தொகுப்பு

Archive for the ‘நீ எப்போது வருவாய்?’ Category

நீ எப்போது வருவாய்? – யாசர் அரஃபாத்

மார்ச் 22, 2010 1 மறுமொழி

மாதத்திற்க்குள்ளே
மணம் முடித்து இப்போது
எங்கோ  நீங்கள்;
குரல் மட்டுமே
தின தரிசனமாய்
கரிசனமாய்!!

கொடுத்த பதவிக்கு பொருத்தமாய்
கொடுத்துவிட்டு சென்றுவிட்டீர்கள்
குழந்தையை!!
எல்லோரும் சந்தோஷத்தில்
நான் மட்டும் சங்கடத்தில்;

உரைக்க வேண்டும்
உன்னிடத்தில்தான் முதன்முதலில்
எண்ணியிருந்த எனக்கு;
உன் சந்தோஷதைக் காணமுடிந்ததோ
கைப்பேசி வாயிலாக!!

ஆர்பாட்டமில்லாமல்
அழுது அழுது
பொழுதுதான் போனது;
நீ இன்னும் வரவில்லை!!

கலங்கிய
கண்களுடன்
கனத்தத் தனிமையுடன்
கேட்டுக் கொண்டே இருந்தேன்
நீ எப்போது வருவாய் என!!

முட்டிய வயிறை
தொட்டுப் பார்க்க
நீ வேண்டும் என  நான் நினைக்க;
நீயோ குழந்தைக்கு பெயர் அனுப்பி

பெருமிதப்பட்டாய்!!

துடிக்கின்ற
இடுப்பு வலியில்
உன் கரத்தினைத் தேடும்
என் கண்கள்!
வெறுத்தேப் போனேன்
மசக்கையானதை எண்ணி;

விழித்துப் பார்க்கும் போதாவது
நீ இருப்பாய்
என நான் எண்ண;
குழந்தையின் புகைப்படம்
அனுப்பியாயிற்று
உன் கணவனுக்கு என
கொல்லென்று சிரிப்பு
என்னைச் சுற்றி!!

வழிந்தக் கண்ணீரை
துடைக்கக் கூட
வழியில்லாமல்
இல்லை இல்லை
பலமில்லாமல்!!

எப்படியும் பார்த்திடலாம்
எண்ணிய எனக்கு;
கம்மிய குரலில்
விம்மிய பேச்சுடன்
உன் குரல் கைப்பேசியில்!!
மாற்றம் தெரிந்தது
மறு முனையில்;


அழுகையுடன் சேர்ந்த சிரிப்பு;
அதிர்ந்தப் போன நான்;
ஆறுதல் கூறினேன்
உனக்கு!!!

இறுதியாக
துண்டித்துவிட்டாய்
தொடர்பை
நான் தைரியமாக உள்ளதாய்
என நீ எண்ணி!!!!

– யாசர் அரஃபாத்


*********************