தொகுப்பு

Archive for the ‘யா ரசூலுல்லாஹ் என அழைக்கலாமா?’ Category

யா ரசூலுல்லாஹ் என அழைக்கலாமா?


அஸ்ஸலாமு அலைக்கும். அல் ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன். அஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலா ரசூளிள்ளஹி (ஸல்). மற்றும் அல்லாஹின் சாந்தியும் சமாதானமும் சஹாபாஹ் (ரலி) பெரு மக்கள் மீதும், தாபியீன்கள், தப’அ THAABIYEENGALUKKUM (ரஹ்), மற்றும் இமாம்கள் (ரஹ்), எனது உஸ்தாது, ஷைகுமார்களின் (ரஹ்) மீதும் உண்டாவதாக.

யா ரசூலுல்லாஹ் (ஸல்) என அழைக்கலாம் என்பதை திரு குரான் மூலமும், அமரர்கள் (அலை), சங்கை மிகு சஹாபாக்கள் (ரலி) இன் செயல்கள் மூலமும், சமுதாய கண்மணிகளின் வழக்காறு மூலமும் ஊர்ஜிதமாகி உள்ளது.

வான் மறையாம் திரு குரானில் அநேகமான இடங்களில் ” யா அய்யு ஹன்னபிய்யு – நபி அவர்களே! யா அய்யு ஹர் ரசூலு- இறைதூதரே! யா அய்யுகள் முததிரு – போர்வை போர்த்தியவரே !” போன்ற அழகிய ஆடை மொழி பெயர்களை கொண்டு பெருமான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அழைக்கப்பட்டுள்ளார்கள்.

முந்தய நமார்கள் யா மூசா, யா ஈசா, யா யஹ்யா, யா இப்ர்ஹாஹீம், யா ஆதம் போன்று நேரடி பெயர்களை கொண்டு அழைக்கப்பட்டு உள்ளனர்.

பாமர முஸ்லிம்கள் கூட யா அய்யுகல்லதீன ஆமனூ – விசுவாசம் கொண்டவர்களே! என்று அழைக்கப்பட்டு உள்ளார்கள்.

(பிறரை “யா” என்று பதம் கொண்டு அழைக்கலாம் என்பது இவைகள் மூலம் ஊர்கிதப்படுத்த படுஹிறது. எனினும் ஒவ்வொருவரையும் அழைப்பதற்கு வழக்காற்றில் வெவ்வேறு விதம் இருக்கின்றது.  அதன் அடிப்படையில் முந்தய நபிமார்களை எல்லாம் பெயர்கள் சொல்லி அழைத்த இறைவன், மரியாதைக்காக பெருமான் நபி (ஸல்) அவர்களின் பெயர் சொல்லி அழைக்காது ஒரு தனி வழியை வகுத்துள்ளான்).

இதை போன்று நாம் பெருமானாரை அழைப்பதற்கான வழியை இறைவன் அவனது திரு மறையில் எடுத்து இயம்புகிறான்.  “லாதஜ்- அலூ – து’ஆ அர்ரசூலி – பிணக்கும் ……… – உங்களில் சிலர் சிலரை அழைப்பதை மாதிரி ரசூல் (ஸல்) அவர்களை அழைப்பதையும் உங்களுக்கு மத்தியில் ஆக்கிவிடாதீர்கள்”. (அல் குரான் 24:63)

ரசூல் (ஸல்) அவர்களை முற்றிலும் அழைக்கக்கூடாது என்று இவ்வசனம் தடை செய்யவில்லை. அடுத்தவர்களை (பெயர் சொல்லியோ, மரியாதை குறைவாகவோ) அழைப்பதை போல் பெருமானாரை (ஸல்) அழைக்காதீர்கள் என்று தான் தடை வித்துள்ளது.

“உத்வூஹும்- லி ஆபாயிஹும் …..   அவர்களை அவ்வார்களது தகப்பங்களுடன் (இணைத்து இன்னாரின் மகனே! என்று) அழையுங்கள். (அல் குரான் 33:5)

பெருமானார் (ஸல்) அவர்களின் வளர்ப்பு மகனாக வளர்ந்து வந்த ஜைதுப்னு ஹாரிதா (ரலி) அவர்களை பெருமானாரின் மகனே! என்று அழைக்காமல் ஹாரிதாவின் மகன் ஜெய்தே! என்று அழையுங்கள் என்று இவ்வசனம் அறிவுறுத்துவதால் (தேவைக்கு) பிறரை அலைகாலாமேன்பது இவ்வசனம் மூலம் தெளிவாகின்றது.

இது போன்றே, காபிர்களுக்கும் கூட அவர்களது சுவாமிகளை உதவிக்கு அழைக்க திரு குரான் அனுமதி அளிக்கின்றது. “வத்வூ – ஷுஹதா அக்கும் – மின்தூநிள்ளஹி. – (உங்களது வாதத்தில் ) நீங்கள் உண்மையானவர்களாக இருந்தால் அல்லாஹ் அல்லாத உதவியாளர்களை அழைத்துக் கொள்ளுங்கள்” (அல் குரான் – 2:23)

பெருமான் நபியின் (ஸல்) அவர்களின் பொன்மொழிகள் திரட்டான “மிஷ்காத் ஷரீப்” எனும் நூலின் முதல் ஹதீதில் கூட – யா முஹம்மத் (ஸல்) அக்பிர்ணீ அனில் இஸ்லாம் – முஹம்மத் (ஸல்) அவர்களே இஸ்லாத்தை பற்றி அறிவிப்பீராக!” என்று ஜிப்ரீல் (அலை) அவர்கள் வினவியதாக வந்துள்ளது.

பெருமானார் (ஸல்) அவர்கள் வபாத்தாகும் சமயம் ஜிப்ரீல் (அலை) அவர்கள் “யா முஹம்மது! உங்களை மேன்மையாகவும் கண்ணியப்படுத்தவும் என்னை உங்கள் பால் அல்லாஹ் அனுப்பியுள்ளான்” என்று கூறிய நீண்ட தொரு ஹதீத் மிஷ்காத் ஷரீப் 549 ஆம் பக்கத்தில் காணக்கிடைக்கிறது.

உத்மான் இப்ன் ஹனீப் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றாகள்: ஓர் கபோதி பெருமானாரின் சமூகம் வந்து (குருட்டு தன்மை நீங்க) து’ஆ – பிரார்த்தனை கற்று தரும்படி வேண்டினர். அது பொழுது பெருமானார் (ஸல்) அவர்கள், கீழ் காணும் து’ஆ வை அவருக்கு கற்று கொடுத்தார்கள். (அதன் பின் அவருக்கு கண் குருடு நீங்கியதாகவும், அதன் படி து’ஆ கெட்ட பலருக்கு குருடு சுகமானதாகவும் அறிவுப்புகள் அனந்தம் வந்து உள்ளன).

இறைவா! ரஹ்மதுடைய நபியான முஹம்மத் (ஸல்) அவர்கள் பொருட்டை கொண்டு உன்னளவில் முன்னோகுஹிறேன். முஹம்மேதுவே! எனது இந்த ஹாசத்-தேவையை நீங்கள் நிறைவு படுத்த எனது இரட்சகநிடத்தில் உங்களை கொண்டு முன்னோகுஹிறேன்.

இறைவா! என்னில் அவர்களது ஷபா அத்தை ஏற்று கொள்வாயாக! (ஆதாரம் : இப்னு மாஜா)

இந்த ஹதீத் சஹீஹான ஹதீத் ஆகும். என அபூ இஷாக் (ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

இந்த அபூர்வமான து’ஆ, கியாமத் நாள் வரையிலான அணைத்து முஸ்லிம்களுக்கும் கற்றுதரப்பட்டுள்ளது. அதில் “யா முஹம்மது” என்ற அழைப்பும், (அவர்களிடம்) உதவி தேடுதலும் அமைந்துள்ளன.

பெருமானார் (ஸல்) அவர்களை ஜியாரத் செய்யும் பொழுது “அஸ்ஸலாமு அழைக்க – யா நபியால்லாஹ் – அஷ்ஹது அன்னக – ரசூலுல்லாஹ் – இறை தூதரே! உங்களின் மீது சாந்தி நிலவுக! நீங்கள் இறைதூதர் என நான் சாட்சி பகிர்ஹின்றேன்” என்றும் ,

அபூபக்கர் (ரலி) அவர்களை ஜியாரத் செய்யும் பொழுது, அஸ்ஸலாமு அலைக்க யா கலீபத்த ரசூலுல்லாஹ் – அஸ்ஸலாமு அலைக்க யா சாஹிப ரசூலுல்லாஹ்- இறை தூதரின் பிரதி நிதி ஆனவர்களே! உங்கள் மீது சாந்தி உண்டாவதாக!, (குகையில் இறைத்தூதருடன்) தோழராக இருந்தவர்களே! உங்கள் மீது சாந்தி உண்டாவதாக! என்றும்,

உமர் (ரலி) அவர்களை ஜியாரத் செய்யும் பொழுது, அஸ்ஸலாமு அலைக்க – யா அமீருல் முமிநீன், அஸ்ஸலாமு அலைக்க யா முழ்கிறல் இஸ்லாம், அஸ்ஸலாமு அலைக்க யா முகச்சிரல் அச்னாம் – விசுவாசிகளுக்கு தலைவரானவர்களே! உங்கள் மீது சாந்தி உண்டாவதாக! இஸ்லாத்தை பிரகனபடுதியவர்களே! உங்கள் மீது சாந்தி உண்டாவதாக!. கற்சிலைகளை உடைதெறிந்தவர்களே! உங்கள் மீது சாந்தி உண்டாவதாக!. என்றும் கூற வேண்டும் என்று பதாவா ஆழம் கீரி, மற்றும் எல்லா பிகுஹு கிரந்தகளிலும் ஹஜ் உடைய பாடத்தில் காண கிடைக்கின்றது.

இதில் பெருமானாரை (ஸல்) அழைப்பதும், அவர் அண்மையில் துயில் கொள்ளும் அபூபக்கர் (ரலி), உமர் (ரலி) ஆகியோர்களை அழைப்பதும் இருக்கின்றன.

உதாரணமாக யா அகராமல் கல்கி …………. படைபினங்களில் மிக சங்கை குரியவரே! பொது பீடைகள் வந்து விடயம் பொழுது உங்களை தவிர்த்து வேறு யாரிடம் ஒதுகுவேன்? என்று இமாம் பூசாரி (ரஹ்) அவர்கள் புர்தா ஷரீபில் வரைந்துள்ளார்கள்.

மேலும் உலக முஸ்லிம்கள் அனைவரும் தொழுகையில் “அஸ்ஸலாமு அழைக்க ஆயுகன்னபிய்யு வரமதுல்லாஹி வபரகாதுஹு – நபி அவர்களே! உங்கள் மீது சாந்தி நிலவுக! அல்லாஹ்வின் அருளும் பாக்கியமும் உண்டாவதாக! என்று பெருமானார் (ஸல்) அவர்களை அழைத்து வருகின்றனர்.  இவ்வாறு அழைத்து சலாம் சொல்லுவது ஒவ்வாரு தொழுகையிலும் வாஜிப் கடமை ஆகும்.

இதுவரை கூறி வந்த ஆதாரங்களை உற்று நோக்குங்கால் தனி நபர்கள் “யா ரசூலுல்லாஹ்” என்று அழைப்பது ஆகுமானது தான் என்றாகி விட்டது. அது போல பலர் கூடி சப்தமிட்டு அழைப்பது ஆகுமென்பது ஊர்கிதமானதகும்.

பெருமானார் (ஸல்) அவர்கள் ஹிஜ்ரத்தை மேற்கொண்டு மதீனா மாநகருக்குள் புகும் பொழுது, ஆண்களும், பெண்களும் மாடிகள் மீது ஏறிக்கொண்டு ஏலம் சிறார்கள், பணியாட்கள் வீதியில் நின்று கொண்டு “யா முஹம்மது- யா ரசூலுல்லாஹ்” என்று வரவேற்ப்பு கொடுத்தனர் என ஹஜ்ரத் BARAG (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூல்: முஸ்லிம்)

இதன் படி “யா ரசூலுல்லாஹ்” என்று கூவி அழைப்பது ஆகும் என்பது தெளிவு. எல்லா சஹாபாக்களும் (ரலி) இதை செய்துள்ளனர் என்பதும் தெளிவு.

மேன்மை மிகு சஹாபா (ரலி) பெருமக்கள், பெருமானார் (ஸல்) அவர்களின் வருகையை முன்னிட்டு வரவேற்பு விழா கொண்டாடிய விபரம் ஹிஜ்ரத்தின் இதே ஹதீதில் வந்துள்ளது.

பெருமானார் (ஸல்) வெளியூருக்கு விஜயம் செய்து விட்டோ அல்லது போர்களத்திற்கு போய்விட்டோ மதீனா நன்னகருக்கு வருகை தந்தருளும் போதெல்லாம் வழி நெடுக நின்று ஆரவாரமாக வரவேற்பார்கள். அதை அன்று பெரும் குதூகலமாகவும் கொண்டாடி மகிழ்வார்கள். (நூல்: புகாரி, மிஷ்காத்)

தொழுகை என்பது, இறைதியான கொண்டாட்டம், ஒரே இடத்தில் நடை பெறுகின்றது. ஹஜ்ஜும் இறைதியான கொண்டாட்டம் ஒரே இடத்தில் நடை பெறுகின்றது. இங்கும் அங்கும் போவதும் வருவதும், சுற்றுவதும், தொங்கோட்டமாகவும் நடைபெறுகிறது.

அமைதியை விளைவித்திடும் “தாபூத்” எனும் பெட்டகத்தை அமரர்கள் (மூசா நபி (அலை) அவர்களின் கூட்டத்தினருக்கு) கூட்டம் கூட்டமாக இறக்கி பெரும் விழாவை கொண்டாடியது குரான் மூலம் தரிபட்டுள்ளது.

பெருமானார் (ஸல்) அவர்கள் அகிலத்திற்கு அவதாரமாகும் பொழுதும், விண்ணுலக பயணத்தின் பொழுதும் அமரர்கள் பெரும் திரளாக விஜயம் செய்து விழா கோலம் பூண்டுள்ளார்கள்.

நல்லவற்றை எடுதோதுவது நன்மையை பயக்கும். ஆகவே இப்படி மீலாது விழாக்கள் நடத்துவது, அதிலும் பெருமானார் (ஸல்) அவர்களை அழைப்பதும், வாழ்த்துவதும் நன்மையை நல்கும்.

யா ரசூலுல்லாஹ் என்று அழைப்பது பற்றி பிரதிவாதிகளால் தொடுக்கப்படும் ஆட்சேபனைகளும், அதற்கான தக்க பதில்களும்.:

கேள்வி: “உமக்கு பயனோ, இடரோ அளிக்க முடியாத அல்லாஹ் அல்லாத வற்றை அழைக்காதீர்” (அல் குரான் 10:106) என்று திரு குரான் அல்லாஹ் அல்லாத வற்றை அழைப்பதை தடுத்துள்ளது.

