இல்லம் > லேப்டாப் வாங்கப் போறீங்களா? > மடிக்கணினி (லேப்டாப்) வாங்கப் போறீங்களா?

மடிக்கணினி (லேப்டாப்) வாங்கப் போறீங்களா?கீழ்கண்ட பொருட்களில்
நீங்கள் எதை வாங்க விரும்புகிறீர்கள்?

ஃப்ளாட் டிவி
டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்

லேட்டஸ்ட் மாடல் செல்போன்

லேப்டாப் கம்ப்யூட்டர்

இப்படி ஒரு கேள்வியை ஆயிரக்கணக்கானவர்களிடம் கேட்டு சர்வே செய்தது ஒரு ஏஜென்ஸி. இந்த சர்வேயில் பலரும் ‘டிக்’ அடித்து தேர்வு செய்தது லேப்டாப் கம்ப்யூட்டரைத்தான். மடியில் குழந்தை இருக்கிறதோ இல்லையோ, கண்டிப்பாக லேப்டாப் இருந்தாக வேண்டும் என்று நினைக்கிற நிலை இன்றைக்கு!நீங்கள் எங்கிருந்தாலும் உங்கள் அலுவலக வேலையைச் செய்து கொள்ளும் வசதி; மெயில்கள், மார்க்கெட்டின் லேட்டஸ்ட் ஏற்றயிறக்கங்கள், ரயில், விமானம் போன்றவை குறித்த தகவல்கள் என உங்களிடம் ஒரு லேப்டாப் இருந்தால் விரல் சொடுக்கும் நேரத்தில் அத்தனையும் செய்து முடித்துவிடலாம். இதனால்தான் எல்லோரும் அதை வாங்கத் துடிக்கிறார்கள்.

ஆனால், லேப்டாப் வாங்கும்போது என்னென்ன விஷயங்கள் பார்க்க வேண்டும், அதனை எவ்வாறெல்லாம் பயன்படுத்தினால் நீண்ட நாட்களுக்கு உழைக்கும் என்கிற பல விஷயங்கள் பலருக்கும் தெரிவதில்லை. அதை சொல்லத்தான் இதோ இந்தக் கட்டுரை.

இரண்டுவித லேப்டாப்!

லெனோவா, ஹெச்.பி., ஏசர், டெல் போன்ற முன்னணி பிராண்டட் நிறுவனங்கள் லேப்டாப்களை தயாரிக்கின்றன. முதலில் எந்த நிறுவனத்தின் லேப்டாப் வாங்கப் போகிறீர்கள்? அதற்கான பட்ஜெட் எவ்வளவு? உங்களுக்கு என்னென்ன அப்ளிகேஷன்கள் தேவை? என்பதை முதலில் முடிவு செய்து கொள்ளுங்கள்.

இரண்டு வகையான லேப்டாப் கள் இருக்கிறது. ஒன்று, கமர்ஷியல் லேப்டாப்; இன்னொன்று, கன்ஸ்யூமர் லேப்டாப். அதிக பயன்பாடுகள் வேண்டும் என்பவர்கள் கமர்ஷியல் லேப்டாப் வாங்குவது நல்லது. குறைந்த பயன்பாடுகள், தவிர குறைந்த நேரத்திற்கு மட்டுமே பயன்படுத்த நினைப்பவர்கள் கன்ஸ்யூமர் லேப்டாப் வாங்கலாம்.

கன்ஸ்யூமர் லேப்டாப்பில் இன்ஸ்பிரேஷன், ஸ்டூடியோ, வெப் கேமிரா போன்ற அம்சங்கள் இருக்கிறது. நான்கு மணி நேரத்திற்கு இதைத் தொடர்ந்து பயன்படுத்தலாம். ஃபேன்ஸியாகவும் இருக்கும். இல்லத்தரசிகள், படிக்கும் குழந்தைகள், வீட்டிலிருந்தபடி பங்குச் சந்தை முதலீடு செய்பவர்கள் போன்றோர்களுக்கு கன்ஸ்யூமர் லேப்டாப் மிகச் சரியானது.

