தொகுப்பு

Archive for the ‘ஆஷூரா நாளில் ஆரம்பம்’ Category

ஆஷூரா நாளில் ஆரம்பம் – மு.அ. அபுல் அமீன் நாகூர்.


ஆஷூரா நாளில் அன்றோ
அல்லாஹ் விண்ணைப் படைத்தான்
நேசமாய் மக்கள் வாழ‌
நேர்த்தியாய் ம‌ண்ணைப் படைத்தான்

பூமியைத் தாங்க மலையையும்
பூமியைச் சுற்றி கடலையும்
பூமி வெளிச்சம் பெற்றிட‌
சூரியன்பிற கோள்களைப் படைத்தான்

வெப்பத்தில் வெந்திடாது புவி குளிர்ந்து
வேளாண்மை விளைச்சல் பெருக்கி
தப்பாது வாழ்க்கை வாழ‌
தரணியில் மழையைப் பொழிந்தான்

விண்ணையும் ம‌ண்ணையும் இனைத்தான்
விண்ணிலே அர்ஷெனும் மணிமண்டபம்
கண்ணியமிகு குர்ஷெனும் அரியாசனம்
குறைவிலா லவ்ஹ் பலகைப் படைத்தான்

ஒளியினும் கடிந்தேகி வஹீ கொணரும்
ஓய்வறியா ஒப்பற்ற ஜிப்ரயீல்
வளியையும் வசப்படுத்தும் மீக்காயீல்
வலியின்றி ரூஹ்வாங்கும் இஸ்ராயீல்

மாண்ட மக்களை மீண்டும்
மஹ்ஷர் கியாம பெருவெளியில்
நீண்ட சூரூதி நீள்துயில்
நீக்கி உயிரெழுப்பும் இஸ்ராயீல்

முதலிய மலக்குகளைப் படைத்தான்
முன்னோன் அல்லாஹ் அர்ஷில்
இதமாய் இனிதே அமர்ந்தான்
இகமின்புற அருளைச் சொரிந்தான்

ஆதம் நபியைப் படைத்தான்
அவர்களின் பாவத்தைப் பொறுத்தான்
ஆத‌மின் ம‌க்க‌ள் அழியும்
கிய‌ம‌ நாளும் அன்றே

ஆஷூரா நாளின் அருமை
அறிந்து நோற்போம் நோன்பை
மாசிலா மாநபி சொன்னபடி
மாறாது இருநாளும் நோற்ப்போம்.

நன்றி:- புதிய பயணம் ஜனவரி 2009ல் பிரசுரமானது

நன்றி:- மு.அ. அபுல் அமீன் நாகூர். அஞ்சலக அதிகாரி(ஓய்வு), செல்பேசி:-00919943469691

தலைவர்:- ‍பெற்றோர் ஆசிரியர் கழகம் நாகூர், கௌதிய்யா துவக்கப்பள்ளி நாகூர், கிராம கல்விக்குழு நாகப்பட்டினம்.

துணைதலைவர்:- மத்தியஅரசு ஓய்வூதியர் சங்கம் நாகப்பட்டினம்,  ஜாமியா மஸ்ஜித் செய்யது பள்ளி நாகூர்.

பொருளர்:- நாகூர் தமிழ் சங்கம் நாகூர்.

உறுப்பின‌ர்:‍‍‍‍‍‍- த‌மிழ்நாடு நுக‌ர்வோர் இய‌க்க‌ம்.

இவர்களின் படைப்புகளில் சில

பத்தில் பத்து

ஹிஜ்ரத்

சிட்டுக்குருவி – கூடிவாழ்ந்தால் கோடி நன்மை

மனித நேயம்

ஆஷூரா நாளில் ஆரம்பம்