தொகுப்பு

Archive for the ‘தினை விதைத்தவன்!’ Category

தினை விதைத்தவன்! – மு.அ. அபுல் அமீன்


மதீனாவில் கதாதா பின் நுஃமான் என்பவரின் உருக்குச் சட்டை திருடப்பட்டு விட்டது. அவரும் அவரின் நண்பரும் அத்திருட்டைக் கண்டுபிடிக்க முயற்சித்தனர். அப்பொழுது நுஃமானின் வீட்டிலிருந்து மாவு சிந்தியிருப்பதைக் கண்டனர். மாவு சிந்திய சுவட்டைப் பின்பற்றி சென்று தஃமா பின் இப்ரீக் வீட்டில் விசாரித்தனர். தஃமா தனக்கு தெரியாது என்று சத்தியம் செய்தான். தஃமாவின் வீட்டிலிருந்து சிந்திய மாவின் சுவடு செல்லும் திசையில் சென்றனர். அச்சுவட்டையும் தொடர்ந்து ஜைது பின் சலீம் என்ற யூதரின் வீட்டை அடைந்து விசாரித்தனர். அந்த உருக்குச் சட்டையை தஃமா தந்ததாக அந்த யூதர் கூறினார். அவரின் கூற்றைச் சில யூதர்களும் ஆமோதித்தனர்.

தஃமா, மாவு வாங்கி வரும்பொழுது பக்கத்து வீட்டில் புகுந்து கதாதாவின் உருக்குச் சட்டையைத் திருடி மாவு பையில் மறைத்து வைத்தான். அதனால் மாவு சிந்தியது. உருக்குச் சட்டையை அவனது வீட்டில் வைத்தால் கண்டுபிடித்து விடுவார்கள் என்று சாமர்த்தியமாக ஜைது பின் சலீமிடம் கொடுத்தான். திருட்டு கண்டுபிடிக்கப்பட்டதும் யூதரைச் சிக்க வைத்து விட்டான்.

சாய்விலா ஆய்வில் குற்றம் நிரூபிக்கப்பட்டதும் தஃமா மக்காவிற்கு ஓடி நபிகளாரின் ஏகத்துவ கொள்கையை எதிர்ப்போருடன் சேர்ந்து கொண்டான். தொடர்ந்து திருட்டுச் செயல்களில் ஈடுபட்டு வந்தான். இறுதியில் கல்லடியால் கொல்லப் பட்டான்.

“”எவர் ஒரு தவறை அல்லது குற்றத்தைச் செய்துவிட்டு நிரபராதியின் மீது பழி சுமத்துகிறாரோ அவரே அந்த அவதூறையும் தெளிவான பாபத்தையும் நிச்சயமாக சுமந்து கொள்கிறார்” (4:112).

“”நேர் வழியில் செல்பவர் அவரின் நன்மைக்கே நேர் வழியில் செல்கிறார். வழிகேட்டில் செல்பவன் அவனுக்கே கேடு செய்து கொள்கிறான்” (17:15) ஆகிய திருக்குர் ஆனின் வசனங்களைத் தஃமாவின் மரணம் மெய்ப்பிக்கிறது. எனவே நீதி வழுவாது வாழ வேண்டும்.

நன்றி:- தினமணி  25-May-2012 வெள்ளிமணி

நன்றி:- மு.அ. அபுல் அமீன் நாகூர். அஞ்சலக அதிகாரி(ஓய்வு), செல்பேசி:-00919943469691

தலைவர்:- ‍பெற்றோர் ஆசிரியர் கழகம் நாகூர், கௌதிய்யா துவக்கப்பள்ளி நாகூர், கிராம கல்விக்குழு நாகப்பட்டினம்.

துணைதலைவர்:- மத்தியஅரசு ஓய்வூதியர் சங்கம் நாகப்பட்டினம்,  ஜாமியா மஸ்ஜித் செய்யது பள்ளி நாகூர்.

பொருளர்:- நாகூர் தமிழ் சங்கம் நாகூர்.

உறுப்பின‌ர்:‍‍‍‍‍‍- த‌மிழ்நாடு நுக‌ர்வோர் இய‌க்க‌ம்.

இவர்களின் படைப்புகளில் சில

பத்தில் பத்து

ஹிஜ்ரத்

சிட்டுக்குருவி – கூடிவாழ்ந்தால் கோடி நன்மை

மனித நேயம்

ஆஷூரா நாளில் ஆரம்பம்

புளிச்சேப்பக்காரர் விருந்து

சாலை விதிகள் போற்றுவோம்

வரவுக்கு வரம்பு

ஆண்டவன் நீதி

பசுமை தேநீர் Green Tea

தானத்தின் பொருள்

யார் யாருக்கு வழங்கலாம்?

இரக்கம் காட்டுகிறவன்!

நாமே வழங்குவோம்

இரக்கம்

நற்பலனைப் பெறுவோம்

அளப்பரிய அருள்

அவசியம் ஓத வேண்டும்

சாட்சி!

Advertisements
%d bloggers like this: