தொகுப்பு

Archive for the ‘எட்டுக் குணங்களால் எட்டும் வளங்கள்’ Category

எட்டுக் குணங்களால் எட்டும் வளங்கள் – கவியன்பன் கலாம் அதிராம்பட்டினம்


அன்பைப் பெருக்கு அனைத்தும் செழித்திடும்
வம்பு வளர்த்தால் வளமே அழிக்கும்

நம்பி இறங்கு நலமே கிடைத்திடும்
வெம்பி கிடந்தால் வளங்கள் உடையும்

நோக்கம் இருந்தால் நெருங்குமே சக்திதான்
ஊக்கம் குறைந்தால் உடையுமே யுக்திகள்

நல்ல மனத்தில் நலங்களே தங்கிடும்
பொல்லாப் பகையால் பிளவுகள் பொங்கிடும்

ஐயம் களைதல் அவசியத் தேவையாம்
பொய்யும் புறமும் பொசுக்கிடும் சேவையை

எதிர்மறை எண்ணம் இருந்தால் தடைதான்
புதிர்கள் பெருகினால் பூஜ்யம் விடையாம்

நன்றி மறப்பதால் நன்மை அழிந்திடும்
என்றும் துரோகமே இன்பம் ஒழித்திடும்

நட்பின் வளையம் நமக்கு வரம்தரும்
தப்பு வராமல் தடுக்கும் அரண்பெறும்

யாப்பிலக்கணம்: குறள் வெண்செந்துறை.

நன்றி:–“கவியன்பன்”, கலாம், அதிராம்பட்டினம். (பிறப்பிடம்)

அபு தபி (இருப்பிடம்) செல்பேசி:-00971-50-8351499

வலைப்பூ: http://www.kalaamkathir.blogspot.com/