வந்தால் _ அது பாம்போ, மனிதனோ… உடனடியாக சண்டைக்குப் போய்விடும்.

ஒரு மில்லிமீட்டரில் இருந்து ஐந்து மில்லிமீட்டர் அல்லது அதற்கு மேலும் ஒன்றிரண்டு மில்லிமீட்டர் கூடிய அளவுகளில் முட்டையிடும். இவை ஆயிரக்கணக்கில் இருக்கும். ஆனால் பிழைப்பது பத்தோ, இருபதோதான்.

பூச்சிகள், புழுக்கள், மீன்கள், பிற குட்டித் தவளைகள் போன்றவை தவளைகளின் உணவு.

தவளை, தேரை

தேரைகள் தவளைகளின் சகோதர இனம். இவை பார்ப்பதற்கும், இவற்றின் வாழ்வு முறையும் ஓரிரு வித்தியாசங்களைத் தவிர தவளைகள் போல்தான்.

தேரைகளின் தோல் தவளைகளின் தோலைவிட ஈரப்பதம் குறைந்திருக்கும். தேரைகளுக்குப் பற்கள் இல்லை. இரண்டிற்கும் விலா எலும்புகள் வேறுபட்டிருக்கும்.

தேரைகளில் பெரிய தேரையின் பெயர் Marine Taod. 24 சென்டிமீட்டர் நீளமும், 1.3 கிலோ எடையும் இருக்கும்.

தேரைகளின் ஆயுட்காலம் முப்பது வருடங்களும் அதற்கு மேலும் அமையலாம்.

தேரைகள் சுமார் மூவாயிரம் முட்டைகள் இடும்.

நன்றி:- சு.வி