இல்லம் > நல்லறங்கள், யார் யாருக்கு வழங்கலாம்? > யார் யாருக்கு வழங்கலாம்? – மு.அ. அபுல் அமீன் நாகூர்

யார் யாருக்கு வழங்கலாம்? – மு.அ. அபுல் அமீன் நாகூர்


எல்லாருக்கும் தர்மம் கொடுக்க முடியாது. தர்மம் பெற தகுதியுள்ள இல்லாதோருக்கே தர்மம் கொடுக்க வேண்டும். அதையே “பாத்திரமறிந்து பிச்சையிடு’ என்று எச்சரிக்கிறது தமிழ் முதுமொழி.

 

ஹஜ்ரத் அம்ருபின் அல்ஜீமஹ் என்ற வயது முதிர்ந்த நாயகத் தோழர் செல்வ சீமான். அவரின் செல்வத்தில் எதை, யார் யாருக்கு வழங்கலாம் என்று முஹம்மது நபி (ஸல்) அவர்களிடம் கேட்டார். அவருக்குப் பதில் சொல்ல இறைவசனம் 2-215 இறங்கியது.

 

“”பெற்றோர்களுக்கும் உறவினர்களுக்கும் அனாதைகளுக்கும் ஏழைகளுக்கும் பிரயாணிகளுக்கும் உங்கள் பொருளிலிருந்து செலவிடுவது ஏற்புடையதாகும். நீங்கள் செய்யும் நன்மைகளை நன்கறிபவன் அல்லாஹ்”.

 

பெற்றோரைப் பேணுவது பெருங்கடமை. செல்வர்க்கழகு செழுங்கிளை தாங்குதல் என்று உறவினர்களுக்கு உதவ வேண்டும். அனாதைகளை ஆதரித்து அவர்களுக்கு ஆவன செய்தால் பாவங்கள் நீங்கும்.

 

ஏழைகளுக்கு என்றும் எப்பொழுதும் தப்பாது தர்மம் கொடுக்க வேண்டும். இல்லாமையைச் சொல்லாமலும், வறுமையை வெளிப்படுத்தாமலும், பிறரிடம் ஈயாது, பொறுத்தார் பூமியாள்வர் என்று பொறுமையுடன் இருப்போரைத் தேடிச் சென்று தேவையான பொருளைக் கொடுக்க வேண்டும்.

 

எவர் ஏழைகள் என்று புகாரி, முஸ்லிம், ஹதீது நூல்கள் வரையறுக்கின்றன.

 

“”தன் தேவையைத் தீர்க்க சக்தியற்றிருந்தும் பிறரிடம் யாசிக்காது ஏழ்மையை வெளிக்காட்டாதிருப்பவனே உண்மையான ஏழை”.

 

பயணிகள் ஊருக்குப் புதியவர்களாயிருப்பர்; யாருக்கும் தெரியாது அவர்கள் நிலைமை. அவர்கள் புதிய இடத்தில் புரியாது தவிக்கும் பொழுது தெரிந்ததைத் தெரிவித்து தேவையைத் தீர்ப்பது காலத்தினாற் செய்த ஞாலத்தின் பெரிய பேருதவி. பெருந்தர்மம்.

 

இத்தகு தர்மங்களை இத்தரணியில் இறையச்சத்தோடு செய்து மறுமையில் பெறுவோம் பெரும் பலனை.

– மு.அ. அபுல் அமீன்.

நன்றி:- தினமணி –  வெள்ளிமணி 23 Dec 2011

நன்றி:- மு.அ. அபுல் அமீன் நாகூர். அஞ்சலக அதிகாரி(ஓய்வு), செல்பேசி:-00919943469691

தலைவர்:- ‍பெற்றோர் ஆசிரியர் கழகம் நாகூர், கௌதிய்யா துவக்கப்பள்ளி நாகூர், கிராம கல்விக்குழு நாகப்பட்டினம்.

துணைதலைவர்:- மத்தியஅரசு ஓய்வூதியர் சங்கம் நாகப்பட்டினம்,  ஜாமியா மஸ்ஜித் செய்யது பள்ளி நாகூர்.

பொருளர்:- நாகூர் தமிழ் சங்கம் நாகூர்.

உறுப்பின‌ர்:‍‍‍‍‍‍- த‌மிழ்நாடு நுக‌ர்வோர் இய‌க்க‌ம்.

இவர்களின் படைப்புகளில் சில

பத்தில் பத்து

ஹிஜ்ரத்

சிட்டுக்குருவி – கூடிவாழ்ந்தால் கோடி நன்மை

மனித நேயம்

ஆஷூரா நாளில் ஆரம்பம்

புளிச்சேப்பக்காரர் விருந்து

சாலை விதிகள் போற்றுவோம்

வரவுக்கு வரம்பு

ஆண்டவன் நீதி

பசுமை தேநீர் Green Tea

தானத்தின் பொருள்

யார் யாருக்கு வழங்கலாம்?

  1. 3:48 பிப இல் ஜனவரி 4, 2012

    அஸ்ஸலாமு அலைக்கும்,

    பதிவு நன்றாக பயன்தரதக்கதாக உள்ளது,முயற்சி தொடரட்டும்.தங்கள் கட்டுரை மிகவும் பயனுள்ளதாக உள்ளது..விடாமல் தொடர்ந்து ஆக்கப்பூர்வமான கட்டுரை எழுதுங்கள்…

    எங்க தளத்திற்கும் நீங்க வாங்க…தளத்தில் உறுபினராக ஆகுங்கள்

    http://www.tvpmuslim.blogspot.com என்ற தளத்தில் ……அல்லாஹ்வின் சாபம்-தப்புமா தினமலர்?,உங்களையெல்லாம் திருத்தவே முடியாது!,நபிகள் நாயகம் vs தலைவர்கள்-(பகுதி-3), இஸ்லாமிய எதிர்ப்புக்கு பதிலடி,சூடான விவாதம் என்ற தலைப்பில் பெண்களை பற்றிய மாற்று மதத்தாரின் இஸ்லாமிய பொய் பிரசாரத்திற்கு தக்க பதிலடி..இன்னும் பல. அந்த தளத்தில் இணையுங்கள்,உங்கள் கருத்துகளைப் பதியுங்கள்,உங்கள் நண்பர்களுக்கு அறிமுகம் செய்யுங்கள்…..

  1. No trackbacks yet.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s