தொகுப்பு

Archive for the ‘கவிஞர் காதர் ஒலி’ Category

மருத்துவ வணிகம் – கவிஞர் காதர் ஒலி

ஜூலை 19, 2012 1 மறுமொழி

எட்டணா மாத்திரை
எண்பது ரூவா: இங்கே
கட்டு போட போனால் வேணும்
கட்டு ரூவா!

கொஞ்சும் குமரிகளின்

கொஞ்ச சிரிப்பு: மெதுவா
படுக்க வைத்து மருந்தூட்டி
பணம் பறிப்பு.

பற்பல உறுப்புக்கு
படம் பிடிப்பு: உள்ளே
பங்கு சந்தைக் காரர்களின்
பகல் நடிப்பு.

செத்த உடம்புக்கும்,
சொல்லாமல் சிகிச்சை.
மொத்தமாய் கரந்தபின்னே,
மௌன பரீட்சை.

நவீன கருவிகளின்
நாடக சபா.!
முதலீட்டு முதலைகளின்
மோசடி அவா..?

செத்தான் என்பவன்,
பிழைத்தான்: பில் வரும்போது
பிழைத்தவன் செத்தான்..!

நன்றி:- கவிஞர் காதர் ஒலி நாகூர்.

நன்றி:- முகநூல்