தொகுப்பு

Archive for the ‘புளிச்சேப்பக்காரர் விருந்து’ Category

புளிச்சேப்பக்காரர் விருந்து – மு.அ. அபுல் அமீன் நாகூர்


அன்வரைப் பார்க்க அவரின் வீட்டிற்குச் சென்றேன்.  அங்கும் மெளலூது நடந்து கொண்டிருந்தது. அழையா விருந்தாளியாக செல்ல வேண்டாமென திரும்பினேன்.


தெரு முனையில் “அஸ்ஸலாமு அலைக்கும்” புது குரல்.

பதில் சொல்லி, திரும்பி பார்த்தேன்.  மஸ்ஜிதில் மகரிப் தொழுதவர்.

என்ன வேண்டும்? என்று கேட்டேன்.

‘விருந்திற்குச் சென்றேன். விரட்டிவிட்டார்கள்’ அவரின் இறுக்கத்தைக் காட்டும் சுறுக்கமான பதில். சுருக்கென்று என் உள்ளத்தைத் தைத்தது.  அவர் உடை ஏழ்மையை பறை சாற்றியது.

எந்த விருந்தில் ஏழைகள் புறக்கணிக்கப்பட்டு செல்வந்தர்கள் மட்டும் அனுமதிக்கப் படுகிறார்களோ அந்த விருந்தே விருந்துகளில் கேட்டதுஎன்று நபிகள் நாயகம் சொன்னார்கள். ஆனால் நடைமுறையில் ஏழைகளுக்கும் வறியவர்களுக்கும் உணவளிக்க மறுக்கிறார்கள்.  புளி எப்பக்காரர்களை வற்புறுத்தி அழைத்து வகைவகையாய் வயிறு புடைக்க விருந்து படைக்கிறார்கள்.

ஆஹா இதுவல்லவோ பக்கா பிரியாணி, மிக்க சுவையான புலவு என்ற புகழுரைக்கு மயங்குகிறார்கள்.

அவரை நோக்கி “நீங்கள் பள்ளியில் சென்று அமருங்கள். நான் உணவு கொண்டு வருகிறேன் என்று கூறினேன்.

நானோ வெளியூர்க்காரன். அருகில் உணவு விடுதிகள் இல்லை.  நேரமும் நெருக்கடி, யோசித்தேன்.

அழையா விருந்தாளியாக அன்வர் வீட்டிற்குச் சென்றேன். மெளலூது முடியும் வரை இருந்தேன்.  என் வருகை அன்வரை மகிழ்வித்தது. மெளலூது முடிந்து பையில் பிரியாணி தந்தார்கள். எடுத்து வந்து பள்ளியில் காத்திருந்தவரிடம் கொடுத்து சாப்பிட சொன்னேன்.

நன்றி:- முஸ்லிம் முரசு – ஆகஸ்ட் 2010ல் பிரசுரமானது

நன்றி:- மு.அ. அபுல் அமீன் நாகூர். அஞ்சலக அதிகாரி(ஓய்வு), செல்பேசி:-00919943469691

தலைவர்:- ‍பெற்றோர் ஆசிரியர் கழகம் நாகூர், கௌதிய்யா துவக்கப்பள்ளி நாகூர், கிராம கல்விக்குழு நாகப்பட்டினம்.

துணைதலைவர்:- மத்தியஅரசு ஓய்வூதியர் சங்கம் நாகப்பட்டினம்,  ஜாமியா மஸ்ஜித் செய்யது பள்ளி நாகூர்.

பொருளர்:- நாகூர் தமிழ் சங்கம் நாகூர்.

உறுப்பின‌ர்:‍‍‍‍‍‍- த‌மிழ்நாடு நுக‌ர்வோர் இய‌க்க‌ம்.

இவர்களின் படைப்புகளில் சில

பத்தில் பத்து

ஹிஜ்ரத்

சிட்டுக்குருவி – கூடிவாழ்ந்தால் கோடி நன்மை

மனித நேயம்

ஆஷூரா நாளில் ஆரம்பம்

புளிச்சேப்பக்காரர் விருந்து