தொகுப்பு

Archive for the ‘யாராவதுக் கேட்டால்’ Category

யாராவதுக் கேட்டால் – யாசர்அரஃபாத்


அழுத்தத்தின் காரணத்தால்

அடிமனது வலிக்கும்;

உன்னோடு உறவாடிய

காலங்கள் இனிக்கும்!!

 

எப்போதுப் பார்ப்போம்

எதுவுமே தெரியாது

எனக்கு;

காலண்டரை

காணாமல் கிடைக்காது உறக்கம்!!

விழிகளில்

விளையாடும்

அவ்வப்போது கண்ணீர்;

துடைத்துவிட்டு

துவண்டுப்போவதே எனது வழக்கம்!!

 

பெயர் மட்டும்

பெருமையாய்

வளைகுடா கணவன்;

வயதின் பாதி

வறண்ட பாலையில்;

 

வசதியைத் தேடி

வசந்தத்தை இழந்த

வாலிப வயோதிகன்!!!

 

இருக்கின்ற சின்ன

இதயத்தில் எத்துனைப் பாரம்;

யாராவதுக் கேட்டால்

சிரித்துக் கொண்டே சொல்லுவேன்

பணத்திற்க்கு

பஞ்சமில்லை!!

 

சிக்கித் தவிக்கும்

வேதனையை

வெளிப்படுத்த முடியாமல்

 

வரவேற்க்கிறேன் என் நண்பர்களை

வா வளைகுடாவிற்க்கு;

என்னை ஒருவன் அழைத்ததைப் போல!!

 

நன்றி:-யாசர்அரஃபாத்

 

***************************