தொகுப்பு

Archive for the ‘அணைக்கட்டு’ Category

அணைக்கட்டு – கவியன்பன் கலாம் அதிராம்பட்டினம்


அணைக்கட்டு அன்பை அணைக்கட்டும்

’முல்லைப் பெரியாறு’
சொல்லிப் பாரு
நற்றமிழ்ப் பேரு
நம்மை ஏய்ப்பது யாரு?

உடைக்க நினைப்பது
ஒற்றுமை உணர்வுகளை
தண்ணீரை வைத்து
தானியம், காய்கறி
அரிசியும் பயிரிட்டாயா
அரசியலைப் பயிரிடுகின்றாய்

அண்டை மாநிலமே
அரிசியும் பருப்பும் தந்தும்
சண்டைப் போட்டே
சகோதர்களின்
மண்டை ஓட்டை வைத்து
மல்லுக்கு நிற்கின்றாய்

உடைப்பதில் தான்
இடைத்தேர்தல் வெற்றி
கிடைப்பதென்பது
மடையர்களின் சூழ்ச்சி

தமிழின் உதிரமாய்
உன்றன் மொழியும்
தமிழனின் உதிரமும்
தட்டிப் பறிக்கின்றாய்

உன்றன் பூமியில்
உள்ள சாமியைத் தேடி
உன்றன் பூமிக்கு வந்தவன்
உதிரம் குடிக்கும் நீயும்
உலக மகா அறிவிலி

அணை கட்டாதே
அன்பால் எம்மை
அணைக்கட்டு

அனைத்துக் கட்சிகளும் அரவணைத்து “அணையுங்கள்”


பாட்டன்மார் கெட்டியாய்த் தானே அணைகட்டிப் போட்டனரே
சேட்டன்மார் மாத்திரம் எப்படித்தான் கற்றனர்ச் சேட்டைகளை
நாட்டாமை தீர்ப்பு வழங்கவே கூட்டம் நடுவணாட்சிக்
கூட்டாமல் தள்ளிவைத்தால் நாடோறும் பாடிடும் கூக்குரலே


நன்றி:–“கவியன்பன்”, கலாம், அதிராம்பட்டினம். (பிறப்பிடம்)

அபு தபி (இருப்பிடம்) செல்பேசி:-00971-50-8351499

வலைப்பூ: http://www.kalaamkathir.blogspot.com/