தொகுப்பு

Archive for the ‘புள்ளியியல் அளவில் புனித இஸ்லாம் வளர்ச்சி’ Category

புள்ளியியல் அளவில் புனித இஸ்லாம் வளர்ச்சி – கவியன்பன் கலாம் அதிராம்பட்டினம்


புள்ளியியல் அளவில் புனித இஸ்லாம் வளர்ச்சி
புளங்காகிதம் அடைவதில் நமக்கோர் மயக்கம்;

உள்ளத்தளவில் ஈமானின் தளர்ச்சி
ஒத்துக்கொள்வதில் நமக்கேன் தயக்கம்?

தாயும் ஒன்றே; தந்தையும் ஒன்றே
தாரணிக்கு நாம் தந்த சமத்துவம் எங்கே?

ஆயினும் நமக்குள் ஆயிரம் பிளவுகள் உண்டே
ஆயுதம் கொண்டும் நமக்குள்

சண்டையிட்டு மாய்த்து கொள்வது யாரோடு?
சகோதரத்துவ மரத்தை சாய்த்து விடுகின்றோம் வேரோடு….!

அண்டை வீட்டார் பசித்திருத்தலாகாது -என்ற
அண்ணல்நபி(ஸல்) அமுத மொழி மறந்தோம் அடியோடு..

பண்டைய முஸ்லிம்கள் உலகுக்கு
பயிற்றுவித்தனர் அறிவியல்- கணிதம்*

இன்றைய முஸ்லிம் இளைஞர்கள்
எத்தனை பேரிடம் உண்டு உயர்கல்வி விகிதம்?

மூளைச்சலவைச் செய்து முஸ்லிம் இளைஞர்களை
மூலைக்குத்தள்ளி விட்ட முல்லாக்களே….!

நாளை மஹ்ஷரிலே பதில் தர வேண்டும் அல்லாஹ்விடம்
நானே வந்து சாட்சி சொல்வேன் அப்போது…


நன்றி:–“கவியன்பன்”, கலாம், அதிராம்பட்டினம்.

செல்பேசி:-00971-50-8351499

இவர்களின் படைப்புகளில் சில

ஏமாற்று உலகம்

இக்கரைக்கு அக்கரைப் பச்சை

உறவுகள்

பாலையான வாழ்க்கை

முரண்பாடுகளை முறியடிப்போம்