தொகுப்பு

Archive for the ‘வாய் விட்டு சிரிக்க’ Category

வாய் விட்டு சிரிக்க


அந்த அலுவலகத்திலே..எல்லோரும் தலையை விரிச்சுப் போட்டுட்டு இருக்காங்களே…ஏன்?

அங்க லஞ்சம் கொடுத்தா தான் எதுவும் நடக்குமாம்..

அதை ‘சிம்பாலிக்’ கா உணர்த்தறாங்களாம்..

லஞ்சம் தலை விரிச்சு ஆடுதுன்னு

________________________

அம்மா…அப்பா ஏன் ஞாயிற்றுக்கிழமையில ஆஃபீஸ் ஃபைல வீட்டுக்கு கொண்டு வரார்?

ஆஃபீஸ் ஃபைல்களைப் பார்த்தால் தான் உங்கப்பாவிற்கு தூக்கம் வருமாம்..

அதுதான்..

_____________________

நாதஸ்வர வித்வான்- (சபா காரியதரிசியிடம்)அடடா…நீங்க சொல்ற தேதிக்கு

நாதஸ்வரக் கச்சேரிக்கு ஒத்து வராதே

சபா காரியதரிசி-ஒத்து வரலேன்னா..பரவாயில்லை..

நீங்க வந்தா போதும்

___________________________

வந்தவர்: என் மனைவிக்கு ‘வீசிங்’ ப்ராப்ளம் டாக்டர்

டாக்டர்:  அதுக்காக ஏன் இவ்வளவு கவலைப்படறீங்க

வந்தவர்:  பாத்திரங்களை ‘வீசி’ எறியறாளே என் மேல

டாக்டர்: ???

__________________________

நம்ம தலைவருக்கு ஆஸ்பத்திரியில உடனடியா ரத்தம் கொடுக்கணும்னு..

சொல்றாங்க..ஆனா அவர் குரூப் ரத்தம் கிடைக்கலை

அவர் ரத்தம் என்ன குரூப்

ஊழல் குரூப்பாம்

_________________________

1வது நபர்: அவர் ரொம்ப கஞ்சன்னு எப்படி சொல்ற

2வது நபர்: ஓட்டல்ல சர்க்கரை இல்லா காஃபி சாப்பிட்டுட்டு..பணம் கொடுக்கறப்போ

சர்க்கரைக்காக ஒரு ரூபாய் குறைச்சுக்க சொல்றாரே!

___________________________

நன்றி:- தமிழா

__________________________