“அல்லாஹ் அல்லாதவர்களில் நின்றும் அவர்களுக்கு பயனோ இடரோ கொடுக்க முடியாதவற்றை அவர்கள் அழைகின்றனர்” என்று அல் குரான் கூறுவதால் அல்லாஹ் அல்லாதவர்களை அழைப்பது விக்ரக ஆராதனை காரர்களின் வேலை ஆகும் என்பது ஊர்கிதமாகிறது அல்லவா?

பதில்:  எவ்விடத்திலும் இவை, இவை போன்ற வசனங்கள் வந்தாலும் அவைகளில் வரும் “து’ஆ” என்பதற்கு “அழைத்தல்” என்று பொருள் கொள்ளக்கூடாது. (சில ஷைத்தான் தௌஹீத் மௌலவிகள் தங்களுடைய ஷைத்தான் கொள்கையை நிலை நாட்ட இப்பொருளை கையாண்டு உள்ளனர்) வணங்குதல் என்ற பொருளை தான் கொள்ள வேண்டும். (ஆதாரம்: தப்சீர் ஜலாலைன்)

அது மட்டுமல்ல, “வணக்கம்” என்ற பொருள் தான் (அவைகளின் பின் தொடர் வசனங்களும்) 23:117 ஆம் வசனமும் இதர வசனங்களும் உறுதுணையாக அமைந்திருக்கின்றன.

“வணக்கம்” என்ற பொருள் கொள்ளாவிடின் நாம் மேலே எடுத்து காட்டிய, அல்லாஹ் அல்லாதவர்களை அழைக்கப்பட்டுள்ள திரு குரான் வசனங்கள், ஹதீதுகள், உலமா பெருமக்களின் சொற்கள் எல்லாம் ஷிர்க்காக ஆகிவிடும். உயிருள்ளவர்களை அழைப்பது, அருகிலுள்ளவர்களை அழைப்பது, தொலைவிலுள்ளவர்களை அழைப்பது எல்லாம் ஷிர்க்காக ஆகிவிடும்?

அன்றாடம் ஒவ்வொருவரும் தத்தமது சகோதர சகோதரிகளை, அன்பர்களை, உயிர் நேசர்களை அழைத்த வண்ணமாக இருக்கின்றனரே! அப்படியானால் உலகில் எவரும் ஷிர்க்கை விட்டும் தப்பி வாழ முடியாதே!

அல்லாஹுடைய தாத்தை (தத்சொரூபதை) போன்று அல்லது சிபத் (இலட்சணத்தை) போன்று வேறு ஒரு பொருள் இருக்கின்றது என்று (மனத்தால்) நிர்ணயம் கொள்வதற்கு தான் “ஷிர்க்” என்று சொல்கின்றனர்.

அல்லாஹ் அல்லாதவற்றை அழைக்கின்ற பொழுது மேற்கண்ட நிர்ணயம் வருவதில்லையே! பின்னர் ஷிர்க் எப்படி வரும்?

கேள்வி: “நின்றவர்களாகவும், உட்காந்தவர்கலாகவும், விழாவின் மீது (படுதவர்கலாகவும்) அல்லாஹ்வை (திக்ரு) நினையுங்கள் (அல் குரான் 4:102 ) என்று அல் குரான் கூருன்கின்ற பொழுது,

எழுந்திருக்கும் பொழுதும், உட்காரும் பொழுதும் அல்லாஹ் அல்லாதவர்களின் பெயர் கூறுதல் ஷிர்க்காகும். எனவே, அல்லாஹ்வின் பெயரைத்தானே நினைக்க வேண்டும்?

பதில்:  ரசூல் (ஸல்) அவர்களை நினைப்பது ஹராம் என்றோ அல்லது ஷிர்க் என்றோ இவசனத்தில் இருந்து விளங்குவது அறியாமை ஆகும்.

“நீங்கள் தொழுகையை நிறைவேற்றி முடித்து விடுவீர்களாயின் எந்த நிலையிலும் எவ்விதத்திலும் இறைவனை நினைதிடலாம்” என்பதை தான் இவ்வசனம் சொல்லுகிறது. அதாவது “ஒழு” இன்றி தொழுக முடியாது. தொழுகையில் ருகூவு, சுஜூது, இருப்புகளில் குரானை ஓத முடியாது. தொழுகையில் (சங்கடம் இருந்தால் தவிர) விலாபுரம், முதுகுபுறம் படுத்துக்கொள்ள முடியாது என்பது போன்ற விதி முறைகள் தொழுகையில் இருக்கின்றன.

ஆனால் தொழுகையை முடித்துவிட்டால் இவ்வித முறைகள் எல்லாம் போய்விடும். இது பொழுது, நின்ற வண்ணம், படுத்த வண்ணம், உட்கார்ந்த வண்ணம் எந்த நிலையிலும், எவ்விதத்திலும் இறைவனை நினைக்க முடியும் என்பதைத்தான் இவ்வசனம் அறிவிக்கின்றது.

சிந்தனைகோர் விருந்து
மேற்சொன்ன இவ்வசனத்தில் சிந்திப்பதற்குரிய விஷயங்கள் உண்டு

1. பத்குருல்லாஹ்….. என்ற ஏவல் வாஜிபு – கட்டாயம் என்பதற்கு இல்லை. ஜாயிஸ் – ஆகுமென்பதற்குதான். நினைத்தால் அல்லாஹ்வை நினையுங்கள் அல்லது அல்லாஹ் அல்லாதவர்களை நினையுங்கள் அல்லது மெளனமாக இருங்கள். எது வேண்டுமானாலும் செய்யலாமென்பதை காட்டுகின்ற ஏவல் வினை ஆகும்.

2. அப்படியே வாஜிபு என்ற ஏவல் வினைதான் என்று வைத்து  கொண்டாலும் “திக்ருல்லாஹ் – அல்லாஹ்வை நினைத்தல் என்பதரிக்கு “திக்ரு கைரில்லாஹ்  (GAIRILLAH) – அல்லாஹ் அல்லாதவர்களை நினைத்தல்” என்பது நகீழ் – எதிர்பதமானது, ஏனெனில், அல்லாஹ்வை நினைத்தல் வஜீபாகுமானால் அல்லாஹ் அல்லாதவர்களை நினைப்பது ஹராம் என்றாகிவிடும்.(எவரும் இதை சொல்ல வில்லை).

எனவே, “திக்ருல்லாஹ் – அல்லாஹ்வை நினைத்தல் என்பதற்கு “அதமு திக்ரில்லாஹ்- அல்லாஹ்வை நினைக்காமல் இருத்தல் என்பது தான் சரியான நகீழ் – எதிர்பதமாகும்.

3. அல்லாஹ்வை நினைத்தல் (திக்ருல்லாஹ்) என்பதற்கு எதிர்பதம், அல்லாஹ் அல்லாதவர்களை நினைத்தல் (திக்ரு கைரில்லாஹ்) என்பதை ஒப்புக்கொண்டாலும் ஒரு எதிரிடை வாஜிபாகுவதினால் மற்றது ஹராம் ஆகலாம், ஷிர்க் ஆகாது.

ஹராம், வாஜிபு, பர்ளு என்பதெல்லாம் (உறுப்புகளினால் செய்யப்படும்) சிபதுல் பி’அல் – தொழில் பண்புகளாகும். தொழிலில்லாத – அதமு பி’அலியின் பண்புகளில்லை என்பதையும் சிந்தையுள் வைக்க வேண்டும்.

4. பெருமானார் (ஸல்) அவர்களை நினைப்பது எதார்த்தத்தில் இறைவனை நினைப்பது தான்.  “எவர் ரசூலுக்கு (ஸல்) வலிபடுஹின்றாரோ, அவர் அல்லாஹ்வுக்கு நிச்சயம் வலிப்பட்டுவிட்டார்.

கலிமா, தொழுகை, ஹஜ், குத்பா – பிரசங்கம், பாங்கு உட்பட எல்லா வணக்கங்களிலும் பெருமானார் (ஸல்) அவர்களை நினைவு கூர்வது பின்னிபினைந்தும் , அத்தியாவசியமாகவும் இருக்கும் பொழுது தொழுகைக்கு வெளியில் எழுந்திருக்கும் பொழுதும் உட்காரும் பொழுதும் நினைவு கூர்வது எப்படி ஹராமாகும்?

குனிந்தாலும், நிமிர்ந்தாலும் எந்த நிலையிலும் எந்த நேரமும் பெருமானார் (ஸல்) அவர்கள் மீது சலவாத்து ஓதி கொண்டே இருக்கிறான் ஒருவன் அல்லது “லா இலாஹா இல்லல்லாஹு முஹம்மதுர் ரசூலுல்லாஹி” என்ற கலிமா ஓதிக்கொண்டே இருக்கிறான் என்றால் இது நன்மையான காரியம் தானே.

5. தப்பத் யதா – அபீலஹபின் ……………. அபூலஹபின் இரு கரமும் நாசமாகுக!” என்பதையும் (முனாபிகீங்களின் வரலாறு நிறைந்திருக்கும்) முனாபிகீன் சூராவையும், இன்னும் எவ்வசனங்களில் காபிர்களின் கற்சிலைகளின் கூற்று வந்துள்ளதோ அவ்வசனங்களையும் ஓதுவது அல்லாஹ்வை திக்ரு நினைப்பதாக ஆகுமா? இல்லையா?
இவை அனைத்தும் இறையோனின் திவ்விய வாக்கியமாகும் அல்லவா? வாக்கியங்களுக்குரிய நற்கூலி ஓதுபவர்களுக்கு கிடையாதா? இறையோனின் திருவாகியங்களை – வசனங்களை ஓதுவது, நினைப்பது இறையோனை நினைப்பது ஆகாதா?

இறையோனின் பேரருளை, அவனது பேரொளியை – முஹம்மது (ஸல்) அவர்களை நினைப்பது இறைவனை நினைப்பது ஆகாதா?.

“காலபிர் அவனு – பிர் அவ்னு சொன்னான்” என்பது குரானில் இடம் பெற்றுள்ள திருவசனம் ஆனதினால் “கால” என்று ஓதினால் மூன்று எழுத்து இருப்பதினால் முப்பது தவாபும், “பிற அவ்ன்” என்று ஓதினால் ஐந்து எழுத்து இருப்பதினால் ஐம்பது தவாபும் கிடைக்கும். இது பொழுது, “முஹம்மதுர்ரசூலுல்லாஹ்” என்றால் முஷரிக்காகி விடுவானா? என்னே! விந்தையான ஆராய்ச்சி? ஹஜ்ரத் யாகூப் (அலை) நிலையிலும், இருப்பிலும் எந்த நிலையிலும் எந்த நேரமும் “யூசுப் யூசுப்” என்று சொல்லி கொண்டே இருந்தார்கள் (தல்லாஹி – தப்தவு – தத்குரு – யூசுப் – யூசுபை நினைத்துகொண்டே யாகூப் இருந்தார்கள் (அல் குரான் 12:85) என்று இறைவன் கூறியுள்ளான்) யூசுப் (அலை) நபியின் நினைவால் அழுது அழுது கண்கள் கூட வெண்ணிரமாகிவிட்டன.

அவ்விதமாக ஹஜ்ரத் ஹவ்வா (அலை) அவர்களது பிரிவால் ஹஜ்ரத் ஆதம் (அலை) அவர்கள் “ஹவ்வா ஹவ்வா” என்றும், இமாம் ஹுசைன் (ரலி) அவர்களது இழப்பால் இமாம் ஜைனுல் ஆபிதீன் (ரலி) அவர்கள் “ஹுசைன் ஹுசைன்” என்றும் ஜெபித்து கொண்டும் நினைத்துக்கொண்டும் இருந்திருக்கிறார்கள். “தந்தையை இழந்து பரிதவிக்கும் என்னிலை யாகூப் (அலை) அவர்களது நிலையை காண குறைந்ததில்லை. அவர்களோ செல்வா மகனை இழந்தார்கள், நானோ பெற்ற தந்தையை இழந்திருக்கிறேன்” எனும் பாடல் ஜைனுல் ஆபிதீன் அவர்களது சோக காட்சியை பிரதிபலித்து கொண்டு இருக்கிறது.

சொல்லுங்கள்! பார்ப்போம், இவர்கள் எல்லாம் இணைவைத்த, முஸ்ரிகுகளா என்ன? இல்லையெனில், ஆஷிக் – அன்பன் தன் (உயிருக்கும் மேலான) நபியை நினைத்தால் முஸ்ரிக்காகி விடுவது ஏன்? வியாபாரி இரவு பகலாக தன் வியாபார நினைவில் கிடப்பான், மாணவன் இரவு பகலாக எந்த நேரமும் பாட நினைவில் இருப்பான். இன்னவர்களும் அல்லாஹ் அல்லாதவற்றை அல்லவா நினைத்து கொண்டு இருக்கிறார்கள், இவர்கள் முஷ்ரிக்குகள் ஆவதில்லையே?

குறிப்பு: பஞ்சாப் தேனா நகரில் நமக்கும், மௌலவி தனாவுல்லாஹ் அமிர்தசரீ அவர்களுக்கும் “யா ரசூலுல்லாஹ் என அழைப்பது” சம்பந்தமாக ஓர் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது தனாவுல்லாஹ் சாஹிபு அவர்கள் இதே திரு குரான் (4:102) வசனத்தை முன் வைத்தார்கள்.

மூன்று கேள்விகள் மட்டுமே நாம் அவரிடம் வினவினோம்.

1. திரு குரானில் – அம்ரு – ஏவல் வினை எத்தனை அர்த்தத்திற்கு வருகிறது?  இவ்வசனத்தில் என்ன அர்த்தத்திற்கு உபயோகிக்கப்பட்டுள்ளது?

2. ஒரு நகீழ் – எதிரிடை வாஜிபாகுவதால் மாற்று நகீழும் ஹராமாகுமா? அல்லவா?

3. திக்ருல்லாஹ் – அல்லாஹ்வை நினைப்பதற்கு எதிர் பதம் என்ன? திக்ருகைரில்லாஹ்- அல்லாஹ் அல்லாதவற்றை நினைப்பது” எதிர்பதமா? அல்லது அதமு திக்ரில்லாஹ் – அல்லாஹ்வை நினைக்காமல் இருப்பது” எதிர்பதமா? எது?

அவர் சொன்ன பதில் இதோ!

தாங்கள் கேள்விகளில் உசூலுல் பிக்ஹு – பிக்ஹு மூலாதார விஷயத்தையும், மன்திக் இல்மையும் புகுத்தி விட்டீர்கள். இந்த இரண்டு கல்வியுமே “பித்’அத” ஆனவை. அதாவது – இவ்விரண்டு கல்வியை கற்று கொள்ளாது மடையனாக இருப்பது சுன்னத் என்பது அவர் கருத்து.

அதன் பின் அப்படியானால், ” மீலாது ஷரீப் கொண்டாடுவது” ஹராம் என்றும், ஹதீத்கலை வல்லுனர்கள் ஹதீதுகளை (சேகரித்து) எடுப்பது சுன்னது என்றும் வர வேண்டுமே, அதஹையதொரு விளக்கம் பொதிந்து இருக்கும் படியான சரியான த’ரீபை (THA’REEF) – வரை இலக்கணத்தை “பித்’அத்” என்பதற்கு கூறுங்கள் பார்க்கலாம் என்று அவரிடம் வினா தொடுத்தோம். இவ்வினா இன்று வரை அவர் முன் வைக்கப்பட்டே இருக்கிறது. அவரும் மரணித்து விட்டார். (இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹீ ராஜிஊன்” அவரது அபிமாநிகலாவது அல்லது அவரது கொள்கை வேந்தர்கலாவது பதில் அளித்து பார்க்கலாமே!

கேள்வி: எங்களுக்கு “அதஹிய்யத்” தை அஸ்ஸலாமு அலைக்க அய்யுஹன்னபிய்யு-வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹூ – என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கற்று தந்தார்கள்.

பெருமானார் (ஸல்) அவர்கள் மௌதானபொழுது “அஸ்ஸலாமு – அலன்னபியு” என்று சொன்னோம் ” என்ற ஹதீத் புகாரி ஷரீப் இரண்டாம் பாகம், கிதாபுல் இஸ்தி’தான் பாபுல் அகதி பில்யதைன் எனும் பாடத்தில் ஹஜ்ரத் இப்ன் மஸ்வூத் (ரலி) அவர்கள் மூலம் அறிவிக்கப்பட்டு உள்ளது.

“முன்னிலைகுரிய – காபை” வைத்து அஸ்ஸலாமு அலைக்க என்று பெருமானாரின் ஜீவிய காலத்தில் அவர்கள் (சஹாபாக்கள்) சொன்னார்கள். (பெருமானார் (ஸல்) அவர்கள் மறைந்ததும் முன்னிலையை விட்டு விட்டார்கள்” படர்கையின் வார்த்தையை கொண்டு “அஸ்ஸலாமு அளன்னவியி” என்று புகாரி ஷரீபின் விரிவுரையான ஐனியில் கூறப்பட்டு உள்ளது.  எனவே பெருமானாரின் (ஸல்) அவர்களின் ஜீவிய காலத்தில் “அஸ்ஸலாமு அலைக்க” என்று சொல்வது இருந்தது. அவர்களது வபாதிர்க்கு பிறகு அதஹிய்யாதில் கூட அழைக்க படுவதை விட்டு விட பட்டுள்ளது என்று இந்த ஹதீதின் மூலமும் விரிவுரையின் வாசகங்கள் மூலமும் தெரிய வருகிறது.  சஹாபாக்கள் (ரலி) அதஹிய்யாதில் கூட இவ்வாறு அழைப்பதை அகற்றிவிட்டு இருக்கும் பொழுது , எவன் தொழுகைக்கு அப்பால் “யா ரசூலுல்லாஹ்” (ஸல்) என்பது போன்றவற்றை கூறுவானாயின் அவன் முற்றிலும் முஷரிக்காகி விடுவானே?

பதில்:  புனித புகாரி ஷரீப், அதன் விரிவுரையான ஐனி எனும் நூற்களின் வாசகங்கள் (வினா தொடுத்த) உங்களுக்கு கூட எதிராக வந்துள்ளது ஏன்? என்று எந்த முஜ்தஹிதான இமாமும் அதஹிய்யாதை மாற்ற உத்திரவிடவில்லையே!

இமாம் அபூ ஹனீபா (ரஹ்) அவர்கள் ஹஜ்ரத் இப்ன் மஸ்வூத் (ரலி) அவர்களுடையவும், இமாம் ஷாபிஈ (ரஹ்) அவர்கள் ஹஜ்ரத் இப்ன் அப்பாஸ் (ரலி) அவர்களுடையவும் அதஹிய்யாதை தெரிவு செய்து இருக்கிறார்கள். அவர்களது இரு அதஹிய்யாதிலும் “அஸ்ஸலாமு அலைக்க அய்யுஹன்னபிய்யு” என்று தான் இருக்கிறது.

கைறு முகல்லிது – இமாம்களை பின் தொடராதவர்கள் தனாவி கூட்டதினர்களானாலும் – கஜ்னவி குழுவினர்களானாலும் இதே முன்னிளையுள்ள அதஹிய்யாதை தான் ஓதி வருகின்றனர்.

எனவே, சில சஹாபாக்கள் (ரலி) தங்களது இஜ்திஹாதினால் அதஹிய்யாதை மாற்றியுள்ளார்கள். மர்பூஆனா பெருமானனரின் (ஸல்) அவர்களின் பக்கம் சேர்பிக்கப்பட்ட ஹதீதுக்கு எதிராக இந்த இஜ்திஹாதை அமல் படுத்த முடியாது.

மாற்றி அமைத்த இந்த சில சஹாபாக்கள் (ரலி) கூட, மறைவாக இருக்கும் பொழுது முன்னிலையாக அழைப்பது ஹராம் என்ற தோரணையில் மாற்றிவிடவில்லை. காரணம், பெருமான் நபியின் ஜீவிய காலத்திலும் வெகு தொலைவில் வசித்து வந்த சஹாபாக்கள் கூட, இதே முன்னிலையான அதஹிய்யாதை ஓதி வந்தனர்.

இறுதியாக, எமன், கைபர், மக்கா முகர்ரமா, நஜ்த், இராக் போன்ற எல்லா இடங்களிலும் தொழுகை நடை பெறும் பொழுதும் அதே அதஹிய்யாதை ஓதி வந்துள்ளார்கள். அதஹிய்யதில் அழைப்பவர் எங்கோ ஒரு தொலைவில் இருந்து கொண்டு அழைக்கிறார். பெருமானார் (ஸல்) அவர்கள் மதீனா நன்னகரில் உறைவிடம் கொண்டுள்ளார்கள். இப்படி அழைப்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடுக்கவும் இல்லை, இப்படியானதொரு சந்தேகமும் சஹாபாகளுக்கு (ரலி) எழவும் இல்லை.

பெருமானார் (ஸல்) அவர்கள் அதஹிய்யாதை கற்று கொடுக்கும் பொழுது எனது ஜீவிய காலம் மட்டும் ஓத வேண்டிய அத்தஹிய்யாது, எனது வபாதிர்க்கு பின் ஓத பட வேண்டிய அத்தஹிய்யாது வேறு இருக்கிறது என்றும் சொல்லவில்லை.

“இதனால் முன்னிலையான அதஹிய்யாத்தை மாற்ற வேண்டிய அவசியமும் இல்லை, எனவே, அச்சில சஹாபாக்களை (ரலி) இதில் பின் தொடர வேண்டியது இல்லை.

அப்படி இல்லையாயின் பெருமானார் (ஸல்) அவர்களே எனது வபாதிர்க்கு பின் என்னை முன்னிலை ஆக்காதீர்கள் என்று சொல்லி இருப்பார்கள். எனவே இது பொழுது, முன்னிலையானதை வைப்பதுவே மிக எட்ட்ரமானது. அஸல் தலீமில் (THA’LEEM) இவ்வாறு தான் உள்ளது.” என்று தப்லீக் ஜமாஅத் தலைவர்களில் ஒருவரான ரஷீத் அஹ்மத் கங்கோகி – பதாவா ராஷிதிய்யாவில் முதல் பாகம் 17 ஆம் பக்கத்தில் எழுதி உள்ளார்.

பதிலின் சுருக்கம்:  சஹாபாக்கள் (ரலி) சிலரின் இச்செயல் ஆதாரமாக அமையாது. இல்லையெனில் நாயகம் (ஸல்) அவர்களின் பரிசுத்தமான ஜீவிய காலத்திலும் கூட (சஹாபாக்கள் இடையே) “ஷிர்க்” நடந்து இருக்கிறது. அதை அவர்கள் தடுக்காது விட்டு வைத்து இருக்கிறார்கள் என்று வந்து விடும். அப்படி மாற்றிய சஹாபாக்கள் (ரலி) சிலர் தான். பலர் அல்லர், என்றாலும்,

“இப்ன் மஸ்வூத் (ரலி) அவர்களது சொல்” அபூ அவானா (ரலி)  அவர்களுடைய அறிவிப்பாகும். ஆனால் புகாரி நாயகத்தின் (ரஹ்) அறிவிப்பு மிக சரியானது. அதில் அது இப்ன் மஸ்வூத் (ரலி) அவர்களது சொல் அல்ல என்று விபரிக்கப் பட்டுள்ளது. அது அந்த அறிவிப்பாளரின் உரை ஆகும். அதன் எதார்த்தமானது “ஸலாமுன் ய’னீ அலன் நபிய்யி” என்பது தான். பெருமானார் (ஸல்) அவர்களது ஜீவிய காலத்தில் எந்த சலாம் இருந்ததோ அதே சலாம் தான் அவர்களது (ஸல்) வபாதிர்க்கு பின்பும் நீடித்து இருந்தது என்ற கருத்து கொள்ளவும் முடியும் என்ற அறிய தொரு விளக்கத்தை “மிர்காத்” எனும் நூலில் அல்லாமா முல்லா அலி காரி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.

ஆகவே, அதஹிய்யாத்தை சஹாபாக்கள் (ரலி) ஒரு பொழுதும் மாற்ற வில்லை என்றும், இது அறிவிப்பாளரின் விளக்கத்தில் ஏற்பட்ட விளைவு என்றும், அஸல் சம்பவத்தில் இது இல்லை என்றும் தெரிய வருகிறது. எனவே மேற்கண்ட வினாவிற்கு அடிப்படை இல்லாமல் போய் விடுஹிறது.

கேள்வி:  தொலைவில் இருந்து நபியையோ, வலியையோ அலைக்கும் போது, நமது இச்சப்ததை அவர்கள் கேட்கின்றனர் என்று எண்ணம் கொண்டு அழைக்கக்கூடாது. அதனால் ஷிர்க் வந்து விடும், காரணம் தொலைவிலுள்ள சப்தத்தை கேட்பது இறைவனின் ஸிபாத் – இலட்சணமாகும். அல்லாஹ் அல்லாதவர்க்கு இத்திறன் உண்டு என்று நம்புவது ஷிர்க்காகும்.

இந்த நிர்ணயமின்றி “யா ரசூலுல்லாஹ்” “யா கௌத்” போன்றவட்ட்ரை கொண்டு அழைப்பது ஆகுமாகும் உதாரனத்திற்க்கு “தென்றல் காற்றே கேள்! என்று சொல்லும் போது தென்றல் காற்று நமது இவ்வழைப்பை கேட்கிறது என்ற நினைப்பு வருவதில்லை தானே, அது போன்று தான் என சில வஹ்ஹாபிகள் கூறுகின்றனர். இன்றைய போது வஹ்ஹாபிகளும் (ஷைத்தான் தொவ்ஹீத்வாதிகளும், மற்றும் அவர்களது கொள்கையை சேர்ந்தவர்களும்) இதையே காரணமாக காட்டுகின்றனர். தப்லீக் தலைவர்களில் ஒருவரான் ரஷீத் அஹ்மத் கங்கோஹியும் தமது பாதாவா ரஷீய்யவிலும் இதர நூற்களிலும் இதற்கு ஊக்கம் அளித்து இருக்கின்றனர்.

பதில்: தொலைவில் உள்ள சப்தத்தை கேட்பது அல்லாஹ்வின் ஸிபத்- இலட்சணம் என்பது அறவே இல்லை, தொலைவில் இருந்து அழைப்பவனுக்கு தூரமாக தெரிந்தாலும் அல்லாஹ்வுக்கு தொலை தூரம் என்பது இல்லை. உயிர் நரம்பை விட சமீபமாக இருக்கிறான். “நஹ்னு அக்ரபு – இலைஹீ- மின் ஹப்லில் வரீதி- நாம் அவனளவில் அவனுடைய பிராண நரம்பை விடவும் அதிகமாக நெருங்கி இருக்கிறோம்” என்றும்,
“வ இதா ஸ அலக இபாதி அன்னி – என்னை குறித்து என்னுடைய அடியான் (நபியே) உம்மை கேட்பார்களானால் நான் சமீபமாக இருக்கிறேன் (என்று நீர் சொல்லும்) என்றும்,
“வ நஹ்னு அக்ரபு இலைஹீ ……………. (மரண தருவாயில் இருக்கிற) அவரிடம் நாம் உங்களை காண அதிக முடுகுதலாக இருக்கிறோம், ஆனால் நீங்கள் அதை பார்ப்பதில்லை என்றும் இறைவனே சொல்லுஹிறான். எனவே, அவனே சமீபமாக இருப்பதினால் எல்லா சப்தங்களும் அவனுக்கு சமீபமாகவே இருக்கின்றன.  அவன் சமீபமாகவே கேட்கிறான்.

வாதத்துக்காக, தொலைவிலுள்ள சப்தத்தை கேட்பது இறைவனது இலட்சணம் என்று ஒப்புக்கொண்ட போதிலும் சமீபத்திலுள்ள சப்தத்தை கேட்பதும் அவனது இலட்சணம் தானே! ஆகவே, அருகாமையில் உள்ளவர்களையும், இந்த நமது அழைப்பை- சப்தத்தை கேட்கின்றனர் என்று விளங்கி, அழைக்காதீர்கள். ஷிர்க்கு வந்து விடும் என்று சொல்லி (தொலைவில் உள்ளவர்கள், அருகாமையில் உள்ளவர்கள்) எல்லோருக்கும் (எதையும்) கேட்க வைக்காதீர்கள்.

எவ்விதம் தொலைவில் உள்ள சப்தத்தை கேட்பது இறைவனின் இலட்சனமோ (உங்கள் சொல்படி) இருக்கின்றதோ அவ்விதமே தொலைவிலுள்ளவற்றை பார்ப்பதும் தொலைவிலுள்ள மனத்தை நுகர்வதும் இறைவனின் இலட்சணங்கள் தானே.

” இறை நேசச் செல்வர்களான அவ்லியாக்களுக்கு தொலை தூரம், சமீபம் இரண்டுமே ஒன்றுதான்”  என்று இல்முல் கைபு, ஹாளிர், நாளிற் பற்றி பேசும் போது ஊர்ஜிதப் படுத்தி இருக்கும் போது, தொலைவு சமீபத்தில் உள்ளவற்றை எப்படி ஒரே விதமாக பார்த்து கொண்டு இருக்கிறார்களோ அவ்விதமே தொலைவு, சமீபத்திலுள்ள சப்தத்தை – அழைப்பை அவர்கள் காதுகள் கேட்கின்றன என்றால் எங்கனம் ஷிர்க் ஆகும்?

இத்தன்மைகள் அவர்களுக்கு அல்லாஹ்வினால் அருளப்பட்டவைகள் (அல்லாஹ்வுக்கு இவைகள் சுயமாக உள்ளவை, கொடுக்கப்பட்டவையும் (அதாயீஉம் ) சுயமாக உள்ளவை. (தாதியும்) எங்கனம் ஒன்று போல் ஆகும்? ஒன்றானால் அல்லவா ஷிர்க் ஆகும்?.

தொலைவான சப்தங்களை நபிமார்கள், வலிமார்கள் கேட்கின்றனர் என்பது பற்றி இதோ (சிலவற்றை) எடுத்து கட்டுகிறோம்! பாரீர்!

ஹஜ்ரத் யாகூப் (அலை) அவர்கள் “கண் ஆன் ” என்னும் ஊரில் இருந்து கொண்டு (மிக தொலைவில் உள்ள மிஸ்ரு நாட்டில் இருந்து கொண்டு வரப்படும்) யூசுப் (அலை) அவர்களது சட்டையின் மணத்தை நுகர்ந்தார்கள்.

“யூசுபின் மணத்தை நான் நிச்சயம் பெறுகிறேன்  (அல் குரான் 12:94) என்றும், யாகூப் (அலை) சொன்னார்கள். சொல்லுங்கள் இதுவும் ஷிர்க்கா?

ஹஜ்ரத் உமர் (ரலி) அவர்கள் மதீனா நன்னகரிளிருந்து கொண்டே “நிஹாவந்து” என்னும் இடத்தில் போர் செய்து கொண்டு இருந்த படை தளபதி சாரியா (ரலி) அவர்களுக்கு (யா சாரியா அல் ஜபல் என) எச்சரிக்கை விடுத்துள்ளார்கள்” (நூல் மிஷ்காத் 546)

உமர் (ரலி) அவர்களது கண் தொலைவில் உள்ள காட்சியை கண்டது என்றும், சாரியா (ரலி) அவர்களது காது தொலைவிலுள்ள சப்தத்தை கேட்டது என்றும் இந்த நிகழ்ச்சி உறுதி செய்கிறது.

ஹஜ்ரத் இப்ராஹீம் (அலை) அவர்கள் இறை இல்லமாம் க’பதுல்லாஹ்வை கட்டியதும் (அபூகுபைஸ்) மலையின் மீது ஏறி, எல்லா ஆன்மாக்களையும் முன்னோக்கி, அல்லாஹ்வின் அடியார்களே! (அல்லாஹ் ஹஜ்ஜை கடமை ஆக்கி உள்ளான், ஹஜ் செய்யுங்கள்) என்று கூவி அழைத்தார்கள். கியாமத் நாள் வரையிலும் படைக்கப் படுகின்றவர்கள் அனைவரும் அவ்வழைப்பை கேட்டனர். எவர்கள் “லெப்பைக்” என்று சொல்லி பதில் அளித்தார்களோ அவர்கள் நிச்சயமாக ஹஜ் செய்தே தீருவார்கள். எவர்கள் மெளனமாக இருந்தார்களோ அவர்களுக்கு ஹஜ் செய்ய ஒரு போதும் முடியாது போய்விடும்.. என்று தப்சீகளில் 22:27 வசனத்தின் கீழ் விவரிக்கப்பட்டு உள்ளது.

தொலைவில் இருந்து கேட்டனர் என்பது ஒரு பக்கம் இருக்கட்டும், படைக்கபடுவதர்க்கு முன்னரே அனைவரும் ஹஜ்ரத் இப்ராஹீம் (அலை) அவர்களது அழைப்பை கேட்டுள்ளனரே! அப்படியானால் இதுவும் ஷிர்க்கா? சொல்லுங்கள்!

இவ்வாறே இப்ராஹீம் (அலை) அவர்கள் இறைவன் சமூகத்தில், இரட்சகனே! மரணித்தவர்களை எப்படி நீ உயிர் ஆக்குவாய் ? என்பதை எனக்கு காட்டுவாயாக! என வினவினார்கள். அது பொழுது நான்கு பறவைகளை அறுத்து அவைகளின் கறியை நான்கு மலைகளின் மீது வைத்து ” தும்மத் ஊஹுன்ன ய’தீனக ஸ’யன் – பின் அவைகளை அலையும், அவைகள் (உயிர் பெற்று) விரைந்து உம்மிடம் வரும்” என்று கட்டளை இட்டான். (அவ்வாறே அறுத்தார்கள், பின் அழைத்தார்கள்). அறுக்கப்பட்ட – உயிரற்ற பறவைகள் அழைக்கப் படுஹின்றன, அப்போது அவைகளும் ஓடி வருகின்றன, என்று இருக்கும் போது, அவ்லியாக்கள் இந்த பறவைகளை விடவும் அற்பமானவர்களா என்ன?

இன்று கூட நடை முறையில் ஒருவன் இந்தியாவில் இருந்து கொண்டு தொலை பேசி மூலமாக லண்டனில் உள்ளவனோடு உரை ஆடுஹிறான், நமது இப்பேச்சை லண்டனில் உள்ளவன் தொலை பேசி மூலம் கேட்கிறான் என்று விளங்கி தான் – அறிந்து தான் அழைக்கிறான். இவ்வழைப்பு ஷிர்க் இல்லை என்று இருக்கும் போது, ஒரு முஸ்லிம் தொலை பேசியின் திறனை விட நுபுவத்தின் திறன் பன்மடங்கு வலுவானதினால் – நபிமார்கள் அல்லாஹ்வினால் கொடுக்கப்பட்ட இந்த வல்லமையால் எல்லா அழைப்பின் சப்தத்தையும் கேட்கின்றனர் என்று நிர்ணயம் கொண்டு “யா ரசூலுல்லாஹ் – அல் யாத்” – இறை தூதரே இரட்சிப்பு” என்று அழைத்தால் எங்கனம் ஷிர்க் ஆகும்?

“ஒரு நாள் இரவு வேளையில் வீட்டில் மைமூனா (ரலி) அவர்களுடன் ரசூல் (ஸல்) அவர்கள் இருக்கும் போது “உதவி உதவி என்று அபயக் குரல் கேட்டு, நான் இங்கு இருக்கிறேன், நான் இங்கு இருக்கிறேன், நான் இங்கு இருக்கிறேன் என்றும், உங்களுக்கு உதவி கிடைத்து விட்டது என்றும் மூன்று தடவை ரசூல் (ஸல்) அவர்கள் வீட்டில் இருந்தவாறு சொல்ல, மைமூனா (ரலி) அவர்கள், இங்கு யாரும் இல்லாமல் இருக்கும் போது, நீங்கள் யாருடன் பேசிக் கொண்டு இருந்தீர்கள் யா ரசூலுல்லாஹ் (ஸல்). அதற்க்கு ரசூல் (ஸல்) அவர்கள் நான் பனி க’அப் கோத்திரத்தை சார்ந்த ராஜிஜ் என்ற மனிதருடன் பேசி கொண்டு இருந்தேன். அவர் என்னிடம் குரைஷ்களுக்கு எதிராக என்னிடம் உதவி நாடினார். மைமூனா (ரலி) அவர்கள் சுபுஹு தொழுகையை அடுத்த நாள் காலையில் முடித்தவுடன், மைமூனா (ரலி) அவர்கள் ராஜிஜ் அவர்கள் ரசூல் (ஸல்) அவர்களை அழைத்து உதவி தேடியதை “யா ரசூலுல்லாஹ் (ஸல்) உதவி செய்யுங்கள் & அல்லாஹ்வின் அடியார்களை எங்களுக்கு உதவி செய்ய கூப்பிடுங்கள்” என்று அழைத்ததை கேட்டான் என்று கூறினார்கள் ( ஆதாரம்  முக்தசர் சிராத்துல் ரசூல் – பாடம் மக்காஹ்வின் வெற்றி)

ஹஜ்ரத் சுலைமான் நபி (அலை) அவர்கள் ஒரு காட்டின் பிரயாணம் செய்து கொண்டு இருக்கும் போது சிற்றெறும்பின் சப்தத்தை தொலைவில் இருந்து கொண்டே கேட்டுள்ளார்கள் அந்த (தலைமை) சிற்றெறும்பு சொல்லுகிறது. ” யா அய்யுகள் நாமளு……………… எறும்புகளே! உங்களது குடி இருப்புக்குள் நுழைந்து கொள்ளுங்கள், சுலைமானும் அவரது படையினரும் அவர்கள் அறியா வண்ணம் உங்களை மிதித்து விட வேண்டாம் (அல் குரான் 27:18)

“சிற்றெறும்பின் இக்கூற்றை மூன்று மைல்களுக்கு அப்பால் இருந்து கொண்டு சுலைமான் நபி (அலை) கேட்டார்கள் என்று இவ்வசனத்தின் கீழ் தப்சீர் ரூஹுள் பயானில், மற்றும் இதர தப்சீர்களிலும் எழுதப் பட்டுள்ளது. சின்னஞ் சிறு எறும்பின் உரையாடல் சப்தத்தை மூன்று மைல்களுக்கு அப்பால் கேட்க முடிகிறது. இதனை ஷிர்க் என்று சொல்லுவார்களா?

மரணித்தவர்களை அடக்கம் செய்த பின் வெளி ஜனங்களின் காலோசையை மரணித்தவர்கள் கேட்கின்றனர், ஜியாரத் செய்பவர்களை பார்கின்றனர், அவர்கள் இனம் தெரிந்து கொள்கின்றனர். இதனால் மண்ணறைகளுக்கு சென்று மரணித்தவர்களுக்கு சலாம் சொல்லுவது வேண்டர்பாளது என்று “மிஷ்காத்” எனும் நூலில் “கப்ரின் வேதனையை தரிபடுதுதல்” எனும் பாடத்தில் கூறப்பட்டு உள்ளது.

மண்ணறைக்குள் இருந்து கொண்டு இவ்வளவு மெல்லிய (நடப்பவர்களது கால்) ஒலியை கேட்பதானது எவ்வளவு தூரத்தில் இருந்து கேட்பதாகும். சொல்லுங்கள் இதுவும் ஷிர்க்கா?

“இறை நேச செல்வர்கள் இறையோனின் வல்லமையால் பார்கின்றனர், கேட்கின்றனர், நுகர்கின்றனர், இவ்வளமைகளை அல்லாஹ் அவர்களுக்கு நல்கியிருக்கின்றான் என்று “மிஷ்காத்” – கிதாபு த’வத் என்பதில் இருந்து ஒரு ஹதீதை மேற்கோள் காட்டி நாம் இறை அன்பர்களுக்கு மறைவானவற்றை பற்றிய அறிவு இருக்கிறது என்பது பற்றி பேசும் போது வரைந்து இருக்கிறோம். அது போது அவர்கள் தொலைவில் இருந்து கொண்டு கேட்பது ஷிர்காகுமா?

“எப்பென்னாவது தன் கணவனுடன் சண்டை இட்டு கொண்டால், சொர்க்கத்தில் இருந்து  கொண்டு ஹூருல் ஈன எனும் சுந்தரிகள் அப்பெண்ணை சபிக்கின்றார்கள் என்று திவ்விய ஹதீதில் வந்து இருக்கின்றது. வீட்டின் அடிக்குள் நடக்கும் சண்டையை கூட இவ்வளவு தொலைவில் இருந்து கொண்டு ஹூருல் ஈன்கள் பார்கின்றனர், கேட்கின்றனர்.

மனிதன் முடிவு நல்ல முடிவாகுமா? (அல்லவா) என்பது பற்றிய மறைவான சங்கதிகளையும் அறிகின்றனர். ரேடியோ, டெலிவிஷன் மூலம் தொலைவில் உள்ள வற்றை கேட்கின்றனர், பார்கின்றனர் என்று இருக்கும் போது?

நூருன்னுபுவத் – வல்விலாயத் – நபித்துவ, வலித்துவ அருள் ஜோதி இந்த மின் இயக்க சக்தியை விடவும் குறைவானதா என்ன?

பெருமானார் (ஸல்) அவர்கள் மி’ராஜ் – விண்ணுலக பயணத்தின் போது, சொர்க்கத்தில் ஹஜ்ரத் பிலால் (ரலி) அவர்களின் காலடி ஓசையை கேட்டார்கள்.  அது பொழுது ஹஜ்ரத் பிலால் (ரலி) அவர்கள் விண்ணுலக பயணத்தை மேற் கொண்டு இருக்கவில்லை. மண்ணுலக வீட்டில் இருந்தார்கள். தஹஜ்ஜுத் தொழுகைக்காக அங்கும் இங்கும் சுற்றி கொண்டு இருந்திருப்பார்கள். இங்கு இருக்கும் பிலால் (ரலி) அவர்களின் காலடி ஓசை அங்கு சொர்க்கத்தில் கேட்கின்றது. ஹஜ்ரத் பிலால் (ரலி) அவர்கள் சூக்கும உடல் எடுத்து அங்கு சென்று இருந்தார்கள் என்றால், (நாம் கூறி வருகின்ற) “ஹாளிர், நாளிற்” என்பது ஊர்ஜிதமாகி விட்டது. இவைகள் அனைத்தையும் நம் பிரதிவாதிகள் “அல்லாஹ் கேட்க வைத்தான், அவர்கள் கேட்டுக் கொண்டார்கள்” என்று சொல்லுவார்கள்.

ஆம்! நாமும் இதையே தான் சொல்லுகின்றோம். நபிமார்கள் , வலிமார்களுக்கு தொலைவிலுள்ள சப்தங்களை அல்லாஹ் கேட்க வைக்கும் போது இவர்கள் கேட்கின்றனர். இறைவனுக்கு இத்தன்மை தாதி – சுயமானது. அவர்களுக்கு அதாயி -அல்லாஹ்வினால் கொடுக்கப்பட்டது. இறைவனுக்கு அது கதீம்-பூர்விகமானது, இவர்களுக்கோ இது ஹாதிது – புதிதானது.

இறைவனுடைய இத்தன்மை எவருடைய கரதுக்குள்ளும் அடங்கியதில்லை! ஆனால் இவர்களுக்கான் இத் தன்மையோ அல்லாஹ்வின் கைப்பிடியினுள் அடங்கியது. காது மற்ற உருப்புகளின்றி அல்லாஹ் கேட்கிறான், இவர்கள் காதினால் கேட்கின்றனர். இந்த அளவுக்கு பாகுபாடு இருக்கும் போது – ஷிர்க் – இணை வைத்தல் எப்படி ஏற்படும்?

“யா ரசூலுல்லாஹ்? என அழைப்பது பற்றி இன்னும் அதிகம் சொல்லலாம், எனினும் இதோடு முடித்துக் கொள்கிறோம். நம் முடிவையும் நல் முடிவாக அமைய அல்லாஹ் த’ஆலா அருள் புரிவானாக! இறைவா! உண்மையை உண்மையாக எங்களுக்கு காட்டி, அதை பின் பற்றி நடப்பதற்கும், அசத்தியத்தை அசத்தியமாகக் காட்டி, அதை தவிர்த்து நடப்பதற்கும் அருள் புரிவாயாக ! ஆமீன். அற்ஹமர் ராஹிமீனே! யா ரப்பல் ஆலமீனே!

குறிப்பு: மேற்கூறப்பட்ட “யா ரசூலுல்லாஹ் என அழைக்கலாமா” எனது உச்தாதும் , ஷைகும் எழுதியது. காப்பி எடுத்து எழுதி இருக்கிறோம்.___

நன்றி:- இணைய நண்பர்

_________________________________________________________________________________