தொகுப்பு

Archive for the ‘பாவ மன்னிப்பு’ Category

பாவ மன்னிப்பு! – மு.அ. அபுல்அமீன், நாகூர்


வீட்டில், நாட்டில் நடக்கும் குறைகள், கோணல்கள், மாற்றங்கள், ஏமாற்றங்கள், அபாயங்கள், ஆபத்துகள், அகால நிகழ்வுகள் அனைத்திற்கும் காரணம் அவரவர் செய்யும் தவறுகள், அக்கிரமங்கள், அநியாயங்கள், அநீதிகள்தான் என்பதை நாம் கண்ணால் காண்கிறோம். எனவே நீதி நூல்கள், நேர்மையாக, முறையாக, நெறியோடு வாழ அறிவுறுத்துகின்றன. அவ்வாறு வாழ்வதே அறவாழ்வு. நிறை மனத்தோடு இறைவனிடம், செய்த தவறுகளுக்கு மன்னிப்பு தேடி மீண்டும் அந்தத் தவறுகளை செய்யாமல் உறுதியாக நடந்தால் குறையில்லா நிறை வாழ்வு வாழலாம்.

ஹஜ்ரத் ஹசன் பஸ்ரி என்ற பெரியவரிடம் ஒருநாள் ஒருவர், “”நாட்டில் பஞ்சம் நிலவுகிறதே! பஞ்சம் தீர பரிகாரம் என்ன?” என்று கேட்டார். பெரியவர் ஹஜ்ரத் ஹஸன் பஸ்ரி பாவ மன்னிப்பு தேடுமாறு பதில் சொன்னார். அடுத்து வந்தவர் வறுமை நீங்க வழிகாட்ட வேண்டினார். பெரியவரோ, இறைவனிடம் இரு கரங்களை ஏந்தி பாவ மன்னிப்பு கோர கூறினார். மூன்றாவதாக வந்தவர் குழந்தைப் பேறு இல்லை என்று குறைபட்டார். “”மக்கள் செல்வம் பெற தக்க பரிகாரம், மிக்க பணிந்து பாப மன்னிப்பு தேடுவதே” என்றார் பெரியவர். நான்காவதாக வந்தவர், “”நாளும் நிலத்தில் விளைச்சல் குறைகிறதே” என்று விசனப்பட்டார். ஹசன் பஸ்ரியோ “‘விளைச்சல் பெருக அல்லாஹ்விடம் அனைத்து பாபங்களையும் நினைத்து நெக்குருகி பாவ மன்னிப்பு கேளுங்கள்” என்று  நவின்றார்.

அந்தப் பெரியவரின் அருகிலிருந்த ரபீவு பின் ஸுபைஹ் என்பவர், “”நால்வரும் ஆளுக்கொரு குறையைக் கூறி நிறைவு எய்திட இறையருள் பெறும் வழிகாட்ட வேண்டினர். அனைவருக்கும் பாப மன்னிப்பே பரிகாரம் என்ற ஒரு பதிலில் பொதிந்துள்ள பொருளைப் புரிய முடியவில்லையே” என்றார்.

ஹஜ்ரத் ஹஸன் பஸ்ரி அவர்கள் அல்குர்ஆனின் அத்யாயம் 71ல் நூஹ் நபி போதித்த 10 முதல் 12 வரை உள்ள வசனங்களை ஓதினார்கள்.

 فَقُلْتُ اسْتَغْفِرُوا رَبَّكُمْ إِنَّهُ كَانَ غَفَّارًا

يُرْسِلِ السَّمَاءَ عَلَيْكُم مِّدْرَارًا

وَيُمْدِدْكُم بِأَمْوَالٍ وَبَنِينَ وَيَجْعَل لَّكُمْ جَنَّاتٍ وَيَجْعَل لَّكُمْ أَنْهَارًا   # 

[ALQURAN 71;10-12]

  “”உங்கள் ரட்சகனிடம் மன்னிப்பு தேடுங்கள். நிச்சயம் அல்லாஹ் மன்னிப்பான். அவனே வானிலிருந்து மழை பொழியச் செய்வான். ஆறுகளில் நீரோடச் செய்து தோட்டங்களை உண்டாக்குவான். பொருட் செல்வத்தையும், மக்கள் செல்வத்தையும் வழங்குவான் என்று நவின்றார்கள். நாமும் அறிந்தோ அறியாமலோ உண்மைக்கு மாறாய் நடந்திருந்தால் அதனால் பாதிக்கப்பட்டிருப்பவரிடமும், இறைவனிடமும் மன்னிப்பு கோருவோம். நன்னிலை எய்துவோம்.

