தொகுப்பு

Archive for the ‘தமிழன் நீலமேகம்’ Category

செல் பேசி – தமிழன் நீலமேகம்

ஏப்ரல் 25, 2010 1 மறுமொழி

செல் பேசியே கொஞ்சம் பேசிச் செல்.

யார் அழைத்தாலும் இசைக்கிறாய்
யான் அழைத்தாலும் இசைகிறாய்.

இரு துருவங்களையும் இணைக்கிறாய்
இரு உள்ளங்களிலும் தொனிக்கிறாய்

உலகம் எல்லாம் ஊடுருவி
உன்னத சேவை செய்கின்றாய்

நீயில்லாத இடமில்லை
உன் உறவில்லாத நபரில்லை

ஒரு கணம் உன் செயல் நின்றிட்டால்
மறு கணம் மனிதனும் செயலிழப்பான்.

காதலர் கைகளில் தூதுவன் நீ
காவலர் கைகளில் சேவகன் நீ

பாவலர் கைகளில் பறவை நீ
ஆர்வலர் கைகளில் ஆற்றல் நீ

மாணவர் பைகளில் ஆட்டம் நீ
மங்கையர் கைப்பையில் மதுரம் நீ

அரசியல் வாதியின் அடியாள் நீ
மருத்துவர் வாசலின் உதவியும் நீ

போதகர் மேசையில் புத்தகம் நீ
பாதகர் உறைகளில் குந்தகம் நீ

விற்பன்னர் மனங்களில் வித்தகன் நீ
விளம்பரம் ஊடகம் உருவம் நீ

விஞ்ஞானி விரல்களில் வேதியும் நீ
அஞ்ஞானி கருத்தினில் அகந்தை நீ

எல்லோர் வாழ்விலும் உயிராய் நீ
எல்லை இல்லா நட்பாய் நீ

உன் கருவில் எத்தனை எண் கணிதம்
உன் செயலில் எத்தனை தனி வினோதம்.

——————————————————————————————————-

நன்றி:– தமிழன் நீலமேகம்

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@