தொகுப்பு

Archive for the ‘அருள் மறை’ Category

அருள் மறை – யாசர் அரஃபாத்


quran-reading.jpg
ஒளி வீசும்

அருள் கொண்டு;

இருள் விலகும்

வெட்கிக்கொண்டு!

பொதிந்திருக்கும்

உண்மைக் கண்டு;

புருவம் உயர்த்தும்

உலகம் இன்று!

மெய்யை மட்டும்

சுமந்துக்கொண்டு;

பொய்யை தகர்க்கும்

வரியைக் கொண்டு!

சுவனம் காண

இதயம் துடிக்கும்;

எடுத்துப் படித்தால்

உள்ளம் சிரிக்கும்;

மணக்கும் ஈமான்

மலர்ந்து நிற்கும்;

மறையோனின்

வல்லமைக் கண்டு;

இமைகள் நனைந்துக் கிடக்கும்!

நன்றி:–யாசர் அரஃபாத்

நன்றி:- என் பக்கம் http://itzyasa.blogspot.com

பிரிவுகள்:அருள் மறை