 

தலைசிறந்த பாவமன்னிப்பு – சையிதுல் இஸ்திஃபார்

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:-

اَللّهُمَّ أَنْتَ رَبِّي ، لاَ إِلهَ إِلاَّ أَنْتَ ، خَلَقْتَنِي ، وَأَنَا عَبْدُكَ ، وَأَنَا عَلىَ عَهْدِكَ وَوَعْدِكَ مَا اسْتَطَعْتُ ، أَعُوْذُ بِكَ مِنْ شَرِّ مَا صَنَعْتُ ، أَبُوْءُ لَكَ بِنِعْمَتِكَ عَلَيَّ ، وَأَبُوْءُ بِذَنْبِيْ ، فَاغْفِرْ لِيْ ، فَإِنَّهُ لاَ يَغْفِرُ الذُّنُوْبَ إِلاَّ أَنْتَ

அல்லாஹும்ம! அன்த்த ரப்பீ. லா இலாஹ இல்லா அன்த்த. கல்க்த்தனீ. வ அன அப்துக்க. வ அன அலா அஹ்திக்க, வ வஅதிக்க மஸ்ததஅத்து. அஊது பிக்க மின் ஷர்ரி மா ஸனஅத்து. அபூ உ லக்க பி நிஃமத்திக்க அலய்ய, வ அபூ உ லக்க பி தன்பீ. ஃபஃக்பிர்லீ. ஃபஇன்னஹு லா யஃக்பிருத் துனூப இல்லா அன்த்த’ என்று ஒருவர் கூறுவதே தலைசிறந்த பாவமன்னிப்புக் கோரலாகும்.

பொருள்: அல்லாஹ்! நீயே என் அதிபதி. உன்னைத் தவிர வேறு இறைவன் இல்லை. நீயே என்னைப் படைத்தாய். நான் உன் அடிமை. நான் உனக்குச் செய்து கொடுத்த உறுதி மொழியையும் வாக்குறுதியையும் என்னால் இயன்றவரை நிறைவேற்றியுள்ளேன். நான் செய்தவற்றின் தீமைகளிலிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன். நீ எனக்கு அருட்கொடைகளை வழங்கியுள்ளாய் என்பதை நான் ஒப்புக் கொள்கிறேன். மேலும், நான் பாவங்கள் புரிந்துள்ளதையும் உன்னிடம் (மறைக்காமல்) ஒப்புக் கொள்கிறேன். எனவே, என்னை மன்னிப்பாயாக! ஏனெனில், பாவத்தை மன்னிப்பவன் உன்னைத் தவிர வேறெவரும் இல்லை.)

இந்தப் பிரார்த்தனையை நம்பிக்கையோடும் தூய்மையான எண்ணத்தோடும் பகலில் கூறிவிட்டு அதே நாளில் மாலை நேரத்திற்கு முன்பாக இறப்பவர் சொர்க்கவாசிகளில் ஒருவராக இருப்பார். இதை நம்பிக்கையோடும் தூய்மையான எண்ணத்தோடும் இரவில் கூறிவிட்டுக் காலை நேரத்திற்கு முன்பே இறந்து விடுகிறவரும் சொர்க்கவாசிகளில் ஒருவராக இருப்பார் என ஷத்தாத் இப்னு அவ்ஸ்(ரலி) அறிவித்தார்.

அறிவிப்பவர் : ஷத்தாத் பின் அவ்ஸ் (ரலி),

நூல் : புகாரி ஹதீஸ் எண்: 6306

நன்றி:- தினமணி 13-July-2012 வெள்ளிமணி

நன்றி:- மு.அ. அபுல் அமீன் நாகூர். அஞ்சலக அதிகாரி(ஓய்வு), செல்பேசி:-00919943469691

தலைவர்:- ‍பெற்றோர் ஆசிரியர் கழகம் நாகூர், கௌதிய்யா துவக்கப்பள்ளி நாகூர், கிராம கல்விக்குழு நாகப்பட்டினம்.

துணைதலைவர்:- மத்தியஅரசு ஓய்வூதியர் சங்கம் நாகப்பட்டினம், ஜாமியா மஸ்ஜித் செய்யது பள்ளி நாகூர்.

பொருளர்:- நாகூர் தமிழ் சங்கம் நாகூர்.

உறுப்பின‌ர்:‍‍‍‍‍‍- த‌மிழ்நாடு நுக‌ர்வோர் இய‌க்க‌ம்.

இவர்களின் படைப்புகளில் சில

பத்தில் பத்து

ஹிஜ்ரத்

சிட்டுக்குருவி – கூடிவாழ்ந்தால் கோடி நன்மை

மனித நேயம்

ஆஷூரா நாளில் ஆரம்பம்

புளிச்சேப்பக்காரர் விருந்து

சாலை விதிகள் போற்றுவோம்

வரவுக்கு வரம்பு

ஆண்டவன் நீதி

பசுமை தேநீர் Green Tea

தானத்தின் பொருள்

யார் யாருக்கு வழங்கலாம்?

இரக்கம் காட்டுகிறவன்!

நாமே வழங்குவோம்

இரக்கம்

நற்பலனைப் பெறுவோம்

அளப்பரிய அருள்

அவசியம் ஓத வேண்டும்

சாட்சி!

ஒற்றுமையாய் வாழ்வோம்!

கணவன் மனைவி உறவு பூத்துக்குலுங்க 

தினை விதைத்தவன்! 

தினை விதைத்தவன்!