இல்லம் > 3ஜி-க்கு மாறணுமா? எந்த ஸ்கீம் லாபம்? > 3ஜி-க்கு மாறணுமா? எந்த ஸ்கீம் லாபம்?

3ஜி-க்கு மாறணுமா? எந்த ஸ்கீம் லாபம்?இதோ, அதோ என்று இத்தனை நாளும் போக்குக் காட்டி வந்த 3ஜி போன் சேவை இப்போது வந்தேவிட்டது. பி.எஸ்.என்.எல்., ஏர்டெல், ஏர்செல், வோடபோன் என நான்கு நிறுவனங்களும் 3ஜி தொலைபேசி வசதியைக் கொடுக்க ஆரம்பிக்க, லட்சக்கணக்கானவர்கள் அதை வாங்கிப் பயன்படுத்தத் தொடங்கி இருக்கிறார்கள். இருப்பினும் பலபேர்களுக்கு அந்த சேவையால் கிடைக்கும் நன்மைகள், என்னென்ன ஸ்கீம்கள் இருக்கின்றன என்பது போன்ற விஷயங்களில் இன்னும் குழப்பம்தான் இருக்கிறது.

அது என்ன 3ஜி?
இதுநாள் வரை இருக்கின்ற வசதிகளை வைத்து தொலைபேசி மூலம் பேச முடியும், சுமாரான வேகத்தில் தகவல்களை அனுப்ப முடியும். அவ்வளவுதான்! இந்தத் தொழில்நுட்பத்தை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்வதுதான் 3ஜி டெக்னாலஜி.  இந்தத் தொழில்நுட்பம் உங்கள் செல்போனில் இருக்கும்பட்சத்தில் வீடியோ கால், நேரடித் தொலைக்காட்சி, இன்டர்நெட், ஃபேக்ஸ், என சகல வசதிகளையும் அனுபவிக்க முடியும். அதுமட்டுமல்ல, பவர்பாயின்ட் மாதிரியான ஃபைல்களைக்கூட அதிவேகமாக டவுன்லோடு செய்யமுடியும். ஆடியோ மற்றும் வீடியோவுடன் கூடிய மல்டி மீடியா போன்ற சேவைகளும் கிடைக்கும். சொடுக்குப் போடும் நேரத்தில் அத்தனையும் நடந்துவிட வேண்டும் என்று மக்கள் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் இன்றைய காலகட்டத்தில், அதற்கு உறுதுணை யாக வந்திருப்பதுதான் 3ஜி. இதன் மூலம் உடனடித் தகவல் தொடர்பு, பொழுதுபோக்கு அம்சங்கள், சமூகத் தொடர்புகள் போன்ற வழக்கமான வசதிகளுடன் ஆன்லைனில் சினிமா, விமானம், ரயில் போன்றவற்றுக்கான டிக்கெட்களைப் பெறுவதில் ஆரம்பித்து, கிராமப் பகுதிகளில் விவசாயம் தொடர்பான தகவல்களைப் பெறுவது, உடல் நலம், கல்வி தொடர்பான செய்தி களைப் பெறுவது வரை சேவைகள் விரிந்துகொண்டே போகிறது.

>வீடியோகாலிங்!

செல்போனில் பேசும்போது உங்களுக்கு எதிர்முனையில் பேசுபவர் உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும் உங்கள் ஸ்கிரீன் மூலம் தெரிவதே வீடியோகாலிங். நேரில் பேசுவதைப் போன்ற உணர்வை இது ஏற்படுத்தும். இந்த வசதியைப் பெற இரண்டு தரப்பிலும் 3ஜி கனெக்ஷன் மற்றும் 3ஜி செல்போன் தேவை.

மொபைல் கேமிங்!

மல்டிபிளேயர் மற்றும் ஹெச்.டி. கேமிங் போன்றவற்றை உங்கள் மொபைலிலேயே பெறலாம். 3ஜி-யில் கேம்ஸ் விளையாடுவது வேகமாகவும், சிறப்பாகவும் இருக்கும். ஹெச்.டி. கேமிங் மூலம் உலகத்தில் எங்கிருந்தாலும் மற்றவருடன் விளையாடலாம்.

2ஜி-க்கும் 3ஜி-க்கும் உள்ள வித்தியாசம்!

மேம்பட்ட குரல் தரம் மற்றும் தெளிவு, அதிவேக பிராட்பேண்ட் கனெக்ஷன் உள்ளிட்ட அம்சங்கள் 2ஜி-யைவிட 3ஜி-யில் சிறப்பாக இருக்கும்.

2ஜி-யில் மல்டிமீடியா அப்ளிகேஷன்ஸ் மற்றும் சேவைகள் குறிப்பிட்ட அளவு மட்டுமே சப்போர்ட் செய்யும். 3ஜி-யில் இந்த வசதி அதிகளவில் சப்போர்ட் செய்யும்.

2ஜி-யில் ஒரே நேரத்தில் வாய்ஸ் மற்றும் டேட்டா அனுப்ப முடியாது. ஆனால் 3ஜி-யில் அது சாத்தியம்.

2ஜி-யில் 9-13 கிலோ பைட்ஸ் மட்டுமே இருப்பதால் நேரடித் தொலைக்காட்சி பார்க்கும்போது படம் தெளிவாகத் தெரியாது. நெட் வசதியும் குறைவான வேகத்தில் இருக்கும். ஆனால் 3ஜி-யில் 384 கிலோ பைட்ஸ் வரை இருப்பதால் இந்த சிக்கல்கள் எதுவும் இருக்காது.

