தொகுப்பு

Archive for the ‘பரிசு கொடு மகிழ்ச்சி பெறு’ Category

பரிசு கொடு… மகிழ்ச்சி பெறு! -ஸ்ம்ருதி


னோதத்துவரீதியாக நடக்கும் ஆராய்ச்சிகளில் அதிகம் இடம்பிடிக்கும் ஒரு விஷயம்… பரிசு கொடுப்பது!

பரிசு பெறுபவரைவிட கொடுப்பவருக்குத்தான் அதிக மனநல நன்மைகள் உண்டு என்கிறது 2005-ம் ஆண்டு எடுக்கப்பட்ட ஒரு சர்வே. ”பரிசை வாங்க மறுப்பது உறவுகளுக்கு இடையே மிக மோசமான விஷயம். ‘எனக்கு நீ பரிசு கொடுக்கத் தேவை இல்லை’ என்று ஒருவர் சொன்னால், ‘நீ என்னைப்பற்றி நினைக்கத் தேவை இல்லை’ என்று சொல் வதற்குச் சமம்” என்கிறார் ஹார்வர்டு பல்கலைக்கழகப் பேராசிரியர் எலன் லாங்கர்.

மனித வரலாற்றின் ஆரம்பத் தில் இருந்தே பரிசு கொடுக்கும் பழக்கம் இருந்திருக்கிறது. மனிதர் களுக்கு மட்டுமின்றி; விலங்குகளுக்கும் பரிசு வாங்குவதில் சந்தோஷம்தான். ஏதோ ஒரு விஷயத்தைச் செய்யச் சொல்லி மிரட்டுவதைவிட பரிசு கொடுப்பது சர்க்கஸ் விலங்கு களைப் பழக்க எளிதான முறை என்கின்றன ஆய்வுகள்.வீட்டு விலங்குகளுக்குக் கூட உணவு தவிர அவற் றுக்குப் பிடித்த விஷயங் களை கொடுத்தால் அவை குஷியாகிவிடு மாம்.

அதேபோல் பால் வேறுபாடும் பரிசு விஷயத் தில் முக்கிய பங்கு வகிக்கிறது. பெண்களுக்குப் பரிசு பெறுவதில் ஆர்வம் அதிகம். அதிகம் பரிசு தரும் ஆணின் திருமண வாழ்க்கை மிகச் சிறப்பாக இருக்கும்என்ப தும் நிரூபிக்கப்பட்டு இருக்கிறது. ஆனால், நடை முறையில் பெண்கள்தான் அதிக அளவில் பரிசு தருகிறார்கள். அதுவும் வித்தியாசமான பரிசுகளைத் தர மெனக்கெடுவது பெண்கள்தான்.

சிகாகோ பல்கலைக்கழகம் ஒன்றில் ஓர் ஆய்வு நடந்தது. ஒரு எல்.கே.ஜி. மாணவனின் பிறந்த நாள் விழா. அவனுக்குப் பரிசு வாங்க அந்த வகுப்பின் மற்ற குழந்தைகளின் அம்மாக்கள் கடைகளுக்குச்சென் றனர். பெண் குழந்தைகள் அம்மாவுடன் சென்று பரிசைத் தேர்ந்தெடுக்கவும், பரிசைச் சுற்றித் தரும் கலர் பேப்பரைத் தேர்தெடுப்பதிலும் உதவியுள்ளனர். ஆனால், வாங்கிய பரிசு என்ன என்பதைத் தெரிந்து கொள்வதில்கூட ஆண் குழந்தைகளுக்கு… ஆர்வம் இல்லை.

பரிசுபற்றி ஆய்வு செய்யும் பேராசிரியர் ரக்கர் தன்னிடம் ஆய்வுக்கு வந்தவர்களிடம் ஒரு கதை சொல்வாராம். தன் காதலியின் கண்களின் நிறத் துக்குப் பொருந்தும் பறவை முட்டைகளை எடுத்து வந்த காதலனின் கதை அது. பெண்கள் இதைக் கேட்கும்போது ‘ஹவ் ரொமான்ட்டிக்’ என்ற வார்த்தை தவறாமல் இடம்பெற்றதாம். ஆண்கள் எல்லோருமே சொன்னது, ‘அவனுக்கு வேற வேலை இல்லையா?’

————————————————————

நன்றி:-ஸ்ம்ருதி

நன்றி:-ஆ.வி

====================================================