தொகுப்பு

Archive for the ‘புழுவாய் அழிவதைவிட’ Category

புழுவாய் அழிவதைவிட…. யாசர் அரஃபாத்


முட்டிய கண்ணீர்
முகத்தில் வழிந்தோட
ஒரு கையில் உயிரையும்
மறுகையில் மழலையும்
ஓடுகிறார்கள்
ஒதுங்குவதற்கு இடம் காண!!


கண்ட இடத்தில் கொல்வதற்கு
காவி உடையணிந்து
கயவர் கூட்டம் ஒன்று வருகிறது;
ரத்த யாத்திரை நடத்துவதற்கு
ரதயாத்திரையில் வருகிறது!!


மிரண்டுப் போன மக்களோ
வீட்டிற்குள் ஒளிந்துக்கொள்ள;
கொழுப்பெடுத்தக் கூட்டமோ
கொளுத்தி விட்டு
சூரசம்ஹாரம் என்றது!!


ஐந்து வயதோ
அறுபது வயதோ
கசக்கிவிடுவதற்க்கு
தகுதியாய் இருப்பது
பெண்ணாய் இருப்பதே!!


ஒட்டுமொத்த உயிரையும்
கொத்துக் கொத்தாய் கொன்றது
கொத்திக் கொத்தித் தின்றது!!
தலைமைக் கொண்ட
தருதலையோ
நியுட்டனின் மூன்றாம் விதி என்றது!!


வாளைக்கொண்டு
வயிறைப் பிளந்து
அவசர பிரசவம் பார்த்தது;
கத்தி கத்தி
செத்துப்போன என் சகோதிரியின் உயிரும்
இறைவனடி சென்றது!!


அட்டைப் படத்தில் போட்டு
அசலை எடுத்தவர்கள்
பல கோடி!
உதவிக் கரம் நீட்டி
ஒடிச் சென்றவர்கள்
பல கோஷ்டி!


அழுது அழுது கதைக் கேட்டு
ஆளுக்கொரு அமைப்பாய்
அடிவயிறு கிழிய உரக்கச் சொன்னது
“பாதிக்கப்பட்டோருக்கு பணம் செலுத்த
எங்களுடன் அணிதிரள்வீர்”


குழு குழுவாய் தனித்திருந்து
புழுவாய் அழிவதைவிட;
அடிக்க வரும்
எதிரியை கடித்துவிட்டு சாகும்

எறும்புக் கூட்டமாய் இருப்பதே மேல்!!!-யாசர் அரஃபாத்