தொகுப்பு

Archive for the ‘காத்தமுன் நபி(ஸல்) மீது காதல் கொண்டேன்’ Category

காத்தமுன் நபி(ஸல்) மீது காதல் கொண்டேன் – கவியன்பன் கலாம் அதிராம்பட்டினம்


குர்- ஆன் என்னும் பேருரைக்கு
கோமான் நபிகள் வாழ்வேப் பதவுரையாம்

பெருமான் நபிகள் பிறந்ததினாலே
பேதமை யாவும் மறைந்தனவே

ஒருநாள் உலகம் முடிவு பெறும்;
உண்மைகள் அன்று விடிவு தரும்!!

வருநாள் மறுமையின் திண்ட்டாட்டத்திலே
வள்ளல் நபிகளின் மன்றாட்டத்தினாலே

தருவான் அல்லாஹ்வும் நிழலாகவே
தன்னிருக்கை அருகில் அழகாகவே

ஒருமுறை கனவில் தந்தீர் தரிசனம்;
உண்மையில் அதென் வாழ்விலோர் அதிசயம்!!!

மறுமுறை மீண்டும் வரவேண்டும் என்றே
மன்றாடிக் கேட்கின்றேன் இன்றே