இல்லம் > கிரெடிட் கார்டு மறக்கவே கூடாத 20 விஷயங்கள் > கிரெடிட் கார்டு மறக்கவே கூடாத 20 விஷயங்கள்!

கிரெடிட் கார்டு மறக்கவே கூடாத 20 விஷயங்கள்!


நீங்கள் கிரெடிட் கார்டு வைத்திருப்பவரா..? கார்டை தேய்ப்பதற்கு முன் முதலில் இதைப் படியுங்கள்…

1. உங்களிடம் கிரெடிட் கார்டு இருப்பதை ஒரு ஸ்டேட்டஸ் சிம்பலாக நினைக்காதீர்கள்.

2. ஒரே ஒரு கிரெடிட் கார்டு போதுமானது.

3. கிரெடிட் கார்டில் பணம் எடுக்காதீர்கள். அப்படி எடுத்தால் எடுத்த நாள் முதலே வட்டி கட்ட வேண்டியிருக்கும்.

4. முடிந்தவரை கையிலிருக்கும் பணத்தைக் கொடுத்து செலவு செய்யுங்கள். அப்போதுதான் பொருளின் மதிப்பு தெரியும்.

5. ஒரு கார்டில் இருக்கும் கடனை அடைக்க இன்னொரு கார்டைப் பயன்படுத்தாதீர்கள்.

6. கிரெடிட் கார்டைப் பயன்படுத்தும் போது சேவைக் கட்டணம் உண்டா என்று தெரிந்து கொண்டு பயன்படுத்துங்கள்.

7. பில்லிங் தேதி மற்றும் பணம் கட்ட வேண்டிய கடைசி தேதியை மறக்கவே மறக்காதீர்கள்.

8. இணையம் மூலம் உங்களது கிரெடிட் கார்டு வரவு செலவுகளை அடிக்கடி சரிபாருங்கள்.

9. ஓட்டல், பெட்ரோல் பங்கில் கார்டைப் பயன்படுத்தும் போது கவனம் தேவை. உங்கள் கார்டை டூப்ளிகேட் செய்ய வாய்ப்புண்டு.


10. ஸ்டேட்மென்ட் வந்தவுடன் முழுமையாகப் படியுங்கள். அதில் உள்ளது நாம் செய்த செலவுதானா என்று பாருங்கள். 11. உங்கள் கிரெடிட் கார்டு நிறுவனத்தின் தொலைபேசி எண் அல்லது கஸ்டமர்கேர் எண்ணை தனியாக எழுதி வைத்துக் கொள்ளுங்கள். கார்டு தொலைந்தால் புகார் செய்யப் பயன்படும்.

12. உங்களது கிரெடிட் கார்டு பாஸ்வேர்டை யாருக்கும் தெரியப்படுத்தாதீர்கள்.

13. கார்டு வாங்கியவுடன் அதன் பின்பகுதியில் உங்கள் கையெழுத்தை மறக்காமல் போட்டு வையுங்கள்.

14. ஆன்லைனில் வர்த்தகம் செய்யும்போது நம்பத் தகுந்த, பிரபலமான இணையதளங்களையே பயன்படுத்துங்கள்.

15. ‘உங்களுக்கு புதிய ஆஃபர் தருகிறோம். பாஸ்வேர்டு மற்றும் இதர விவரங்களை கொடுங்கள்’ என்றால் உஷாராகுங்கள்.

16. பின்நம்பரை அடிக்கடி மாற்றுங்கள். அதை மற்றவர்களுக்கு தெரியும்படி எழுதி வைக்காதீர்கள்.

17. கிரெடிட் கார்டில் அதிக லிமிட் வைத்துக் கொள்ளாதீர்கள். இது உங்களை அதிக செலவு செய்யத் தூண்டும்.

18. உங்கள் வருமானத்தில் கிரெடிட் கார்டுக்கென குறிப்பிட்ட சதவிகிதத் தொகையை ஒதுக்கி அதற்கேற்ப செலவழியுங்கள்.

19. முக்கியமான சமயங்களில் மட்டும் கிரெடிட் கார்டை வெளியே எடுத்துச் செல்லுங்கள். முடிந்தவரை டெபிட் கார்டு மூலமே செலவு செய்யுங்கள்.

20. எல்லாவற்றுக்கும் மேலாக, கிரெடிட் கார்டில் ஒரு மாதம் பணம் கட்டத் தவறினால், இது நமக்கு சரிப்பட்டு வராது என்று யோசிக்காமல் கார்டை தலையைச் சுற்றி தூர எறிந்துவிடுங்கள்.


நன்றி:- – வா.கார்த்திகேயன்

நன்றி:- நா.வி

Advertisements
  1. 3:20 பிப இல் திசெம்பர் 16, 2010

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
    சகோதரர் நலமா…?
    கிரெடிட் கார்டு குறித்து நிறைய விசயங்கள் தந்துள்ளீர்கள். சமுதாயத்திற்கு தேவையான விழிப்புணர்வு ஆக்கம்., இத்தோடு, எல்லாவித செய்திகளும் இத்தளம் முழுவதும் நிறைந்து இருக்கின்றன. மாஷா அல்லாஹ் வாழ்த்துகள் சகோதரரே…

  1. No trackbacks yet.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: