தொகுப்பு

Archive for the ‘புறக்கணிக்க வேண்டும்’ Category

புறக்கணிக்க வேண்டும்! – மு.அ. அபுல்அமீன், நாகூர்


தீண்டத்தகாத தீய பழக்கங்களில் முந்தி நிற்பது மது. சிந்தனையைக் கெடுத்து சீரழிக்கும் நிந்தனைக்குரியன போதைப் பொருட்கள். மது போதை மற்ற தீய கொடுஞ்செயல்களை செய்யத் தூண்டும் தூண்டில். போதை, அறிவை அழிக்கும்; அநீதிக்கு அழைத்துச் செல்லும்; ஆன்றோர், சான்றோர் முன்பு அவமானப்பட வைக்கும்; தன் மதிப்பைத் தானே இழக்கச் செய்யும்; சில மணி நேர மகிழ்ச்சிக்காக பலரிடம் மதிப்பு இழக்க வேண்டுமா?

அதனால்தான் அல்குர் ஆனின் 2:219வது வசனம் “”மதுவிலும் சூதிலும் பெரும் பாவங்கள் உள்ளன. அவற்றில் (உல்லாச) பயன்கள் இருந்த பொழுதிலும், அதில் உள்ள பாவங்கள் பயனை விடப் பெரியது” என்று கூறுகிறது.

போதையில் இருப்போர் தன் நிலையறியாது தடுமாறுவர். அந்நிலையில் நற்செயல்களை செய்தல் கூடாது என்றும் குர் ஆனின் 4:43வது வசனம் இவ்வாறு மொழிகிறது.

“”நீங்கள் கூறுவது இன்னதென்று நீங்கள் அறிந்துகொள்ள இயலாத நிலையில், போதையிலிருக்கும் பொழுது தொழுகைக்கு செல்லாதீர்கள்”.

“”மது, சூது முதலியன அருவருக்கத்தக்க தீய செயல்கள். அவற்றில் இருந்து நீங்கள் விலகிக்கொள்ளுங்கள். அதனால் நீங்கள் வெற்றி பெறுவீர்கள்” என்றும் திருக்குர் ஆனின் 5:90வது வசனம் வலியுறுத்துகிறது.

மது மற்றும் பிற போதைப் பொருட்கள் பகையை ஏற்படுத்தி பொறாமையை உருவாக்கி நல்லன செய்ய விடாமல் தடுத்து அல்லன செய்யுமாறு மாற்றிவிடும். ஆகவே போதையைப் புறக்கணிக்க வேண்டும்.

“”மதுவும் சூதும் உங்களுக்கிடையே பகையையும், பொறாமையையும் உண்டு பண்ணி அல்லாஹ்வின் நிலையிலிருந்தும், தொழுகையிலிருந்தும் தடுத்து விடும் தீமைகள். ஆகவே அவற்றிலிருந்து நீங்கள் விலகிக் கொள்ள வேண்டும்” என்றும் குர் ஆனின் 5:91வது வசனம் எச்சரிக்கிறது.

குர் ஆனின் வழி நடந்து அல்லாஹ்வின் அருளைப் பெற்று வாழ விரும்புவோர் மதுவை வெறுத்து ஒதுக்க வேண்டும். அப்பொருட்களின் விற்பனையிலும் ஈடுபடாது விலகி இருக்க வேண்டும். அப்போது இலகுவாய் இறைவன் அருளைப் பெறலாம். உலகம் புகழ உயர்வாய் வாழலாம்.

நன்றி:- தினமணி 29-June-2012 வெள்ளிமணி

நன்றி:- மு.அ. அபுல் அமீன் நாகூர். அஞ்சலக அதிகாரி(ஓய்வு), செல்பேசி:-00919943469691

தலைவர்:- ‍பெற்றோர் ஆசிரியர் கழகம் நாகூர், கௌதிய்யா துவக்கப்பள்ளி நாகூர், கிராம கல்விக்குழு நாகப்பட்டினம்.

துணைதலைவர்:- மத்தியஅரசு ஓய்வூதியர் சங்கம் நாகப்பட்டினம், ஜாமியா மஸ்ஜித் செய்யது பள்ளி நாகூர்.

பொருளர்:- நாகூர் தமிழ் சங்கம் நாகூர்.

உறுப்பின‌ர்:‍‍‍‍‍‍- த‌மிழ்நாடு நுக‌ர்வோர் இய‌க்க‌ம்.

இவர்களின் படைப்புகளில் சில

பத்தில் பத்து

ஹிஜ்ரத்

சிட்டுக்குருவி – கூடிவாழ்ந்தால் கோடி நன்மை

மனித நேயம்

ஆஷூரா நாளில் ஆரம்பம்

புளிச்சேப்பக்காரர் விருந்து

சாலை விதிகள் போற்றுவோம்

வரவுக்கு வரம்பு

ஆண்டவன் நீதி

பசுமை தேநீர் Green Tea

தானத்தின் பொருள்

யார் யாருக்கு வழங்கலாம்?

இரக்கம் காட்டுகிறவன்!

நாமே வழங்குவோம்

இரக்கம்

நற்பலனைப் பெறுவோம்

அளப்பரிய அருள்

அவசியம் ஓத வேண்டும்

சாட்சி!

ஒற்றுமையாய் வாழ்வோம்!

கணவன் மனைவி உறவு பூத்துக்குலுங்க 

தினை விதைத்தவன்! 

தினை விதைத்தவன்!