தொகுப்பு

Archive for the ‘யா ரஹ்மானே எங்களின் பாவம் நீங்கிடச் செய்வாயே’ Category

யா ரஹ்மானே எங்களின் பாவம் நீங்கிடச் செய்வாயே


RAMALAN YAA RAHMANE BAITH

யா ரஹ்மானே! எங்களின் பாவம் நீங்கிடச் செய்வாயே!

இந்த சங்கை மிகுந்த ரமழானின் பொருட்டால் ரஹ்மத்தை சொரிவாயே!

முந்திய பத்தில் ரஹ்மத்தும், மத்திய  பத்தில் குஃப்ரானும், இன்னும்

பிந்திய  பத்தில் இத்கையும் பொதிந்த  ரமழானை தந்தாயே! யா ரஹ்மானே! எங்களின்….

அஸ்ஸவ்முலீ வஆனல்லதீ  அஜ்ஜி பிஹி என்று மொழிந்தாயே!

இந்த நோன்பெனக்காக்கும் நான் கூலி அளிப்பேன் என்று நீ பகர்ந்தாயே!

யா ரஹ்மானே! எங்களின்….

லைலத்துல் கத்ரி கைரும்மின் அல்ஃப்பிஷஹ்ரென்று  உரைத்தாயே!

ஒரு ஆயிரமாதம் வணக்கத்தை விட இவ்விரவை நீ மதித்தாயே!

யா ரஹ்மானே! எங்களின்….

நோன்பு பிடித்தோம், தராவீஹ் தொழுதோம், பல அமல்கள் செய்தோம்!

எங்கள் வணக்கங்கள்தனையும், வேண்டுதல்களையும் கபூல்செய்தருள்வாயே!

யா ரஹ்மானே! எங்களின்….

பள்ளியில் தொழுதோம், திக்ருகள் செய்தோம், பல அமல்கள் செய்தோம்.

எங்கள் தையானே எம்மை ரமழானின் பொருட்டால் சுவனத்தில் சேர்ப்பாயே!

யா ரஹ்மானே! எங்களின்….

பிழை பொறுப்போன் உனையன்றி வேறாரும் இல்லையே! இல்லையே!!

பெரும் புகழுடையோனே இகபர வாழ்வில் ஆதரித்தருள்வாயே!

யா ரஹ்மானே! எங்களின்….

யாரப்பி ஸல்லி  ஸல்லிம் அலாதா ஹா ஹைரு ஹல்கில்லாஹ்.

ஸும்ம ஆலின் வஸஹ்பி ஹிஸ்பில்லி ரப்பி தாபியின் சுபுலில்லாஹ்!

யா ரஹ்மானே! எங்களின்….