இல்லம் > கல்வி & வேலை, பொருளியல் > வங்கி வேலைவாய்ப்பில் புதிய பாதைகள்

வங்கி வேலைவாய்ப்பில் புதிய பாதைகள்


1969-ல் வங்கிகள் அரசுடமை ஆக்கப்பட்டன. ஊர்தோறும், ஏன், கிராமங்கள்தோறும் வங்கிக் கிளைகள் திறக்கப்பட்டன. சிறு தொழில் கடன், விவசாயக் கடன் என்று வங்கிகளின் செயல்பாடுகள் வேகமாக அதிகரித்தன. இதனால், வேறு எந்த ஒரு துறையிலும் இல்லாத அளவில், வங்கிகளில் வேலைவாய்ப்புகள் பெருகின.

வங்கிப் பணியாளர் தேர்வு வாரியம் (Banking Service Recruitment Board) ஆண்டுதோறும் தேர்வுகள் நடத்தி, ஆயிரக்கணக்கில் பணியாளர்களை வங்கிகளில் நியமித்தவண்ணம் இருந்தது. கடந்த ஓரிரு ஆண்டுகளில் காட்சிகள் மாறிவிட்டன. வங்கிகளில் தேவைக்கு அதிகமாகப் பணியாளர்கள் உள்ளனர் என்று கூறப்பட்டது.

அரசுடமை வங்கிகளிலிருந்து ஒரு லட்சத்து இருபது ஆயிரம் பேர்~ பணியாளர்கள் மற்றும் அலுவலர்கள்~ விருப்ப ஓய்வுத் திட்டத்தின் (Voluntary Retirement Scheme – VRS) கீழ் கடந்த ஆண்டு வெளியேறினர். வங்கிப் பணியாளர் தேர்வு வாரியத்துக்கு மூடுவிழா நடத்தப்பட்டு விட்டது.

வங்கிகள் கணினி மயமாக்கப்பட்டு வருவதால் இயல்பாகவே பணியாளர்களின் தேவை சற்று குறைந்துள்ளது.

ஒரு கதவு மூடப்படுகிறது என்றாலும் இன்னொரு கதவு திறக்கப்பட்டுள்ளது. வங்கிகளில் Clerical Staff க்கான வேலைவாய்ப்புகள் குறைந்துள்ள போதிலும், வேறு புதிய பாதைகள் தோன்றியுள்ளன என்பதை அறிந்து கொள்ளுவது முக்கியமாகும்.

உதாரணமாக, வங்கிகள் கணினி மயமாக்கப்பட்டு வருவதால், கணினி தொடர்புடைய வேலை வாய்ப்புகள் உள்ளன. இது தவிர, Specialist  எனப்படும் சிறப்பு அலுவலர் பட்டியலில் என்ஜினியர்களின் தேவை இன்றும் உள்ளது. சிறுதொழில் முதல் பெரிய தொழில் கூடங்களுக்கு கடன் வழங்கும் போது பொறியாளர்களின் ஆய்வு வங்கிகளுக்குத் தேவைப்படுகிறது. Textile Engineer  உள்ளிட்ட பல வகை என்ஜினியர்களுக்கு வேலைவாய்ப்புகள் தொடருகின்றன.

விவசாயக் கடன்களுக்கு முன்பு அளிக்கப்பட்ட முக்கியத்துவம் தற்போது இல்லை என்பது கசப்பான உண்மை. எனினும் குறிப்பிட்ட சதவிகித அளவுக்கு விவசாயக் கடன் வழங்குவது இப்போதும் கட்டாயமாக உள்ளது. இந்த அடிப்படையில், விவசாயப் பட்டதாரிகளுக்கு Agricultural Finance Officers வேலை வாய்ப்பு உள்ளது. அதுபோல் பால் பண்ணைகளுக்கு கடன் வழங்கும் பணியில் கால்நடை மருத்துவர்களின் சேவையும் தேவைப்படுகிறது.

இது ஒருபுறம் இருக்க, வங்கிகள் போட்டி போட்டுக் கொண்டு வாடிக்கையாளர்களுக்கு நவீன சேவைகளை வழங்குகின்றன. A.T.M. (Automatic Teller Machine) என்னும் தானியங்கிப் பணப் பட்டுவாடா கருவி, இழ்ங்க்ண்ற் Credit Card  எனப்படும் கடன் அட்டைகள், குறைந்த வட்டியுடன் கூடிய வீட்டு வசதிக்கடன் ஆகிய புதிய திட்டங்களைச் செயல்படுத்துகின்றன.

இவற்றில் அ.ப.ங. அறிமுகம் காரணமாக வேலை வாய்ப்பு பெருக வழியில்லை. ஆனால், பல வங்கிகள் தங்களது இழ்ங்க்ண்ற் இஹழ்க் திட்டத்தைப் பிரபலப்படுத்தும் நோக்கில், முனைப்புடன் களம் இறங்கியுள்ளன. இதில் புதிய தனியார் வங்கிகள் மற்றும் வெளிநாட்டு வங்கிகள் தீவிரமாகச் செயல்படுகின்றன. இதன் பயனாக வேலைவாய்ப்புகள் இரு வழிகளில் உருவாகின்றன.

சில வங்கிகள் இப்பணியில் புதிய அலுவலர்களை அல்லது பணியாளர்களை நியமிக்கின்றன. இது ஒரு வகை. இன்னொன்று, வேறு சில வங்கிகள் தங்களது கடன் அட்டைகளைப் பிரபலப்படுத்துவதற்காகவும், விற்பனை செய்வதற்காகவும் வெளியார்களை ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கின்றன. இதை ஞன்ற் நர்ன்ழ்ள்ண்ய்ஞ் என்கின்றனர்.

கடன் அட்டைத் திட்டத்தைப் பற்றி இங்கு சுருக்கமாக விளக்குவது பொருத்தமாக இருக்கும்.

இக் கடன் அட்டை வசதியை, வங்கிகள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு வழங்குகின்றன. குறிப்பிட்ட அளவு வருமானம் உள்ளவர்களுக்கு மட்டுமே (உதாரணமாக பல வங்கிகளில் குறைந்தபட்சம் ஆண்டு வருமானம் ரூ.75,000 இருத்தல் வேண்டும்) இந்த வசதி கிடைக்கிறது.

கடன் அட்டையைப் பயன்படுத்தி பெட்ரோல் வாங்குவது, ரயில்வே மற்றும் விமான டிக்கெட் வாங்குவது மருத்துவமனையில் மருத்துவச் செலவு, ஹோட்டல்கள், உணவு விடுதிகள், பெரிய துணிக்கடைகள், நகைக் கடன்கள் போன்றவற்றில் ரொக்கமாக பணம் கொடுக்காமல் தேவையான சேவை மற்றும் பொருள்களைப் பெற்றுக் கொள்ளலாம். கடை மற்றும் நிறுவனங்களுக்குச் சேர வேண்டிய பணத்தை வங்கி பட்டுவாடா செய்துவிடுகிறது. பின்னர் வாடிக்கையாளரின் கணக்கிலிருந்து வங்கி உரிய தொகையை வசூலிக்கும்.

வீட்டுக்கடன் வசதி பெற விரும்பும் வாடிக்கையாளர்களைத் திரட்டுவதற்காக, சில தனியார் வங்கிகள் தனி நபர்களை ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கின்றன. இது ஒரு புதிய ரக வேலைவாய்ப்பு எனலாம்.

இவை தவிர, பல வங்கிகள் அதிலும் குறிப்பாக, கூட்டுறவு வங்கிகள் மற்றும் கிராமிய வங்கிகள் பெரிய அளவில் நகைக்கடன்கள் வழங்குகின்றன.

இதற்கு ஒங்ஜ்ங்ப் அல்ல்ழ்ஹண்ள்ங்ழ் எனப்படும் நகை மதிப்பீட்டாளர்கள் தேவைப்படுகின்றனர். இவர்களுக்கு உயர் கல்வி அவசியமல்ல. ஆனால் தங்கத்தின் தரத்தைத் துல்லியமாக ஆய்வு செய்வதற்கான அனுபவம் அவசியமாகும். இந்த தேர்ச்சி பெறுவதற்கு பயிற்சிதான் தேவை. பெரும்பாலும் இப் பயிற்சி குரு – சிஷ்ய அடிப்படையிலேயே பெறப்படுகிறது.

அதேநேரம், அரசு மற்றும் தனியார் அமைப்புகள் அண்மைக்காலமாக இப் பயிற்சியை அளிக்க முன் வந்துள்ளன. உதாரணமாக, சிறு தொழில் சேவை நிலையம் நகை மதிப்பீட்டாளர்களுக்கான பயிற்சியைச் சென்னை மற்றும் பிற நகரங்களில் நடத்துகிறது. நவீனமுறையில் நகையின் தரத்தைக் கண்டறிதல், நவீன நகைத் தயாரிப்புத் தொழில்நுட்பம் ஆகியவை இப் பயிற்சியில் கற்றுத் தரப்படுகின்றன.

ஒரு பக்கம், படித்து வேலைக்கு அலைபவர்கள். இன்னொரு பக்கம், வேலைக்கேற்ற பயிற்சியும் தேர்ச்சியும் இல்லாததால் காலியாக உள்ள வேலையிடங்கள். இத்தகைய முரண்பாடுகள் தொடரத்தான் செய்கின்றன. வங்கித் தொழிலிலும், ஒருபக்கம் பாரம்பரிய (traditional) வேலைவாய்ப்புகள் குறைந்தாலும், வித்தியாசமான வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளன.

தற்போதைய புதிய பொருளாதாரப் பரிமாணத்தில், அரசு வங்கிகளில் வேலை வாய்ப்புகள் சுருங்கக் கூடும். அதே நேரம், தனியார் வங்கிகளில் வேலைவாய்ப்புகள் பெருகக் கூடும். இச் சூழ்நிலையில், தனியார் வங்கிகளின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப இளைஞர்கள் தங்களைத் தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது.

நன்றி:–தினமணி

Advertisements
  1. இன்னமும் ஒரு பின்னூட்டமும் இல்லை
  1. No trackbacks yet.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: