தொகுப்பு

Archive for the ‘எடுத்துச் செல்வதற்காக அல்ல’ Category

எடுத்துச் செல்வதற்காக அல்ல -முல்லா கதை


எடுத்துச் செல்வதற்காக அல்ல

பக்கத்து வீட்டுக்காரர் மனதில் உண்மையை அறியும் தேட்டம் லேசாக எரிவதை உணர்ந்த நஸ்ருத்தீன் ஒரு நாள் அவரிடம் புலன் கடந்த பொருளியலில் உங்களுக்கு சில விஷயங்கள் சொல்கிறேன்என்றார்.

அப்படியானால் நான் மிகுந்த மகிழ்ச்சிக்குரியவனாவேன். நீங்கள் எப்போது வேண்டுமானாலும் என் வீட்டிற்கு வந்து பேசுங்கள்என்றார் பக்கத்து வீட்டுக்காரர்.

ஒரு கட்டத்தில் பக்கத்து வீட்டுக்காரர் அனுபூதி அறிவை வெறும் வாய் வார்த்தையால் பெற்றுவிட முடியும் என நினைக்கிறார் என்பதை உணர்ந்த முல்லா அவரிடம் தன் பேச்சை நிறுத்திக் கொண்டார்.

சில நாட்கள் கழித்து பக்கத்து வீட்டுக்காரர் தன் வீட்டுக் கூரை மீதிருந்து, .”நஸ்ருத்தீன், அடுப்புக்கரி அணைந்து போய்க் கொண்டிருக்கிறது. தீ அணையாமல் இருப்பதற்கு நீங்கள் ஊதி உதவி செய்ய வேண்டும் “.முல்லாவைப் பார்த்து கத்தினார்

நிச்சயமாக உதவி செய்கிறேன். எனது மூச்சுக் காற்று உங்களுக்கு கட்டுப்பட்டது.. இங்கு வந்து அதை உங்களால் எவ்வளவு சுமந்து செல்ல முடியுமோ அவ்வளவு எடுத்துச் செல்லுங்கள்என்று திருப்பிக் கத்தினார் முல்லா.

———————————–

என்னவென்று யூகி?

ஒரு கோமாளி நஸ்ருத்தீனை பார்த்தான். அவன் பையில் ஒரு முட்டையை வைத்திருந்தான்.

முல்லா, யூகிப்பதில் நீர் வல்லவரா?’ என்றான்.

ரொம்ப மோசமில்லை’ என்று பதில் சொன்னார் முல்லா.

அப்படியானால், என் பையில் என்ன இருக்கிறது என்று சொல்லுங்கள்.‘என்றான் கோமாளி.

ஒரு துப்பு கொடுங்களேன்.‘ என்று கேட்டார் முல்லா

முட்டை வடிவத்திலிருக்கும், உள்ளே மஞ்சளும் வெள்ளையும் இருக்கும், முட்டை மாதிரி இருக்கும்.‘ என்று அடையாளங்கள் சொன்னான் கோமாளி

அப்படியானால் அது ஒருவித தின்பண்ட மாகத்தான் இருக்கும்’ என்றார் முல்லா.

நன்றி:- இனைய நன்பர்

முல்லாவின்  மற்றய தொகுப்புக்கள்

முல்லாவில் அறிவாற்றல்

முல்லா அனைத்த நெருப்பு

மீன் பிடித்த முல்லா

சொன்ன சொல் மாறாதவர்

முல்லாவின் திருமண ஆசை

வேதந்த நூல்

யானைக்கு வந்த திருமன ஆசை

மலிவான பொருள்

கப்பலில் வேலை

செயற்கரிய சாதனை

சொல்லாதே!

எடுத்துச் செல்வதற்காக அல்ல

என்னவென்று யூகி?

முல்லா ஏன் அழுதார்?

மீன் – முல்லா கதை

தளபதியின் சமரசம்

கழுதையால்கிடைத்த பாடம்

சூரியனா? சந்திரனா?