கமர்ஷியல் லேப்டாப்களை பத்து மணி நேரம் வரை பயன்படுத்தலாம். அதிகம் சூடாகாது. மிக வேகமாகவும், அதே நேரத்தில் நாம் அதில் பதிந்து வைக்கும் டேட்டாக்கள் பாதுகாப்பாகவும் இருக்கும். அதிக ஸ்டோரேஜ், 4 ஜி.பி. ராம் என பல வசதிகள் இருக்கிற இந்த லேப்டாப் கல்லூரி மாணவர்கள் புராஜெக்ட் செய்ய, பிஸினஸ்மேன்கள் அதிக சாஃப்ட்வேர்களை டவுன்லோட் செய்யப் பயன்படும். அதிக வசதிகள் கொண்ட இது கன்ஸ்யூமர் லேப்டாப்பைவிட வெறும் 3,000 ரூபாய் அதிகமாகும்.

ஸ்கிரீன்!

மாணவர்கள், பிஸினஸ்மேன்கள் 14.1 இஞ்ச் ஸ்கிரீன் அளவு கொண்டதை வாங்கலாம். இதன் எடை குறைவாக அதாவது 1.9 கிலோதான் இருக்கும். வீட்டில் மட்டுமே பயன்படுத்துவதாக இருந்தால் 15.6 இஞ்ச் ஸ்கிரீன் வாங்கலாம். இதன் எடை 2.25 கிலோ. ஆனால் இரண்டின் விலையும் ஒன்றுதான்.

பேட்டரி!

பேட்டரியைப் பொறுத்தவரை ‘நயன்செல்’ பேட்டரி கேட்டு வாங்கணும். இந்த பேட்டரியை பயன்படுத்தினால் ஆறு மணி நேரத்திற்கு சார்ஜ் இருக்கும். இதுவே  ‘சிக்ஸல்’ பேட்டரி எனில் நான்கு மணி நேரத்திற்கு சார்ஜ் இருக்கும். நீங்கள் எவ்வளவு நேரம் பயன்படுத்துவீர்களோ, அதற்கு தகுந்த மாதிரி பேட்டரியே உங்கள் லேப்டாப்புக்குத் தேவை.

வாரன்டி காலம்!

அனைத்து நிறுவனங்களும் லேப்டாப்களுக்கு ஒரு வருட வாரன்டி காலம் கொடுக்கின்றன. கமர்ஷியல் லேப்டாப் எனில் மூன்று வருடம் வரைகூட வாரன்டி கொடுக்கிறார்கள். அதற்கு மேலும் கூடுதலாக வாரன்டி தேவைப்பட்டால் அந்த நிறுவனத்திடம் கேட்டுப் பெறலாம். டெல் நிறுவனத்தைப் பொறுத்தவரை இந்தக் கூடுதல் வாரன்டியை நீங்கள்  ஆன்லைன் மூலமாகத்தான் பெற முடியும். இதற்கு 5,000 கட்ட வேண்டியது இருக்குமாம். லெனோவா, ஹெச்.பி. போன்ற நிறுவனங்களில் பணமாகக் கொடுத்தால் பத்து நாட்களில் கூடுதல் வாரன்டி கிடைக்கும்.

சர்வீஸ்!

லேப்டாப்களைப் பொறுத்தவரை ‘ஆன்சைட் வாரன்டி’ மற்றும் ‘கேரியிங் வாரன்டி’ என இரண்டு விதமான சர்வீஸ்கள் உண்டு. ஃபிரிட்ஜ், வாஷிங் மெஷின் போல் அல்லாமல் லேப்டாப் என்பது கையில் தூக்கிக் கொண்டு செல்லக் கூடிய பொருள் என்பதால்தான் இப்படி இரண்டு விதமான சர்வீஸ்கள். ‘ஆன்சைட்’ என்பது சர்வீஸ் ஆட்கள் வீட்டிற்கே வந்து ரிப்பேர் சரி செய்வார்கள். ‘கேரியிங்’ என்பது நாம் சர்வீஸ் சென்டருக்கு எடுத்துச் சென்று அங்கு ரிப்பேரை சரி செய்து கொள்வது.

