இல்லம் > ஏலத்தின் வகைகள் > ஏலத்தின் வகைகள் – பா.முருகானந்தம்

ஏலத்தின் வகைகள் – பா.முருகானந்தம்
‘பறவைகள் பலவிதம்…. ஒவ்வொன்றும் ஒருவிதம்’ என்கிற மாதிரி ஏலங்கள் பலவிதம்; அவை ஒவ்வொன்றும் ஒருவிதம் என்பதை இந்தக் கட்டுரையைப் படித்தாலே தெளிவாக விளங்கும்.

1 இங்கிலீஷ் ஏலம்     (English Auction):


வெளிப்படையான முறையில் ஏலம் விடப்படும் இந்த முறையில் பொருட்களுக்கான விலையை ஏற்றிக் கொண்டே செல்வார்கள். ஏலம் கேட்பவர்கள் ஒவ்வொருவரும் போட்டி போட்டுக் கொண்டு விலையை ஏற்றிக் கொண்டே செல்லும் இந்த முறையில், அதிகபட்ச விலையைக் கேட்பவர்களுக்கே ஏலத்தில் விடப்படும் பொருள் கொடுக்கப்படும். ஏலம் விடப்படுவதற்கு முன், அந்தப் பொருளுக்கான குறைந்தபட்ச விலையை ஏலம் விடுபவர்களோ அல்லது ஏலம் விடும் அமைப்போ நிர்ணயம் செய்துவிடும். அந்த விலைக்கு மேல்தான் ஏலம் எடுப்பவர்கள் ஏற்றிக் கொண்டு செல்ல முடியும். சில சமயங்களில் குறைந்தபட்ச நிர்ணய விலையைத் தாண்டி யாரும் ஏலம் கேட்க வராவிட்டால் அந்த ஏலம் பணால்தான். பாரம்பரியமான இந்த ஏலமுறைதான் இன்று டெண்டர், இடெண்டர் என்று வளர்ந்துள்ளது. நம்மூரில் பரவலாக இருக்கும் ஏலமுறையும் இதுதான்.

2 டச்சு ஏலம்      (Dutch Auction):

மேலே குறிப்பிட்டுள்ள ஏலத்துக்கு நேரெதிரான முறை இது. இந்த ஏலத்தில் பொருளைக் கேட்பவர்கள் விலையைக் குறைத்துக் கேட்பார்கள். ஏலம் விடுபவர்கள் நிர்ணயம் செய்திருக்கும் குறைந்தபட்ச விலையை முதலில் கேட்கும் நபருக்கு அந்தப் பொருள் விற்கப்படும். ஹாலந்து நாட்டில்  ட்யூலிப் மலர்கள் இவ்விதம் ஏலம் விடப்படுகிறது.

3 சீலிடப்பட்ட விலை ஏலம் (First Price sealed Bid Auction – FPSB):

இந்த முறையில் குறிப்பிட்ட பொருளை ஏலம் கேட்பவர்கள் அனைவரும் தங்களின் விலையை சீலிடப்பட்ட கவர்களில் சமர்ப்பிப்பார்கள். குறிப்பிட்ட நாளில் அனைத்து கவர்களும் திறக்கப்பட்டு, விலை அதிகம் கேட்டவர்களுக்கு பொருள் வழங்கப்படும். நம் நாட்டில் அரசு டெண்டர்கள் இம்முறையில்தான் விடப்படுகிறது.

4 விக்கரி ஏலம் (Vickery Auction)

சீலிடப்பட்ட ஏலம் போலவேதான் இதுவும். வெற்றி பெற்றவர் இரண்டாவது இடத்தில் உள்ள அதிகபட்ச விலையைத்தான் செலுத்துவார். தற்போது eBay போன்ற இணைய தளங்களில் இவ்வகையான ஏல முறை நடைமுறையில் உள்ளன. இதன்படி இரண்டாவது அதிகபட்ச விலையுடன் ஒரு குறிப்பிட்ட சதவிகிதத்தையும் சேர்த்து வெற்றி பெற்றவர் செலுத்த வேண்டும்.

5 மல்டி யூனிட் ஏலம்: (Multi Unit Auction):

அதிக எண்ணிக்கையில் உள்ள பல பொருட்களை ஒரே நேரத்தில் ஏலம் விடுவதற்கு இம்முறை கடைப்பிடிக்கப்படுகிறது.

