தொகுப்பு

Archive for the ‘களவுப்போன கதை’ Category

களவுப்போன கதை – யாசர் அரஃபாத்


மனம் மாறி
மதம் மாறி
மணம் முடித்தாயோ;

குணம் வழுக்கி
குப்பைக்குச் சென்றாய்;
இனம் தெரியாமல்
இறைவனுக்கு மாறுசெய்தாய்!!

மாணிக்க
மார்க்கம் தெரியாமல்
மணியடிக்கும்
கோயிலுக்கு சென்றாய்;
பாதை மாறி
போதையில் போனாய்
காதலுக்காக!!

பார்த்து பார்த்து வளர்த்த
பெற்றோருக்கு மரண அடி கொடுத்தாய்;
இன்னொரு ஷக்ராத்தையும் காட்டிக் கொடுத்தாய்!!

மார்க்கத்தைப் போதிக்க
மறந்துவிட்டதினால் வந்த
விளைவோ;
அல்லது
கற்றுக்கொண்டே
களவுப்போன
கதை
யோ!!

ஓடிப் போய்
தஞ்சம் புக
எல்லோருக்கும் கிடைக்கும் நகரம்;
மாற்று வழி நடந்தால்
கிடைப்பது என்னவோ
நரகம்!!

சிந்தித்து நடந்தால்
சந்திக்கலாம்
சுவர்க்கம்; (இன்ஷா அல்லாஹ்)
புரட்சி என நீ எண்ணி
வாரி இரைத்துக்கொண்டது
சேற்றை;
சுத்தமான மார்க்கத்தில்
சுவாசிக்க வா காற்றை!!

நன்றி:- யாசர் அரஃபாத்

****************