இல்லம் > குழந்தை பிறந்ததும் பெண்கள் Belt போடுவது தவறா ? > குழந்தை பிறந்ததும் பெண்கள் Belt போடுவது தவறா ?? Dr . Jeyasiri Gayaraj

குழந்தை பிறந்ததும் பெண்கள் Belt போடுவது தவறா ?? Dr . Jeyasiri Gayaraj


கருவுற்ற காலத்தில் வெளித்தோற்றத்தில் மட்டுமே நமக்கு மாற்றங்கள் ஏற்படுவதில்லை உள்ளுக்குள்,ஹார்மோன்களின் செயல்பாட்டினால் நம்முடைய உடலின் அனைத்து இயக்கங்களுமே மாறு பட்டுப் போகிறது. இப்படி சுமார் பத்து மாதகாலம் இந்த மாற் றங்களுக்கே பழகிப்போன நம் உடல், திடீ ரென்று ஒரே நாளில் பழைய நிலைமைக்குத் திரும்பிவிடாது. அந்த மாற்றங்கள் முற்றிலுமாக இல்லா விட்டாலும் ஓரளவுக்காவது பழைய நிலைக்கு வர குறைந்த பட்சம் ஆறு வார காலம் ஆகும். சிசேரியன் ஆனவர்களுக்கும் இது பொருந்தும் என்றாலும், காயங்கள் இருப்பதால் அவர்களுக்குக் கூடுதல் நேரம் பிடிக்கும்.

குழந்தை பிறந்ததும், ‘‘சூடா காஃபி சாப்பிடக்கூடாது..! பச்சைத் தண்ணில கை வைக்காதே..! குழந்தைக்குப் பால் கொடுக்கும்போது மல்லிகைப்பூ ஆகாது! மாம்பழமா… கூடவே கூடாது!’’ என்று நம் வீட்டுப் பெரியவர்கள் ஒரு பெரிய பட்டியலே போடுவார்கள். உண்மையில்இதெல்லாம் தேவையில்லாத பயங்கள்தான்!

இன்னும் சில வீடுகளில் குழந்தை பெற்றுக் கொண்ட பெண்ணுக்குத்தொடர்ந்து மூன்று நாட்களுக்கு வெறும் பிரெட் மட்டும்தான் சாப்பிடக் கொடுப்பார்கள். இதெல்லாம் ரொம்பத் தவறான விஷயம். பிரசவமான பெண்ணுக்கு சாதாரணமாக, நாம் வீட்டில் சாப்பிடும் உணவு வகைகளைக் கொடுப்பதுதான் சிறந்தது. அப்படிக் கொடுத்தால்தான் அம்மாவுக்கு இயல்பாக தாய்ப்பாலும் சுரக்கத் தொடங்கும்

நார்மலான டெலிவரிக்கே சில சமயங்ளில், வஜைனாவின் வாய்ப் பகுதியில் தையல் போட வேண்டி வரலாம். சிசேரியனுக்கோ சொல்லவே வேண்டாம். இப்படிக் காயப்பட்ட பெண்களுக்குத் தண் ணீரே கொடுக்கக் கூடாது… அப்படியே கொடுத்தாலும் தொண்டையை நனைக்குமளவுக்குக் கொடுத்தால் போதும் என்று பல வீடுகளில் சொல்வார்கள்.


தண்ணீர் அதிகம் குடித்தால் காயத்தில் சீழ் பிடித்துவிடும் என்பது அ வர்களின் விளக்கம். இந்தத் தண்ணீர்க்கட்டுப்பாடு சில நாட்கள்தான் என்றில்லை… சில மாதங்கள் வரைகூட தொ டரும்! இதுவும் மிகவும் தவறான விஷயம்.

உண்மையில் இச்சமயத்தில்தான் தாய் நிறைய, தண்ணீர் குடிக்க வேண்டும். அப்படி நிறைய தண்ணீர் குடித்தால்தான் தாய்க்கு நீர்க் கடுப்பு (யூரினரி இன்ஃபெக்ஷன்) போன்ற பிரச் னைகள் ஏற்படாது.
குழந்தை பிறந்தவுடனேயே அத்தனை நாளும் பெரிதாகி, குழந்தையைத்தாங்கி ஏந்திய தாயி ன் கர்ப்பப்பை மெதுமெதுவாக பழைய நிலை க்கு வந்துவிடும். அச் சமயத்தில் ரத்தப்போக்கு வருவது இயற்கை. 4_5 வாரங்கள் வரைக் கும் இந்த ரத்தப் போக்கு நீடிக்கும். அதற்கு மேல் போனால் தவறு.இப்படி அதிகப்படியாக ரத்தப் போக்கு ஏற்படக்காரணம் என்ன..?

