தொகுப்பு

Archive for the ‘தமிழாய் தமிழுக்காய்’ Category

தமிழாய் தமிழுக்காய் – கவியன்பன் கலாம் அதிராம்பட்டினம்


தமிழாய் தமிழுக்காய் தாழா துழைத்து
அமிழ்தாய் பொழியு மழகு வழியில்
மொழியாம் தமிழை முழுதாய் மொழிந்து
பிழையின்றி வாழப் பழகு.

சூழவரும் சூழ்ச்சிகள் சூழா தமிழாய்
வாழ விழைந்திடு; வாழ்த்தும் தமிழர்
வழிகள் பிறழாது வாழ்வாய் தமிழாய்
இழியும் பழியும் இழுக்கு.

ஒழுக்கம் தழுவி அழுக்குக் கழுவி
விழுப்புண் விழைந்திட வாழ்வாய் தமிழுக்காய்
வாழும் தமிழென வாழ்த்தும் வழியும்
சூழும் புகழ்ச்சி சுழலும்.

மொழியை அழித்தல்; முழியை மழித்தல்
விழியை இழந்தால் வழியை ஒழிந்தாய்
மொழியைப் பழித்தல்; மழையை இழந்து
உழவு ஒழிந்த கழனி.

குறிப்பு:-  புதிய ழ’ கவிதை சிற்றிதழும் ‘தகிதா’ பதிப்பகமும் இணைந்து நடத்தும்

கவிதைப்போட்டி தலைப்பு :’தமிழாய் தமிழுக்காய் ‘ வரிகள் : 16

அப்போட்டிக்கு கவியன்பன் யாத்தளித்த வெண்பா

நன்றி:–“கவியன்பன்”, கலாம், அதிராம்பட்டினம். (பிறப்பிடம்)

அபு தபி (இருப்பிடம்) செல்பேசி:-00971-50-8351499

இவர்களின் ஆக்கங்களில் சில…..

ஏமாற்று உலகம்

இக்கரைக்கு அக்கரைப் பச்சை

உறவுகள்

பாலையான வாழ்க்கை

முரண்பாடுகளை முறியடிப்போம்

இணயதளம் ஓர் இனியதளம்

தமிழாய் தமிழுக்காய்