இரத்த கொதிப்பும் பாட்டி வைத்தியமும் Blood Pressure & Grannytherapy
இரத்தக் கொதிப்பு என்னும் உயர் இரத்த அழுத்தம் ஏற்படக் காரணங்கள் யாவை?
- நாம் உண்ணும் உணவின் தன்மை.
- மன அழுத்தம்.
- எளிதில் உணர்ச்சி வசப்படுதல்.
- புகைப்பிடித்தல் மற்றும் மது அருந்தும் பழக்கம்
- உடல் எடை அதிகரித்தல்
- ஹார்மோன் சுரப்பியில் நிகழும் கோளாறுகள்.
- சர்க்கரை நோய் மற்றும் சிறுநீரகக் கோளாறுகள்.
- உடற்பயிற்சி இல்லாமல் சோம்பி இருப்பது.
- சத்தம் அதிகம் உள்ள இடங்களில் வெகுநாட்கள் குடியிருத்தல்.
- பரம்பரைத் தன்மை. (Genetic Predirposition)
(1) சிஸ்டாலிக் அழுத்தம்
(2) டயஸ்டாலிக் அழுத்தம்
இதற்கு மேல் உள்ள அளவுகள் மிக அதிகமான உயர் இரத்த அழுத்தத்தினைக் குறிக்கும்.
இரத்த கொதிப்பை குறைக்க
செய்முறை:
பசும் பாலில் 2 பல் பூண்டு நசுக்கிப் போட்டு காய்ச்சி இரவில் குடித்து வந்தால் இரத்த கொதிப்பும், கொழுப்பும் குறையும்.
இரத்த கொதிப்பு குறைய
அறிகுறிகள்: 1. இரத்த அழுத்தம். 2.தலைச்சுற்றுதல்.
இரத்த அழுத்தம் கட்டுப்பட
செய்முறை: அகத்தி கீரை, சுண்ட வத்தல் ஆகியவைகளை சமைத்து அடிக்கடி உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் இரத்த அழுத்தம் குறையும்.
உயர் இரத்த அழுத்தம் கட்டுப்பட
செய்முறை: கறிவேப்பிலைகளை நீர் விட்டு அரைத்து சாறு எடுத்து அதனுடன் சிறிது எலுமிச்சைச்சாறு கலந்து காலையில் குடித்து வந்தால் உயர் இரத்த அழுத்தம் கட்டுப்படும்.
குறைந்த இரத்த அழுத்தம் கட்டுப்பட
செய்முறை: குறைந்த இரத்த அழுத்தம் இருப்பவர்கள் ஜடமான்சி வேர், கற்பூரம் மற்றும் இலவங்கப்பட்டைகளை நன்றாக இடித்து போட்டு நீர் விட்டு காய்ச்சி வடிகட்டி குடித்து வந்தால் குறைந்த இரத்த அழுத்தம் மாறும்.
கொழுப்பு குறைய
செய்முறை:
நெல்லிக்காய், சீரகம், பூண்டு, சின்ன வெங்காயம் ஆகியவற்றை அரைத்து உணவுடன் சோ்த்து சாப்பிட்டு வந்தால் இரத்தத்தில் கொழுப்பு குறையும்.
- கணுக்கால் வலியிலிருந்து விடுதலைப் பெற
- கீரையும் வெந்தயமும்
- குழந்தைகளின் வளர்ச்சிக்கு கொய்யா
- சக்கரை நோய்க்கு சிக்கன மருத்துவம்
- சர்க்கரை நோயும் உணவு முறையும்
- நீரழிவு சர்க்கரை(Sugar) நோய்க்கு ஒரு எளிய மருந்து
- பசலைக்கீரை மகத்துவம் (மருத்துவம்)
- மங்குஸ்தான் பழம்
- மலட்டுத் தன்மையை விரட்டும் மர வைத்தியம்
- வாழைப்பூ மருத்துவக் குணங்கள்
- வெங்காயத்தின் 50 மருத்துவ குணங்கள்
ஆஹா… நல்லதொரு விளக்கமான பதிவு சார்…
பகிர்வுக்கு நன்றி… தொடர வாழ்த்துக்கள்…
தங்களின் ஆதரவிற்க்கும், வாழ்த்திற்க்கும் நன்றி
nalla message
தங்களின் ஆதரவிற்க்கும், வாழ்த்திற்க்கும் நன்றி
அருமையான பதிவு நன்றி