தாயின் கர்ப்பப்பையில் நோய் த்தொற்று ஏதேனும் ஏற்பட்டி ருந்தால் இப்படி ஆகலாம். சில சமயம் தாயின் கர்ப்பப்பையில் நஞ்சின் பாகங்கள் அல்லது சில திசுக்கள் வெளிவராமல் விட்டுப் போயிருந்தாலு ம் அதிகப்படியான ரத்தப் போக்கு ஏற்படலாம்.
இப்படி ஆகும்போது மருத்துவரை அணுகுவதுதான் சரி. மருந்து மாத்திரைகள் மூலம் அவரால் தான் இ தற்கு நிரந்தரத் தீர்வு கொடுக்கமு டியும்.

பிரசவமான பெண்களுக்கு மிகவு ம் அரிதாக ஙிணீதீஹ் ஙிறீuமீs என் கிற நிலை ஏற்படுவதுண்டு. ( இது எதனால் ஏற்படுகிறது என்றெல்லாம் சொல்லமுடியாது)
இதைப் பற்றி விரிவாகப் பார்க்கலாம்…


சில பெண்கள் டெலிவரி ஆனதும் தங்களையறியாமல் ஒருவித மன அழுத்தத்தால் அவதிப்படுவதுண்டு. இந்த நிலைக்கு ஆளாகும் பெண்கள் தங்களுக்குள் தாங்களாக வே காரணமின்றி அழுவார்கள். குழந் தையை கவனிக்கக்கூட ஆர்வம் காட்டாமல் ஒருமாதிரி விட்டேத் தியாக இருப்பார்கள். இதுபோன்ற சில அறிகுறிக ளால் இவர்களை அடையாளம் கண்டுகொள்ள முடியும். இந்த நிலைக்குத்தான் Baby Blues என்று பெயர். டெலிவரி ஆன கொஞ்ச நாட்களில் இது தானாகவே சரியாகத் தொடங்கும்.

சிலருக்கு இதுபோல எல்லாம் சாதாரணமாக இல்லாமல் தீவிரமான பிரச்னையாக இது உருவெடுக்கலாம். அப்படி அது மோசமான நிலையை அடையும்போது அதை Puerperal Psychosis என்று பெயரிட்டு அழைக் கிறோம். இது ஏற்கெனவே மனநோயா ல் பாதிக்கப்பட்டவர்களுக்கு வரலாம். சாதாரணப் பெண்களுக்கும் இது போல நிலைமை தீவிரமடைவதுண்டு.

இந்த நிலை ஏற்படும்போது சம்பந்தப்பட் ட பெண்ணைத் தனியாகவிடுவது நல்ல தல்ல. காரணம், அவர்களுக்குத் தற் கொலை செய்து கொள்ளும் எண்ண ம் இச்சமயத்தில் அதிகப்படியாக ஏற்படும். அதனால் அவர்களை மருத்துவரின் கண்காணிப்பில் வைத்திருப்பது தான் நல்லது.

சிலசமயம் ஆவேசத்தின் உச்சியில் இந்தப் பெண்கள் தங்களையும் அறியாமல் குழந்தையைக்கொன்றுவிடும் அளவுக்கேகூடச்செல்வார்கள்!தேர்ந்த மனநல மருத்துவரிடம் இவர்களை அழைத்துச் சென்று சிகி ச்சை கொடுத்து வர மெதுவாகக் குணம் தெரியும். சிகிச்சையின்போது இவர்களுக்கு மருந்துகள் கொடுக்க வேண்டி வரும்போது, சில சமயம் குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுப்பதைக்கூட நிறுத்த வேண் டி வரலாம்..

குழந்தை பிறந்ததும் பெண்களுக்கு இது போன்ற மனரீதியான மாறுதல்கள் ஏற்படு வதோடு, வெளித்தோற்றத்திலும் பல மாற்றங்கள் ஏற்படலாம். நிறையப் பேருக்கு ஏற் படுவது தலைமுடி கொட்டும் பிரச்னை இது சாதாரண விஷயம்தான்.கர்ப்பமாக இருந்த காலத்தில் நம்முடைய உடலில் ஹார்மோன்களின் செயல்பாடுகள் சற்றே அதிகப்படியாக இருக்கும். அந்தச் சமயத்தில் கூடுதல் ஊட்டம் பெற்று முடி நன்றாக வளரத் தொடங்கும். குழந்தை பிறந்ததும் ஹார்மோன்களின் செயல் பாடுகள் வழக்கம்போல ஒரு கட்டுக்குள் வந்துவிடும். அச்சமயத்தில் தான் கூந்தல் உதிரும் பிரச்னை தலைதூக்கும். இதைத் தடுக்க வழியில்லை என்றாலும் ஊட்டச்சத்து மிக்க உணவு வகைகளைத் தேர்ந்தெடுத்துச் சாப்பிட்டு வர, மீண்டும் முடி இயல்பாக வளர வாய்ப்புள்ளது.

