Archive

Archive for the ‘நன்றி பாராட்டுதல்!’ Category

நன்றி பாராட்டுதல்! – மு.அ. அபுல் அமீன்.


ஒரிறை கொள்கையைப் போதித்த கோமான் முஹம்மது நபி(ஸல்) அவர்கள், மக்கள் அனைவரும் ஓர் நிறை என்பதையும் எடுத்தியம்பினார்கள். மனிதனை மனிதன் அடிமைப்படுத்தி கொடுமை புரிதல் கூடாது என்றே அல்லாஹ் திருமறையில் அடிமை விடுதலையை விவரித்து கூறுகிறார். 

அடிமையை விடுதலை செய்வது அகபா என்னும் உயரிய தர்மம் ஆகும். அந்த தர்மம் புரிவோரின் புகலிடம் சொர்க்கம்’‘ என்று திருக்குர் ஆனின் 90-12, 13,18 வது வசனங்கள் வாகாய் கூறுகின்றன. 

அண்ணல் நபிகளாரின் அருமைத் தோழர் பெருமைக்குரிய இஸ்லாத்தை முதலில் ஏற்ற ஆண் மகன் என்ற சிறப்புடைய அபூபக்கர் (ரலி) அவர்கள் அக்காலத்தில் அஞ்ஞான அரபிகளிடம் அவதியுற்ற அடிமைகளைக் கண்ட பொழுதெல்லாம் விலை கொடுத்து விடுவித்து விடுதலை வழங்கினார். 

இஸ்லாத்தை தழுவிய நஹ்தியா என்ற பெண்ணும் அவரின் மகளும் அப்துத்தார் என்பவரிடம் அடிமையாக இருந்தனர். அபூபக்கர் (ரலி) அவர்கள் அப்துத்தாரிடம் அவர்களுக்குரிய விலையைக் கொடுத்து வாங்கி விடுதலை கொடுத்தார்கள். 

விடுதலை பெற்ற வேளையில் அப்பெண்கள் மாவு அரைத்துக் கொண்டிருந்தனர். அரைகுறையாக வேலையை விட்டுவிட்டு எழாது முழு மாவையும் அரைத்துக் கொடுத்துவிட்டுப் புறப்பட்டனர். புறப்படும் பொழுது இத்தனை காலம் அவர்களுக்கு உணவளித்த உரிமையாளர்களுக்கு நன்றி கூறினர். 

மனிதர்கள் ஒருவருக்கொருவர் நன்றி பகர்வது, பாராட்டுவது, இறைவனுக்கு நன்றி செலுத்துவதற்கு அடிப்படையாய் அமையும். அல்லாஹ், “மனிதன் தன்னைப் படைத்த இறைவனுக்கு நன்றி செலுத்த வேண்டும்”  திருக்குர் ஆன் 32-9 

அப்பெண்களின் கடமை உணர்வையும் நன்றி விசுவாசத்தையும் அபூபக்கர் (ரலி) பாராட்டினார்கள். 

நாமும் கடமை உணர்வோடு காரியமாற்றி நமக்கு நன்மை செய்தவர்களுக்கு நன்றி மறவாது உள்ளம் ஒன்றி நன்றி நவின்று நல்லன செய்வோம். வல்லோன் அல்லாஹ்வின் நல்லருளைப் பெறுவோம்.

நன்றி:- தினமணி 08_June-2012 வெள்ளிமணி

நன்றி:- மு.அ. அபுல் அமீன் நாகூர். அஞ்சலக அதிகாரி(ஓய்வு), செல்பேசி:-00919943469691

தலைவர்:- ‍பெற்றோர் ஆசிரியர் கழகம் நாகூர், கௌதிய்யா துவக்கப்பள்ளி நாகூர், கிராம கல்விக்குழு நாகப்பட்டினம்.

துணைதலைவர்:- மத்தியஅரசு ஓய்வூதியர் சங்கம் நாகப்பட்டினம்,  ஜாமியா மஸ்ஜித் செய்யது பள்ளி நாகூர்.

பொருளர்:- நாகூர் தமிழ் சங்கம் நாகூர்.

உறுப்பின‌ர்:‍‍‍‍‍‍- த‌மிழ்நாடு நுக‌ர்வோர் இய‌க்க‌ம்.

இவர்களின் படைப்புகளில் சில

பத்தில் பத்து

ஹிஜ்ரத்

சிட்டுக்குருவி – கூடிவாழ்ந்தால் கோடி நன்மை

மனித நேயம்

ஆஷூரா நாளில் ஆரம்பம்

புளிச்சேப்பக்காரர் விருந்து

சாலை விதிகள் போற்றுவோம்

வரவுக்கு வரம்பு

ஆண்டவன் நீதி

பசுமை தேநீர் Green Tea

தானத்தின் பொருள்

யார் யாருக்கு வழங்கலாம்?

இரக்கம் காட்டுகிறவன்!

நாமே வழங்குவோம்

இரக்கம்

நற்பலனைப் பெறுவோம்

அளப்பரிய அருள்

அவசியம் ஓத வேண்டும்

சாட்சி!

ஒற்றுமையாய் வாழ்வோம்!

கணவன் மனைவி உறவு பூத்துக்குலுங்க 

தினை விதைத்தவன்! 

%d bloggers like this: