தொகுப்பு

Archive for the ‘நல்லறங்கள்’ Category

அயலாரிடம் அன்பு! – மு.அ. அபுல்அமீன் நாகூர்


அண்டை வீட்டார் உறவினராக இருப்பினும் உறவில்லாதவராக இருப்பினும் முஸ்லிமாக இருப்பினும் முஸ்லிம் அல்லாதவராக இருப்பினும் அண்டை வீட்டாருடன் நல்லுறவும் நட்பும் சகோதரத்துவமும் பேணி அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து உற்றுழி உதவ வேண்டும்” என்றுரைத்து, உரைத்தபடி உண்மையாய் வாழ்ந்து காட்டியவர்கள் உத்தம நபி (ஸல்) அவர்கள்.

சாதாரணமாக சில பெண்கள் சிறிய பொருட்களைக்கூட அண்டை அயலாருக்குக் கொடுப்பதை விரும்ப மாட்டார்கள். அதனால்தான் நபிகள் நாயகம்,

“”பெண்களே! அண்டை வீட்டாருக்குக் கொடுப்பதை அற்பமாகக் கருத வேண்டாம். அது ஆட்டின் குளம்பாயினும் சரியே”

என்று பெண்களுக்கு போதித்த நீதி, புகாரி நூலில் உள்ளது. ஆட்டின் குளம்பு என்பது சிறியது; மதிப்பற்றது என்றாலும் அதனையும் அண்டை வீட்டாருக்குக் கொடுத்து உண்ண வேண்டும். “”அண்டை வீட்டார் பசித்திருக்க தாம் மட்டும் உண்பவர் உண்மையான முஸ்லிமல்ல” என்பதும் நாயக நன்மொழி.

இதனையொட்டியே ஹழ்ரத் அப்துல்லாஹ் பின் அம்ரு(ரலி) அவர்களின் வீட்டில் ஆடு அறுக்கும் பொழுது, முதலில் அண்டை வீட்டு யூதருக்கு அன்பளிப்பு செய்வார்கள்.

“”அல்லாஹ்வின் பார்வையில் தோழமையில் சிறந்தவர், தம் தோழர்களிடம் சிறந்து விளங்குபவர், சிறந்த அண்டை வீட்டுக்காரர் யாரெனில் தனது அண்டை வீட்டாரிடம் சிறந்தவராக இருப்பவரே” என்ற நபிகளாரின் நன்மொழி திர்மிதி நூலில் காணப்படுகிறது.

“”அண்டை வீட்டாருக்குத் தீங்கிழைத்து நிம்மதியைக் கெடுப்பவன் சுவனம் புக மாட்டான்” என்ற நீதி முஸ்லிம் நூலில் பதியப்பட்டுள்ளது.

இமாம் அபூஹனீபா(ரஹ்) இஸ்லாமிய சமய அறிஞர். அவருடைய மறுபக்க வீட்டில் வாழும் யூதரின் வீட்டில் கொட்டப்படும் நீர், இமாம் அவர்களின் வீட்டு வாயிலில் விழுந்து தேங்கி சேறும் சகதியுமாகி விடும்.

இமாம் அபூஹனீபா அவர்கள் இரவே கொட்டும் நீரைப் பாத்திரத்தில் பிடித்து அப்புறப்படுத்துவதை வழக்கமாக செய்தார். ஒரு நாளிரவு இதனைக் கண்ட யூதர் “”ஒரு வேலையாளை வைத்து கழிவு நீரை அகற்றாமல், வேலையாள் கூலியை மிச்சப்படுத்தி இவ்வேலையை நீங்களே செய்கிறீர்களா?” என்று கேலி செய்தார். இமாம் அவர்கள் எங்கிருந்து நீர் கொட்டுகிறது என்பதைக் கவனிக்குமாறு யூதரிடம் வேண்டினார்கள். அவரின் வீட்டிலிருந்து கழிவு நீர் கொட்டுவதையறிந்த யூதர் மனம் வருந்தி திருந்தி இமாம் பொருந்தும் மாணவராய் அவரின் மதரசாவில் சேர்ந்தார்.

وَاعْبُدُوا اللَّـهَ وَلَا تُشْرِكُوا بِهِ شَيْئًا ۖ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا وَبِذِي الْقُرْبَىٰ وَالْيَتَامَىٰ وَالْمَسَاكِينِ وَالْجَارِ ذِي الْقُرْبَىٰ وَالْجَارِ الْجُنُبِ وَالصَّاحِبِ بِالْجَنبِ وَابْنِ السَّبِيلِ وَمَا مَلَكَتْ أَيْمَانُكُمْ ۗ إِنَّ اللَّـهَ لَا يُحِبُّ مَن كَانَ مُخْتَالًا فَخُورًا
“”அண்டை வீட்டிலுள்ள உறவினர்களுக்கும் அந்நிய அண்மை வீட்டாருக்கும் அன்பும் நன்றியும் செய்யுங்கள்” என்ற திருக்குர்ஆனின் 4-36வது வசனப்படி நாமும் அண்டை அயலாரிடம் அன்பு பாராட்டி சுமுக உறவைப் பேணிக் காப்போம். ஒருவருக்கொருவர் ஒத்துழைத்து உத்தம நபிகள் வாழ்ந்து காட்டிய சத்திய நெறியில் வாழ்ந்து மறுமையிலும் சுவனத்தல் சுக வாழ்வு வாழ்வோம்.

நன்றி:- தினமணி 04 Oct 2012 வெள்ளிமணி

நன்றி:- மு.அ. அபுல் அமீன் நாகூர். அஞ்சலக அதிகாரி(ஓய்வு), செல்பேசி:-00919943469691

தலைவர்:- ‍பெற்றோர் ஆசிரியர் கழகம் நாகூர், கௌதிய்யா துவக்கப்பள்ளி நாகூர், கிராம கல்விக்குழு நாகப்பட்டினம்.

துணைதலைவர்:- மத்தியஅரசு ஓய்வூதியர் சங்கம் நாகப்பட்டினம், ஜாமியா மஸ்ஜித் செய்யது பள்ளி நாகூர்.

பொருளர்:- நாகூர் தமிழ் சங்கம் நாகூர்.

உறுப்பின‌ர்:‍‍‍‍‍‍- த‌மிழ்நாடு நுக‌ர்வோர் இய‌க்க‌ம்.

பிரிவுகள்:அயலாரிடம் அன்பு, அயலாரிடம் அன்பு! குறிச்சொற்கள்:, , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

நற்பலன் பெறுவோம்! – மு.அ. அபுல் அமீன் நாகூர்


திருக்குர்ஆனில் நீதி போதனைகள், உலக மக்களை விளித்தே விளம்பரப்படுத்தப்படுகின்றன. நபிகள் நாயகத்தின் தோழர்கள் அல்லது எம்பெருமானார் முஹம்மது (ஸல்) அவர்களைச் சந்தித்து சந்தேகம் கேட்போர் விளக்கம் பெறுவதற்கும், சில சந்தர்ப்பங்களில், சூழ்நிலைகளில், நெருக்கடியான நேரங்களில் ஏகத்துவத்தை ஏற்றோர் எப்படி நடக்க வேண்டும் என்பதற்கும் ஏற்ற வசனங்கள் வந்தன.

நபிகள் நாயகம்(ஸல்) இஸ்லாத்தைப் போதித்த ஆரம்ப நாட்களில், ஆண்கள் எத்தகைய தொல்லைகளையும் துன்பங்களையும் அடைந்தார்களோ, மக்காவை விட்டு மதீனாவிற்கு ஹிஜ்ரத் செய்தார்களோ, இன்னல்களுக்கு இடையிலும் இஸ்லாமிய பிரச்சாரம் செய்தார்களோ அதுபோல பெண்களும் பேரிடர்களை சந்தித்தனர். ஆனாலும் கலங்காது நபிகள் காட்டிய வழியில் கருத்தூன்றி இறைவன் பொருத்தத்தை நாடி போராடும் ஆண்களுக்கும் போதிய உதவிகள் செய்து ஹிஜ்ரத்தையும் மேற்கொண்டனர். இஸ்லாமிய பிரச்சாரத்தையும் பிறழாது செய்தனர்.

அண்ணல் நபிகளாரின் மனைவி ஹஜ்ரத் உம்மு சலமா(ரலி) அவர்களுக்குப் பெண்களின் பெரும் பங்கைக் குறிப்பிடும் வசனங்கள் வான் முறை குர்ஆனில் இல்லையே என்ற ஆதங்கம். சாதகமான வேளையில் நபிகளாரிடம் நாயகி உம்மு சலமா (ரலி) “”அல்லாஹ்விற்காக நாட்டைத் துறந்து வந்த பெண்களைப் பற்றி அல்லாஹ் அறிவிக்கவில்லையே” என்று கேட்டார்கள்.

அப்பொழுது “”உங்களிடமிருந்து ஆணோ அல்லது பெண்ணோ யாராயினும் ஆற்றிய நற்செயல்களை நான் வீணாக்க மாட்டேன்” என்ற திருக்குர்ஆன் (3-195) வசனம் இறக்கப்பட்டது.

நற்கிரியைக்கு உரிய நற்பலன் நதிகள் ஓடிக்கொண்டிருக்கும் நல்ல சொர்க்கம். ஆண், பெண் பேதமின்றி அனைவருக்கும் கிடைக்கும். அல்லாஹ் அருளை அள்ளி வழங்குகையில் ஆண், பெண் பாகுபாடு பார்ப்பதில்லை. “நற்செயல்களுக்குரிய நற்பலன், செய்த நன்மையின் தன்மைக்கேற்ப ஆண், பெண் தரம் பிரிக்காது தரப்படும்’ என்று இவ்வசனத்தில் அல்லாஹ் அறுதியிட்டு உறுதியாகக் கூறுகிறான்.

நன்மையைச் செய்வோம்.  நற்பலனைப் பெறுவோம்.

நன்றி:- தினமணி –  வெள்ளிமணி  30 Mar 2012

நன்றி:- மு.அ. அபுல் அமீன் நாகூர். அஞ்சலக அதிகாரி(ஓய்வு), செல்பேசி:-00919943469691

தலைவர்:- ‍பெற்றோர் ஆசிரியர் கழகம் நாகூர், கௌதிய்யா துவக்கப்பள்ளி நாகூர், கிராம கல்விக்குழு நாகப்பட்டினம்.

துணைதலைவர்:- மத்தியஅரசு ஓய்வூதியர் சங்கம் நாகப்பட்டினம்,  ஜாமியா மஸ்ஜித் செய்யது பள்ளி நாகூர்.

பொருளர்:- நாகூர் தமிழ் சங்கம் நாகூர்.

உறுப்பின‌ர்:‍‍‍‍‍‍- த‌மிழ்நாடு நுக‌ர்வோர் இய‌க்க‌ம்.

இவர்களின் படைப்புகளில் சில

பத்தில் பத்து

ஹிஜ்ரத்

சிட்டுக்குருவி – கூடிவாழ்ந்தால் கோடி நன்மை

மனித நேயம்

ஆஷூரா நாளில் ஆரம்பம்

புளிச்சேப்பக்காரர் விருந்து

சாலை விதிகள் போற்றுவோம்

வரவுக்கு வரம்பு

ஆண்டவன் நீதி

பசுமை தேநீர் Green Tea

தானத்தின் பொருள்

யார் யாருக்கு வழங்கலாம்?

இரக்கம் காட்டுகிறவன்!

நாமே வழங்குவோம்

இரக்கம்

யார் யாருக்கு வழங்கலாம்? – மு.அ. அபுல் அமீன் நாகூர்


எல்லாருக்கும் தர்மம் கொடுக்க முடியாது. தர்மம் பெற தகுதியுள்ள இல்லாதோருக்கே தர்மம் கொடுக்க வேண்டும். அதையே “பாத்திரமறிந்து பிச்சையிடு’ என்று எச்சரிக்கிறது தமிழ் முதுமொழி.

 

ஹஜ்ரத் அம்ருபின் அல்ஜீமஹ் என்ற வயது முதிர்ந்த நாயகத் தோழர் செல்வ சீமான். அவரின் செல்வத்தில் எதை, யார் யாருக்கு வழங்கலாம் என்று முஹம்மது நபி (ஸல்) அவர்களிடம் கேட்டார். அவருக்குப் பதில் சொல்ல இறைவசனம் 2-215 இறங்கியது.

 

“”பெற்றோர்களுக்கும் உறவினர்களுக்கும் அனாதைகளுக்கும் ஏழைகளுக்கும் பிரயாணிகளுக்கும் உங்கள் பொருளிலிருந்து செலவிடுவது ஏற்புடையதாகும். நீங்கள் செய்யும் நன்மைகளை நன்கறிபவன் அல்லாஹ்”.

 

பெற்றோரைப் பேணுவது பெருங்கடமை. செல்வர்க்கழகு செழுங்கிளை தாங்குதல் என்று உறவினர்களுக்கு உதவ வேண்டும். அனாதைகளை ஆதரித்து அவர்களுக்கு ஆவன செய்தால் பாவங்கள் நீங்கும்.

 

ஏழைகளுக்கு என்றும் எப்பொழுதும் தப்பாது தர்மம் கொடுக்க வேண்டும். இல்லாமையைச் சொல்லாமலும், வறுமையை வெளிப்படுத்தாமலும், பிறரிடம் ஈயாது, பொறுத்தார் பூமியாள்வர் என்று பொறுமையுடன் இருப்போரைத் தேடிச் சென்று தேவையான பொருளைக் கொடுக்க வேண்டும்.

 

எவர் ஏழைகள் என்று புகாரி, முஸ்லிம், ஹதீது நூல்கள் வரையறுக்கின்றன.

 

“”தன் தேவையைத் தீர்க்க சக்தியற்றிருந்தும் பிறரிடம் யாசிக்காது ஏழ்மையை வெளிக்காட்டாதிருப்பவனே உண்மையான ஏழை”.

 

பயணிகள் ஊருக்குப் புதியவர்களாயிருப்பர்; யாருக்கும் தெரியாது அவர்கள் நிலைமை. அவர்கள் புதிய இடத்தில் புரியாது தவிக்கும் பொழுது தெரிந்ததைத் தெரிவித்து தேவையைத் தீர்ப்பது காலத்தினாற் செய்த ஞாலத்தின் பெரிய பேருதவி. பெருந்தர்மம்.

 

இத்தகு தர்மங்களை இத்தரணியில் இறையச்சத்தோடு செய்து மறுமையில் பெறுவோம் பெரும் பலனை.

– மு.அ. அபுல் அமீன்.

நன்றி:- தினமணி –  வெள்ளிமணி 23 Dec 2011

நன்றி:- மு.அ. அபுல் அமீன் நாகூர். அஞ்சலக அதிகாரி(ஓய்வு), செல்பேசி:-00919943469691

தலைவர்:- ‍பெற்றோர் ஆசிரியர் கழகம் நாகூர், கௌதிய்யா துவக்கப்பள்ளி நாகூர், கிராம கல்விக்குழு நாகப்பட்டினம்.

துணைதலைவர்:- மத்தியஅரசு ஓய்வூதியர் சங்கம் நாகப்பட்டினம்,  ஜாமியா மஸ்ஜித் செய்யது பள்ளி நாகூர்.

பொருளர்:- நாகூர் தமிழ் சங்கம் நாகூர்.

உறுப்பின‌ர்:‍‍‍‍‍‍- த‌மிழ்நாடு நுக‌ர்வோர் இய‌க்க‌ம்.

இவர்களின் படைப்புகளில் சில

பத்தில் பத்து

ஹிஜ்ரத்

சிட்டுக்குருவி – கூடிவாழ்ந்தால் கோடி நன்மை

மனித நேயம்

ஆஷூரா நாளில் ஆரம்பம்

புளிச்சேப்பக்காரர் விருந்து

சாலை விதிகள் போற்றுவோம்

வரவுக்கு வரம்பு

ஆண்டவன் நீதி

பசுமை தேநீர் Green Tea

தானத்தின் பொருள்

யார் யாருக்கு வழங்கலாம்?

நாவடக்கம் – மௌலவியா எம். வை. மஸிய்யா B.A حفظ اللسان

ஒக்ரோபர் 13, 2010 1 மறுமொழி

அல்லாஹ் படைத்த உயிரினங்களுக்கு நாவு மிக முக்கியமானதொரு உறுப்பாகும். நாவின் அமைப்பும் அதிலுள்ள உணர்ச்சிகளும் பல்வேறு பயன்களைத் தருகின்றன. மற்ற உயிரினங்களை விடவும் (குறிப்பாக)  மனிதனின் நாவின் உபயோகம் மிகவும் அதிகமாகும். ஏனெனில், மேற்கூறியவை தவிர, மனிதன் தனது உள்ளக் கிடக்கையை வெளிப்படுத்தும் ஆயுதமாகவும் அதுவே திகழ்கின்றது.

மனிதனை மதிப்பிட உதவுவது

ஒருவன் தனது நாவைப் பயன்படுத்தும் விதத்தை வைத்தே அவனது குணங்களை மதிப்பிட முடியும். ‘நல்ல மனிதன்’ என்ற மரியாதையை மக்களிடமிருந்தும், அல்லாஹ்விடமிருந்தும் பெற்றுக் கொடுப்பதில் நாவு மிக முக்கிய பங்கு வகிக்கின்றது. நாவினாற் பிறரைத் துன்புறுத்தாதவனுக்குச் சிறந்த முஸ்லிம் என்ற பட்டத்தை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களே வழங்கியுள்ளனர்.

அபூ மூஸா அல்-அஷ்அரீ (ரலி) என்ற நபித் தோழர் கூறுகின்றார், “‘அல்லாஹ்வின் தூதரே! முஸ்லிம்களில் சிறந்தவர் யார்’ என்று நான் கேட்டேன். ‘யாருடைய நாவை விட்டும், கையை விட்டும் பிற முஸ்லிம்கள் பாதுகாப்புப் பெறுகின்றனரோ அவர்தான் உண்மை முஸ்லிம்’” என நபியவர்கள் கூறினார்கள் [நூற்கள்: புகாரி, முஸ்லிம்].

நாவைப் பேணுவதன் அவசியம் பற்றி அருள்மறை அல்-குர்ஆன்

நாம் மொழிகின்ற நன்மை, தீமைகள் அனைத்தையும் முறையே கண்காணிக்கக்கூடிய வானவர்கள் பதிவு செய்து வருகின்றனர். இதோ அல்லாஹ் கூறுகின்றான்,

“முஃமின்களே! அல்லாஹ்வை அஞ்சி நடந்து கொள்ளுங்கள். நேர்மையான சொல்லையே சொல்லுங்கள். (அவ்வாறு செய்தால்) உங்களுடைய செயல்களை உங்களுக்கு அவன் சீராக்கி வைத்து, உங்களுடைய பாவங்களையும் உங்களுக்கு மன்னிப்பான்” [அல்-அஹ்ஸாப்: 70, 71].

இவ்வசனங்கள் தரும் படிப்பினைகளை நோக்குவோம்.

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا . يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ

إِذْ يَتَلَقَّى الْمُتَلَقِّيَانِ عَنِ الْيَمِينِ وَعَنِ الشِّمَالِ قَعِيدٌ . مَا يَلْفِظُ مِن قَوْلٍ إِلَّا لَدَيْهِ رَقِيبٌ عَتِيدٌ

“(மனிதனுக்கு) வலப்புறத்திலும், இடப்புறத்திலும் அமர்ந்து எடுத்தெழுதும் இரு(வான)வர் எடுத்தெழுதும்போது (எழுதுவதற்கு) தயாராக இருக்கின்ற கண்காணிப்பாளர் ஒருவர் அவனிடத்தில் இருந்தே தவிர, எந்தச் சொல்லையும் அவன் மொழிவதில்லை” [காப்: 17, 18].

மேலும், அல்லாஹ் கூறுகின்றான்,

¨ இறையச்சமுள்ள அடியான் நல்லதையே பேச வேண்டும்.

¨ நேர்மையானவற்றை மட்டும் பேசுபவர்களது செயல்களை அல்லாஹ் சீராக்கி வைப்பான்.

¨ அத்தகையவர்களது (ஏனைய) பாவங்களையும் அல்லாஹ் மன்னிப்பான்.

¨ நா காக்கும் நல்லடியார்களை அல்லாஹ் தனது அன்புக்கும், அருளுக்கும் சொந்தமாக்கிக் கொள்கின்றான்.

நாவைப் பேணுவதன் அவசியம் பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்:

¨ அல்லாஹ்வையும் மறுமை நாளையும் விசுவாசிக்கின்றவர் நல்லதைப் பேசட்டும். அன்றேல், மௌனமாக இருக்கட்டும் [அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி), நூல்கள்: புகாரி, முஸ்லிம்].

¨ யார் தனது இரு தாடைகளுக்கிடையே உள்ளதை (நாவை)யும், இரு தொடைகளுக்கிடையே உள்ளதை (மர்மஸ்தானத்தை)யும் பாதுகாப்பதாகப் பொறுப்பேற்றுக் கொள்கிறாரோ, அவருக்கு சுவனம் கிடைத்திட நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன் [அறிவிப்பவர்: ஸஹ்ல் இப்னு ஸஃத் (ரலி), நூல்கள்: புகாரி, முஸ்லிம்].

¨ “அல்லாஹ்வின் தூதரே! நான் தொடர்ந்து பற்றிப் பிடித்துக் கொள்ள வேண்டிய ஒன்றை எனக்குச் சொல்லித் தாருங்கள்” என்றேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “எனது இரட்சகன் அல்லாஹ் என்று கூறி, பின் அதிலேயே நிலைத்திரும்” என்றனர். (மீண்டும்) “அல்லாஹ்வின் தூதரே, என்மீது நீங்கள் பயப்படக்கூடிய மிகப் பயங்கரமான விடயம் எது” என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் தமது நாவைப் பிடித்து, “இதைத்தான் (பயப்படுகிறேன்)” எனக் கூறினர். [அறிவிப்பவர்: ஸுப்யான் பின் அப்துல்லாஹ் (ரலி), நூல்: திர்மிதி]

நா காக்காவிடின் நரகமா?

நாம் சில வேளைகளில் நல்லதா கெட்டதா எனச் சிந்திக்காமலேயே சில வார்த்தைகளைப் பேசிவிடுகிறோம். அவை நல்லதாயின் அல்லாஹ்வின் அருள் கிடைக்கும். மாறாக அவை கெட்டதாயின் அவ்வார்த்தைகளே நம்மை நரகிற் தள்ளிவிடும்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், “அடியான் அல்லாஹ்வுக்கு விருப்பமான ஒரு சொல்லை நாவினால் மொழிகின்றான். ஆனால் அதில் அவன் கவனஞ் செலுத்துவதில்லை. எனினும் அந்தச் சொல்லின் காரணத்தால் அல்லாஹ் அவனது தகுதியை உயர்த்திவிடுகிறான். இவ்வாறே அடியான் இறைவனுக்குக் கோபம் உண்டாக்கக் கூடிய ஒரு சொல்லை அலட்சியமாகச் சொல்லிவிடுகிறான். அச்சொல்லே அவனை நரகில் தள்ளிவிடுகிறது”. [அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி), நூல்: புகாரி]

நடைமுறை வாழ்வில் நாவினால் செய்யப்படும் தீமைகள்

வீண் வார்த்தைகள் பேசுதல், பொய்யுரைத்தல், புறம் பேசுதல், கோள் சொல்லுதல், பிறரைப் பரிகசித்தல், கேலி – கிண்டல் செய்தல், அவதூறு கூறுதல், சாபமிடுதல், குறை கூறுதல், காரணமின்றி ஏசுதல், இட்டுக்கட்டிப் பேசுதல், ஆபாசமான வார்த்தைகளைப் பேசுதல், ஆபாசப் பாடல்களைப் பாடுதல், பட்டப் பெயர் சொல்லுதல், கெட்ட வார்த்தைகளை உபயோகித்தல் போன்றன அன்றாடம் நாவினால் ஏற்படும் பாவச் செயல்களாகும். இஸ்லாம் இவற்றை வன்மையாகக் கண்டிக்கிறது. இவை தீயோரின் அடையாளங்கள் என்று சுட்டிக் காட்டுகிறது. எனவே, இவற்றை விட்டும் நம் நாவைக் காத்துக் கொள்வோமாக!

இஸ்லாம் சுட்டிக் காட்டும் பண்புகளான நல்லவற்றைப் பேசுதல், உண்மை உரைத்தல், மென்மையாகப் பேசுதல், ஸலாமைப் பரப்புதல், இறைவனைத் துதித்தல், ஸலவாத்துச் சொல்லுதல், நேர்மையானவற்றைப் பேசுதல், நேரடியாகவும் தெளிவாகவும் பேசுதல், சத்தியத்தைப் போதித்தல், நன்மையை ஏவித் தீமையைத் தடுத்தல் போன்ற அனைத்தும் நல்லோரின் பண்புகளாகும். எனவே, இவற்றைச் செயற்படுத்தி சுவனத்தின் சொந்தக்காரர்களாக நாமும் மாறி எம்மைச் சார்ந்தோரையும் அதன் வாரிசுகளாக்க முயற்சிப்போமாக!

நன்றி:- மௌலவியா எம். வை. மஸிய்யா B.A.Hons

நன்றி:- மனார் அத்தஃவா http://manaruddawa.org/index_files/sahaba.htm

நன்னடத்தையை வலியுறுத்தும் இஸ்லாம் – மெளலவி JSS அலி பாதுஷா மன்பயீ பாஜில் ரஷாதி


புகழ் அனைத்தும் அகிலத்தார்களைப் படைத்துப் பரிபாலிக்கும் அல்லாஹ்விற்கே உரியது. நிச்சயமாக இஸ்லாமிய மார்க்கம் மனிதர்களின் இம்மை, மறுமை, வாழ்விற்குத் தேவையான எல்லா வற்றையும் சரியான முறையிலும் இலேசான முறையிலும் கற்றுத் தரக்கூடிய மார்க்கம். அம்மார்க்கம் பெண்களின் ஆடை விஷயத்தில் எவ்வாறு ஆடை அணிய வேண்டும் என்ற ஒழுக்கமான நன்னடத்தையையும், கண்ணியமான தூய வாழ்க்கைக்கும் வழி காண்பிக்கின்றது. இவ்விஷயத்தில் ஆழமாக சிந்தித்தால் மட்டுமே ஆரோக்கியமான வாழ்வும், முழுமையான ஒழுக்கங்களையும் உள்ளடக்கிய மார்க்கம் இஸ்லாம் என்று தெளிவாக விளங்க முடியும்.

இறைவன் அருள்மறையில் கூறுகிறான். நபியே ! நீர் உன் மனைவி மார்களுக்கும், உம் பெண் மக்களுக்கும் ஈமான் கொண்டவர்களின் பெண்களுக்கும் அவர்கள் தங்களின் தலை முன்றானைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறு கூறுவீராக: அவர்கள் (கண்ணியமானவர் களென) அறியப்பட்டு நோவினை செய்யப்படாமலிருக்க இது சுலபமான வழியாகும். அல்லாஹ் மிக மன்னிப்பவன், மிக்க அன்புடையோன் (அல் அஹ்ஜாப் 59) மேலும் கூறுகிறான். நபியே ! முஃமினான பெண்களிடம் நீர் கூறுவீராக ! அவர்கள் தங்களின் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும். தங்களின் வெட்கத்தலங்களைப் பேணிப் பாதுகாத்தும் கொள்ள வேண்டும் மேலும் தங்கள் அலங்காரத்தை அவற்றில் வெளியே தெரியக்கூடியதைத் தவிர (வேரெதையும்) வெளிக்காட்டலாகாது. இன்னும் தங்கள் முன்றானைகளால் தங்களின் மார்பகங்களை மறைத்துக் கொள்ளட்டும். மேலும் அவர்கள் தங்களின் கணவரிடத்திலே தவிர தங்களின் அலங்காரத்தை வெளிப்படுத்த வேண்டாம். (அந்நூர் 31) மேலும் கூறுகிறான் (நபியின் மனைவியர்களே) நீங்கள் உங்களின் வீடுகளிலேயே தங்கி விடுங்கள். முன்னர் அறியாமைக் காலத்துப் பெண்கள் திரிந்ததைப்போன்று திரிந்து கொண்டிருக்காதீர்கள். (அல் அஹ்ஜாப் 33) மேலும் கூறுகிறான். நபி (ஸல்) அவர்களின் மனைவியரிடம் நீங்கள் ஏதாவது ஒரு பொருளைக் கேட்பதாகயிருந்தால் திரை மறைவிலிருந்து கேட்டுக் கொள்ளுங்கள். (அல் அஹ்ஜாப் 53) என்று விரிவாக நம்மிடம் பேசுகிறான்.

நிச்சயமாக இஸ்லாமியப் பெண்கள் தெரிந்திருக்க வேண்டிய அவசியமான கடமைகளில் உள்ள ஒன்றுதான் பர்தா அணிந்து கொள்வது. இஸ்லாம் மட்டுமே ஒரு குடும்பம் வீழ்ந்து சின்னாபின்னப் பட்டு சிதைந்து போகாமல் அதைப் பாதுகாப்பதின் மீது அக்கறை கொண்டுள்ளது. இயற்கைச் சூழ்நிலையை கேடு படுத்திடாமல் குடும்பங்கள் ஆரோக்கியமாகவும், சமுதாயம் தூய்மையாகவும் வாழ வேண்டும் என்பதற்காக இஸ்லாம் ஒழுக்கங்கள், நற்குணங்கள் என்ற உறுதிவாய்ந்த சுவரை எழுப்பியுள்ளது. காரணம் இஸ்லாம், குழப்பத்தின் பால் இழுத்துச் செல்லக்கூடியவற்றை தடுப்பதற்காக பர்தா என்ற திரையை ஏற்படுத்தியுள்ளது. ஆண்களும், பெண்களும் சந்திக்கும்போது தங்களின் பார்வைகளை தாழ்த்திக் கொள்ளும்படியும் ஏவுகிறது. நிச்சயமாக அல்லாஹ் பெண்களை கண்ணியப்படுத்து வதற்காகவும், இழிவிலிருந்து அவளின் தன்மானத்தை தற்காத்துக் கொள்ளவும், மேலும் குழப்பவாதிகள் தீய எண்ணம் உடையவர்களின் கெடுதியைவிட்டும் பெண்களை தூரப்படுத்துவதற்காகவும், கண்ணியம், விலைமதிப்பு, மானம் மரியாதையை அறியாதவர்களிடமிருந்து பெண்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காகவும், அதே சமயம் விஷப் பார்வைகளுக்குக் காரணமான குழப்பத்தின் வாசலை அடைத்திடுவதற்குமே அல்லாஹ் பெண்களுக்கு பர்தாவை மார்க்க மாக்கியுள்ளான். என்பதை தெளிவாக விளங்க முடிகிறது. இதை விட்டு விட்டு இஸ்லாம் பெண்களை ஆண்களை விட்டும் நீங்கி அந்நிய ஆடவருடன் கலந்துரையாடுவதை தடை செய்திருக்கின்றது என்று தவறாக விளங்கி தேவையில்லாத அறிவற்ற பிரச்சாரத்தை சில விஷமிகள் பரப்பி வந்தனர் வருகின்றனர். இஸ்லாம் பெண்களை ஆண்களை விட்டும் தூரப்படுத்தி அவர்களின் சுதந்திரத்தை பரித்து ஆணாதிக்கத்திற்கு கீழ்படிந்துதான் வாழவேண்டும் என்றெல்லாம் சிலர் பர்தா முறையை தவறாக விளங்கி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தனர். ஆனால், இன்று ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் யார் யாரெல்லாம் அப்பிரச்சாரங்களை செய்து வந்தார்களோ அவர்களே பர்தா முறையை வரவேற்று பெண்களுக்கு பாதுகாப்பு பர்தா என்ற திரைதான் என்பதை ஒப்புக்கொண்டுள்ளனர். மேலும் அனைத்துப் பெண்களின் நற்குணங்கள், குடும்ப அமைப்பு, சிறப்புக்கள் மற்றும் கண்ணியமான நடைமுறைகளை பாதுகாப்பதற்கும், குழப்பங்களையும் தவறான எண்ணங்களையும் தடுத்து நிறுத்துவதற்கும் இஸ்லாமிய சட்டங்கள் மட்டுமே சரியான வழிமுறைகளை வகுத்துத்தந்துள்ளது. நம்மைச் சீர்திருத்திக் கொள்வதுடன் சமூகத்தையும் சீர்திருத்தச் சொல்லும் மார்க்கம்தான் இஸ்லாம் என்பதை அவர்கள் மட்டுமல்ல அனைத்து சமூகமும் ஒப்புக்கொண்டுள்ளது. காரணம் குழப்பம் சூழ்ந்து  பரவிக்கிடக்கும் இந்தக் காலத்தை விட குழப்பத்தின் பயம் வேறு எந்தக்காலத்தில் அதிகமாக இருக்கமுடியும் நல்லவர்கள் இறையச்சமுடையவர்களை விட பாவிகள் நிறைந்து போய் விட்டனர். கடைவீதிகளிலும் பல்வேறு இடங்களில் நின்றுகொண்டு தன் தவறான விஷப்பார்வையால் தன் கையில் வைத்திருக்கும் மொபைலின் மூலம் (செல்போன்) அன்றாட சமையல் தேவைக்காக காய்கறி மற்றும் மீன் இறைச்சி வாங்குவதற்காக பஜாருக்கு வரும் பெண்களை அவர்களுக்கே தெரியாமல் படம் பிடித்து அதை மற்றவர்களுக்கும் S.M.S.மூலமாகவும் E.மெயில், இண்டர்நெட் என அனுப்பி தான் ஒரு பகுத்தறிவு படைத்த மனிதன் என்பதையே மறந்து ஷைத்தானுக்கு வழிபட்டு மிருகத்தனமான செயல்களிலே ஈடுபடுபவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர். இவ்விஷயத்தில் அல்லாஹ் கடுமையான எச்சரிக்கையை தருகின்றான். ஷைத்தானின் அடிச்சுவடுகளைப் பின் பற்றாதீர்கள். நிச்சயமாக அவன் (ஷைத்தான்) உங்களுக்கு பகிரங்கமான விரோதியாவான். நிச்சயமாக அவன் (ஷைத்தான்) தீயவற்றையும், மானக்கேடானவற்றையும் செய்யும்படியும், அல்லாஹ்வைப்பற்றி நீங்கல் அறியாததைக் கூறும்படியும் உங்களை ஏவுகிறான். (அல்பகரா 168 மற்றும் 169) என்று இறைவன் கூறுகிறான்.
இவ்வாறான தவறான எண்ணம் கொண்ட விஷமிகளிடமிருந்து சமுதாயப் பெண்கள் பாதுகாப்புப் பெற்று கண்ணியமான வாழ்க்கை வாழ வேண்டும் என்பதற்காகத்தான் பர்தாவை இஸ்லாம் மார்க்க மாக்கியுள்ளது.
எனதருமை இஸ்லாமிய சகோதரர்களே ஒழுக்கமும் நன்னடத்தையும் நமது உடலில் உள்ள உயிரையும் நாம் சுவாசிக்கும் சுவாசத்தையும் போன்றது. குர்ஆனிலும் நபி மொழியிலும் அல்லாஹ்வின் மார்க்கம் ஒரு வலுவான கட்டடத்திற்கு உதாரணமாகச் சொல்லப்பட்டுள்ளது. அந்த மாளிகையின் அடித்தளமாயிருப்பது ஈமான் என்றால் அதன் மேல் எழுப்பப்பட்டுள்ள தூண்களும், சுவர்களும், மேற் கூரையுமே இஸ்லாமாகும். இஸ்லாம் என்ற மாளிகையை கட்டி எழுப்புவதற்கும் அதை உறுதியாய் எழிலுடன் நிலை நிறுத்துவதற்கும் தேவையான இரண்டு விஷயங்கள்தான் தக்வா எனும் இறையச்சம் இஹ்ஸான் எனும் ஒழுக்கமும் நன்னடத்தையுமாகும்.

இறைவன்  அந் நஹ்ல் 128 வது வசனத்தில் எவர்கள் இறையச்சம் கொள்கிறார்களோ மேலும் நன்னடத்தையை மேற்கொள்கிறார்களோ அத்தகையவர்களுடன் அல்லாஹ் இருக்கின்றான் என்று கூறுகிறான். எனவே அல்லாஹ் எனக்கும் உலக மக்கள் அனைவர்களுக்கும் ஒழுக்கமுள்ள நல்ல சிந்தனைகளை வழங்கி இறைவனுக்கும் இறைத் தூதர் (ஸல்) அவர்களுக்கும் வழிபட்டு நடக்கும் பாக்கியத்தை வழங்கு வானாக ஆமீன் வஸ்ஸலாம்

நன்றி:- மெளலவி J.S.S. அலி பாதுஷா மன்பயீ பாஜில் ரஷாதி  0097150 547 15 43  ஷார்ஜா

நன்றி:- www.mudukulathur.com

ஸலாம் கூறுவதன் சிறப்பு – M. அன்வர்தீன்


لسلام عليكم و رحمة الله و بركاته

உங்கள் மீது சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக

புறக்கணிக்கப்பட்ட சலாம்!

இந்த உலகத்தைப் படைத்து அதில் பலவகையான உயிரினங்களைப் உருவாக்கி அவற்றிலே மிகச்சிறந்த படைப்பாக மனிதனைப் படைத்த இறைவன் அவர்கள் எவ்வாறு வாழவேண்டும் என்ற அழகிய வழிமுறைகளையும் அவனது இறுதிதூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் மூலமாகத் தந்துள்ளான். அவற்றில் ஒன்று தான் முகமன் (சலாம்) கூறுதல் ஆகும்.

இன்றைய காலக்கட்டங்களில், நம்மிடையே ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது சலாம் கூறுதல் என்பது மிக அரிதாகிவிட்டது. அப்படியே சொன்னாலும் தெரிந்தவர், தெரியாதவர் என்ற பாகுபாடு பார்த்து சலாம் கூறி வருகிறோம். நபி (ஸல்) அவர்கள் தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் என அனைவருக்கும் சலாம் கூறுவதை வலியுறுத்திக் கூறியுள்ளார்கள்.

ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம், ‘இஸ்லாமி(யப் பண்புகளி)ல் மிகவும் சிறந்தது எது?’ என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், ‘(பசித்தவருக்கு) உணவளிப்பதும், உமக்கு அறிமுகமானவருக்கும் உமக்கு அறிமுகமற்றவருக்கும் சலாம் சொல்வதுமாகும்’ என்று பதிலளித்தார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி), ஆதாரம்: ஸஹீஹூல் புகாரி, பாகம் 6, அத்தியாயம் 79, எண் 6236

முழுமையாக ஸலாம் கூறுவதன் சிறப்பு: –

சிலர் சலாம் கூறும் போது புரியும் படியாகவோ அல்லது முழுமையாகவோ கூறுவதில்லை. முஹம்மது (ஸல்) அவர்கள் சகாபாக்களிடம் அமர்ந்திருக்கும் போது ஒரு சஹாபி வந்து, அஸ்ஸலாமு அலைக்கும்பத்து என்று கூறினார்கள். சிறிது நேரம் சென்ற பிறகு மற்றொரு சஹாபி வந்து அஸ்ஸலாமு அலைலக்கும் வரஹ்மத்துல்லாஹி என்று கூறியபோது, நபி (ஸல்) அவர்கள் இருபது என்றார்கள். மற்றொரு சஹாபி வந்து அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு என்று கூறிய போது, நபி (ஸல்) அவர்கள் முப்பது என்று கூறினார்கள். சஹாபாக்கள் ஆர்வமிகுதியால் நபி (ஸல்) அவர்களிடம் விளக்கம் கேட்ட போது, முதலில் சலாம் கூறியவருக்கு பத்து நன்மைகள், இரண்டாவது சலாம் கூறியவருக்கு இருபது நன்மைகள், முன்றாவது சலாம் கூறியவருக்கு முப்பது நன்மைகள் என்று நபி (ஸல்) அவர்கள் பதில் கூறினார்கள். என்றார். நபி (ஸல்) அவர்கள்

‘சலாம்’ எனும் முகமனைப் பரப்ப வேண்டும்: –

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஸஹீஹான ஹதீஸில் வருகிறது: –

உங்களிடையே ஸலாத்தைக் கொண்டு பரப்புங்கள். சலாம் சொல்வதால் இரு உள்ளங்களுக்கு இடையே இணக்கம் ஏற்படுகிறது.

நோயாளியிடம் நலம் விசாரிக்கும்படியும், ஜனாஸாவைப் பின் தொடர்ந்து செல்லும்படியும், தும்மியவ(ர் அல்ஹம்துலில்லாஹ் எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே என்று கூறுகையில் அவ)ருக்கு (யர்ஹமுகல்லாஹ் -உங்களுக்கு அல்லாஹ் கருணை காட்டுவானாக என) பதில் சொல்லும்படியும், (உன்னை நம்பிச்) சத்தியம் செய்தவர் (அதை) நிறைவேற்ற உதவும்படியும், அநீதியிழைக்கப்பட்டவருக்கு உதவும்படியும், ‘சலாம்’ எனும் முகமனைப் பரப்பும்படியும், விருந்து அழைப்பை ஏற்கும்படியும் எங்களுக்குக் கட்டளையிட்டார்கள். அறிவிப்பவர்: பராஉ இப்னு ஆஸிப்(ரலி) , ஆதாரம்: ஸஹீஹூல் புகாரி, பாகம் 5, அத்தியாயம் 67, எண் 5175)

வீடுகளில் நுழையும் முன் சலாம் கூறுவதன் அவசியம்: –

நம்முடைய வீட்டிலோ அல்லது பிறருடைய வீட்டிலோ நுழையும்போது நம்மில் எத்தனை பேர் சலாம் சொல்லி நுழையக் கூடியவர்களாக இருக்கிறோம்? பிறருடைய வீட்டில் நுழையும் போது சமையல் வாசனை முக்கைத் துளைத்தவுடன் இன்று என்ன பிரியானி சமையலா? என்று கேட்வாறு உள்ளே நுழைகிறோம். ஆனால் இஸலாம் வலியுறுத்திக் கூறும் சலாம் சொல்வதில்லை அல்லது மறந்து விடுகிறோம்.

அத்தியாயம் 24, ஸூரத்துந் நூர் (பேரொளி), வசனம் 27 ல் அல்லாஹ் கூறுகிறான்: –

ஈமான் கொண்டவர்களே! உங்கள் வீடுகளல்லாத (வேறு) வீடுகளில், அ(வ்வீட்டிலுள்ள)வர்களிடம் அனுமதி பெற்று, அவர்களுக்கு ஸலாம் சொல்லாதவரை (அவற்றினுள்) பிரவேசிக்காதீர்கள் – (அவ்வாறு நடப்பதுவே) உங்களுக்கு நன்மையாகும்; நீங்கள் நற்போதனை பெறுவதற்கு (இது உங்களுக்குக் கூறப்படுகிறது).

நபி(ஸல்) அவர்கள் (சபையோருக்கு அல்லது அயலார் வீட்டுக்குள் நுழைய அனுமதி கேட்டு) சலாம் கூறினால் மூன்று முறை சலாம் கூறுவார்கள். ஏதாவது ஒரு வார்த்தை பேசினால் (மக்கள் நன்கு விளங்கிக் கொள்வதற்காக) அதனை மூன்று முறை திரும்பச் சொல்வார்கள். அறிவிப்பவர்: அனஸ்(ரலி), ஆதாரம்: ஸஹீஹூல் புகாரி, பாகம் 6, அத்தியாயம் 79, எண் 6244

கணவன் மனைவிக்கும், பெரியவர் சிறியவருக்கும் சலாம் கூறுதல்: –

கணவன் மனைவிக்கும், பெரியவர் சிறியவருக்கும் சலாம் கூறக் கூடாது என்ற தவறான எண்ணம் நம்மிடையே காணப்படுகிறது. இது தவறானதாகும். நபி (ஸல்) அவர்கள் வீட்டிலே நுழையுமுன் மனைவிகளுக்கும், சிறியவர்களுக்கும் முந்திக்கொண்டு சலாம் கூறக் கூடியவர்களாக இருந்தார்கள்.

சிறியவர் பெரியவருக்கும், நடந்து செல்பவர் அமர்ந்திருப்பவருக்கும், சிறு குழுவினர் பெருங் குழுவினருக்கும் (முதலில்) சலாம் (முகமன்) சொல்லட்டும். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா(ரலி), ஆதாரம்: ஸஹீஹூல் புகாரி, பாகம் 6, அத்தியாயம் 79, எண் 6231

முஸ்லிம் அல்லாதவர்களுக்கு சலாம் கூறுதல்: –

முஸ்லிம் அல்லாதவர்களுக்கு சலாம் கூறலாமா அல்லது அவர்களுடைய சலாத்திற்கு பதில் கூறலாமா? என்பதில் ஒரு சில அறிஞர்களுக்கிடையே கருத்து வேறுபாடு இருந்தாலும், பெரும்பாலான அறிஞர்கள் மாற்றுமத சகோதர, சகோதரிகளுக்கும் சலாம் கூறுவதை ஆதரிக்கின்றார்கள்.

அத்தியாயம் 4, ஸூரத்துன்னிஸாவு (பெண்கள்) வசனம் 86 ல் அல்லாஹ் கூறுகிறான்: –

உங்களுக்கு ஸலாம் கூறப்படும் பொழுது, அதற்குப் பிரதியாக அதைவிட அழகான (வார்த்தைகளைக் கொண்டு) ஸலாம் கூறுங்கள்; அல்லது அதையே திருப்பிக் கூறுங்கள் – நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருட்களின் மீதும் கணக்கெடுப்பவனாக இருக்கிறான்.

இந்த வசனத்தில் முஸ்லிம்களுக்கு மட்டும் என்று அல்லாஹ் குறிப்பிடவில்லை. மேலும் மாற்று மத சகோதர, சகோதரிகளுக்கும் சலாம் கூறுவதன் மூலம் அவர்கள் இஸ்லாத்தின் பால் நல்லெண்ணம் கொண்டவர்களாக ஆகுவதற்குரிய சந்தர்ப்பமும் சகோதரத்துவமும் அதிகரிக்கும்.

மற்ற முகமன் கூறுவதிலுள்ள சிக்கல்கள்: –

இன்றைய காலக்கட்டத்தில் வழக்கத்தில் வணக்கம், நல்ல காலை பொழுது அல்லது நல்ல மாலைப் பொழுது, காலை, மாலை வணக்கம் போன்ற பலவிதமான முகமன்கள் இருக்கின்றன. அவைகளை எல்லா நேரங்களிலும் அல்லது எல்லா சூழ் நிலைகளிலும் பொருந்தக் கூடியதா என்றால் நிச்சயமாக இல்லை. ஒருவருடைய மனைவியோ அல்லது வேறு உறவினரோ இறந்து அவர் சோகத்தில் ஆழ்ந்திருக்கின்ற வேளையில் அவரிடம் சென்று Good Morning அல்லது Good Evenining என்று கூறினால் அது எப்படி அவரை கேலிக்குரியதாக்கும் என நாம் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம். இவ்வாறு மனிதர்களால் உருவாக்கப்பட்ட முகமன்கள் அனைத்தும் குறையுடைதாகவே இருக்கிறது.

ஆனால் அனைத்தும் அறிந்தவனான அல்லாஹ் நமக்கு கற்றுத்தந்த இந்த அஸ்ஸலாமு அலைக்கும் (உங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக) என்ற இந்த முகமன் காலை, மாலை, இரவு போன்ற எந்த நேரத்திலும், துக்கம், இன்பம் போன்ற எல்லா சூழ்நிலைகளிலும் ஒருவருக்கு கூறுவதற்கு மிகப் பொருத்தமானதாக இருக்கிறது.

எனவே சகோதர சகோதரிகளே! அல்லாஹ்வால் அருளப்பட்டு முஹம்மது நபி (ஸல்) அவர்களால் நடைமுறைப்படுத்தப்பட்ட சலாத்தை நாம் ஒவ்வொருவரும் மற்றவரிடம் பரப்பி நம்முடைய உள்ளங்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்த வல்ல அல்லாஹ் அருள்புரிவானாகவும்.

நன்றி:-M. அன்வர்தீன்

நன்றி:-  கூத்தாநல்லூர் ஆன்லைன்

இவைகளும் மிக முக்கியமாக கடைபிடிக்கவேண்டிய நல்லறங்கள்


( اضْمَنُوا لِي سِتًّا مِنْ أَنْفُسِكُمْ أَضْمَنْ لَكُمُ الْجَنَّةَ اصْدُقُوا إِذَا حَدَّثْتُمْ وَأَوْفُوا إِذَا وَعَدْتُمْ وَأَدُّوا إِذَا اؤْتُمِنْتُمْ وَاحْفَظُوا فُرُوجَكُمْ وَغُضُّوا أَبْصَارَكُمْ وَكُفُّوا أَيْدِيَكُمْ )

ஆறு காரியங்களைச் செய்வதாக நீங்கள் எனக்கு உத்திரவாதம் தந்தால் உங்களுக்கு சொர்க்கத்தைப் பெற்றுத் தர நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன்.

1.பேசினால் உண்மையே பேசுங்கள்!

2.வாக்களித்தால் நிறைவேற்றுங்கள்!

3.அமாநிதத்தை உரியவரிடம் ஒப்படைத்துவிடுங்கள்!

4.கற்பைக் காத்துக் கொள்ளுங்கள்!

5.பார்வையைத் தாழ்த்திக் கொள்ளுங்கள்!

6.கைகளை -அநீதம் இழைப்பதை விட்டும்- தடுத்துக் கொள்ளுங்கள்!

என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர் : உபாதா -ரலி, நூற்கள் : அஹ்மத் 21695, இப்னுஹிப்பான், ஹாகிம்)

————————————————————————————————————

(عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ مَنْ أَصْبَحَ مِنْكُمُ الْيَوْمَ صَائِمًا قَالَ أَبُو بَكْرٍ رَضِي اللَّه عَنْه أَنَا قَالَ فَمَنْ تَبِعَ مِنْكُمُ الْيَوْمَ جَنَازَةً قَالَ أَبُو بَكْرٍ رَضِي اللَّه عَنْه أَنَا قَالَ فَمَنْ أَطْعَمَ مِنْكُمُ الْيَوْمَ مِسْكِينًا قَالَ أَبُو بَكْرٍ رَضِي اللَّه عَنْه أَنَا قَالَ فَمَنْ عَادَ مِنْكُمُ الْيَوْمَ مَرِيضًا قَالَ أَبُو بَكْرٍ رَضِي اللَّه عَنْه أَنَا فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ مَا اجْتَمَعْنَ فِي امْرِئٍ إِلَّا دَخَلَ الْجَنَّةَ)

உங்களில் இன்று நோன்பு நோற்றிருப்பவர் யார்? என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள், நான்! என்றார்கள்.

இன்று ஜனாஸாவில் கலந்து கொண்டவர் யார்? என்று கேட்டார்கள். அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள், நான்! என்றார்கள்.

இன்று ஏழைக்கு உணவளித்தவர் யார்? என்று கேட்டார்கள். அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள், நான்! என்றார்கள்.

இன்று நோயாளியை விசாரித்தவர் யார்? என்று கேட்டார்கள். அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள், நான்! என்றார்கள்.

இவைகள் அனைத்தையும் நிறைவேற்றும் ஒருவர் நிச்சயமாக சொர்க்கத்தில் நுழைந்துவிட்டார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

(அறிவிப்பவர் : அபூஹுரைரா -ரலி, நூல் : முஸ்லிம் 1707)

———————————————————————————————————————-

( خمس من عملهن في يوم كتبه الله من أهل الجنة من عاد مريضاً وشهد جنازة وصام يوماً وراح يوم الجمعة وأعتق رقبة)

ஐந்து காரியங்கள் உள்ளன. ஒரு நாளில் அதனை யார் நிறைவேற்றுகின்றாரோ அல்லாஹ் அவரை சொர்க்கவாதிகளில் எழுதிவிடுகிறான். அவர்

1.நோயாளியை விசாரிக்கவேண்டும்.

2.ஜனாஸாவில் கலந்து கொள்ளவேண்டும்.

3.அன்றைய தினம் நோன்பு நோற்றிருக்க வேண்டும்.

4.ஜும்ஆவிற்கு முன்னேரத்தில் செல்ல வேண்டும்.

5.அடிமையை உரிமைவிட வேண்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

(அறிவிப்பவர் : அபூஸயீத் அல்குத்ரீ -ரலி, நூல் : இப்னுஹிப்பான்)

——————————————————————————————————————

( عَنْ مُعَاذٍ قَالَ عَهِدَ إِلَيْنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ فِي خَمْسٍ مَنْ فَعَلَ مِنْهُنَّ كَانَ ضَامِنًا عَلَى اللَّهِ مَنْ عَادَ مَرِيضًا أَوْ خَرَجَ مَعَ جَنَازَةٍ أَوْ خَرَجَ غَازِيًا فِي سَبِيلِ اللَّهِ أَوْ دَخَلَ عَلَى إِمَامٍ يُرِيدُ بِذَلِكَ تَعْزِيرَهُ وَتَوْقِيرَهُ أَوْ قَعَدَ فِي بَيْتِهِ فَيَسْلَمُ النَّاسُ مِنْهُ وَيَسْلَمُ )

ஐந்து காரியங்கள் உள்ளன. அவைகளில் ஏதேனும் ஒன்றைச் செய்பவர் அல்லாஹ்வின் பொறுப்பில் வந்துவிடுகிறார் என நபி (ஸல்) அவர்கள் எங்களுக்கு உத்திரவாதம் கொடுத்தார்கள்.நோயாளியை விசாரிப்பவர் அல்லது ஜனாஸாவில் கலந்து கொள்பவர் அல்லது அல்லாஹ்வுடைய பாதையில் போராட வெளியேறிச் செல்பவர் அல்லது –முஸ்லிம்களின் ஆட்சித்- தலைவரை மதிக்கவேண்டும், கண்ணியப்படுத்தவேண்டும் என்ற நோக்கத்தில் அவரிடம் செல்பவர் அல்லது பிறருக்கு துன்பம் கொடுக்காமலும் பிறரின் துன்பத்திற்கு ஆளாகாமலும் தன் வீட்டிலேயே அமர்ந்து கொள்பவர் என்று கூறினார்கள்.

மற்றொரு அறிவிப்பில் : எந்த மனிதரைப் பற்றியும் புறம் பேசாமல் வீட்டிலேயே அமர்ந்து கொள்பவர் என்று வந்துள்ளது.

(அறிவிப்பவர் : முஆத் இப்னு ஜபல் -ரலி, நூற்கள் : அஹ்மத் 21079, இப்னுஹுஸைமா, இப்னுஹிப்பான், ஹாகிம்)

—————————————————————————————————————-

அபூ கஸீர் அஸ்ஸுஹைமீ அவர்கள் தன் தந்தை கூறியதாக அறிவிக்கின்றார்கள் :
ஒரு அடியான் ஒரு அமலைச் செய்தால் சொர்க்கத்தில் நுழைந்துவிட வேண்டும்! அத்தகைய அமலை எனக்கு அறிவியுங்கள்! என்று அபூதர் (ரலி) அவர்களிடம் நான் கேட்டேன். அதற்கவர்கள், இது பற்றி நான் நபி (ஸல்) அவர்களிடம் கேட்டேன். அதற்கவர்கள், அல்லாஹ்வை ஈமான் கொள்ளவேண்டும் என்றார்கள். அல்லாஹ்வின் தூதரே! நிச்சயமாக ஈமானுடன் செயல்களும் உள்ளன! என்றேன். அதற்கவர்கள், அல்லாஹ் அவருக்கு வழங்கியதிலிருந்து சிறிதளவாவது தர்மம் செய்யவேண்டும் என்றார்கள். அவரிடம் எதுவும் இல்லை என்றால்? என்று நான் கேட்டேன். அதற்கவர்கள், அவர் தன் நாவால் நல்லவைகளைக் கூறட்டும்! என்றார்கள். அவர் சரியாக பேசமுடியாத திக்குவாய்க்காரராக இருந்தால்? என்று கேட்டேன். அதற்கவர்கள், பலவீனமானவருக்கு உதவி செய்யட்டும்! என்று கூறினார்கள். அவரே சக்தியற்ற பலவீனமானவராக இருந்தால்? என்று கேட்டேன். கைத்தொழில் தெரியாதவனுக்கு அதனைக் கற்றுக் கொடுக்கட்டும்! என்றார்கள். அவரே தொழில் தெரியாதவராக இருந்தால்? என்று கேட்டேன். உடனே நபி (ஸல்) அவர்கள் என்னை நோக்கிப் பார்த்து, உன்னுடைய நண்பனிடம் எந்த ஒரு நலவையும் விட்டுவைக்க நீர் விரும்பவில்லை போலும்! அவன் மக்களுக்கு துன்பமிழைக்காமல் இருக்கட்டும்! என்று கூறினார்கள். அப்போது நான், அல்லாஹ்வின் தூதரே! நிச்சயமாக இது இலகுவான வார்த்தையாகும் என்றேன். அதற்கவர்கள், என்னுடைய உயிர் யார் கைவசம் உள்ளதோ அவன் மீது சத்தியமாக, யாரேனும் ஒர் அடியான் அல்லாஹ்விடம் இருக்கும் கூலியைப் பெறும் நோக்கத்தில் இவற்றில் ஏதேனும் ஒன்றை நிறைவேற்றினால் நிச்சயமாக மறுமையில் அச்செயல் அவரின் கையைப் பிடித்து அவரை சொர்க்கத்தில் நுழையச் செய்துவிடும் என்றார்கள்.

(நூற்கள் : இப்னுஹிப்பான், தப்ரானீ, ஹாகிம்)

———————————————————-

(عَنِ الْبَرَاءِ بْنِ عَازِبٍ قَالَ جَاءَ أَعْرَابِيٌّ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ عَلِّمْنِي عَمَلًا يُدْخِلُنِي الْجَنَّةَ فَقَالَ لَئِنْ كُنْتَ أَقْصَرْتَ الْخُطْبَةَ لَقَدْ أَعْرَضْتَ الْمَسْأَلَةَ أَعْتِقِ النَّسَمَةَ وَفُكَّ الرَّقَبَةَ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ أَوَلَيْسَتَا بِوَاحِدَةٍ قَالَ لَا إِنَّ عِتْقَ النَّسَمَةِ أَنْ تَفَرَّدَ بِعِتْقِهَا وَفَكَّ الرَّقَبَةِ أَنْ تُعِينَ فِي عِتْقِهَا وَالْمِنْحَةُ الْوَكُوفُ وَالْفَيْءُ عَلَى ذِي الرَّحِمِ الظَّالِمِ فَإِنْ لَمْ تُطِقْ ذَلِكَ فَأَطْعِمِ الْجَائِعَ وَاسْقِ الظَّمْآنَ وَأْمُرْ بِالْمَعْرُوفِ وَانْهَ عَنِ الْمُنْكَرِ فَإِنْ لَمْ تُطِقْ ذَلِكَ فَكُفَّ لِسَانَكَ إِلَّا مِنَ الْخَيْرِ )

ஒரு கிராமவாசி நபி (ஸல்) அவர்களிடம் வந்து, அல்லாஹ்வின் தூதரே! என்னை சொர்க்கத்தில் நுழையச் செய்யும் ஒரு அமலை எனக்கு அறிவியுங்கள்! என்று கேட்டார். அதற்கவர்கள், நீர் மிகச் சிறிய வார்த்தையைக் கூறினாலும் நிச்சயமாக மிகப் பெரிய செய்தியைக் கேட்டுவிட்டீர்!

ஜீவன்களை உரிமை விடு! அடிமையை உரிமை விடு! என்றார்கள். அதற்கவர், இவ்விரண்டும் ஒன்றில்லையா? என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், இல்லை, ஜீவன்களை உரிமை விடுவதென்பது நீ தனிப்பட்ட ரீதியில் உரிமை வழங்குவதாகும். அடிமையை உரிமை விடுவதென்பது அதற்குரிய கிரயத்தை நீ கொடுப்பதாகும். மேலும்

பால் கொடுக்கும் கால்நடைகளை பிறருக்குக் கொடு!

பிரிந்து வாழும் உறவினர்களுடன் இணைந்து வாழவேண்டும்.

இதனைச் செய்ய உமக்கு சக்தியில்லை என்றால் பசித்தவருக்கு உணவளி! தாகித்தவருக்கு தண்ணீர் புகட்டு!

நன்மையை ஏவு! தீமையைத் தடு! இதற்கும் நீர் சக்தி பெறவில்லை என்றால்

நன்மையைத் தவிர வேறு எதனையும் பேசாதவாறு உனது நாவை காத்துக் கொள்! என்றார்கள்.

(அறிவிப்பவர் : பரா இப்னு ஆஸிப் -ரலி, நூற்கள் : தயாலிஸீ, அஹ்மத் 17902, இப்னுஹிப்பான்)

————————————————————————————————

தொகுப்பு:-அப்துல்லாஹ் இப்னு அலீ அல்ஜுஐஸின்.

நன்றி:-இஸ்லாம் கல்வி

================================================================================

வாழ்வின் முன்னேற்றத்திற்கு


ஒரு கிராமவாசி நபி (ஸல்) அவர்களிடம் வந்து கேட்டார்கள். யாரசூல்ல்லாஹ் தங்களிடம் சில கேள்விகள் கேட்கலாமா ? என்றவுடன் நபியவர்கள் ‘கேளுங்கள்’ என்றார்கள்.

1.நான் பணக்காரனாக என்ன செய்ய வேண்டும் ?

·         நீங்கள் போதுமென்ற தன்மையை பெற்றுக் கொள்ளுங்கள். பணக்கார்ராகிவிடுவீர்கள்.

2. மிகப்பெரிய ஆலிமாக என்ன வழி ?

·         தக்வாவை கடைப்பிடித்துக் கொள்ளுங்கள். ஆலிமாகி விடுவீர்கள்.

3. நான் கண்ணியமுடையவனாக வாழ வழி என்ன ?

·         ஜனங்களிடம் கையேந்துவதை விட்டும் தவிர்த்துக் கொள்ளுங்கள்

4. நான் ஒரு நல்ல மனிதராக ஆக விரும்புகிறேன்.

·         ஜனங்களுக்கு உங்களை கொண்டு பிரயோஜனம் ஏற்படட்டும். நல்ல மனிதராக ஆகி விடுவீர்கள்.

5. நான் நீதியுள்ளவனாக விரும்புகிறேன் ?

·         நீங்கள் எதை விரும்புகிறீர்களோ, அதை மற்றவருக்கும் விரும்புங்கள்

6. நான் சக்தியுடையவனாக ஆக என்ன வழி ?

·         அல்லாஹ்வின் மீது நம்பிக்கையை ஏற்படுத்துங்கள்

7. அல்லாஹ்வுடைய தர்பாரில் விசேஷ அந்தஸ்து கிடைக்க விரும்புகிறேன் ?

·         அதிகமாக திக்ரு ( தியானம் ) செய்யுங்கள்

8. ரிஸ்கில் அபிவிருத்தி ஏற்பட என்ன வழி ?

·         எப்பொழுதும் நிரந்தரமாக ஒழுவுடன் இருங்கள்

9. துஆ அங்கீகரிக்கப்பட என்ன வழி ?

·         ஹராமான பொருளாதாரத்தை உண்பதை விட்டும் தவிர்த்துக் கொள்ளுங்கள்.

10. முழுமையான ஈமானுடையவராக என்ன வழி ?

·         நற்குணமுடையவராக ஆகி விடுங்கள்

11. கியாமத்தில் அல்லாஹ்விடன் பாவமற்றவனாக பரிசுத்த நிலையில் சந்திக்க விரும்புகிறேன் ?

·         குளிப்பு கடமையானவுடன் குளித்து விடுங்கள்

12. பாவங்கள் குறைய வழி என்ன ?

·         அதிகமாக அல்லாஹ்விடன் பாவ மன்னிப்புத் தேடுங்கள்

13. கியாமத் நாளில் எனக்கு பிரகாசம் ஏற்பட வழி என்ன ?

·         அநீதம் செய்வதை விட்டு விடுங்கள். பிரகாசம் கிடைக்கும்

14. அல்லாஹ் என் குறைகளை மறைக்க வழி என்ன ?

·         பிறருடைய குறைகளை இவ்வுலகில் மறைத்து விடுங்கள்

15. உலகத்தில் இழிவடைவதை விட்டும் பாதுகாப்பு எதில் உள்ளது ?

·         விபச்சாரம் செய்வதை விட்டும் தவிர்ந்து கொள்ளுங்கள். இழிவடையாமல் பாதுகாக்கப்படுவீர்

16. அல்லாஹ், ரசூல் உடைய பிரியனாக வழி என்ன ?

·         அல்லாஹ், ரசூல் பிரியப்படக்கூடியவர்களை பிரியபடுங்கள்

17. அல்லாஹ், ரசூலுக்கு வழிப்பட்டவனாக ஆக வழி என்ன ?

·         (F) பர்ளை பேணுதலாக கடைப்பிடியுங்கள்

18. நான் இறைத் தொடர்புடையவனாக ஆக வழி என்ன ?

·         அல்லாஹ்வை பார்ப்பதாக என்ணி வணங்குங்கள் ( அல்லது ) அல்லாஹ் உங்களை பார்ப்பதாக எண்ணி வணங்குங்கள்

19. பாவத்தை விட்டும் மன்னிப்பளிக்கக்கூடிய வஸ்த்துக்கள் என்ன ?

·         கண்ணீர், பலஹீனம், நோய்

20. நரகத்தின் நெருப்பை குளிர வைக்கக் கூடியது எது ?

·         இவ்வுலகில் ஏற்படும் முஸிபத்தின் மீது பொறுமையாக இருப்பது

21. அல்லாஹ்வுடைய கோபத்தை எது குளிர வைக்கும் ?

·         மறைவான நிலையில் தர்மம் செய்வது – சொந்த பந்தங்களை ஆதரிப்பது

22. எல்லாவற்றிலும் மிகப்பெரிய தீமை எது ?

·         கெட்ட குணம் – கஞ்சத்தனம்

23. எல்லாவற்றிலும் மிகப்பெரிய நன்மை எது ?

·         நற்குணம் – பொறுமை – பணிவு

24. அல்லாஹ்வுடைய கோபத்தை விட்டும் தவிர்த்துக் கொள்ள வழி என்ன ?

·         மனிதர்களிடம் கோபப்படுவதை விட்டு விடுங்கள்

( ஆதாரம் : முஸ்னது அஹ்மது – கன்ஸுல் உம்மால் )