கர்ப்பமடைந்த ஒருசில மாதங்களில் தாயின் மார்பகம் தாய்ப்பால் சுரப்பதற்கு ஏதுவாக, அளவில் பெரி தாகத் தொடங்கும். குழந்தை பிறக்கும்போது முழுவளர்ச்சியடைந் துவிடும் தாயின் மார்பகம், பால் சுரப்பதால் சற்றே கனமாகி லேசாக த் தொங்கினாற்போல காட் சி தரும். இது கவனிக்கப்பட வேண்டிய விஷயம். இதை இப்படியே விட்டுவிட்டா ல் தாயின் மார்பகம் நிரந்த ரமாகவே தொ ங்கிப் போய் விடும் வாய்ப்புள்ளது.

கனமான மார்பகத்துக்கு சப்போர்ட் தரும் வகையில் தாய் எப்போதும் பிரா அணிவ து நல்லது. அதுவும் தனக்கு சரியான அள விலான பிரா அணிய வேண்டும். பிரா அணிந்தால் குழந்தைக்கு ஒவ்வொரு முறை பாலூட்டும் போதும் கஷ்டமாக இருக்குமே என்று நிறையப் பேர் கேட்கி றார்கள். இவர்கள் சாதாரண பிரா அணி யாமல் கடையில் ஸ்பெஷலாக விற்கக் கூடிய ‘மெட்டர்னிட்டி பிரா’ வாங்கி அணி யலாம். இப்படி அணிந்தால் ஒவ்வொரு முறை பால் கொடுக்கும் போதும் பிராவை அவிழ்த்து மாற்றவேண்டிய அவசியமில்லை.

கர்ப்பகாலத்தில் நம் வயிற்றின் தசைப்பகுதிகள் கர்ப்பப்பை விரிவடைவதற்கு ஈடு கொடுத்து விரிவ டையும். குழந்தை பிறந்ததும் கர்ப் பப்பை தானாகவே சுருங்கிவிடும். ஆனால் விரிவடைந்த வயிற்றின் தசைப் பகுதிகளோ பழைய நிலை க்கு வர நாளாகும். இது தெரியாமல் என்னிடம் வரும் பலபெண்கள் ‘டாக்டர்! என் வயிற் றைப் பார்த்தால் இன்னொரு பாப் பா உள்ளே இருக்கும் போலிரு க்கே…’ என்று கேலியாக, சில சமயம் சந்தேகமாகக் கூடக் கேட்பதுண்டு. இப்படிப் பெருத்துப்போன வயிற்றை இயல்பான நிலைக்குக் கொண்டுவர, குழந்தை பிறந்ததுமே பெல்ட் போடவேண்டும் என்று பல வீடுகளில் இன்னும் கூட சொல்கிறார்கள். பெல்ட் போ ட்டால் இந்நிலை உடனே சரி யாகிவிடும் என்று நினைக்கி றார்கள். இது ரொம்பத் தவறு. ஏன் தெரியுமா?

குழந்தை பிறந்தவுடன் அது வரை விரிந்திருந்த வயிற்றுப் பகுதியின் தசைப்பகுதிகள் தளர்ந்து போயிருக்கும். பெல்ட் போடு வதால் ஏற்படும் இறுக்கத்தால் இந்தத் தசைகள் வலுவிழந்துதான் போகுமே ஒழிய அளவில் மாறுதல் ஏற் படாது. தளர்ந்துபோன வயிற்றுத் தசை கள் மேலும் தளர்ந்து போகாமல் இருக் க, சரியான அளவிலான பேண்டீ ஸ் (Panties) அணிந்தாலே போதும்.

அதனால், வயிற்றை அதன் இயல்புப்படி யே சுருங்கச் செய்வதுதான் சிறந்தது. இதற்கென்று PostNatal போன்ற சில எளிய பயிற்சிகள் உள்ளன.

நன்றி:- Dr . Jeyasiri Gayaraj

நன்றி:- முகநூல்

Advertisements
  1. இன்னமும் ஒரு பின்னூட்டமும் இல்லை
  1. No trackbacks yet.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: