தொகுப்பு

Archive for the ‘உலக வெப்பமயமாதல் மரம் வளர்ப்போம்!-அல்ஹாஜ் LMA.ஷேக் அப்துல் காதர்’ Category

உலக வெப்பமயமாதல் மரம் வளர்ப்போம்!-அல்ஹாஜ் LMA.ஷேக் அப்துல் காதர்


இந்த பிரபஞ்சம் (Universe) என்பது என்ன? எங்கிருந்து வந்தது? எங்கே முடியப் போகிறது? பெரிய தத்துவ ஞானிகள் முதல் சாமன்யர்கள் வரை அனைவரது மனத்திலும் இயற்கையாய் உதிக்கும் கேள்விகள் இவை. 15 ஆயிரம் கோடி வருடங்களுக்கு முன்பு நமது பிரபஞ்சத்தில் ஒரு பெரிய வெடிப்பு (Big Bang) நடந்ததாகவும் ஹைட்ரஜன் வாயு மேகங்களும், நட்சத்திரங்களும் உருவானதாகவும், பின்னர் வெகுகாலம் கழித்து நம் சூரியன் போன்ற மூன்றாம் தலைமுறை நட்சத்திரங்கள் உருவான போது தோன்றிய கிரகங்களின் வயது நம் பூமியைப் போல 450 கோடி வருடங்கள் இருக்க வேண்டும் என்று விஞ்ஞானிகள் தொடர்ந்து தெளிவு அடையப் பாடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

சூரிய குடும்பம் என்பது ஒன்பது கோள்களுடன் அடங்கிய நிலவுகள் மற்றும் நட்சத்திரக் கூட்டங்கள் ஆகும். சூரிய மண்டலத்தைத் தாண்டிப் பால்வீதி (Milky Way) மண்டலம் போல் பல கேலக்ஸிகளை (Galaxy) இந்த பிரபஞ்சம் அடக்கிக் கொண்டுள்ளது. ஒவ்வொரு கேலக்ஸியும் பல சோலார் சிஸ்டத்தைக் கொண்டது. நட்சத்திர மண்டலம் – கேலக்ஸி என்பது பத்தாயிரம் கோடி நட்சத்திரங்களை அடக்கியது; அதன் கிரகங்கள் ஒளிவீசி சுடர்விட்டுக் கொண்டிருக்கின்றன; வாயு மண்டலங்கள் எனப்படும் நெபுலாக்கள்  மற்றும் வெற்றுப் பிரதேசம், தூசி, அணுதுகள்கள் ஆகியவற்றை அடக்கியது. இப்பிரபஞ்சத்தில் குறைந்தபட்சம் 5000 கோடி கேலக்ஸிகள் இருப்பதாகச் சொல்லப்படுகின்றன. ஒவ்வொரு கேலக்ஸியும் தன்னைத் தானே சுற்றிவருகின்றது.

நம் கேலக்ஸியான பால்வீதி மண்டலத்தில் சூரியன் ஒரு முறை சுற்றிவர இருபது கோடி வருடங்கள் ஆகிறது. சூரியன் ஏற்கனவே 450 கோடி ஆண்டுகள் வாழ்ந்தாகிவிட்டது. இன்னும் ஏறத்தாழ 450 கோடி ஆண்டுகள் வாழும். அதனாலேயே இது நடுத்தர வயதுடைய சூரியன் என்று அழைக்கப்படுகிறது. இந்த சூரியன் பாக்கியுள்ள 450 கோடி ஆண்டுகளில் சூரிய அணு உலை முழுவதுமாக நின்று நெருப்பு கோலமாக மாறிப் பல மடங்கு அதனுடைய விட்டம் பெரியதாகிப் பூமியைக் கண்டிப்பாக விழுங்கிவிடும். அத்துடன் நமக்கு அடுத்துள்ள செவ்வாயையும் பதம்பார்க்கும், இறுதியில்…! இப்படி, இந்த பிரபஞ்சம் விஷயம் இருக்கும் என்று விஞ்ஞானிகள் நம்பும் பொழுது பூமி வெப்பமடைதலை ஏன் கடுமையான வசனம் கொண்டு தாக்கு கின்றார்கள் ! நம் சந்ததியினர்களுக்கு வாழ்க்கை இல்லை என ஏன் சொல்லுகின்றார்கள்? மேலே சொன்னவை பிரபஞ்சத்தைப் பற்றிய ஒரு சிறிய குறிப்புகள் தான்.

சூரியக் குடும்பத்தில் 2வது சுற்றில் வெள்ளியும் (Venus), 3வது சுற்றில் பூமியும் (Earth), 4வது சுற்றில் செவ்வாயும் (Mars) சுற்றிக் கொண்டிருக் கின்றன. இதில் 3வது சுற்றில் உள்ள பூமி இரண்டாவது சுற்றில் உள்ள வெள்ளியில் மோதாமல் போவது போல கற்பனை செய்தால் என்ன நடக்கும்? (வெள்ளியில்  Co2 – 96% சராசரி உஷ்ண நிலை 482*C  ) உஷ்ணம் நிறைய உள்ள வெள்ளியில் ஆக்ஸிஜனும் இல்லை. நீரும் இல்லாத நிலையில் உயிர் வாழ முடியுமா? அதேபோல் பூமி நான்காவது சுற்றில் உள்ள செவ்வாய் கிரகத்திற்கு மோதாமல் போனால் என்ன ஏற்படும்? செவ்வாயில் (  வெள்ளியில்  Co2 – 96% , ஹி2=3%, நு2 = 0.2 % )   உஷ்ணம் -126*C வரைக்கும் இருக்கும் அப்படியென்றால், ஆக்சிஜன் இல்லை, நீர் உறைந்துள்ள நிலையில் இருந்தால் எவ்வாறு உயிர்கள் வாழ முடியும் ?

சூரிய குடும்பத்தில் 3வது சுற்றில் உள்ள பூமியைப் போன்ற அபூர்வ மான கிரகம் உயிரினங்களுக்குத் தேவையான சூழ்நிலையைக் கொண்டதுமாகும் என்பனவற்றை மனதில் கொள்ள வேண்டும். வேறு கிரகத்தில் உயிர்கள் வாழும் சூழ்நிலையை இதுவரைக்கும் விஞ்ஞானிகள் கண்டுபிடித்ததாகத் தெரியவில்லை. மேலும் சூரிய குடும்பத்தை அல்லாத கிரகங்களில் உயிரினங்கள் இருப்பதாகக் கண்டு பிடிக்கவில்லை. ஆகையால்தான், நம் பூமி உயிர்கோளாகக் கருதப்படு கின்றது.

மக்கள் தொகை பெருக்கத்தால் வறுமை, வேலையின்மை, சுற்றுச் சூழல் பாதிப்பு, தண்ணீர் பஞ்சம் ஏற்படும். இதனால் வன்முறை, கொலை கொள்ளைகள் அதிகமாகும் வாய்ப்புகள் இருக்கின்றன. உலகில் இன்று ஏற்பட்டுள்ள மாசுக்களில் மிகப்பெரிய மாசு மக்கள் தொகை பெருக்கம்தான். சுற்றுச் சூழலை மாசுபடுத்துவது மனிதனே என்றாலும் அந்த சுற்றுச்சூழல் மாசுவில் இருந்து உலகைக் காப்பாற்றும் சக்தி படைத்தவனும் மனிதனே. எனவே இன்றைய மிக முக்கிய தேவை மக்கள் தொகைக் கட்டுப்பாடு. அத்துடன் மரங்களை வளர்த்து ஆதாயம் அடையலாம்.

மரங்கள்/ செடிகள்/ கொடிகள் எல்லாம் இயற்கையாகவே ஒளிச் சேர்க்கை (Photosynthesis) மற்றும் சுவாசம் (Respiration)செய்வதால் நாம் பெறும் பயன்களைத் தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டும்.

1.  உணவு

Glucose,Starch –உள்ள பழங்கள் எல்லா வகையான உணவுகளையும் தயாரிக்க மரங்கள் உபயோகப்படுகின்றன. காற்றிலுள்ள கார்பன் –டை- ஆக்ஸைடை ( CO2  ) இலைகள் மூலம் உறிஞ்சிக் கொண்டு, வேரிலுள்ள நீரில் ( H2O ) இருக்கும் ஹைட்ரஜனை ( H2 ) மட்டும் எடுத்துக்கொண்டு சூரிய ஒளியைப் பயன்படுத்தி குலுக்கோஸை (Glucose –  C6H12O6  ) தயாரிக்கிறது. அதாவது உயிரினங்களுக்கு தேவையான உணவுகளை தயாரித்துக் கொடுக்கின்றன.

2. ஆக்சிஜன் ( O2  ):

உணவுகளைத் தயாரிக்கும் அதே வேளையில் மரங்கள் உயிரினங் களுக்கு உயிர் வாழத் தேவைப்படும் சுவாசத்திற்குத் தேவையான ஆக்ஸிஜனையும் உற்பத்தி செய்கின்றன. அதாவது உணவு தயாரிக்க நீரிலுள்ள ஹைட்ரஜனை மட்டும் எடுத்துக் கொண்டு மீதம் உள்ள ஆக்ஸிஜனை வாயு மண்டலத்தில் வெளிவிட்டு உயிரினங்களை மரங்கள் காப்பாற்றுகின்றன. மேலும் வளிமண்டலத்தில் ஆக்ஸிஜனின் அளவு 21%க்கு மாறாமல் சமநிலையிலும் வைத்துக்கொள்கின்றன. 21% நிலையிலிருந்து ஆக்ஸிஜனின் அளவு 50% க்கு மாறினால் உலகம் தீப்பிடித்து எரியும். அதேபோல் 5% குறைந்தால் கூட மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிர்ச்சேதம் ஏற்படும் என்ற அபாய நிலையும் உள்ளது. வளி மண்டலத்தில் சமநிலையை ஏற்படுத்த மரங்கள் பெரிதும் பயன்படு கின்றன.

ஒளிச்சேர்க்கையின்போது நீரிலுள்ள ஹைட்ரஜனை( H2 ) மட்டும் எடுத்துக்கொண்டு ஆக்ஸிஜனை ( O2 ) வெளிவிடுகின்றன. மாறாக ஆக்ஸிஜனை ( O2 ) எடுத்துக்கொண்டு ஹைட்ரஜனை ( H2 ) வெளி விட்டால் மீண்டும் தீப்பிடித்து உலகமே அழிந்து விடும் என்பதையும் நாம் அறிந்துகொள்ளவேண்டும்

3. நீர் ( H20 ):

உயிரினங்களுக்கு மிகவும் இன்றியமையாதது உணவு, ஆக்ஸிஜன் மற்றும் நீர். இவை மூன்றும் இருந்தால்தான் உயிரினங்களுக்குத் தேவையான சக்தியும், வெப்பமும் கிடைக்கும். மரங்கள் மழைநீரைத் தந்து நீர் கிடைக்கச் செய்கின்றது. நீர் ஆதாரத்தைப் பெருக்கி எல்லா வளத்தையும் கூட்டுகின்றது. மரங்கள் தனக்காகவும், மற்ற உயிரினங் களுக்காகவும் மழையைக் கொண்டு வருகின்றது. இல்லாவிடில் நம் ஊர் பாலைவனமாக மாறும். துபை போன்ற பாலைவன நாடு சோலை வனமாக மாறியதற்குக் காரணம் அங்கு 30 வருடமாக விடாமுயற்சியில் ஏற்படுத்திய மரம் வளர்ப்புதான் என்பதை யாவரும் அறிவோம்.

4. நைட்ரஜன் ( Nitrogen – N2  )

மரங்கள் வெளியிடும் ஆக்ஸிஜனை எல்லா மூலை முடுக்குகளிலும் சந்து பொந்துகளிலும் இருக்கும் உயிரினங்களுக்கு எடுத்து செல்லவும், அதே சமயம் உயிரினங்கள், பாறைகள், கடல்கள், எரிமலைகள் வெளி விடும் CO2 – ஐ மரங்களுக்குப் பக்குவமாக எடுத்துச் செல்லவும் இந்த நைட்ரஜன் பயன்படுகிறது. நைட்ரஜன் வாயு மண்டலத்தில் உள்ள ஆக்ஸிஜனை ஓர் அளவிற்கு எடுத்துக் கொண்டு நைட்ரஜன் ஆக்ஸைடாக (Nitrogen Oxides) மாறிப் பூமியில் நைட்ரஜன் உரங்களைத் தயாரித்து மண்ணை வளமாக மாற்றுகின்றது. மண் செழிப்பிற்கு நைட்ரஜன் முக்கிய காரணமாகின்றது. நைட்ரஜன் வாயு மண்டலத்தில் 78% ஆக உள்ள நிலையிலும் வாயு மண்டலத்தில் அதிகமாக உள்ள வாயு என்ற நிலையிலும் எந்த ஓர் உயிர்க்கும் தீங்கு செய்யாமல் எல்லா உயிர்களும் உயிர் வாழ உதவுகின்றது.

மேலும் காற்று மண்டலம் ஆக்ஸிஜன் நு2- 21% மும், நைட்ரஜன்      N2 –  78% சேர்ந்த கலவையாக (Mixture) உள்ளது. அதாவது ஒன்றோடு ஒன்று எந்த கிரியையும் (Reaction) செய்யாமல் எளிதில் பிரிக்கக்கூடிய கலவையாக உள்ளது. இது பிரிக்க முடியாத கலவையாக மாறினால் நமக்கு ஆக்ஸிஜன் கிடைக்காது. உயிரினங்களும் உயிர் வாழ முடியாது. மேலும் நைட்ரஜனும், ஆக்ஸிஜனும் சேர்ந்து ( N20  ) நைட்ரஸ் ஆக்ஸைடு என்ற சிரிப்பைக் கொடுக்கும் வாயு (Laughing gas) ஏற்படுகிறது. இதனை மருத்துவத் துறையில் அறுவை சிகிச்சையின் போது போதை கொடுக்க (Anesthesia) மருத்துவர்கள் பயன்படுத்து கிறார்கள். ஹி2நு அளவு கூடினாலும் எல்லோரும் சிரிக்கும் விபரீதம் வாராதா? எல்லாம் இயற்கையின் கட்டுப்பாட்டிலுள்ள மரங்கள் அதற்கு ஒத்துழைக்கின்றன.

5. கார்பன் வியாபாரம் (Carbon trading)

மரங்கள் CO2 ஐ எடுத்துக்கொண்டு உயிர் வாழத் தேவையான உணவு, ஆக்ஸிஜன், நீர் போன்ற பொருள்களை ஒளிச்சேர்க்கை (Photo Synthesis) மூலம் கொடுக்கின்றன என்பதை அறிவோம். அதே சமயம் புவி வெப்பமடைதலுக்குக் காரணமாக CO2 ஐ எடுத்துக்கொண்டு காற்று மண்டலத்தைச் சுத்தம் செய்யும் வேலையையும் செய்கிறது. இப்படி    CO2 வாயு மண்டலத்தில் குறைக்கும் ஒவ்வொரு மரத்திற்கும் ஐ.நா வில் பணம் கொடுக்கின்றார்கள். இதைத்தான் (Carbon trading) என்கிறோம். ஒவ்வொரு மரமும் அந்தந்த அளவுக்குத் தகுந்தாற்போல் கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு 500 டன் கார்பன் –டை – ஆக்ஸைடை எடுத்துக் கொள்கின்றது. இப்படிப்பட்ட வியாபாரம் செய்ய மரங்கள் உதவுகின்றன.

மேலும் மரங்கள், பறவைகளுக்கும் விலங்குகளுக்கும் இருப்பிடத்தைத் தருகின்றன. வெயில் கொடுமையிலிருந்து காப்பாற்றி நிழல்கள் தருவது மரங்கள்தான். மரங்களை உயிர் உள்ள ஏர் கண்டிசனர் (Air conditioner) என்றும் அழைப்பதுண்டு. தொகுப்பு மரங்கள் சுமார் 1*C வெப்பம் குறைக்கும் என்று சுற்றுச் சூழல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றார்கள். மருத்துவக் குணமுள்ள காய், கனி, இலைகள் போன்றவற்றை மரங்கள் தருகின்றன.

மரங்கள் கடுங்காற்று மற்றும் சூறாவளிக்குத் தடுப்பாகச் செயல் படுகின்றன. மண் அரிப்பைத் தடுக்கின்றது. இலைகளும், பூக்களும் மண்ணுக்கு உரமாகின்றன. பல ஆயிரம் வருடத்திற்கு முன் புதையுண்ட மரங்கள் இப்போது நிலக்கரியாகவும் (Petrolium crude oil) எண்ணையாகவும் திரும்பக் கிடைக்கின்றன. புகை மற்றும் தூசிகளைத் தடுக்கவும் வடிக்கட்டும் வடிகட்டியாகவும் பயன்படுகிறது. கால்நடை களுக்குத் தீவனமாகவும் பயன்படுகிறது. புதிதாய் பிறக்கும் இளம் தளிர்கள் நடைபழகும் பிஞ்சு மழலைகள், இப்பூவுலகில் நம்பிக்கை யுடன் பாதம் பதிக்க, பிரபஞ்சத்தில் ஒரே உயிர்க்கோளும் நமது ஒரே வீடுமான பூவுலகைப் பத்திரமாய் வைத்திருப்போம்.

நன்றி:- அல்ஹாஜ் LMA.ஷேக் அப்துல் காதர்

நன்றி:- இனிய திசைகள் – ஏப்ரல் 2010

Advertisements
%d bloggers like this: