தொகுப்பு

Archive for the ‘மவுனம் களைந்தால்…’ Category

மவுனம் களைந்தால்.. கவியன்பன் கலாம் அதிராம்பட்டினம்


மொட்டின் மவுனம் வாசனையாம்
மொழியின் மவுனம் வார்த்தையாம்
கொட்டித் தீர்க்கும் மழையுந்தான்
கூடும் முகிலின் மவுனந்தான்
தட்டிக் கேட்கும் புரட்சிகூட
தங்கும் மவுன வெளிப்பாடே
மட்டில் பேரா பத்துகளும்
மண்ணின் மவுனச் சீற்றமேயாம்

அச்ச மூட்டி இறைவனுந்தான்
அதிகம் மவுனம் காத்தாலும்
எச்ச ரிக்கை மீறும் மனிதனுக்கு
எதுவு மறியா அஞ்ஞானம்
நிச்ச யமாக மவுனத்தை
நிறுத்தி இறைவன் காட்டுவானே
உச்ச மானத் தீர்ப்புநாளை
உலக மழியும் அவ்வேளை

”கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்(பிறப்பிடம்)
அபுதபி(இருப்பிடம்)

யாப்பிலக்கணம்:

மா, மா, காய் (அரையடிக்கு) வாய்பாட்டில் அமையும் அறுசீர் விருத்தம்

நன்றி:–“கவியன்பன்”, கலாம், அதிராம்பட்டினம். (பிறப்பிடம்)

அபு தபி (இருப்பிடம்) செல்பேசி:-00971-50-8351499

வலைப்பூ: http://www.kalaamkathir.blogspot.com/

கவியன்பன் கலாம் அதிராம்பட்டினம்

.