‘கேரியிங் வாரன்டி’க்கு சுமார் 4,000 ரூபாயும், ‘ஆன்சைட் வாரன்டி’க்கு 6,000 ரூபாயும் கட்டணம் சொல்கிறார்கள். உங்கள் சௌகரியத்துக்கு ஏற்ற மாதிரி வாங்கலாம்.

விலை!

‑  நோட் புக் மாடல் – இதை ஹேண்ட்பேக்கில்கூட வைத்துக் கொண்டு போகலாம். இன்டர்நெட், எம்.எஸ்.ஆபீஸ். போன்ற சில வசதிகள் மட்டும் கிடைக்கும் இந்த பேஸிக் மாடலின் விலை 16,500. பயணத்தின் போது பயன்படுத்த இது மிகச் சிறந்தது.

கேம்ஸ் ஆப்ஷன், கிராஃபிக் ஆப்ஷன், வெப் கேமிரா போன்ற வசதிகளுடன் இருக்கும் மாடல் வீட்டில் இருப்பவர்களுக்கும், குழந்தைகளுக்கும் ஏற்றது. இதன் விலை 35,000 முதல் 40,000 வரை கிடைக்கிறது.

மல்டி மீடியா ஐ5, ஐ7 போன்ற வசதிகளுடன் வீடியோ எடிட்டிங் செய்யும் தொழில்நுட்பம் வரை இருக்கும் இதன் செயல்பாடு மிக வேகமாகயிருக்கும். இதன் விலை 41,000 முதல் 60,000 வரை.

உதிரிப் பாகங்கள்!

பொதுவாக லேப்டாப் வாங்கும்போது பேக், சார்ஜர், பேட்டரி போன்றவைகளை கண்டிப்பாகக் கொடுப்பார்கள். இது போக கூடுதல் உதிரிப் பாகங்கள் தேவைப்பட்டால் அதை நாம்தான் வாங்கிக் கொள்ள வேண்டும். உதாரணத்திற்கு, லேப்டாப்பை மடியில் வைத்துப் பயன்படுத்தும்போது அதிகமான வெப்பம் வெளியேறும். இது உடலுக்கு நல்லதல்ல. இதனைத் தவிர்க்க ‘கூலிங் பேட்’ வாங்கிக் கொள்வது நல்லது. இதன் விலை சுமார் 1,550.

உங்களின் லேப்டாப் இன்டர்னல் செக்யூரிட்டிக்காக ஆன்டிவைரஸ் சாஃப்ட்வேரை பொறுத்திக் கொள்வது நல்லது. மெக்காஃபே, கேஸ்பர்ஸ்கை, நார்டன் போன்ற ஆன்டிவைரஸ் விலை 500. இது ஒரு வருடத்திற்கானது. வயர்லெஸ் மவுஸ் 850 முதல் 1,000 வரை கிடைக்கிறது. பவர்பாயின்ட் 2,800.

இன்றைய காலகட்டத்தில் இருந்த இடத்தில் இருந்து கொண்டு பல வேலைகளைச் செய்ய லேப்டாப் அவசியம். அதை வாங்கும் போது மேற்சொன்ன விஷயங்களை மனதில் வைத்துக் கொண்டால், பிற்பாடு வருத்தப்பட வேண்டிய அவசியம் இருக்காது.


இத்துடன் ஒரிஜினல் ஆப்பரேட்டிங் சிஸ்டம் வாங்குவது சாலச் சிறந்தது. ரூ.1,500 முதல் ரூ.3,000 வரை மட்டுமே கூடுதலாக செலவாகும் (ஹோம் பேசிக் ). மற்றபடி, ஒரிஜினல் ஓ எஸ் பயன்படுத்துவதன் மூலம், தேவையில்லாத வைரஸ் தாக்குதல், டேட்டா லாஸ் ஆகியவற்றைத் தவிர்க்கலாம்
.

நன்றி: பானுமதி அருணாசலம்

நன்றி:- நா.வி

Advertisements
  1. 11:22 முப இல் ஜனவரி 11, 2011

    Thanks for the useful info

  1. No trackbacks yet.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: