தொகுப்பு

Archive for the ‘சண்டை ஓய்ந்தபாடில்லை!’ Category

சண்டை ஓய்ந்தபாடில்லை!! – யாசர் அரஃபாத்


பள்ளியை இடித்தவன் எங்கோ
பல் இழிக்க;
பள்ளிவாசலுக்கே
பாதுகாப்பும் போட்டாயிற்று!!!

உடைத்தவன்
உயர்ந்த பதவியில்;
உரிமைக்கு குரல் கொடுக்க
தெருவுக்கு வந்த நாங்கள்
காவலர் கண்காணிப்பில்!!

இரத்தம் கொதிக்க
நரம்புகள் புடைக்க
கத்தி தீத்தாயிற்று!

கொடியேந்தி
கோஷமும் போட்டாயிற்று;
ஒன்று படு சகோதரா
வென்று எடு;
வருடா வருடம் எங்களுக்கே
வழக்கமாயிற்று!!

வாட்டிய வெயிலில்
வழிந்தோடிய வியர்வையை
கைகுட்டையால் வழியனுப்பி வைத்துவிட்டு;
சிந்தனையை சிறிது நாட்களுக்கு பின் ஒட்டினேன்;

எத்தனை மேடைகள்
எத்தனை பேச்சுக்கள்!
தம்பட்டம் அடித்தனர்
தாம்தான் நேர்வழி!!

சத்தியம் தெரிந்தப் பின்னும்
சண்டை ஓய்ந்தபாடில்லை!!

வேலையில்லாமல் ஆக்கிவிட்டனர்
வெளியாட்களுக்கு;
அடிப்பதும் , உதைப்பதும்
அவர்களுக்குள்ளே;
ஆனந்த தாண்டவம் R.S.S காரனுக்கு!!

ஒரே அமைப்பு என்றால்
உயிரையும் கொடுப்போம்!
மாற்று அமைப்பு என்றால்
சட்டையைப் பிடிப்போம்!!

எல்லோருக்கும் பெயரோ
அறிஞர்கள்;
மாட்டிக் கொண்டு
விழியைப் பிதிங்கிக் கொண்டு
வழியில்லாமல் நாங்கள்!!

சற்றென்று சவ்வு கனத்தது;
சிந்தனையும் கலைந்தது;
மீண்டும் ஒலிப்பெருக்கியின்
சப்தம் ரீங்காரமிட்டது….
ஒன்று படு சகோதரா
வென்று எடு!!!!!

– யாசர் அரஃபாத்

*****