6 ஆல் பே ஆக்ஷன்   (All pay Auction):

இம்முறையில் ஏலம் கேட்பவர்கள் அனைவரும் தாங்கள் ஏலம் கேட்ட தொகையைக் கட்டிவிட வேண்டும். அதிக விலை கேட்டவர்கள்தான் வெற்றி பெற்றவராவர். மற்றவர்களுக்கு பட்டை நாமம்தான்.

7 பை அவுட் ஆக்ஷன் (Buy out Auction):

ஏலம் நடந்து கொண்டிருக்கும் போதே, ஒரு குறிப்பிட்ட விலை (சாதாரணமாக இது கொஞ்சம் அதிகமாகவே இருக்கும்) அறிவிக்கப்படும். அந்த விலைக்கு யாராவது ஒப்புக் கொண்டால் அவரே வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார்.

8 காம்பினேஷன் ஏலம் (Combination Auction):

ஏலம் எடுப்பவர்கள் பலர் கூட்டணி அமைத்துக் கொண்டு ஏலம் எடுக்கும் முறை இது. புரிந்து கொள்வதற்கு மிகக் கடினமான இந்த ஏலத்தை, பல முறை நேரில் போய்ப் பார்த்தால் மட்டுமே விளங்கும்.

9 ரிவர்ஸ் ஏலம் (Reverse Auctio):

இவ்வகையில் விற்பவர், வாங்குபவர் ஆகியோரின் நிலை மாற்றப்படும். ஒரே விதமான பொருட்களை விற்கும் பல விற்பனையாளர்களிடமிருந்து குறைந்த விலையைக் கண்டறிந்து வாங்குபவர்களுக்கு இம்முறை பெரிதும் உதவி செய்கிறது.

10 ரிசர்வ் ஏலம் (Reserve Auction):

இவ்வகையில் அதிகபட்சமாகக் கேட்கப்பட்ட தொகையானது ஏலம் விடுபவருக்குத் திருப்தியளிக்க வில்லை என்றால், அந்த ஏலத்தை நிறுத்தி விட்டு, பொருள் ஏலத்தில் விடப்படமாட்டாது என்று அறிவிக்க முடியும். விற்பவருக்குச் சாதகமானது இது.

11 நோ ரிசர்வ் ஏலம் (No Reserve Auction):

மேலே குறிப்பிட்டதற்கு நேர் எதிரானது இது. விலை கட்டுப்படியாகிறதோ இல்லையோ, அதிகபட்ச விலைக்கு பொருளைக் கொடுத்தே ஆக வேண்டும்.

12 டாப் அப் ஏலம் (Top up Auction):

தர்ம காரியங்களுக்காக நடத்தப்படும் ஏலங்களில் இதுவும் ஒன்று. ஏலம் கேட்கும் அனைவருமே பணம் கட்ட வேண்டும். அவர்கள் ஏலம் கேட்ட தொகைக்கும், அவர்களுக்கு அடுத்துக் கேட்ட தொகைக்கும் உள்ள வித்தியாசத்தைக் கட்ட வேண்டும். உதாரணத்துக்கு ஒருவர் 1,000 ரூபாய் ஏலத்தொகையாகக் கேட்கிறார். அவருக்கு முந்தைய ஏலத்தொகை 800 ரூபாய் என்றால்,  ஏலம் கேட்டவர் 200 ரூபாய் கட்டியாக வேண்டும்.

13 வால்ராசியன் ஏலம் (Walrasian Auction):

விற்பவர் மற்றும் வாங்குபவர்கள் என்று இரு தரப்பினரிடமிருந்தும் ஏலம் நடத்துபவர் ஏலத் தொகையைக் கோருவார். பின்பு மார்க்கெட் நிலவரத்துக்கு ஏற்ப விலையைக் கூட்டிக் குறைத்து அனைவருக்கும் லாபம் கிடைக்கும் வகையில் மொத்த ஏலத்தையும் நடத்துவார். இது எதிலும் சேராத வேறு ஏதாவது புது மாதிரியான ஏலமுறை உங்களுக்குத் தெரியுமா?


நன்றி:– பா.முருகானந்தம்

நன்றி:- நா.வி

 

Advertisements
  1. இன்னமும் ஒரு பின்னூட்டமும் இல்லை
  1. No trackbacks yet.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: