தொகுப்பு

Archive for the ‘வெறுங்கை என்பது மூலதனம்’ Category

வெறுங்கை என்பது மூலதனம்


தாக்குதலில் முக்கியமானது தற்காப்பு. இதில் உலகுக்கே முன்னோடிகள் ஜப்பானும் சீனாவும். இவர்களின் கலாசாரத்தில் தற்காப்புக் கலை தெரியாதவனை மனிதனாகவே மதிக்க மாட்டார்கள். இதில் முக்கியமானது குங்ஃபூ. கிட்டத்தட்ட 4,000 ஆண்டுகள் பழைமையான இந்தக் கலை பண்டைய சீனாவில் வேட்டையாடுபவர்களால் கண்டுபிடிக்கப்பட்டது.

வெறும் கைகளாலேயே எதிராளியைத் தாக்கச் சொல்லிக்கொடுக்கும் இந்தக் கலையைக் கற்றுக்கொள்வது சாதாரண விஷயம் அல்ல. குங்ஃபூவைவிட அதற்குத் தேவையான ஸ்டாமினாவைத்தான் அதிகம் சொல்லிக்கொடுத்தன பயிற்சி முறைகள். தியானம், முக்கியமான ஒன்று. அடுத்து ஸ்டான்ஸ். எப்படியெல்லாம் கை, கால்களை நீட்டி எதிராளியைத் தாக்கலாம் என்று முறை இருக்கும் இல்லையா? அந்த பொசிஷனுக்குத்தான் ஸ்டான்ஸ் என்று பெயர்.

இவற்றில் முக்கிய போஸ்கள் சில உண்டு. குதிரை ஸ்டான்ஸ் – கிட்டத்தட்ட சேரில் உட்கார்ந்திருப்பது போன்ற கற்பனையுடன் அமர்ந்திருக்க வேண்டும். வில் அம்பு ஸ்டான்ஸ் – ஒரு கால் நேராக முன்னால் தரையில் வைக்கப்பட்டு இருக்கும். இன்னொரு கால் லேசாகத் தரையில் வளைத்து கொஞ்சம் பின்னால் வைக்கப்பட்டு இருக்கும். டிராப் ஸ்டான்ஸ் – கிட்டத்தட்ட விழப் போகும் சமயம் சமாளித்துத் தன்னைப் பிடித்துக்கொள்வதுபோல நிற்க வேண்டும்.

இப்படி அத்தனை போஸ்களிலும் பயிற்சியின் போது அப்படியே நிற்கவைப்பார்கள். எங்கெல்லாம் முடிகிறதோ, அங்கெல்லாம் தண்ணீர் டம்ளர் வைக்கப்பட்டு இருக்கும். உதாரணமாக, குதிரை ஸ்டான்ஸில் இரு முட்டிகள், தோள் பகுதிகளில் தண்ணீர் வைக்கப்பட்டு இருக்கும். முட்டியின் கீழே பின்பகுதியில் இரண்டு கத்திகள். பொசிஷன் மாறினால் தண்ணீர் கொட்டிவிடும் அல்லது கத்தி குத்தும். இது அதிக ஸ்டாமினாவை வளர்ப்பதற்கு. இதை ‘ரூட்டிங்’ என்பார்கள். மரம்போல் வேர் பிடித்து நின்றால் மட்டுமே எதிராளியின் எந்த அட்டாக்குக்கும் பதிலடி சாத்தியப்படும் என்பதற்காகவே இப்படி!

நன்றி:- அட்டாக் விகடன்

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&