தொகுப்பு

Archive for the ‘இஸ்லாமிய புத்தாண்டு ஹிஜிரி ஆண்டு பிறந்த விதம்’ Category

இஸ்லாமிய புத்தாண்டு ஹிஜிரி ஆண்டு பிறந்த விதம்

திசெம்பர் 7, 2010 1 மறுமொழி

இஸ்​லா​மி​யப் புத்​தாண்டு​   ஹிஜிரி​ ஆண்டு எந்​தக் கால கட்​டத்​தில் தொடங்​கி​யது என்​பதை இங்கு காண்​போம்.

அண்​ண​லார் நபி முஹம்​மது ​(ஸல்)​ அவர்​க​ளு​டைய வாழ்​நாள்​களை மூன்​றா​கப் பிரிக்​கின்​ற​னர் வர​லாற்று ஆய்​வா​ளர்​கள். முதல் பகுதி முஹம்​மது ​(ஸல்)​ அவர்​க​ளின் பிறப்பு,​ இள​மைப்​ப​ரு​வம்,​ திரு​ம​ணம் போன்ற நிகழ்​வு​கள் அடங்​கிய நாற்​ப​தாண்​டு​கள்.

இறை​வ​னால் “இறைத் தூதர்’ என அறி​விக்​கப்​பட்டு,​ ஓரி​றைக் கொள்​கையை மெக்​கா​வில் பிரச்​சா​ரம் செய்த பன்​னி​ரண்டு ஆண்​டு​கள் இரண்​டா​வது பகு​தி​யா​கும்.


ஓரி​றைக் கொள்​கையை ஏற்​றுக் கொள்​ளாத மக்​க​ளால் எண்​ணற்ற தொல்​லை​க​ளுக்​கும் துய​ரங்​க​ளுக்​கும் ஆளா​கிய அண்​ண​லார்,​ மெக்​கா​வை​விட்டு மதினா சென்​றதை மூன்​றா​வது பகு​தி​யா​கப் பார்க்​கின்​ற​னர். ​
நபி​க​ளாரை மெக்கா வாழ் மக்​கள் கொலை செய்​ய​வும் துணிந்​து​விட்ட நேரத்​தில்,​ மெக்​காவை விட்டு அவர் மதி​னா​வுக்​குச் செல்​லப் புறப்​பட்ட காலத்தி​லி​ருந்து தொடங்​கு​வதே ஹிஜிரி ஆண்டு. இது “ஹிஜ்​ரத்’ ​(புனி​தப் பய​ணம்)​ என்​னும் அர​பிச் சொல்லி​லி​ருந்து பிறந்த வார்த்​தை​யா​கும். இது முதல் பதி​னோரு ஆண்​டு​கள் மூன்​றா​வது பகு​தி​யா​கும்.

ஹிஜிரி ஆண்​டின் முதல் மாதமே “முஹர்​ரம்’ என்​ப​தா​கும். இத்​திங்​க​ளின் பத்​தாம் நாளை “ஆஷுரா தினம்’ என்​றும்,​ “முஹர்​ரம்’ என்​றும் கூறு​வர். இத்​தி​னத்தை பண்​டி​கை​யா​கவோ,​ பெரு​நா​ளா​கவோ கொண்​டாட வேண்​டிய அவ​சி​ய​மில்லை. இந்​நா​ளில் “நோன்பு’ நோற்​பதே சாலச் சிறந்​தது. இது ஒரு நினைவு நாளே!​
அண்​ண​லார் மறைந்​த​தற்​குப் பிறகு,​ சில ஆண்​டு​கள் கழித்து “கர்​பலா’ என்​னும் செருக்​க​ளத்​தில்,​ அண்​ணல் பெரு​மா​னா​ர​வர்​க​ளின் திருப்​பே​ரர் ஹு​ûஸன் ​(ரலி)​ என்​பார்,​ இஸ்​லா​மிய மக்​க​ளாட்​சியை ஏற்​ப​டுத்​து​வ​தற்​காக நடந்த போரில் உயிர் நீத்த நாளும் முஹர்​ரம் பத்​தாம் நாளே!​ இந்​நி​னை​வா​கவே இந்​நாள் சிறப்​பா​கக் குறிக்​கப்​ப​டு​கி​றது.

அண்​ணல் நபி ​(ஸல்)​ அவர்​கள் பிறப்​ப​தற்கு முன்பு,​ ​(பல நூற்​றாண்​டு​க​ளுக்கு முன்)​ இந்த முஹர்​ரம் பத்​தாம் நாளில் பல வியப்​பு​றும் அற்​பு​தங்​கள் நிகழ்ந்​த​தாக வர​லாறு சொல்​கி​றது. ​
இந்​நா​ளில்,​ முதல் மனி​தர் ​(முதல் இûறைத்​தூ​தர்)​ ஆதம் ​(அலை)​ அவர்​க​ளின் பாவ மன்​னிப்பை இறை​வன் ஏற்று,​ இவ்​வு​ல​கின் கண் அவரை நிலைப்​ப​டுத்​தி​னான்.


இறைத் தூதர் நூஹ் ​(அலை)​ அவர்​கள் பல ஆண்​டு​கள் தொடர்ந்து சத்​திய அறி​வு​ரை​களை எடுத்​தோ​தி​யும்,​ அத​னைச் செவி​ம​டுக்​காது எதிர்த்த மக்​களை அழித்தொழிப்​ப​தற்​காக இறை​வன் தோற்​று​வித்த மாபெ​ரும் பிர​ள​யத்தி​லி​ருந்து காப்​பாற்​றப்​பட்டு இறைத்​ தூ​தர் நூஹ் அவர்​க​ளின் மரக்​க​லம் அதே தினத்​தில்​தான் “ஜூதி’ என்​னும் மலை​யில் வந்து நின்​றது.

இப்​பொன்​னா​ளில்​தான் இறைத் தூதர் யூனூஸ் ​(அலை)​ அவர்​க​ளின் குற்​றத்தை இறை​வன் மன்​னித்து,​ மீன் வயிற்றி​லி​ருந்து விடு​வித்​தான்.


ஏறக்​கு​றைய ஐயா​யி​ரம் ஆண்​டு​க​ளுக்கு முன்​னர் வாழ்ந்த இறைத்​தூ​தர் இப்​ரா​ஹீம் ​(அலை)​ அவர்​க​ளும்,​ அவ​ரைப் பின்​பற்​றிய மக்​க​ளும்,​ ஆட்​சி​யில் இருந்த கொடிய மன்​ன​னா​கிய பிர் ஹெüனால் துன்​பு​றுத்​தப்​பட்​ட​னர். பின் அவ​னு​டைய இரும்​புப் பிடியி​லி​ருந்து விடு​பட்டு,​ நலமே “நைல்’ நதி​யைக் கடந்​த​னர். பிர் ஹெள​னும்,​ அவ​னு​டைய படைப் பட்​டா​ளங்​க​ளும் நைல் நதி​யில் மூழ்​க​டிக்​கப்​பட்​ட​னர். இந்​நி​கழ்​வு​கள் யாவும் முஹர்​ரம் மாதம் பத்​தாம் நாளி​லேயே நடந்​த​தாக ​ வல்​லு​நர்​கள் அறி​விக்​கின்​ற​னர்.


இத்​த​கைய அரும் பெரும் வியப்​பு​றும் விந்​தை​கள் நிகழ்ந்த சம்​ப​வங்​கள் யாவும் முஹர்​ரம் மாதம் பத்​தாம் நாளில் நிகழ்ந்​துள்​ளன என்​ப​தைக் கண்​ணு​றும்​போது,​ வர​லாற்று முக்​கி​யத்​து​வம் வாய்ந்த நாளாக இதை முஸ்​லிம்​கள் நினைவு கூர்​கின்​ற​னர்.

நன்றி:-செ. ஜஃ​பர் அலீ.

நன்றி:-