தொகுப்பு

Archive for the ‘தானம்’ Category

தானத்தின் பொருள்! – மு.அ. அபுல் அமீன் நாகூர்


தானத்தின் பொருள்

எதை தர்மம் செய்ய வேண்டும் என்பதை குர்ஆன் கூறுகிறது. நபி (ஸல்) வழி நவிழ்கிறது. அவ்வாறு செய்யும் தர்மமே சிறந்த தர்மம். நிறைந்த பலனை இம்மை, மறுமை இரண்டிலும் தரும் அந்த தர்மம்.

உழைக்காது பிழைத்த பெருஞ்செல்வத்தையோ பிறரை ஏமாற்றி வஞ்சித்து கவர்ந்த நஞ்சான பொருளையோ கொடுப்பது தர்மம் ஆகாது. உண்மையில் உழைத்து சம்பாதித்த பொருளிலிருந்து நன்மையைத் தேடி நலிந்தோருக்குக் கொடுப்பதே தர்மம். அந்த தர்மத்தின் பலனை இம்மையிலும் அடையலாம்; மறுமையிலும் பெறலாம்.

‘விசுவாசமுடையோரே! நீங்கள் சம்பாதித்தவைகளில் மணமான நல்லவற்றிலிருந்தும் பூமியில் விளைந்த தானியங்களில் இருந்தும் நம் பாதையில் தர்ம செலவு செய்யுங்கள். அவற்றிலிருந்து கெட்டவற்றைக் கொடுக்காதீர்கள். கண்காணா அந்தக் கெட்டவற்றை நீங்கள் விரும்பி எடுப்பீர்களா?’ என்ற குர்ஆன் – 2-267வது வசனம் எதைத் தர்மமாகக் கொடுக்க வேண்டும்; எதை தர்மமாகக் கொடுக்கக் கூடாது என்பதைத் தெளிவாக உரைக்கிறது.

நாம் உண்ணுவதை உபயோகிப்பதையே வறியவரும் உண்ண உபயோகிக்கக் கொடுக்க வேண்டும். நாம் உண்ணுவதற்கு உதவாதவை என்று உதறித்தள்ளும் உணவு வகைகளையோ, பயன்படுத்த முடியாத பதரையோ, கிழிந்து நைந்த உடைகளையோ துணிகளையோ தர்மம் செய்தல் கூடாது. ‘நபிகள் நாயகம் தர்மம் செய்ய கட்டளையிட்டால் தோழர்களில் ஒருவர் கடை வீதிக்குச் சென்று சுமை தூக்கிப் பெறும் ஒரு முத்துக் கூலியை தர்மம் செய்வர். அவ்வாறு தர்மம் செய்தோர் லட்சம் தங்கக் காசுகள் உள்ள லட்சாதிபதிகளாக இருந்தனர்’ என்று புகாரி கிரந்தத்தில் கூறப்பட்டுள்ளது.

நாமும் நல்வழியில் பொருளீட்டி நன்மையை நாடி இல்லாதோருக்கு இன்முகத்தோடு ஈந்து இறையருளைப் பெறுவோம்.

– மு.அ. அபுல் அமீன்.

நன்றி:- தினமணி –  வெள்ளிமணி 02 Dec 2011

நன்றி:- மு.அ. அபுல் அமீன் நாகூர். அஞ்சலக அதிகாரி(ஓய்வு), செல்பேசி:-00919943469691

தலைவர்:- ‍பெற்றோர் ஆசிரியர் கழகம் நாகூர், கௌதிய்யா துவக்கப்பள்ளி நாகூர், கிராம கல்விக்குழு நாகப்பட்டினம்.

துணைதலைவர்:- மத்தியஅரசு ஓய்வூதியர் சங்கம் நாகப்பட்டினம்,  ஜாமியா மஸ்ஜித் செய்யது பள்ளி நாகூர்.

பொருளர்:- நாகூர் தமிழ் சங்கம் நாகூர்.

உறுப்பின‌ர்:‍‍‍‍‍‍- த‌மிழ்நாடு நுக‌ர்வோர் இய‌க்க‌ம்.

இவர்களின் படைப்புகளில் சில

பத்தில் பத்து

ஹிஜ்ரத்

சிட்டுக்குருவி – கூடிவாழ்ந்தால் கோடி நன்மை

மனித நேயம்

ஆஷூரா நாளில் ஆரம்பம்

புளிச்சேப்பக்காரர் விருந்து

சாலை விதிகள் போற்றுவோம்

வரவுக்கு வரம்பு

ஆண்டவன் நீதி

பசுமை தேநீர் Green Tea