3ஜி-யின் நன்மைகள்!

அதிகப்படியான பாண்ட்வித் மற்றும் பாதுகாப்பு.

பி.எஸ்.என்.எல்., ஏர்டெல், ஏர்செல் போன்ற 3ஜி சர்வீஸ் கொடுக்கும் நிறுவனங்கள் ஒன்றுடன் ஒன்று இணைந்து செயல்படுவது.

அதிகமான மல்டி மீடியா சேவைகள்

ப்ரீபெய்டு மற்றும் போஸ்ட்பெய்டு என இரண்டு திட்டங்களிலும் கிடைக்கும் சேவை.

3ஜி-யின் பாதகங்கள்!

அனைத்து வகையான மொபைல் போன்களிலும் இந்த வசதியைப் பெற முடியாது. 3ஜி வசதி பெறக்கூடிய பிரத்யேக மொபைல் போன்களைத்தான் பயன்படுத்த முடியும். இதன் விலை கொஞ்சம் அதிகமாக யிருக்கும்.

3ஜி உரிமம் பெற நிறுவனங்கள் பல ஆயிரம் கோடி ரூபாயைச் செலவழித்திருப்பதால் இதன் விலை விரைவில் குறையும் என எதிர்பார்க்க முடியாது.

அதிகப்படியாக கிலோ பைட்ஸ் பயன்படுத்தப்படுவதால் மொபைல் போனுக்கான பேட்டரி அதிகளவில் செலவாகும்.

மக்களின் தனிப்பட்ட சுதந்திரம் பாதிக்கப்படக்கூடும்.

3ஜி சேவைக்கு தமிழக மக்களிடம் இருக்கும் வரவேற்பு பற்றி பி.எஸ்.என்.எல். அமைப்பின் முதன்மை பொது மேலாளர் சுப்ரமணியனிடம் பேசினோம்.

”இந்தியா முழுவதும் பி.எஸ்.என்.எல். மற்றும் எம்.டி.என்.எல். நிறுவனங்கள் 3ஜி இணைப்பை வழங்க உரிமம் பெற்றுள்ளன. ப்ரீபெய்ட், போஸ்ட்பெய்டு என இரண்டு திட்டங்கள் மூலமும் 3ஜி வசதியைப் பெறலாம். இதில் பயன்படுத்தப்படும் டேட்டா கார்டை இந்தியா முழுவதும் ஒரே கட்டணத்தில் வாங்கிப் பயன்படுத்தலாம். இந்தத் தொழில்நுட்பத்தின் மூலம் மக்களுக்குக் கிடைக்கும் நன்மைகள் பலப்பல. 3ஜி போனை வைத்துக் கொண்டு எந்த ஊருக்கு வேண்டுமானாலும் காரோட்டிக் கொண்டு போகலாம். போகும்போது வழி தெரியவில்லை என்றால் உங்கள் மொபைல் போனில் தெரியும் மேப்பை வைத்துக் கொண்டே ஊர் போய்ச் சேர்ந்துவிடலாம். மக்கள் 3ஜி போனை வாங்கியவுடன் ஆர்வத்துடன் வீடியோகால் பேசுகிறார்கள். பலருக்கும் இது புதுவிதமான அனுபவமாக இருக்கிறது. இதற்கு ஆகும் செலவு மிகக் குறைவு என்பது இன்னொரு சிறப்பு. மேலும் அலுவலகம், கடைகள் போன்ற இடங்களில் ஒரு வெப் கேமிராவை வைத்துவிட்டு உங்கள் 3ஜி மொபைலுடன் இணைத்துவிட்டால் நீங்கள் எங்கிருந்தாலும் அங்கு நடக்கும் விஷயங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்” என்றார்.

அடுத்து, பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் கேரளா மற்றும் தமிழ்நாடு சி.இ.ஓ. ராஜீவ் ராஜகோபால் கூறுகையில், ”இப்போதைக்கு சென்னை மற்றும் கோவையில் மட்டும் கடந்த மாதம் 27 முதல் 3ஜி சேவையைத் தொடங்கி இருக்கிறோம். தற்போதுள்ள சிம்கார்டுகளைப் பயன்படுத்தியே ஏர்டெல் வாடிக்கையாளர்கள் 3ஜி சேவையைப் பெறலாம். லேப்டாப் பயன்படுத்துகிறவர்களுக்கு 3ஜி சேவையை அறிமுகப்படுத்தி இருக்கிறோம். நிலையான கட்டணம், பயன்பாட்டிற்கு ஏற்ற கட்டணம் என பல வகையான திட்டங்களையும் கூடிய விரைவில் வாடிக்கையாளர்களுக்கு அறிமுகப் படுத்தப் போகிறோம்” என்றார்.

என்ன, நீங்கள் தயாரா?


படங்கள் : எம்.உசேன்

நன்றி:- பானுமதி அருணாசலம்

நன்றி:- நா.வி

Advertisements
  1. Shameem Shah
    8:20 பிப இல் பிப்ரவரி 17, 2011

    Thanx a lot. gotta clear view.

  2. 9:01 பிப இல் பிப்ரவரி 17, 2011

    தகவலுக்கு நன்றீ.வாழ்த்துக்கள்

  1. No trackbacks yet.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: